_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, February 24, 2009

நானும்(நீயும்) ஒரு மில்லியனியர்தான்!...

நானும்(நீயும்) ஒரு மில்லியனியர்தான்!...
நாமும் ஏதாவது உறுப்புடியா செய்யனும்மில்லையா? சாதனை செய்யனும்னா கொஞ்சனாலும் ஞானம் வேண்டாமா?.. சாதனைக்கு என்னதான் படிக்கனுங்க?.. அய்யோ! இப்பதான் "சிலம்டாக் மில்லியனியர்" திரைப்படத்தை பார்த்தேன்.... சேரில இருந்த ஜமால் மில்லியனியர் ஆகமுடியுமா?... வாழ்கையின் அனுபவக்கல்வி இருந்தா முடியும் போலதான் தோனுதுங்க,... சிறிய கதை, பெரிய காவியம், நல்ல திரைக்கதை அமைப்பு (திரைக்கதை பற்றி சொன்னா நம்மாளு பாக்கியராஜ் சாரை நினைக்க தோன்றும் "அந்த ஏழு நாட்கள்" திரைக்கதை சொல்லவேண்டியதில்லை படம் பார்த்தவர்களுக்கு புரியும். சிலம்டாக் மில்லியனியர் படத்தில் உள்ள திரைக்கதை அமைப்பு எனக்கு பாக்கியராஜ் சாரை நினைக்க தொன்றியது, கொஞ்சம் ஓவர்தான் இருந்தாலும் சொல்ல வேண்டியதாக நினைக்கின்றேன்). சிலம்டாக் மில்லியனியர் படம் எட்டு ஆஸ்கர் விருதை தட்டி சென்றுவிட்டது. இது இந்தியர் அனைவரும் பெறுமைப் படக்கூடியது. அதில் இரண்டு விருது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்தது தமிழகத்திற்கே பெறுமை சேர்கின்றது.... படத்தில் இசை சோக காட்சிகளில் கூட வெற்றிப் பெறவேண்டும் என்ற எண்ணம் தூண்டும்படி எழுற்சியாக இருப்பதுதான் வெற்றியின் ரகசியம்... அந்த பெறுமை ஏ.ஆர். ரகுமானை சேரும். முக்கியமாக சொல்ல வேண்டும் Sound Mixing (சிறப்பு ஒலி சேர்ப்பு) ஒரு புதிய உணர்வையும், அவற்றுக்காண முகவரியும் கொடுக்கின்றது, ரெசுல் பூக்குட்டி பாராட்டலாம்.

படம் பார்க்கும்பொழுது நானும்(நீயும்) ஒரு மில்லினியராகலாம் என்ற எண்ணங்களை உருவாக்கிவிடுகின்றது. இந்த படத்தின் விமர்சனம் தேவையில்லை, அதை எல்லொரும் சொல்லி முடிந்த விடயம். ஒரு மில்லியனரை உருவாக்கும் ஞானம் நம்மிடைய உள்ள கல்வி முறையில் இருக்கின்றதா? என்பதுதான் என் எண்ணங்களாக இங்கே!!!!!!....

இந்தப் படத்தில் சேரியில் வளர்ந்த "ஜமால்" வாழ்க்கை போராட்டதினால் பக்குவப்பட்ட அனுபவ சம்பவங்களினால் எல்லா கேள்விகளுக்கும் கலக்கமில்லாமல் விடையழிக்க முடிந்தது. இந்த அனுபவ கல்விதான் இன்றய தலைமுறைக்கு தேவைப்படுகின்றது. இந்த அனுபவக் கல்வியால்தான் பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களும் சாதனைப் புரிந்தார்கள்.. இப்படிதான் என்னுடன் படித்த கடைசி பென்ச் நண்பர்கள் கூட தொழிலில் சிறந்து விளங்குகின்றார்கள்.... கொட்ட கொட்ட முழுச்சி நல்லா படிச்சி மார்க்கு வாங்குன எல்லோரும் இப்போ பேந்த பேந்த முழிக்குறாங்க,.. இவங்க முழிக்குறது அறிவில்லாமல் இல்லங்க, இவர்கள் அறிவு உலகத்தாரோடு ஒத்துபோகாததுதான்.

