_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, August 14, 2008

பிடிக்காத ரோஜாபூ!.....

பிடிக்காத ரோஜாபூ!.....
நண்பர் கோவி.கண்ணன் நேற்றைய பதிவில் ரோஜா பற்றியது
சுட்டிப்பார்க்க . ரொஜா என்பதும் என்நினைவில் எப்பொழுதும் வந்து போகும் நிகழ்வு

திருச்சியில்யுள்ள ஒரு நல்ல தொழிச்சாலையில் வேலை செய்யும் காலத்தில், தினமும் காலையில் நான் வேலைச் செய்யுமிடத்தில் பூச்சாடியில் பூக்கள் வைப்பது வழக்கம். அன்று என்வீட்டுத் தோட்டத்தில் பெரியதான ரோஜா இருந்தது. அதை பறித்து எடுத்துக்கொண்டு வழக்கம்போல பூச்சாடியில் வைத்தேன். என்னுடன் வேலைச் செய்யும் என் பிரியமான நண்பன் வந்து ரோஜா வைத்தது எனக்கு பிடிக்கவில்லை என்றார், ஏன் என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். ( என் நண்பன் சிறுவயதில் தாயில்லாமல் தந்தையின் அன்பில் வளர்ந்தவன், காலம் அவனை வஞ்சித்து தந்தையும் இழக்க நேர்ந்தது.) அவன் சொன்னான் என் தந்தைதான் எனக்கு உயிர் அவர் மறைவு என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கதறி கதறி அழுதேன். என்தந்தையை மாலையணிவித்து முற்றத்தில் வைத்திருந்தனர். எல்லோரும் சோகத்தில் என்னையே பார்த்தவண்ணம் இருந்தனர், நான் என் அப்பாவை கட்டிப்பிடித்து போகாதேப்பா! போகாதேப்பா! என்று அழுதேன். அப்பொழுது என்அப்பாவின் அலங்கரித்த ரோஜாமாலை என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.. அந்த ரோஜாவின் வாசனை என்னை அடிப்பது பொலவும் இருந்தது. என் அப்பாவையிழந்த அந்த நாளிருந்து என்னைப்பார்த்து சிரித்த ரோஜாவை பிடிப்பதில்லை, ரோஜாவின் வாசனை வந்தாலே அப்பாவின் நினைவு என் இதயத்தை கனக்க வைத்து விடும். என்று கண்ணில் நீர்கசிய சொன்னதும் என்னால் அன்று வேலைச்செய்ய முடியவில்லை. அன்றிலிருந்து ரோஜா பூவை நான் அங்கு வைப்பதில்லை. அன்பின் சின்னம் ரோஜாவை சூல்நிலைக் காரணமாக என் நண்பனுக்கு பிடிக்காமல் போனது ரோஜாவின் குற்றமா? காலத்தின் குற்றமா?

2 comments:

கோவி.கண்ணன் said...

//ரோஜாவின் வாசனை வந்தாலே அப்பாவின் நினைவு என் இதயத்தை கனக்க வைத்து விடும். என்று கண்ணில் நீர்கசிய சொன்னதும் என்னால் அன்று வேலைச்செய்ய முடியவில்லை. //

உங்கள் நண்பர் அவருடைய அப்பாவின் மீது வைத்திருக்கும் அன்பு புரிந்து கொள்ள முடிகிறது.

ஆ.ஞானசேகரன் said...

நன்றி கண்ணன்,