_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, May 25, 2009

பெண்ணொன்று கண்டேன்... தொடர்ச்சி 3

பெண்ணொன்று கண்டேன்... தொடர்ச்சி 3

முதல் இரண்டு பகுதிகளை படிக்க சுட்டியை சுட்டி படிக்கலாம்.
பெண்ணொன்று கண்டேன்...
பெண்ணொன்று கண்டேன்... தொடர்ச்சி 2

மேற்கண்ட இரண்டு பகுதிகளையும் படித்த நண்பர் ஆதவா என்னிடம் அலைபேசியில் கேட்ட கேள்வி, " பெண்பார்க்கும் பொழுது பெண்ணிடம் முதலில் என்ன பேச வேண்டும்?, இரண்டாவதாக எனக்கு பிடித்த பெண்ணிற்கு என்னை பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது ?அதேபோல் பெண்ணிற்கும்."....
நான் சிங்கபூரில் வேலைசெய்கின்றேன் என்வயது அப்பொழுது திருமணத்தை தொட்டது எனவே என் பெற்றோர்களிடம் பெண்பார்க்க சொன்னேன். என் அப்பா உனக்கு எப்படிப்பட்ட பெண் பார்க்கவேண்டும்? என்று கேட்டார். நான் என் அப்பாவிடம் உங்களுக்கும் அம்மாவிற்கும் பிடித்ததாக பாருங்கள் போகும்பொழுது என் நண்பனையும் அழைத்து செல்லுங்கள் என்றேன். (என் கணக்கின்படி என் பெற்றோர் குடும்பம் பழக்கவழக்கங்களை பார்ப்பார்கள், என் நண்பர் எனக்கு பெண் "பார்வைக்கு" எப்படிப்பட்டவளாக இருப்பாள் என்பதை கவணிப்பார் என்று கணித்தேன் என் நண்பர் மணமானவர்) மேலும் பல புகைப்படங்களை அனுப்பவேண்டாம் உங்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு பெண் புகைப்படம் மட்டுமே போதும் என்றேன். அதன்படி ஒரு புகைப்படம் மட்டுமே வந்தது, அதனுடன் பெண்ணைப்பற்றிய விவரம் மற்றும் வேலைசெய்யும் இடத்தின் தொலைபேசி எண்ணும் இருந்தது. புகைப்படம் பார்த்தவுடனே பிடிக்கும் அளவில் இல்லை என்றாலும் என் மனம் சரி என்றே சொல்லியது. இருப்பினும் என் பணி மற்றும் என் நிலைகளை பெண்ணிற்கு தெரியப்படுத்தினால் நல்லதாகப்பட்டது. நான் யாரிடமும் கேட்காமலே அந்த தொலைப்பேசி எண்ணில் தொடர்புக்கொண்டேன். மறுமுனையில் பேசியது பெண்ணேதான், நான் என் பெயரை சொல்லியதும் அவளிடம் ஒரு நடுக்கம். பின் அவளாகவே பேசினாள் " நான் உங்கள் குடுப்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்தேன், உங்கள் போட்டோவையும் பார்த்தேன் எனக்கு உங்களை பிடித்திருக்கின்றது, என் போட்டொ மற்றும் விவரங்கள் பார்த்தீர்களா? என்னை பிடித்திருக்கின்றதா? " என்றாள். எதிர்முனையில் நான் பேசாதவனானேன், என் அப்பாவிடம் சொல்லுகின்றேன் என்று சொல்லி முடித்துக்கொண்டேன். (என் மனம் இவள்! இவளேதான் என்றது) இன்றுவரை நான் அவளிடம் உன்னை எனக்கு பிடித்திருக்கின்றது என்று சொல்லியதில்லை, அப்படியே நடந்துக்கொள்கின்றேன். 8வயது பையனுக்கும் 4 வயது பெண்ணுக்கும் அப்பாவாக இருக்கின்றேன். திருமணத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்தான் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம் .

