_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, October 29, 2009

என்னையும், எனக்குள் கொஞ்சும் நேரம்....

என்னையும், எனக்குள் கொஞ்சும் நேரம்....

வலைநண்பர்களே!
என்னுள் இருக்கும் சோம்பல் மற்றும் பணியிடத்தில் வேலைகளின் காரணமாக அடுத்தடுத்த இடுகைக்கு இடைஞ்சலாகவே இருக்கு. அப்படியே இணைத்தில் வந்து இடுகைக்கு தயாரானாலும் எண்ணங்களின் ஓட்டம் வற்றியே காணப்படுகின்றது. எப்படியும் இன்று உங்களுடன் தொடர்பு கொண்டே ஆக வேண்டும் என்றாலும் சொல்ல வரும் விடயங்கள் ஒழிந்து விளையாடுகின்றது. அடுத்து வரும் இடுகை ஒரு சிந்தனையை தூண்டும்படியாக அமைய வேண்டும் என்றே ஆசைப்படுகின்றேன்.

ஏன்?எதற்கு? எப்படி? எண்ணங்களையும் தொடர வேண்டும் என்ற ஆசைகள் உண்டு. இந்த கேள்விகளும் எண்ணங்களும் எனது சிறுவயதில் உள்ள கேள்விகளும் அதற்கான தேடல்களும்தான். அந்த தேடல்கள் சரியாக சென்றடைந்திருந்தால் இன்னும் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் என் தேடல்களில் பல நையாண்டிகளாகவே அமைந்தது. அதற்கும் நானே பொறுப்பாக வேண்டும். ஏனனில் தேடல்களில் பொருமையின்மை அதனால் கிடைத்த கூலிதான் அந்த நையாண்டிகள். எந்த ஒரு செயலிலும்" ஏன்?" என்ற கேள்வியை உனக்குள் கேட்டுப்பார்! இது எல்லோருக்கும் தெரியும் அதேபோல் நானும் கேட்டு அதன் பதிலுக்காக நானே எனக்குள் தேடியதுண்டு.

"நீராவில் புகைவண்டி ஓடுகின்றதாம்" நானும் ஒரு வண்டி செய்ய ஆசைப்பட்டேன். அட்டையில் வண்டி செய்து அதன் மேல் ஒரு குப்பியில் தண்ணீர் வைத்து, மெழுகுவர்த்தியால் தண்ணீரை சூடு செய்து நீராவியை உண்டாக்கினேன். நீராவியும் வந்தது வண்டி ஓடவில்லை. கடைசியில் வண்டி நெருப்புக்கு இறையானது. அப்படியே நாட்கள் ஓடியது பேட்ரியில் கார் ஓடுகின்றதாக செய்திகளில் படித்ததும் ஒரே மகிழ்ச்சி என்னிடம் ஒரு பழைய பேட்ரி செல் இருந்தது. சிகரட் அட்டையில் உள்ள வெள்ளித்தாள் உதவிக்கொண்டு அந்த பேட்ரியில் மின் விளக்கு (Light) எரியவிட்டு மகிழ்ந்த எனக்கு காரையும் ஓட்டலாம் என்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உடனே தயாரானது ஒரு அட்டைக்கார் சோடா மூடிதான் சக்கரம் பேட்ரியின் மின்சாரம் லாபகமாக அதே வெள்ளித்தாள் துணையுடன் சகரத்தில் செலுத்தப்பட்டது. செலுத்தினேன்..... செலுத்தினேன்... கார் நகரவில்லை, காற்றில் சிறிது அசைந்தாலும் கார் நகர தாயாராகின்றதாக ஒரு எண்ணம். பிறகு என்ன அதே போல நாட்கள் ஓடியது. இப்படி பல நையாண்டி சோதனைகள் எனக்குள் உண்டு.

எந்த ஒரு தேடல்களிலும் வெற்றிப்பெற்றதாக எனக்கு தெரியவில்லை ஆனால் அதற்காக நான் கவலைப்பட்டதும் இல்லை. எல்லாம் ஒரு பசுமையான இன்பங்களாகவே இருந்தது. அன்று கேட்ட கேள்விகள் இன்று உங்களோடு பகிர்துகொள்வதுதான் இந்த ஏன்? எதற்கு? எப்படி?.... இப்படிப்பட்ட கேள்விகள் நமது வயதிற்கு தெரிந்தவைகளாக இருந்தாலும் கேட்பதில் ஒரு சுகமாக இருப்பதாக தெரிகின்றது. எனவே இன்னும் தொடரும் என்றே ஆசைகள்.

