ஏன்? எதற்கு? எப்படி?..... 3
ஆதிகால மனிதன் தன்னுடைய அனுபவங்கள் மூலமாக வாழ்வியல் அறிவியல் மற்றும் கணிதங்களை கற்றுகொள்கின்றான். அப்படி கற்றுகொண்டவைகளில் மிக முக்கியமான ஒன்று முக்கோணம் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு முக்கோணம் பயன்பட்டு வருகின்றது. குறைந்த எண்ணிக்கை கோடுகளால் உருவாக்கப்படும் பரப்பு என்றால் அது முக்கோணம். முக்கோணம் மூன்று கோடுகள் மற்றும் மூன்று கோணங்கள் கொண்டு உருவாக்கப்படுகின்றது.
[படம் 1]நாடோடிகளாய் வாழ்ந்த மனிதன் பின்னர் ஒவ்வொரு குழுக்காளாக ஓரிடத்தில் வாழ கற்றுக்கொண்டான். அப்படி வாழ அவனுக்கு இருப்பிடம் தேவைப்பட்டது. தனக்கென வீடுகள் கட்டிக்கொண்டு வாழத்தொடங்கினான். அப்படி கட்டிய வீடுகளின் கூரைகள் முக்கோண வடிவில் இருப்பதை காணலாம். இன்றும் பல வீடுகளின் கூரைகள் முக்கோண வடிவில் இருப்பதை காண முடிகின்றது. எகிப்தில் உள்ள பிரமிடுகள் கூரைகளும் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்.
[படம் 2]
[படம் 3]
இப்பொழுது நம் சிந்தனைக்கு வீட்டின் கூரைகள் ஏன் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டது?
சுலபமாக பதில் சொல்லிவிடலாம் என்றாலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கேள்வி. அனுபவங்கள் மூலம் கண்டடுத்த பொக்கிசம் என்றே சொல்லலாம்.
1.குறைந்த பக்கங்களால் அடைக்கப்படும் பரப்பு எனவே வேலையும் செலவும் குறைவு. கணதவியல் அடிப்படையில் உள்ள பயன்.
2.எந்த ஒரு புற விசை தாக்கும் பொழுது உருவம் மாற அமைப்பு முக்கோணத்தில் சிறப்புகளாகும். இந்த விசை சதுரம் செவ்வகத்தில் தாக்கினால் உருவம் சிதைந்து சாய்சதுரமாகவும் சாய்செவ்வகமாகவும் சிதையும் ( படத்தில் காண்க).
[படம் 4]எனவே இயற்கை சீற்றங்களால் வீடுகள் பாதுகாக்கப்படுகின்றது. மழை நீர் கூரையில் எளிதாக வழிந்துவிடுகின்றது. தற்காலத்தில் கூரையில் மேல்தளம் அரை வட்ட வடிவில் அமைக்கப்படுவதையும் பார்க்கலாம். இந்த அரை வட்டமும் பல முக்கோணங்களை கொண்டது. கட்டடக்கலையில் பெரும்பகுதி இந்த முக்கோணம் பயன் படுகின்றது.
[படம் 5]
அதே போல் திருகாணியின் மூல சூத்திரமும் முக்கோணம்தான். மேலும் திருகாணி மற்றும் எந்திரங்களில் பயன்படும் நட்டு போல்ட்டில் உள்ள மரைகளில் அதிகமாக முக்கோண மரைகள்தான் பயன்படுத்தப்படுகின்றது. முக்கோண மரைகளின் பயன் காலம் அதிகம் (புறவிசைகளால் உருசிதைவு குறைவாக இருக்கும்).
[படம் 6]
[படம் 7]
முக்கோணம் பற்றிய வியக்கதக்க முக்கிய செய்தி: இன்றுவரை விஞ்ஞானிகளுக்கு ஒரு சவாலாக இருப்பது பெர்முடா முக்கோணம். வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொ ரிகொ ஆகிய முன்று துறைமுகங்களை இணைத்து ஒரு முக்கோணம் வரைந்தால் கிடைக்கும் பகுதியே பெர்முடா முக்கோணம் ஆகும். இதன் வியக்கதக்க விந்தைகளால் இவற்றை பிசாசு முக்கோணம் என்றும் அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர்.