மார்க்கு(மதிப்பெண்) மட்டுமே அறிவாகாது என்பதை ஆசிரியர்களும், பெற்றொர்களும் என்று புரிந்து கொள்கின்றார்களோ!.... அன்று நானும்(நீயும்) மில்லியனியர்தான் போங்க! படத்தில் உள்ள கதைப்பொல கஷ்டப்பட்டு வாழ்கை கல்வியை அறியமுடியும் என்பதில்லை, இயல்பான வாழ்கைமுறையை புரியவைத்து சொல்லிக்கொடுத்தாலே வெற்றிகள் நம்பக்கம் இருக்கும்....
எண்ணங்களில் மில்லியனியராக நீங்களும்,....
நானும்....... ஆ.ஞானசேகரன்

11 comments:

கோவி.கண்ணன் said...

நம்ம நாட்டில் நிறைய 'மில்லி'னியர்கள் உண்டு !
அவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் கண்ணன்! நாம் இருவர்தான் முதல் மில்லினியர்கள் (மனதில்) கவலைவிடுங்கள்

சொல்லரசன் said...

//கஷ்டப்பட்டு வாழ்கை கல்வியை அறியமுடியும் என்பதில்லை, இயல்பான வாழ்கைமுறையை புரியவைத்து சொல்லிக்கொடுத்தாலே வெற்றிகள் நம்பக்கம் இருக்கும்.... //

உண்மைதான்,இந்த பாடத்தை நாமும் ஆசிரியர்களும்படிக்கவில்லையை.

ஆ.ஞானசேகரன் said...

Thanks சொல்லரசன் ....

கோவி.கண்ணன் said...

உங்க வலையை யூத்புல் விகடனில் இணைச்சிருக்காங்க !

http://youthful.vikatan.com/youth/index.asp

ஆ.ஞானசேகரன் said...

//கோவி.கண்ணன் said...
உங்க வலையை யூத்புல் விகடனில் இணைச்சிருக்காங்க !

http://youthful.vikatan.com/youth/index.asp//

Thanks Mr.Kannan

ஆ.ஞானசேகரன் said...

youthful.vikatan.com வில் என் வலைப்பதிவை இணைத்து ஊக்கப்படுத்திய youthful.vikatan.com குழுவினற்கு நன்றி!!!!!

http://youthful.vikatan.com/youth/index.asp

Anonymous said...

:)

ஆ.ஞானசேகரன் said...

Thooya


நன்றி!

VIKNESHWARAN ADAKKALAM said...

படிப்பறிவை விட பட்டறிவு சிறந்ததுனு சொல்லி இருக்காங்க... இன்றய கால கட்டத்தில் மில்லியனரும் திண்டாடும் நிலையில் தான் இருக்காங்க... எல்லோருக்கும் ஒரே கவலை... the future value of money... :))

ஆ.ஞானசேகரன் said...

//VIKNESHWARAN said...
படிப்பறிவை விட பட்டறிவு சிறந்ததுனு சொல்லி இருக்காங்க... இன்றய கால கட்டத்தில் மில்லியனரும் திண்டாடும் நிலையில் தான் இருக்காங்க... எல்லோருக்கும் ஒரே கவலை... the future value of money... :))
//
வாழ்க்கை ஒரு வட்டம் ஏற்றம் இறக்கம் வரதான் செய்யும்... பணம் மாத்திரமே வாழ்க்கையின் மகிழ்ச்சியை நிர்ணயம் செய்வதில்லை. புரிந்துக்கொண்டு நடைப்போட்டால்.. என்றுமே நாம் மில்லியனியர்தான்(மகிழ்ச்சியுடன்)

நன்றி விக்னேஷ்