_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, October 26, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 6

ஏன்? எதற்கு? எப்படி?..... 6

என்னப்பா உலகம் ஒரே அவசர காலமா போச்சு.. காலை எழுந்து நானும் வேலைக்கு கிளம்பனும் மனைவிக்கும் உதவிகளை செய்யனும் மனைவியும் வேலைக்கு போகனும்... குழந்தைகளுக்கு தேவைகளை எல்லாம் செய்யனும். அப்பறம் அலுவலக வேலைகள் எல்லாம் முடிந்தது சாய்காலம் வீடுக்கு சென்றால் ஓய்வே இல்லாமல் மீண்டும் வேலைகள். ம்ம்ம் 24 மணி நேரம் பத்த மாட்டேங்குதே! யாராச்சும் 2 மணி நேரம் அதிகமா வாங்கி கொடுங்கப்பா,... இப்படி பல காலப்பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் மனிதன் வாழ்ந்துக்கொண்டு உள்ளான்.

காலம் என்றால் என்ன? அது யாரால் கொடுக்கப்பட்டது? எப்படி கணகீடப்படுகின்றது?
மனிதனில் வாழ்நாளில் காலம் ஒரு அங்கமாகி போய்விட்டது. காலம் மனிதனை துரத்துகின்றதா? அல்லது மனிதன் காலத்தை துரத்துகின்றானா? இன்னும் புரிய வைக்கப்படாத கேள்விகள். ஆனாலும் துரத்தல்கள் நின்றபாடில்லை.

பசித்தது சாப்பிட்டேன், பின்னர் பசி எடுத்ததும் சாப்பிடுகின்றேன், அதன் பிறகு பசி எடுத்தால் சாப்பிடுவேன். இது ஒரு செயல், இந்த செயலுக்கு இடையில் இருப்பதுதான் நேரம் என்று சொல்லப்படுகின்ற காலம். அதாவது ஒரு செயலுக்கும் அடுத்து வரும் செயலுக்கும் இடைப்பட்ட இடைவெளியைதான் காலம் அல்லது நேரம் என்று சொல்லுகின்றோம்.( புரியவில்லை என்றால் மீண்டும் படித்துப் பார்க்கவும்). இப்பொழுது நம்முடைய சிந்தனைக்கு!..... இங்குள்ள செயலை நீங்கி விட்டால் காலத்திற்கு மதிப்பு உள்ளதா? இல்லையா?. ஒரு செயல் நடக்காவிடில் அங்கு காலம் பூஜியமாக்கப்பட்டுள்ளதே. இதிலிருந்து காலம் என்பது இருக்கா? இல்லையா? என்ற கேள்வியும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. இந்த அண்டம் ஆற்றல்களால் நிறப்பட்டுள்ளது. அந்த ஆற்றல்கள் பல இயக்கங்களாக உள்ளது. இந்த இயக்கங்கள் நின்று போனால் காலமும் நேரமும் அர்த்தங்களை கொடுக்காது (காலத்தை கணித்து கொடுக்கப்படும் ஜோசியங்கள் எப்படி சரியாக இருக்கும் என்பதை யோசிக்கவும்). எல்லா இயக்கங்களும் காலத்தினால் இயக்கப்படுகின்றதா? இல்லை இயக்கங்கள் காலத்தால் அளவிடப்படுகின்றதா? இயக்கங்கள் காலத்தால் அளவிடப்படுகின்றது என்பதுதான் சரியாக இருக்கும். இரண்டு புள்ளிகளுக்கிடையில் தூரம் இல்லை என்றால் அளவீடுகளும் இல்லை.

இயக்கங்களின் இடைவெளியில் இருப்பது காலம் என்றால் அதை எப்படி கணக்கிடுவது? சாப்பிடும் செயலை எடுத்துகொண்டால் அதன் இடைவெளி சமபாகங்களாக இல்லை எனவே இவற்றை கணக்கீட முடியாது. சம இடைவெளியில் தொடர் இயங்கங்ளால்தான் காலத்தை கணக்கீட முடியும். சூரியனும் சந்திரனும் காலத்தை அளவிட சமசீர் இயக்கங்களை கொண்டுள்ளன. இவற்றின் இயக்கங்களை வைத்து மனிதன் காலத்தை கணக்கிட்டான். பகல், இரவு என்றும் பின்னர் ஒரு பகல் ஒரு இரவை ஒரு நாள் என்றும் காலக்கணக்கீடுகள் உண்டாக்கப்பட்டன.