[படம் 8]
இவ்முக்கோணப்பகுதில் காணப்படும் ஆழ்கடலின் அடியில் உள்ள சக்திவாய்ந்த நீரோட்டங்களினால் இவ்வெல்லைக்குள் புகுந்த கப்பல்கள் விமானங்கள் சிறு மரகலங்கள் மாயமாய் மறைந்துவிடுகின்றன. இதுவரை 40 கப்பல்கள் 20 விமானங்கள் எண்ணற்ற சிறு மரக்கலங்கள் மறைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கான முழுமையான காரணங்கள் கண்டுபிடிக்க முடிவில்லை. பலர் பல கருத்துகளை சொல்லி வருகின்றனர். இன்று வரை காணமல் போன பொருள்களைப்பற்றிய விவரமும் தெரியவில்லை. இது விஞ்ஞானிகளுக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது. கடலுக்குள் வாழும் மனிதர்களால் இழுத்து செல்லப்படுகின்றது என்ற மூடநம்பிக்கையும் இருந்து வருகின்றது.
1872-ஆம் ஆண்டில் மேரி செலெஸ்டி என்னும் பெயருடைய ஒரு பாய்மரக் கப்பல் மறைந்த நிகழ்சியே முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. அதன் பின் நடந்த நிகழ்ச்சிகள் அதிர்ச்சியை கொடுத்துக்கொண்டு வருகின்றது.
மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.
Monday, October 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
48 comments:
ஆஹா.. அருமையாச் சொன்னீங்க.
முக்கோணத்தில் இவ்வளவு விசயங்கள் இருக்கா.. பிரமாதம்.
நம் நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு பிராசாரத்திற்கு கூட சிவப்பு முக்கோணம்தான் பயன்படுத்துகின்றார்கள். இதற்கு எதாவது காரணம் உண்டுங்களா?
ஏன், எதற்கு, எப்படி-3-ல் முக்கோணம் பற்றிய செய்தி... பதிவு, படம், பாடம்...அருமை
ஞானசேகரன் கைகொடுங்கள் இவ்வளவு மகத்துவமானதா? முக்கோணம்.
நான் வெறும் குடும்பக் கட்டுப்பாட்டுச் சின்னம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆதிய்லிருந்து முக்கோணப்பயன்பாடுகளை விலாவாரியாக சொல்லியிருக்கிரீர்கள்.
தொடரட்டும் சிந்தனைகள்.
// இராகவன் நைஜிரியா said...
ஆஹா.. அருமையாச் சொன்னீங்க.
முக்கோணத்தில் இவ்வளவு விசயங்கள் இருக்கா.. பிரமாதம்.//
வாங்க நண்பா, மிக்க நன்றிங்க
//நம் நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு பிராசாரத்திற்கு கூட சிவப்பு முக்கோணம்தான் பயன்படுத்துகின்றார்கள். இதற்கு எதாவது காரணம் உண்டுங்களா?//
அதைப்பற்றி நான் அறியவில்லை முடிந்தால் பின்பு பகிர்ந்துக்கொள்ளலாம். தெரிந்த நண்பர்கள் சொல்லுவார்கள் என்று நினைக்கின்றேன்.
//அரசூரான் said...
ஏன், எதற்கு, எப்படி-3-ல் முக்கோணம் பற்றிய செய்தி... பதிவு, படம், பாடம்...அருமை//
மிக்க நன்றி நண்பா
ஆகா.... நல்ல தகவல்!
//காமராஜ் said...
ஞானசேகரன் கைகொடுங்கள் இவ்வளவு மகத்துவமானதா? முக்கோணம்.
நான் வெறும் குடும்பக் கட்டுப்பாட்டுச் சின்னம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆதிய்லிருந்து முக்கோணப்பயன்பாடுகளை விலாவாரியாக சொல்லியிருக்கிரீர்கள்.
தொடரட்டும் சிந்தனைகள்.//
வாங்க நண்பா, உங்களின் பாராட்டு என்னை மேலும் மிளிரசெய்யும்.
// பழமைபேசி said...
ஆகா.... நல்ல தகவல்!//
வணக்கம் நண்பா,.. மிக்க நன்றிங்கோ!
முக்கோணத்தைப் பற்றி பல புதிய தகவல்கள்..
அருமை..
முக்கோணத்திற்கு இத்தனை கோணங்கள் மட்டும் விளக்கங்களா?