மேற்கண்ட என் வாழ்வியல் சம்பவம் உற்று நோக்கினால் நண்பர் ஆதவாவிற்கு நல்ல பதிலை கொடுக்கலாம் என்றே தோன்றுகின்றது. பெண்பார்க்கும் பொழுது அந்த ஒரு நிமிடத்தில் ஆண் பெண்ணிடம் பேசுவதினாலோ அல்லது பெண் ஆணுடன் பேசுவதினாலோ புரிந்துக்கொள்ளுதல் என்பது சாத்தியமில்லை. மாறாக முதல் இரவில் வரும் அனுபவம் சுவாராசியம் இல்லாமல் போகலாம் என்றே தோண்றுகின்றது. ஒரு ஆண் அல்லது பெண் தன்னுடைய திருமணத்திற்கு மனதியியல் முறையில் தன்னை தாயார்ப்படுத்துதல் என்பதுதான் முக்கியம். இளமையும் அழகும் வாழ்க்கையில் கூடவே வருவதில்லை அன்பும் அரவணைப்பும்தான் நம்முடன் வரக்கூடியது. எனக்கு வரவேண்டியவன் அல்லது வரவேண்டியவள் எப்படி இருக்கவேண்டும் என்பதை விட நாம் அவர்களுக்கு எப்படிப்பட்டவனாக, எப்படிப்பட்டவளாக இருக்கவேண்டும் என்பதில்தான் வாழ்க்கையின் சூட்சுமம் உள்ளது. அதை புரிந்துக்கொண்டாள் இந்த உலகம் நம்கையில் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த சூட்சுமதிற்கு நம்மை தயார்படுத்துதலில்தான் பெண்பார்த்தல் சடங்கில் உள்ள வெற்றிகள்.

எனக்கு பிடித்த பெண்ணிற்கு என்னை பிடிக்காமல் போனால்???? என்ன பன்றதுங்க எல்லோருக்கும் எல்லோரையும் பிடித்துவிடுவதில்லை. என்னை பிடித்தவளுக்கு பிடித்தவனாக இருக்க தயார்ப்படுத்தலாமே.... இந்த தயார்ப்படுத்துதல்தான் திருமணத்தின் வெற்றிகள். பிடித்தவர்களை மணம்செய்தவர்கள் எத்தனைபேர் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்? நான் கேட்ட பல காதல் திருமண தம்பதிகள் " காதலின் முடிவில் திருமணம் என்ற நிலையில் இவர்கள் மனதில் இது தேவையில்லை என்றே மனம் சொல்வதாக சொன்னார்கள். மேலும் எதோ ஒரு காரணத்தால் திருமணம் நின்றாலும் பரவாயில்லை என்ற மனநிலை இருந்ததாக கூறினர்". திருமணத்திற்கு முன் என்பதைவிட திருமணத்திற்கு பின் புரிதல் என்பதில்தான் தாம்பத்தியம் அடங்கியுள்ளது என்பதை புரிந்துகொண்டால் உங்கள் இரண்டாவது கேள்விக்கு பதில் கிடைத்துவிடும்...

இன்னும் வரும்
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.

28 comments:

சொல்லரசன் said...

//திருமணத்திற்கு முன் என்பதைவிட திருமணத்திற்கு பின் புரிதல் என்பதில்தான் தாம்பத்தியம் அடங்கியுள்ளது//

உண்மைதான்,இந்த புரிதல் இல்லாமையே இன்று விவாகரத்து சதவீத உயர்வுக்கு
காரணம்.

ஆ.ஞானசேகரன் said...

/// சொல்லரசன் said...

//திருமணத்திற்கு முன் என்பதைவிட திருமணத்திற்கு பின் புரிதல் என்பதில்தான் தாம்பத்தியம் அடங்கியுள்ளது//

உண்மைதான்,இந்த புரிதல் இல்லாமையே இன்று விவாகரத்து சதவீத உயர்வுக்கு
காரணம்.///

வாங்க சொல்லர்சன்.. இன்னும் தூங்கவில்லையா? உங்ககளின் கருத்திற்கும் மிக்க நன்றி...

பழமைபேசி said...

பட்டைய கெளப்புறீங்க...

ஆ.ஞானசேகரன் said...

// பழமைபேசி said...
பட்டைய கெளப்புறீங்க...//

நன்றி நண்பா... எல்லாம் உங்களின் ஊக்கம்தான்..

தேவன் மாயம் said...