மனிதனும் அவனின் சிந்தனைகளுக்கும் எல்லைகள் உண்டா? இந்த எல்லையில்லா சிந்தனைகள் சரியான பாதைகளில்தான் செல்கின்றதா? அப்படியே சென்றாலும் கட்டுப்பாடு இருக்கின்றதா? இப்படிப்பட்ட கேள்விகளும் என்னிடம் இருக்கதான் செய்கின்றது. நான் சரி என்று நினைத்த ஒன்று மற்றவர்களுக்கு தவறாகப்படுகின்றதே ஏன்? மற்றவர்கள் சரி என்று ஒப்புக்கொண்ட ஒன்று எனக்கு சரியாக படவில்லையே ஏன்? இப்படிப்பட்ட முறன்பாடுகளுக்கு காரணமாக இருப்பது அந்த செயலா? இல்லை மனிதனா? இதுவும் புரியவைக்கபடாத ஒன்றுதான். அப்படி பார்க்கையில் மனித இனத்தில் குடிபுகுந்து பல்லாயிரம் ஆண்டுகாளாக பழகிபோன ஒன்றைப்பற்றி அடுத்து வரும் இடுகையில் சிந்திக்கலாம் என்ற எண்ணங்கள் உள்ளது. அப்படிப்பட்ட ஒன்றுதான் மூடப்பழக்கங்கள். பலவகையான மூடப்பழக்கங்கள் மனிதனின் காலாச்சரத்தோடு இணைந்துள்ளது. அப்படி இணைந்துள்ளதால் அவற்றை கழைவது அவ்வளவு எளிதான விடயமும் இல்லை என்பதை நான் கண்டுள்ளேன். இதைப்பற்றி ஆழ்ந்து உங்களோடு சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... என்ற தலைப்பின்கீழ் அடுத்து சந்திப்போம்.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

50 comments:

S.A. நவாஸுதீன் said...

ஏன்? எதற்கு? எப்படி? - உங்களின் அருமையா படைப்புகள் நண்பா. அது நிச்சயம் முடிவில்லாது தொடர வேண்டும்.

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... - நல்ல தலைப்பு, ஆரோக்கியமான விவாதத்திற்கும் நல்ல கரு. விரைவில் எதிர்பார்க்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

சோதனைகள் பசுமையான இன்பங்கள் என நீங்களே சொல்லி விட்டீர்கள், அவற்றை நையாண்டியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம்:)!

S.A. நவாஸுதீன் said...

நண்பர் சந்ரு கூட இன்று அது தொடர்பான இடுகை ஒன்றை தந்திருக்கின்றார்

http://shanthru.blogspot.com/2009/10/blog-post_28.html

ஹேமா said...

ஞானம் அடுத்த பதிவு இன்னும் களை கட்டப்போகுது.காத்திருக்கிறோம்.

ஷண்முகப்ரியன் said...

என்னையும் எனக்குள் கொஞ்சும் நேரம் இதுவே நிறையச் செய்திகள் சொல்கின்றது ஞானம்.

யாருடைய சிந்தனைகளும் எப்போதும் தோற்பதில்லை,சிந்திக்காமல் இருத்தலை விட.

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

ஏன்? எதற்கு? எப்படி? - உங்களின் அருமையா படைப்புகள் நண்பா. அது நிச்சயம் முடிவில்லாது தொடர வேண்டும்.

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... - நல்ல தலைப்பு, ஆரோக்கியமான விவாதத்திற்கும் நல்ல கரு. விரைவில் எதிர்பார்க்கிறேன்.//

மிக்க நன்றி நண்பா,... உங்களோடு நானும் சிந்திக்க ஆசைப்படுகின்றேன்

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...

சோதனைகள் பசுமையான இன்பங்கள் என நீங்களே சொல்லி விட்டீர்கள், அவற்றை நையாண்டியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம்:)!//

நிச்சயமாக நாமும் சந்திப்போம் சிந்திப்போம் நண்பா,...

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

நண்பர் சந்ரு கூட இன்று அது தொடர்பான இடுகை ஒன்றை தந்திருக்கின்றார்

http://shanthru.blogspot.com/2009/10/blog-post_28.html//

ஆகா.... நல்லது பார்த்தேன் நண்பா,.. என்னைவிட வேகமாக இருக்கின்றார் சந்ரு...