படித்து ரசித்தேன்
பாராட்டுகள் ஞானசேகர்
பெர்முடா முக்கோணத்தில் பெரிதாக எந்த சவாலும் இல்லை. கடலிலுள்ள எந்த ஒரு முக்கோண அல்லது மற்ற பரப்பை எடுத்து பார்த்தால் அங்கும் இதுபோல விடயங்கள் இருக்கும். உதாரணத்திற்கு ஜப்பான் அருகிலுள்ள ட்ராகன் முக்கோணம் (Dragon's Triangle). கடல் மிகப்பெரியது; அதில் பலவையான விபத்துக்கள் நடக்கின்றன. அதில் பலவற்றிக்கு மோசமான பருவநிலையும் (உதரணமாக micro-stroms), கடல் நீரோடைகளும் காரணமாகின்றன. இதற்கெல்லாம் கண்ணும் காதும் வைத்து கதை சொல்ல பலர் உள்ளனர். அதை கேட்பதற்கும் பலர் உள்ளனர். இப்படித்தான் Crop Circles, UFO போன்ற பல கதைகள். ஏமாளிகள் உள்ளவரை ஏமாற்றுவோர் ஏமாற்றிக்கொண்டே இருப்பர்.
முக்கோணம் பற்றி நல்ல பகிர்வு நண்பா. நிறைய புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
// தீப்பெட்டி said...
முக்கோணத்தைப் பற்றி பல புதிய தகவல்கள்..
அருமை..//
வாங்க மிக்க நன்றி நண்பா
// கதிர் - ஈரோடு said...
முக்கோணத்திற்கு இத்தனை கோணங்கள் மட்டும் விளக்கங்களா?
படித்து ரசித்தேன்
பாராட்டுகள் ஞானசேகர்//
வணக்கம் கதிர்,,, மிக்க நன்றிங்க
// RajK said...
பெர்முடா முக்கோணத்தில் பெரிதாக எந்த சவாலும் இல்லை. கடலிலுள்ள எந்த ஒரு முக்கோண அல்லது மற்ற பரப்பை எடுத்து பார்த்தால் அங்கும் இதுபோல விடயங்கள் இருக்கும். உதாரணத்திற்கு ஜப்பான் அருகிலுள்ள ட்ராகன் முக்கோணம் (Dragon's Triangle). கடல் மிகப்பெரியது; அதில் பலவையான விபத்துக்கள் நடக்கின்றன. அதில் பலவற்றிக்கு மோசமான பருவநிலையும் (உதரணமாக micro-stroms), கடல் நீரோடைகளும் காரணமாகின்றன. இதற்கெல்லாம் கண்ணும் காதும் வைத்து கதை சொல்ல பலர் உள்ளனர். அதை கேட்பதற்கும் பலர் உள்ளனர். இப்படித்தான் Crop Circles, UFO போன்ற பல கதைகள். ஏமாளிகள் உள்ளவரை ஏமாற்றுவோர் ஏமாற்றிக்கொண்டே இருப்பர்.//
ம்ம்ம்... நல்ல செய்தி, ட்ராகன் முக்கோணம் பெர்முடா முக்கோணத்திற்கு பூமியின் மறு முனையில் இருப்பதாக சொல்கின்றார்களே?
// S.A. நவாஸுதீன் said...
முக்கோணம் பற்றி நல்ல பகிர்வு நண்பா. நிறைய புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.//
நன்றி நண்பா
மிக அருமையான முக்கோண ஆய்வு கட்டுரை.......
தொடருங்கள் நண்பரே........!
//ஊடகன் said...
மிக அருமையான முக்கோண ஆய்வு கட்டுரை.......
தொடருங்கள் நண்பரே........!//
உங்களின் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி நண்பா
Very Useful Informations..
Interesting too..
// வினோத்கெளதம் said...
Very Useful Informations..
Interesting too..//
மிக்க நன்றி நண்பா
அருமையான பதிவு உங்க துறை சார்ந்த தகவல்கள்,மனிதனின் வாழ்வில் எவ்வாறு பயன் அளிக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது.
// sollarasan said...
அருமையான பதிவு உங்க துறை சார்ந்த தகவல்கள்,மனிதனின் வாழ்வில் எவ்வாறு பயன் அளிக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது.//
வணக்கம் சொல்லரசன், மிக்க நன்றிங்க
புதிய தகவல்கள். அருமை. ரசித்துப் படித்தேன்.
// ஜெஸ்வந்தி said...
புதிய தகவல்கள். அருமை. ரசித்துப் படித்தேன்...