காலம் என்பது அண்டத்தின் அடிப்படையான கூறுகள் இவற்றை கணக்கீட முடியும் என்பது ஒரு சிலரின் வாதங்களாக இருந்தாலும் காலம் என்பது மனிதனின் அறிவு கூறுகளால் உருவாக்கப்பட்ட அளவீடுகள் என்று கூறுவதுதான் சரியாகப்படுகின்றது. தொடர் நிகழ்வுகளையும் அவற்றின் இடைவெளியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கால அளவீடுகள் உருவாக்கப்பட்டன. சூரியனின் இயக்கம். பூமியின் சுழற்சி, சந்திரனின் தேய்பிறை வளர்பிறை இவற்றை அடிப்படையாக கொண்டே காலங்கள் அளக்கப்படுகின்றன. மேலும் துள்ளியமாக அளக்க ஊசல்கள் (Pendulum),ஆணுக்கருவில் வெளியாகும் எலக்ட்ரான்களின் இடைவெளி பயன் படுத்தப்படுகின்றது. இதன் அடைப்படையில் கடிகாரங்கள் உருவாகப்பட்டது. ஆரம்பத்தில் மணற்கடிகாரம்,நிழல்க்கடிகாரம் இருந்தாலும் பின்னர் ( pendulum) ஊசல்களின் இயக்கம், குவாட்ஸ் கடிகாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

என்னதான் காலம் நம்மை ஆட்கொண்டாலும் காலத்தை வெல்லுவதைதான் மனிதனும் மனிதனின் முயற்சிகளும் இருக்கின்றன. வேகம் வேகம் என்று கால இடைவெளியை கைகுள் வைப்பதன் விளைவுதான் கைகடிகாரம் என்றே நினைக்கின்றேன்.

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

பிடித்திருந்தால் சொல்லுங்கள் இன்னும் வரும்...

56 comments:

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

நல்ல பதிவு தொடர்க..

ஆ.ஞானசேகரன் said...

// முனைவர் கல்பனாசேக்கிழார் said...

நல்ல பதிவு தொடர்க..//

மிக்க நன்றிங்க

ஈரோடு கதிர் said...

காலம் கணக்கிட்ட விதம் ஆச்சரியானதே

Suresh Kumar said...

நல்ல தகவலகள் இது போன்ற இடுகைகள் மேலும் மேலும் வர வேண்டும்

ஆ.ஞானசேகரன் said...

// கதிர் - ஈரோடு said...

காலம் கணக்கிட்ட விதம் ஆச்சரியாமானதே//

உண்மைதான் கதிர். காலம் நம்மை ஆட்கொள்ளாமல் நாம் காலத்தை ஆட்கொள்ள வேண்டும்..

மிக்க நன்றி தோழரே

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

நல்ல தகவலகள் இது போன்ற இடுகைகள் மேலும் மேலும் வர வேண்டும்//

மிக்க நன்றி நண்பா,....
இன்னும் எழுத முயற்சி செய்கின்றேன்..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தகவல்களை ஓப்பீடு செய்தமை, பதிவாக்கியமை நன்று ஞானம்!

தொடருங்கள்!

ஆ.ஞானசேகரன் said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தகவல்களை ஓப்பீடு செய்தமை, பதிவாக்கியமை நன்று ஞானம்!

தொடருங்கள்!//

மிக்க நன்றி ஜோதிபாரதி... உங்களை போன்றோரின் ஊக்கம் மேலும் நல்ல தகவல்களை கொடுக்க உதவும் மிக்க நன்றி

velji said...

information is wealth!
i welcome your post!

ஆ.ஞானசேகரன் said...

// velji said...

information is wealth!
i welcome your post!//

உங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி நண்பரே

இராகவன் நைஜிரியா said...

அண்ணே சூப்பர் அண்ணே. என்ன கொஞ்சம் தத்துவார்த்தமா இருக்கு. இவ்வளவு விஷயங்களை புரிஞ்சிகிற அளவுக்கு மூளை கிடையாதண்ணே..

புரியுது ஆனா புரியாத மாதிரி இருக்கு..

என் கடன் ஓட்டளித்து, பின்னூட்டமிடுவதே என்பதற்கிணங்க, இரண்டும் செஞ்சுட்டேன்.

ஆ.ஞானசேகரன் said...

//இராகவன் நைஜிரியா said...

அண்ணே சூப்பர் அண்ணே. என்ன கொஞ்சம் தத்துவார்த்தமா இருக்கு. இவ்வளவு விஷயங்களை புரிஞ்சிகிற அளவுக்கு மூளை கிடையாதண்ணே..

புரியுது ஆனா புரியாத மாதிரி இருக்கு..

என் கடன் ஓட்டளித்து, பின்னூட்டமிடுவதே என்பதற்கிணங்க, இரண்டும் செஞ்சுட்டேன்.//

வாங்க நண்பா, வணக்கம்
சில விடயங்கள் புரிந்தும் புரியாது போல இருக்கும். அதுபோல இதுவும் ஒன்று.

மிக்க நன்றி நண்பா

S.A. நவாஸுதீன் said...

அழகிய ஒப்பீடல், நல்ல விளக்கத்துடன் அருமையான இடுகை நண்பா! வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

அழகிய ஒப்பீடல், நல்ல விளக்கத்துடன் அருமையான இடுகை நண்பா! வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

அழகிய ஒப்பீடல், நல்ல விளக்கத்துடன் அருமையான இடுகை நண்பா! வாழ்த்துக்கள்//

வணக்கம் நண்பா,... மிக்க நன்றிபா...

கலகலப்ரியா said...

சுவரஸ்யமான பதிவு.. go ahead..

ஆ.ஞானசேகரன் said...

// கலகலப்ரியா said...

சுவரஸ்யமான பதிவு.. go ahead..//

மிக்க நன்றி ப்ரியா..

பா.ராஜாராம் said...

அருமையான பதிவு சேகர்!தொடரட்டும்..

பிரபாகர் said...

காலம் பற்றி உங்களின் அலசல் அருமைங்க. இன்னும் நிறைய எழுதுங்க, நேரங்காலம் பாக்காம. காலத்த ஓட்டிட்டு காத்திருக்கோம் அடுத்த பதிவுக்கு. அட கஷ்டகாலமே, என்னாச்சு பிரபாகருக்குன்னு நினைக்கிறீங்களா? உண்மையத்தான் சொல்லுறேன் சீக்கிரம் எழுதுங்க, ரொம்ப நல்லாருக்கு.

பிரபாகர்.

வால்பையன் said...

200 கோடி வருசத்துக்கு முன்னாடி பூமியில் ஒருநாள் என்பது 48 மணிநேரம், அவ்வளவு மெதுவாக தன்னை தானே சுற்றீ கொண்டிருந்தது.

இன்னும் வேகமாகலாம்!

pudugaithendral said...

பிடிச்சிருக்குங்க.

அடுத்த பதிவுக்காக மீ த வெயிட்டிங்

கையேடு said...

நல்லா இருக்குங்க..

ஆனா, தொடரோட முந்தைய இடுகைகள ஒப்பிட்டா ரொம்ப சுருக்கமா முடிச்சிகிட்ட மாதிரி தெரியுது.. இன்னும் கொஞ்சம் எழுதிருக்கலாமோன்னு தோணுது..

ஆ.ஞானசேகரன் said...

//பா.ராஜாராம் said...
அருமையான பதிவு சேகர்!தொடரட்டும்..//

மிக்க நன்றிங்க பா.ராஜாராம்..

ஆ.ஞானசேகரன் said...

// பிரபாகர் said...
காலம் பற்றி உங்களின் அலசல் அருமைங்க. இன்னும் நிறைய எழுதுங்க, நேரங்காலம் பாக்காம. காலத்த ஓட்டிட்டு காத்திருக்கோம் அடுத்த பதிவுக்கு. அட கஷ்டகாலமே, என்னாச்சு பிரபாகருக்குன்னு நினைக்கிறீங்களா? உண்மையத்தான் சொல்லுறேன் சீக்கிரம் எழுதுங்க, ரொம்ப நல்லாருக்கு.

பிரபாகர்//

வணக்கம் பிரபாகர்,..உங்களின் ஆர்வத்திற்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிபா..

ஆ.ஞானசேகரன் said...

//வால்பையன் said...
200 கோடி வருசத்துக்கு முன்னாடி பூமியில் ஒருநாள் என்பது 48 மணிநேரம், அவ்வளவு மெதுவாக தன்னை தானே சுற்றீ கொண்டிருந்தது.

இன்னும் வேகமாகலாம்!//

நண்பா,... எனக்கு தெரியாத தகவல் மிக்க நன்றிபா... இன்னும் கொஞ்சம் மெதுவாக்க வழியிருந்தால் சொல்லுங்களேன்..

ஆ.ஞானசேகரன் said...

// புதுகைத் தென்றல் said...
பிடிச்சிருக்குங்க.

அடுத்த பதிவுக்காக மீ த வெயிட்டிங்//



வாங்க புதுகைத்தென்றல்... மிக்க நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

// கையேடு said...
நல்லா இருக்குங்க..

ஆனா, தொடரோட முந்தைய இடுகைகள ஒப்பிட்டா ரொம்ப சுருக்கமா முடிச்சிகிட்ட மாதிரி தெரியுது.. இன்னும் கொஞ்சம் எழுதிருக்கலாமோன்னு தோணுது..//

வாங்க நண்பா,... கொஞ்சம் சுருக்கமாகதான் இருக்கு,... சுவராசியம் இல்லாமல் போகுமோ என்று சுருக்கியாச்சு... நன்றி நண்பா

ARV Loshan said...

அருமையான பதிவு நண்பா..
வாழ்க்கையையும் காலத்தையும் மிக எளிதாக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்

சொல்லரசன் said...

//என்னதான் காலம் நம்மை ஆட்கொண்டாலும் காலத்தை வெல்லுவதைதான் மனிதனும் மனிதனின் முயற்சிகளும் இருக்கின்றன.//


அதனால்தான் காலத்தை வென்றவன் என்று சொல்கிறார்களா? பதிவு நல்லயிருக்கு தொடருங்கள்

ஆ.ஞானசேகரன் said...

//LOSHAN said...
அருமையான பதிவு நண்பா..
வாழ்க்கையையும் காலத்தையும் மிக எளிதாக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்//

வணக்கம் லோசன்,... உங்களின் பாராட்டுக்கும் அன்பிற்கும் நன்றி நன்றி நன்றி

ஆ.ஞானசேகரன் said...

[[ சொல்லரசன் said...
//என்னதான் காலம் நம்மை ஆட்கொண்டாலும் காலத்தை வெல்லுவதைதான் மனிதனும் மனிதனின் முயற்சிகளும் இருக்கின்றன.//


அதனால்தான் காலத்தை வென்றவன் என்று சொல்கிறார்களா? பதிவு நல்லயிருக்கு தொடருங்கள்]]

வாங்க சொல்லரசன்,... மிக்க நன்றிங்க‌

வினோத் கெளதம் said...

வழக்கம்ப்போல் பயனுள்ள பதிவு தல..

அன்புடன் அருணா said...

எப்போ பதிவு போட்டாலும் யோசிக்க வைத்துவிடுகிறேர்கள்!!! பூங்கொத்து!

ஆ.ஞானசேகரன் said...

//வினோத்கெளதம் said...
வழக்கம்ப்போல் பயனுள்ள பதிவு தல..//

மிக்க நன்றி நண்பா,...

ஆ.ஞானசேகரன் said...

//அன்புடன் அருணா said...
எப்போ பதிவு போட்டாலும் யோசிக்க வைத்துவிடுகிறேர்கள்!!! பூங்கொத்து!//


ம்ம்ம் உண்மை என்றால் மகிழ்ச்சியும் நன்றியும் அருணா...

ஹேமா said...

ஞானம்,குடைந்தெடுத்த விஷயங்கள்.தேவையாய் இருக்கிறது.இன்னும் தாருங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
ஞானம்,குடைந்தெடுத்த விஷயங்கள்.தேவையாய் இருக்கிறது.இன்னும் தாருங்கள்
//

வாருங்கள் ஹேமா,... இன்னும் சிந்திக்கலாம்... மிக்க நன்றிங்க‌

நசரேயன் said...

இது கண்டிப்பா வளரனும்

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாஇருங்கப்பு

இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே பலர் என்னை ரணகளப்படுத்துறீங்க யோசிச்சி யோச்சிச்சு என்னோட தலைமுடியே கொட்டிடும் போல..

ஹ ஹ ஹா

சும்மா டமாசு தொடருங்கள் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// நசரேயன் said...
இது கண்டிப்பா வளரனும்//



வாங்க தம்பி கண்டிப்பா சிந்திக்கலாம்

ஆ.ஞானசேகரன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
நல்லாஇருங்கப்பு

இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே பலர் என்னை ரணகளப்படுத்துறீங்க யோசிச்சி யோச்சிச்சு என்னோட தலைமுடியே கொட்டிடும் போல..

ஹ ஹ ஹா

சும்மா டமாசு தொடருங்கள் நண்பா//


வணக்கம் வசந்த்,... மிக்க நன்றிபா

காமராஜ் said...

//இந்த அண்டம் ஆற்றல்களால் நிறப்பட்டுள்ளது. அந்த ஆற்றல்கள் பல இயக்கங்களாக உள்ளது. இந்த இயக்கங்கள் நின்று போனால் காலமும் நேரமும் அர்த்தங்களை கொடுக்காது //

ithupoonra azhiyatha sorkal pala kidaikirathu inthap pathivil. super

ஆ.ஞானசேகரன் said...

[[ காமராஜ் said...

//இந்த அண்டம் ஆற்றல்களால் நிறப்பட்டுள்ளது. அந்த ஆற்றல்கள் பல இயக்கங்களாக உள்ளது. இந்த இயக்கங்கள் நின்று போனால் காலமும் நேரமும் அர்த்தங்களை கொடுக்காது //

ithupoonra azhiyatha sorkal pala kidaikirathu inthap pathivil. super]]

வணக்கம் நண்பா,... மிக்க நன்றிங்க

"உழவன்" "Uzhavan" said...

இன்னும் வரட்டும் :-)

ஆ.ஞானசேகரன் said...

//" உழவன் " " Uzhavan " said...

இன்னும் வரட்டும் :-)//

மிக்க நன்றிங்க உழவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமை..:-)))

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

அருமை..:-)))//

வணக்கம் கார்த்திகைப் பாண்டியன்..

Jerry Eshananda said...

ரொம்பவே புடிட்ச்சிருக்கு. தொடர்கிறோம்.

ஆ.ஞானசேகரன் said...

ஜெரி ஈசானந்தா. said...
ரொம்பவே புடிட்ச்சிருக்கு. தொடர்கிறோம்.

வணக்கம் சார்,... மிக்க நன்றிங்க‌

Admin said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள் தொடருங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள் தொடருங்கள்.//

மிக்க நன்றி நண்பா,...

சத்ரியன் said...
This comment has been removed by the author.
சத்ரியன் said...

//காலம் என்பது அண்டத்தின் அடிப்படையான கூறுகள் இவற்றை கணக்கீட முடியும் என்பது ஒரு சிலரின் வாதங்களாக இருந்தாலும் காலம் என்பது மனிதனின் அறிவு கூறுகளால் உருவாக்கப்பட்ட அளவீடுகள் என்று கூறுவதுதான் சரியாகப்படுகின்றது. //

ஞானம்,

மீண்டும் (// இருந்தாலும் காலம் என்பது மனிதனின் அறிவு கூறுகளால் உருவாக்கப்பட்ட அளவீடுகள் என்று கூறுவதுதான் சரியாகப்படுகின்றது. //) படிச்சிட்டிங்களா?

எனக்கும் சரியாகத்தான் படுகிற‌து. ஆனால், கவனிக்க..."இங்கே" எல்லாமே மனித அறிவுக்கூறுகளால் உருவாக்கப்பட்டவையே.
( வேறந்த உயிரின‌ங்களிடத்திலும் எந்த அளவீடுகளும் அல்ல.)

"இங்கே எல்லாம் வெறும் அனுமானங்கள் மட்டுமே" .

ஆ.ஞானசேகரன் said...

[[ சத்ரியன் said...
//காலம் என்பது அண்டத்தின் அடிப்படையான கூறுகள் இவற்றை கணக்கீட முடியும் என்பது ஒரு சிலரின் வாதங்களாக இருந்தாலும் காலம் என்பது மனிதனின் அறிவு கூறுகளால் உருவாக்கப்பட்ட அளவீடுகள் என்று கூறுவதுதான் சரியாகப்படுகின்றது. //

ஞானம்,

மீண்டும் (// இருந்தாலும் காலம் என்பது மனிதனின் அறிவு கூறுகளால் உருவாக்கப்பட்ட அளவீடுகள் என்று கூறுவதுதான் சரியாகப்படுகின்றது. //) படிச்சிட்டிங்களா?

எனக்கும் சரியாகத்தான் படுகிற‌து. ஆனால், கவனிக்க..."இங்கே" எல்லாமே மனித அறிவுக்கூறுகளால் உருவாக்கப்பட்டவையே.
( வேறந்த உயிரின‌ங்களிடத்திலும் எந்த அளவீடுகளும் அல்ல.)

"இங்கே எல்லாம் வெறும் அனுமானங்கள் மட்டுமே" .]]

வாங்க சத்ரியன்,...

உங்களுடைய அலசல்களும் நன்றாக உள்ளது..

Muniappan Pakkangal said...

Nice Gnanaeharan.

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...

Nice Gnanaeharan.//

மிக்க நன்றி சார்