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

ஞானம் அடுத்த பதிவு இன்னும் களை கட்டப்போகுது.காத்திருக்கிறோம்.//

வாங்க ஹேமா,... சேர்ந்தே (சிந்திப்போம்) கும்மியடிப்போம்

ஆ.ஞானசேகரன் said...

//ஷண்முகப்ரியன் said...

என்னையும் எனக்குள் கொஞ்சும் நேரம் இதுவே நிறையச் செய்திகள் சொல்கின்றது ஞானம்.

யாருடைய சிந்தனைகளும் எப்போதும் தோற்பதில்லை,சிந்திக்காமல் இருத்தலை விட.//

ம்ம்ம்.. உண்மைதான் சார்... சிந்தனைகள் தோற்பதில்லை... மிக்க நன்றி சார்

Admin said...

நல்ல விடயம் நண்பா.... இன்று மக்களை பல மூட நம்பிக்கைகள் ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றன. அதனை நீக்கவேண்டும்.

விரைவில் தொடருங்கள்.

Admin said...

//ஆ.ஞானசேகரன் said...
// S.A. நவாஸுதீன் said...

நண்பர் சந்ரு கூட இன்று அது தொடர்பான இடுகை ஒன்றை தந்திருக்கின்றார்

http://shanthru.blogspot.com/2009/10/blog-post_28.html//

ஆகா.... நல்லது பார்த்தேன் நண்பா,.. என்னைவிட வேகமாக இருக்கின்றார் சந்ரு...//

எப்பொழுதோ எழுத நினைத்தவை நேரம் இடம் கொடுக்கவில்லை இன்று இடுகையிட்டுவிட்டேன்.

ஈரோடு கதிர் said...

நல்ல தலைப்போடு...

தயாராகுகிறீர்கள்....

வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...

நல்ல விடயம் நண்பா.... இன்று மக்களை பல மூட நம்பிக்கைகள் ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றன. அதனை நீக்கவேண்டும்.

விரைவில் தொடருங்கள்.//

வணக்கம் சந்ரு,.. இணைந்தே சிந்திப்போம்....

ஆ.ஞானசேகரன் said...

[[சந்ரு said...

//ஆ.ஞானசேகரன் said...
// S.A. நவாஸுதீன் said...

நண்பர் சந்ரு கூட இன்று அது தொடர்பான இடுகை ஒன்றை தந்திருக்கின்றார்

http://shanthru.blogspot.com/2009/10/blog-post_28.html//

ஆகா.... நல்லது பார்த்தேன் நண்பா,.. என்னைவிட வேகமாக இருக்கின்றார் சந்ரு...//

எப்பொழுதோ எழுத நினைத்தவை நேரம் இடம் கொடுக்கவில்லை இன்று இடுகையிட்டுவிட்டேன்.]]

நல்லது... வாழ்த்துகள் சந்ரு

ஆ.ஞானசேகரன் said...

// கதிர் - ஈரோடு said...

நல்ல தலைப்போடு...

தயாராகுகிறீர்கள்....

வாழ்த்துகள்//

வணக்கம் கதிர்....
மிக்க நன்றிங்க

பிரபாகர் said...

இதே தலைப்பில் இன்னும் நிறைய தகவல்களை தரவேண்டும் நண்பா... நல்ல நல்ல விஷயங்களை பகிந்துகொண்டிருக்கிறீர்கள்... தொடருங்களேன் ப்ளீஸ், பின்னராவது!

பிரபாகர்.

அன்புடன் நான் said...

நல்ல விடயங்களை மதிப்போம்... மோடபழக்கங்களை ஒழிப்போம்....கலக்குங்க...ந‌ண்பா.

ஆ.ஞானசேகரன் said...

// பிரபாகர் said...

இதே தலைப்பில் இன்னும் நிறைய தகவல்களை தரவேண்டும் நண்பா... நல்ல நல்ல விஷயங்களை பகிந்துகொண்டிருக்கிறீர்கள்... தொடருங்களேன் ப்ளீஸ், பின்னராவது!

பிரபாகர்.//

வணக்கம் பிரபாகர்... உங்களின் அன்புக்கு நன்றி நண்பா,... இன்னும் உங்களுள் தொடர்வோம்...

பின்னோக்கி said...

நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது உங்களின் தொடர்.

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும் காத்திருக்கிறோம்

ஆ.ஞானசேகரன் said...

// சி. கருணாகரசு said...

நல்ல விடயங்களை மதிப்போம்... மோடபழக்கங்களை ஒழிப்போம்....கலக்குங்க...ந‌ண்பா.//

வாங்க கருணாகரசு சேர்ந்தே கலக்குவோம்...