//
மிக்க நன்றிங்க
ஞானம்,விடுமுறையில் நிறைய சேமிப்போடுதான் வந்திருக்கீங்க.
முக்கோணத்துக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா !
ஆழமான தேடுதலும் பகிர்தலும்.
// ஹேமா said...
ஞானம்,விடுமுறையில் நிறைய சேமிப்போடுதான் வந்திருக்கீங்க.
முக்கோணத்துக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா !
ஆழமான தேடுதலும் பகிர்தலும்.//
வாங்க ஹேமா,
மிக்க நன்றிமா
எனக்கு முக்கோணம்ன்னா வேற ஒன்னுதான் ஞாபகம் வரும்! அதபத்தி நீங்க கவலை படாதீங்க பாஸ்... நீங்க இதுபோல நிறைய சிந்தியுங்க!!!!!
:-)
//கலையரசன் said...
எனக்கு முக்கோணம்ன்னா வேற ஒன்னுதான் ஞாபகம் வரும்! அதபத்தி நீங்க கவலை படாதீங்க பாஸ்... நீங்க இதுபோல நிறைய சிந்தியுங்க!!!!!
:-)//
வாங்க கலையரசன், உங்களின் வருகை மகிழ்ச்சியே.. மிக்க நன்றிபா
முக்கோணத்தில் ஒளிந்து கிடக்கும் தகவல்களை சொல்லிவிட்டீர்கள் நண்பா அருமையான thakavalkal
//Suresh Kumar said...
முக்கோணத்தில் ஒளிந்து கிடக்கும் தகவல்களை சொல்லிவிட்டீர்கள் நண்பா அருமையான thakavalkal//
வணக்கம் சுரேஷ் குமார்,... மிக்க நன்றிபா
இந்தக் கணக்கு வாத்தியார் வகுப்பு நன்றாக இருக்கிறது.
பிரமிடு எப்படி கட்டியிருப்பாங்கன்னு இன்னும் பல தியரிகள் உலவிகிட்டு இருக்குது.முக்கோணத்தின் பயனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு பிரமிடும்,ராகவன் நைஜீரியா பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ள முக்கோணமும்.
அப்படியே கழித்தல் கூட்டலுக்கும் ஒரு பாடம் நடத்துங்க.வெயிட்டிங்க்.
படம் 4 சூப்பர். முக்கோணத்தின் மகத்துவம் புரிகிறது.
//ராஜ நடராஜன் said...
இந்தக் கணக்கு வாத்தியார் வகுப்பு நன்றாக இருக்கிறது.
பிரமிடு எப்படி கட்டியிருப்பாங்கன்னு இன்னும் பல தியரிகள் உலவிகிட்டு இருக்குது.முக்கோணத்தின் பயனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு பிரமிடும்,ராகவன் நைஜீரியா பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ள முக்கோணமும்.
அப்படியே கழித்தல் கூட்டலுக்கும் ஒரு பாடம் நடத்துங்க.வெயிட்டிங்க்.
//
வாங்க நண்பா,.. உங்களின் பார்வைக்கு நன்றிங்க.
சமயம் கிடைக்குபொழுது கூட்டல் கழித்தல்களும் சொல்லப்படலாம் என்றுதான் நினைக்கின்றேன். உங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சியே.
// பின்னோக்கி said...
படம் 4 சூப்பர். முக்கோணத்தின் மகத்துவம் புரிகிறது.
//
உங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சியே... மிக்க நன்றி நண்பா
//ட்ராகன் முக்கோணம் பெர்முடா முக்கோணத்திற்கு பூமியின் மறு முனையில் இருப்பதாக சொல்கின்றார்களே?//
இது போல் ஐரோப்பாவிலும் ஒரு முக்கோணமும் உண்டு. பொதுவாக, கடலிலுள்ள எந்த ஒரு பரப்பளவை எடுத்து பார்த்தாலும் அங்கும் இதுபோல பல விடயங்கள் இருக்கும். அது பூமியின் சுழற்ச்சியின் காரணமாக, சில இடங்களில் அதிகமாக சூராவளி ஏற்படுவதால், அவ்விடங்களில் சற்று அதிகமான இருக்கும். பொதுவாக புயல் கிழக்கிலிருந்து வருவதை கவனிக்கவும். தொலைதொடர்பு வசதி அதிகரித்ததால், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பொதுவாக இக்கதைகள் குறைவு என்பதையும் கவனிக்கவும்.
வித்தியாசமான் புதிய கோணத்தில் உருவான தகவல்கள் அருமை!!
ஆராய்ச்சியும் அருமை!
[[ RajK said...
//ட்ராகன் முக்கோணம் பெர்முடா முக்கோணத்திற்கு பூமியின் மறு முனையில் இருப்பதாக சொல்கின்றார்களே?//
இது போல் ஐரோப்பாவிலும் ஒரு முக்கோணமும் உண்டு. பொதுவாக, கடலிலுள்ள எந்த ஒரு பரப்பளவை எடுத்து பார்த்தாலும் அங்கும் இதுபோல பல விடயங்கள் இருக்கும். அது பூமியின் சுழற்ச்சியின் காரணமாக, சில இடங்களில் அதிகமாக சூராவளி ஏற்படுவதால், அவ்விடங்களில் சற்று அதிகமான இருக்கும். பொதுவாக புயல் கிழக்கிலிருந்து வருவதை கவனிக்கவும். தொலைதொடர்பு வசதி அதிகரித்ததால், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பொதுவாக இக்கதைகள் குறைவு என்பதையும் கவனிக்கவும்.]]
நல்ல விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றிபா..
[[ RAMYA said...
வித்தியாசமான் புதிய கோணத்தில் உருவான தகவல்கள் அருமை!!
ஆராய்ச்சியும் அருமை!]]
வணக்கம் ரம்யா,..
மிக்க நன்றிங்க
கூரை கண்டுபிடிக்கபட்ட பின்னரே முக்கோணத்தின் அருமை தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்!
ஆர்ச் கூட கட்டிட வடிவமைப்பில் மிக முக்கியமானது!
ஆகா முக்கோணத்தை போலவே வட்ட வடிவமும் முக்கிய கண்டுபிடிப்பு இல்லையா!?
[[வால்பையன் said...
கூரை கண்டுபிடிக்கபட்ட பின்னரே முக்கோணத்தின் அருமை தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்!]]
வணக்கம் வால்,.. உண்மைதான் தேவைகள்தான் கண்டுபிடிப்புக்கு முக்கிய காராணம்.அதுபோல் கூரையின் தேவை ஏற்பட்டது செயல்படுத்தப்பட்டது. முக்கோணம் என்று நினைக்கவில்லை என்றாலும் அனுபவ கூர்கள் தேவையை ஏற்படுத்திவிட்டது என கொள்ளலாம்
[[ஆர்ச் கூட கட்டிட வடிவமைப்பில் மிக முக்கியமானது!
ஆகா முக்கோணத்தை போலவே வட்ட வடிவமும் முக்கிய கண்டுபிடிப்பு இல்லையா!?]]
மனிதன் நாகரிக வளர்ச்சியில் முக்கிய பங்கு வட்டதிற்கு உள்ளது. இதைப்பற்றி பின் வரும் இடுக்கைகளில் சிந்திக்கலாம் என்று நினைக்கின்றேன். வட்டமும் முக்கோணத்தின் அடிப்படைத்தத்துவம்தான் இதை இந்த இடுகையில் படத்துடம் விளக்கியுள்ளது.
உங்களின் கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி நண்பா...
ஹைய்யோ என வியக்கச் செய்கிறது உங்கள் உரை..புதுசு புதுசா பயனுள்ள பதிவுகள் எழுதறீங்க சேகர்...வாழ்த்துக்கள்
பூங்கொத்து!
//தமிழரசி said...
ஹைய்யோ என வியக்கச் செய்கிறது உங்கள் உரை..புதுசு புதுசா பயனுள்ள பதிவுகள் எழுதறீங்க சேகர்...வாழ்த்துக்கள்//
வாங்க தமிழரசி... பாராட்டுகளுக்கு நன்றிமா..
//அன்புடன் அருணா said...
பூங்கொத்து!
//
நன்றிங்க அருணா
அருமையான தகவல்களின் தொகுப்பு.
//" உழவன் " " Uzhavan " said...
அருமையான தகவல்களின் தொகுப்பு.//
நன்றிங்க உழவன்
மிக அழகாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். நிறைய தகவல்கள் அறியமுடிகிறது நன்றி. தொடருங்கள்.
//உமா said...
மிக அழகாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். நிறைய தகவல்கள் அறியமுடிகிறது நன்றி. தொடருங்கள்.//
உங்களின் பாராட்டுகள் என்னை மேலும் எழுத துணிய வைக்கின்றது
Post a Comment