நான் யாரிடமும் கேட்காமலே அந்த தொலைப்பேசி எண்ணில் தொடர்புக்கொண்டேன். மறுமுனையில் பேசியது பெண்ணேதான், நான் என் பெயரை சொல்லியதும் அவளிடம் ஒரு நடுக்கம். பின் அவளாகவே பேசினாள் " நான் உங்கள் குடுப்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்தேன், உங்கள் போட்டோவையும் பார்த்தேன் எனக்கு உங்களை பிடிக்கின்றது, என் போட்டொ மற்றும் விவரங்கள் பார்த்தீர்களா? என்னை பிடிக்கின்றதா? " என்றாள். எதிர்முனையில் நான் பேசாதவனானேன், என் அப்பாவிடம் சொல்லுகின்றேன் என்று சொல்லி முடித்துக்கொண்டேன். (என் மனம் இவள்! இவளேதான் என்றது) இன்றுவரை நான் அவளிடம் உன்னை எனக்கு பிடிக்கின்றது என்று சொல்லியதில்லை, அப்படியே நடந்துக்கொள்கின்றேன். 8வது பையனுக்கும் 4வது பொண்ணுக்கும் அப்பாவாக இருக்கின்றேன். திருமணத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்தான் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம் .///

ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நமக்கிருப்பதுபோல் வேறு யாருக்கும் இல்லை!!

தேவன் மாயம் said...

அமெரிக்காவில் உள்ள 58 குடும்பத்தினரின் விவாகரத்து வழக்கு (தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள்) இங்கு லோகல் நீதிமன்றத்தில் உள்ளது!!

ஆ.ஞானசேகரன் said...

//thevanmayam said... ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நமக்கிருப்பதுபோல் வேறு யாருக்கும் இல்லை!!//

வணக்கம் தேவன் சார்,
நீங்கள் சொல்வதும் சரிதான். ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நமக்கு இருப்பது ஒரு வரன் என்றே சொல்லலாம்..

//அமெரிக்காவில் உள்ள 58 குடும்பத்தினரின் விவாகரத்து வழக்கு (தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள்) இங்கு லோகல் நீதிமன்றத்தில் உள்ளது!!//

ஐயோ.... உறவை சரியாக புரிந்துகொள்ளமலும், எதிர்பார்ப்புகளின் ஏமாற்றமும் காரணமாக இருக்கலாம்....

நன்றி சார்

ஷண்முகப்ரியன் said...

//8வது பையனுக்கும் 4வது பொண்ணுக்கும் அப்பாவாக இருக்கின்றேன். //

உண்மையாகவா ஞானசேகரன்?! இல்லை ஏதாவது எழுத்துப் பிழையா?

ஆ.சுதா said...

நல்ல விளக்கமாக எழுதியிருக்கீங்க.

//எனக்கு வரவேண்டியவன் அல்லது வரவேண்டியவள் எப்படி இருக்கவேண்டும் என்பதை விட நாம் அவர்களுக்கு எப்படிப்பட்டவனாக, எப்படிப்பட்டவளாக இருக்கவேண்டும் என்பதில்தான் வாழ்க்கையின் சூட்சமம் உள்ளது.//

//திருமணத்திற்கு முன் என்பதைவிட திருமணத்திற்கு பின் புரிதல் என்பதில்தான் தாம்பத்தியம் அடங்கியுள்ளது//

இவைகள் நல்லா இருக்கே, உங்கள் உயரந்த என்னத்தையும் அனுபவத்தையும் வெளிபடுத்துகின்றது. இவ்வார்த்தைகள் தான் வாழ்க்கை.

ஆதவா said...

மீண்டும் எப்பொழுது எழுதுவீர்கள் என்று காத்திருந்தேன்.... உங்கள் அனுபவமே இப்பதிவில் முண்ணனியாக இருக்கிறது. போதுமான பதில்கள் அங்கிருந்தே கிடைக்கிறது.. எனினும் எனக்குள் இருக்கும் கேள்விகளுக்கான விடை இன்னும் முடிந்துவிடாமலேயே இருக்கிறது...

பார்ப்போம்... அதையும் சந்திப்போம்....
நன்றிங்க...

ஆதவா said...

8வது பையனுக்கும் 4வது பொண்ணுக்கும் அப்பாவாக இருக்கின்றேன். எனக்குப் புரியவில்லை... எதற்காக எழுதியிருக்கிறீர்கள் என்று..

ஆ.ஞானசேகரன் said...

// ஷண்முகப்ரியன் said...

//8வது பையனுக்கும் 4வது பொண்ணுக்கும் அப்பாவாக இருக்கின்றேன். //

உண்மையாகவா ஞானசேகரன்?! இல்லை ஏதாவது எழுத்துப் பிழையா?///

மன்னிக்கவும் சார் ,,, 8வயது பையன் 4வயது பொண்ணு ( தூக்கத்தில் தட்டச்சு தவறாச்சு) சிறிய தவறு கருவில் மாற்றம் ஐயோஓஒ... நன்றி சார்...

ஆ.ஞானசேகரன் said...

// ஆ.முத்துராமலிங்கம் said...

நல்ல விளக்கமாக எழுதியிருக்கீங்க.

//எனக்கு வரவேண்டியவன் அல்லது வரவேண்டியவள் எப்படி இருக்கவேண்டும் என்பதை விட நாம் அவர்களுக்கு எப்படிப்பட்டவனாக, எப்படிப்பட்டவளாக இருக்கவேண்டும் என்பதில்தான் வாழ்க்கையின் சூட்சமம் உள்ளது.//

//திருமணத்திற்கு முன் என்பதைவிட திருமணத்திற்கு பின் புரிதல் என்பதில்தான் தாம்பத்தியம் அடங்கியுள்ளது//

இவைகள் நல்லா இருக்கே, உங்கள் உயரந்த என்னத்தையும் அனுபவத்தையும் வெளிபடுத்துகின்றது. இவ்வார்த்தைகள் தான் வாழ்க்கை.//

நன்றி ஆ.முத்துராமலிங்கம்

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...

மீண்டும் எப்பொழுது எழுதுவீர்கள் என்று காத்திருந்தேன்.... உங்கள் அனுபவமே இப்பதிவில் முண்ணனியாக இருக்கிறது. போதுமான பதில்கள் அங்கிருந்தே கிடைக்கிறது.. எனினும் எனக்குள் இருக்கும் கேள்விகளுக்கான விடை இன்னும் முடிந்துவிடாமலேயே இருக்கிறது...

பார்ப்போம்... அதையும் சந்திப்போம்....
நன்றிங்க..//

வாங்க ஆதவா உங்களின் வயதின் தேடல் என்றே நினைக்கின்றேன். இருப்பினும் இந்த பதிவு வழிக்காட்டும் என்று நம்புகின்றேன். மேலும் எதுவானானும் கேலுங்கள் நண்பர்களும் சொல்லுவார்கள்..


//8வது பையனுக்கும் 4வது பொண்ணுக்கும் அப்பாவாக இருக்கின்றேன். எனக்குப் புரியவில்லை... எதற்காக எழுதியிருக்கிறீர்கள் என்று..//


பிழையை திருத்திவிட்டேன். 8வயது பையன் 4வயது பொண்ணு அப்பாவாக மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.. என்பதை சுட்டிகாட்டினேன்.
நன்றி ஆதவா,,,,

வேத்தியன் said...

நல்ல பகிர்வு நண்பரே...

நன்றி...

முதல் இரண்டு பாகங்களையும் வாசிக்க வேண்டும்...
:-)

ஆ.ஞானசேகரன் said...

//வேத்தியன் said...

நல்ல பகிர்வு நண்பரே...

நன்றி...

முதல் இரண்டு பாகங்களையும் வாசிக்க வேண்டும்...
:-)//

வாங்க வேத்தியன்.. மிக்க நன்றி...

குடந்தை அன்புமணி said...

நல்ல பதிவு. முதல் இரண்டு பதிவுகளை இனிமேல்தான் வாசிக்கப் போகிறேன். தலைவர் ரஜினி சொல்வது போல் இருக்கிறது... நீ விரும்புற பெண்ணைவிட உன்னை விரும்புற பெண்ணை கட்டிக்கிட்டா வாழ்க்கை நல்லாருக்கும்... நிச்சயமான வார்த்தைகள்...

புதியவன் said...

//(என் மனம் இவள்! இவளேதான் என்றது)//

இந்த வார்த்தைகளை ரசித்தேன் ஞானசேகரன்...

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தை அன்புமணி said...
நல்ல பதிவு. முதல் இரண்டு பதிவுகளை இனிமேல்தான் வாசிக்கப் போகிறேன். தலைவர் ரஜினி சொல்வது போல் இருக்கிறது... நீ விரும்புற பெண்ணைவிட உன்னை விரும்புற பெண்ணை கட்டிக்கிட்டா வாழ்க்கை நல்லாருக்கும்... நிச்சயமான வார்த்தைகள்...//

நன்றி நண்பா,.. வாழ்வியியல் எதார்த்தமும் அதுதானே

ஆ.ஞானசேகரன் said...

//புதியவன் said...
//(என் மனம் இவள்! இவளேதான் என்றது)//

இந்த வார்த்தைகளை ரசித்தேன் ஞானசேகரன்...
//
வாங்க புதியவன், மிக்க நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//எனக்கு வரவேண்டியவன் அல்லது வரவேண்டியவள் எப்படி இருக்கவேண்டும் என்பதை விட நாம் அவர்களுக்கு எப்படிப்பட்டவனாக, எப்படிப்பட்டவளாக இருக்கவேண்டும் என்பதில்தான் வாழ்க்கையின் சூட்சமம் உள்ளது.//

இதுதான் தலைவா வாழ்க்கையில் ரொம்ப முக்கியம். இப்படி கணவன் மனைவி இரண்டுபேருமே இருக்கத் துவங்கிவிட்டால், வீட்டினுள் ஒருவித இன்னிசையே கேட்கலாம் இன்னிசைக் கருவியே இல்லாமல்..

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்களுடைய வாழ்க்கை அனுபவத்தையே எடுத்து சொல்லி விளக்கியது அருமை.. தொடர்ந்து இந்த தலைப்புல அசத்துறீங்க நண்பா

ஆ.ஞானசேகரன் said...

/// " உழவன் " " Uzhavan " said...
//எனக்கு வரவேண்டியவன் அல்லது வரவேண்டியவள் எப்படி இருக்கவேண்டும் என்பதை விட நாம் அவர்களுக்கு எப்படிப்பட்டவனாக, எப்படிப்பட்டவளாக இருக்கவேண்டும் என்பதில்தான் வாழ்க்கையின் சூட்சமம் உள்ளது.//

இதுதான் தலைவா வாழ்க்கையில் ரொம்ப முக்கியம். இப்படி கணவன் மனைவி இரண்டுபேருமே இருக்கத் துவங்கிவிட்டால், வீட்டினுள் ஒருவித இன்னிசையே கேட்கலாம் இன்னிசைக் கருவியே இல்லாமல்..///

வாவ்வ்வ், வணக்கம் நண்பா, நல்லாவே சொன்னீங்க. நல்ல இன்னிசைக்கு... உண்மைதான் நண்பா... மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
உங்களுடைய வாழ்க்கை அனுபவத்தையே எடுத்து சொல்லி விளக்கியது அருமை.. தொடர்ந்து இந்த தலைப்புல அசத்துறீங்க நண்பா//

வாங்க கார்த்திகைப் பாண்டியன்.... உங்களை போன்ற நண்பர்களுக்கு பயனாகட்டுமே

நசரேயன் said...

நல்ல பகிர்வு

ஆ.ஞானசேகரன் said...

// நசரேயன் said...

நல்ல பகிர்வு//

நன்றி நண்பா..

நட்புடன் ஜமால் said...

\\புதியவன் said...

//(என் மனம் இவள்! இவளேதான் என்றது)//\\


என் இரசனையும் இங்கு தான் சற்றே நிறுத்தியது

ஆ.ஞானசேகரன் said...

/// நட்புடன் ஜமால் said...
\\புதியவன் said...

//(என் மனம் இவள்! இவளேதான் என்றது)//\\


என் இரசனையும் இங்கு தான் சற்றே நிறுத்தியது///

நன்றி நண்பா