ஆ.ஞானசேகரன் said...

// பின்னோக்கி said...

நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது உங்களின் தொடர்.

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும் காத்திருக்கிறோம்//

வணக்கம் நண்பா,..
மிக்க நன்றிங்க... உங்களின் அன்புக்கு நன்றி....

Jerry Eshananda said...

சந்திப்போம்,சிந்திப்போம்

பழமைபேசி said...

நல்லவிதமா சொல்லி இருக்கீங்க... ஞானியார் கலக்குங்க!

kuma36 said...

////////என்னுள் இருக்கும் சோம்பல் மற்றும் பணியிடத்தில் வேலைகளின் காரணமாக அடுத்தடுத்த இடுகைக்கு இடைஞ்சலாகவே இருக்கு. அப்படியே இணைத்தில் வந்து இடுகைக்கு தயாரானாலும் எண்ணங்களின் ஓட்டம் வற்றியே
காணப்படுகின்றது////////

எனக்கும் இப்படிதான்!!!

நிகழ்காலத்தில்... said...

//கலை - இராகலை said...

////////என்னுள் இருக்கும் சோம்பல் மற்றும் பணியிடத்தில் வேலைகளின் காரணமாக அடுத்தடுத்த இடுகைக்கு இடைஞ்சலாகவே இருக்கு. அப்படியே இணைத்தில் வந்து இடுகைக்கு தயாரானாலும் எண்ணங்களின் ஓட்டம் வற்றியே
காணப்படுகின்றது////////

எனக்கும் இப்படிதான்!!!//

:)) ரிப்பீட்டுங்கிறேன் :))

வாழ்த்துக்கள் நண்பரே அனைவருக்கும் பயனான சிந்தனை தொடரட்டும்..

ஆ.ஞானசேகரன் said...

// ஜெரி ஈசானந்தா. said...
சந்திப்போம்,சிந்திப்போம்//

கண்டிப்பாக‌

ஆ.ஞானசேகரன் said...

//பழமைபேசி said...
நல்லவிதமா சொல்லி இருக்கீங்க... ஞானியார் கலக்குங்க!//

மிக்க நன்றி பழம‌

ஆ.ஞானசேகரன் said...

[[கலை - இராகலை said...
////////என்னுள் இருக்கும் சோம்பல் மற்றும் பணியிடத்தில் வேலைகளின் காரணமாக அடுத்தடுத்த இடுகைக்கு இடைஞ்சலாகவே இருக்கு. அப்படியே இணைத்தில் வந்து இடுகைக்கு தயாரானாலும் எண்ணங்களின் ஓட்டம் வற்றியே
காணப்படுகின்றது////////

எனக்கும் இப்படிதான்!!!]]

அட உங்களுக்கும் அப்படிதானா? வணக்கம் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

[[ நிகழ்காலத்தில்... said...
//கலை - இராகலை said...

////////என்னுள் இருக்கும் சோம்பல் மற்றும் பணியிடத்தில் வேலைகளின் காரணமாக அடுத்தடுத்த இடுகைக்கு இடைஞ்சலாகவே இருக்கு. அப்படியே இணைத்தில் வந்து இடுகைக்கு தயாரானாலும் எண்ணங்களின் ஓட்டம் வற்றியே
காணப்படுகின்றது////////

எனக்கும் இப்படிதான்!!!//

:)) ரிப்பீட்டுங்கிறேன் :))

வாழ்த்துக்கள் நண்பரே அனைவருக்கும் பயனான சிந்தனை தொடரட்டும்..]]

அட உங்களுக்குமா? வாங்க நண்பா... மிக்க நன்றிஙக

வினோத் கெளதம் said...

தொடரட்டும் இதுப்போல பதிவு..

ஆ.ஞானசேகரன் said...

//வினோத்கெளதம் said...
தொடரட்டும் இதுப்போல பதிவு..//

மிக்க நன்றி நண்பா

Muniappan Pakkangal said...

ungal thodarai viraivil ethirpaarkkiren.

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
ungal thodarai viraivil ethirpaarkkiren
//

மிக்க நன்றி சார்

velji said...

good introduction.pls note some typing errors.
expecting your articles.

ப்ரியமுடன் வசந்த் said...

தொடரட்டும் சிந்தனைகள்...

ஆ.ஞானசேகரன் said...

// velji said...

good introduction.pls note some typing errors.
expecting your articles.//

மிக்க நன்றிங்க கவனிக்கின்றேன்...

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன்...வசந்த் said...

தொடரட்டும் சிந்தனைகள்...//

வணக்கம் நண்பா, மிக்க நன்றிபா

ரோஸ்விக் said...

வாங்க வாங்க...பெயரிலே "ஞான"-த்தை வச்சுகிட்டு தேடாம இருந்தா நல்ல இருக்காது....:-)
அடுத்த பதிவிர்காகவும் காத்திருப்பேன் நண்பரே!

"உழவன்" "Uzhavan" said...

அட.. சின்ன வயசில் நீங்க ஒரு எடிசன், ஐன்ஸ்டீன்.. இப்படி பல போல. மகிழ்ச்சி நண்பா.
அறிவியல் துறையில் நாம் எவ்வளவு முன்னேறினாலும், இன்னும் மூடப்பழக்க வழக்கங்கள் நிறைய இருக்கவே செய்கின்றன. தொடருங்கள் உங்கள் கருத்தை.

ஆ.ஞானசேகரன் said...

// ரோஸ்விக் said...

வாங்க வாங்க...பெயரிலே "ஞான"-த்தை வச்சுகிட்டு தேடாம இருந்தா நல்ல இருக்காது....:-)
அடுத்த பதிவிர்காகவும் காத்திருப்பேன் நண்பரே!///

வாங்க நண்பா மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...

அட.. சின்ன வயசில் நீங்க ஒரு எடிசன், ஐன்ஸ்டீன்.. இப்படி பல போல. மகிழ்ச்சி நண்பா.
அறிவியல் துறையில் நாம் எவ்வளவு முன்னேறினாலும், இன்னும் மூடப்பழக்க வழக்கங்கள் நிறைய இருக்கவே செய்கின்றன. தொடருங்கள் உங்கள் கருத்தை.//

வணக்கம் நண்பா,, வாருங்கள் தொடந்தே சிந்திப்போம்..

அன்புடன் அருணா said...

/எல்லையில்லா சிந்தனைகள் சரியான பாதைகளில்தான் செல்கின்றதா?/
எல்லையில்லா சிந்தனைகள் சரியான பாதைகளில்தான் செல்கின்றது ஞானசேகரன்!

ஆ.ஞானசேகரன் said...

[[அன்புடன் அருணா said...
/எல்லையில்லா சிந்தனைகள் சரியான பாதைகளில்தான் செல்கின்றதா?/
எல்லையில்லா சிந்தனைகள் சரியான பாதைகளில்தான் செல்கின்றது ஞானசேகரன்!]]

வணக்கம் அருணா,... மிக்க நன்றிங்க.. சரியான பாதைகளில் நாமும் தொடர்வோம்!

CorTexT (Old) said...

தலைப்பை மறுபடியும் படித்து பார்க்கவும்... "என்னையும், எனக்குள் கொஞ்சும் நேரமும்"? ஒருவேளை எனக்கு பிடிபடவில்லைலோ?

//எழிதான விடயமும் இல்லை//
எளிதான?

ஆ.ஞானசேகரன் said...

[[ RajK said...

தலைப்பை மறுபடியும் படித்து பார்க்கவும்... "என்னையும், எனக்குள் கொஞ்சும் நேரமும்"? ஒருவேளை எனக்கு பிடிபடவில்லைலோ?

//எழிதான விடயமும் இல்லை//
எளிதான?]]

மிக்க நன்றி ராஜ். (மாற்றிவிட்டேன்...) என்னைப்பற்றி நானே சொல்லும் நேரம் என்ற பொருளில் தலைப்பு உள்ளது.

Suresh Kumar said...

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... என்ற தலைப்பின்கீழ் அடுத்து சந்திப்போம்.
//////////

எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம் உங்கள் அடுத்த இடுகையை ......

வழக்கம் போல் ஏன் எதற்கு என்ற தேடல்களை நீங்கள் தொடருங்கள் இது பலருக்கும் பயனுள்ளதாக அமையும்

வலசு - வேலணை said...

புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

[[ Suresh Kumar said...

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... என்ற தலைப்பின்கீழ் அடுத்து சந்திப்போம்.
//////////

எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம் உங்கள் அடுத்த இடுகையை ......

வழக்கம் போல் ஏன் எதற்கு என்ற தேடல்களை நீங்கள் தொடருங்கள் இது பலருக்கும் பயனுள்ளதாக அமையும்]]

மிக்க நன்றிங்க சுரேஷ்

ஆ.ஞானசேகரன் said...

//வலசு - வேலணை said...

புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா...