_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, September 13, 2008

கானல்நீர் தேடும் தாகம்!....

கானல்நீர் தேடும் தாகம்!....

சாமியில்லை பூதம்மில்லை என்று சுற்றிவந்தவன், கல்யாணத்துக்கு பிறகு கோவில் கோவிலா போகிறான்,......
சாமிமேல கல்லெரிந்தவன் இப்போ காலை மாலை நெற்றியில் விபூதியுடன் பூஜை பன்னுகின்றான்,......
இவன் மட்டும் பகுத்தறிவு சொல்லுவான், இவன் மனைவி பிள்ளைகள் விரதம் மற்றும் பூஜைகள்தான்,...

நித்தம் பூஜை செய்வான், இப்போ கடவுளை வணங்குவன் முட்டாள் என்று சொல்லுகின்றான்,.....
வருடா வருடம் பாதயாத்திரை செல்வான் இன்றோ, சாமியார்கள் எல்லாம் ஏமாற்றுவாதிகள் என்று கோவில் செல்வதேயில்லை,.....

=>இப்படி பல செய்திகள் நம்மிடையே வந்தவண்ணம் இருக்கும், இதற்கு காரணம் என்ன? மனோதியல் அடிப்படையில் என்ன சொல்கின்றது?
ஆன்மீகம் நாத்திகத்தை வென்றதா? நாத்தீகம் ஆன்மீகத்தை வென்றதா?

மகுடி வித்தைகாரன் என்றால் உடன் ஞாபகம் வருவது கவுண்டமணி காமடிதான். திருச்சியில் மகுடி வித்தைக்காரன் அதிகம் தற்போது போலீஸ் அதிகாரிகளின் தயவால் இல்லை என்றே நினைக்கின்றேன். நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமயம். எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள தையல் கடைக்காரர் என்னை திருச்சி அல்லிமால் தெருவில் உள்ள கடையில் நூல் மற்றும் இதரப்பொருள்கள் வாங்கிவர சொன்னார். அங்கே (அல்லிமால் தெருவில்) சிலர் கூட்டமாக இருந்தனர். எனக்கு தெரு வித்தைகாரர்களின் தந்திரங்கள் அறிய ஆவல் அதிகம் எனவே நானும் சென்று பார்த்தேன். ஒருவன் பாம்பை காட்டி வேடிக்கை காட்டினான், ஒருவன் ஒரு துணி மூட்டைபோல கட்டி வைக்கப்பட்டுருந்தான். பாம்பாட்டி எல்லோரையும் கையை தலகீழாக நீட்டச்சொன்னான். எல்லோரும் நீட்டினார்கள், நானும் நீட்டினேன். எல்லாருடைய கையையும் தொட்டு சென்றான் பின் எல்லோரையும் கையை பார்க்க சொன்னான். சிலர் கையில் மட்டும் கருப்பு மையிருந்தது. இப்பொழுது துணிமுட்டையிலிருந்தவன் யார்க்கையில் மை இருக்கின்றதோ அவர்கள் மட்டும் நிற்கவும் மற்றவர்கள் சென்றுவிடவும் என்றான். என்கையில் மையிருந்தது அதனால் நானும் நின்றேன். என்னைவிட பெரியவர்களும் இருந்தனர். இப்பொழுது அந்த வித்தைகாரன் இந்த மை போகவேண்டும் என்றால் உங்களிடம் உள்ள காசு எல்லாம் வெளியில் எடுக்கவும் என்றான். எல்லோரும் எடுத்தனர் நானும் எடுத்தேன். பிறகு அவன் அப்படி இப்படி பேசி ஒவ்வொருத்தரிடமும் காசை வாங்கிவிட்டு அனுப்பிவிட்டான். என்முறை வந்தது, காசை கேட்டான் நான் கொடுக்க மறுத்தேன். கொடுக்கவில்லை என்றால் சக்கம்மா உன்னை இரத்தம் கக்கி சாகடிப்பாள் என்றான். எனக்கு நம்மிக்கையில்லை இது என் காசு இல்லை நான் போகிறேன் என்றேன். அப்போது துணிமூட்டையில் இருந்தவன் கத்த ஆரபித்தான், ஹீஈஈஈஈ... நீ போனால் உன் தம்பி அங்கே இரத்தம் கக்குவான் என்றான். என்னைப்பற்றி சொல்லுபோது இருந்த என் நம்பிக்கை இப்பொழுது இழக்க ஆரம்பித்தது. இங்கேதான் மூடநம்பிகை வென்றது. நமது சமுதாயம் பந்தம் பாசம் என்று பின்னப்பட்டது... இதனால்தான் மூடநம்பிகையும், கடவுளைப்பற்றிய எண்ணமும் வெற்றிப்பெற்றுவிடுகின்றது... மூடநம்பிகையை எதிர்க்க எனனை பனையவைக்க தயாராயிருந்த என்னால் என் பந்தத்தை பனையம் வைக்கமுடியவில்லை. இப்படிதான் சில பகுத்தறிவாதிகள் நாளாடைவில் என் மனைவியின் பாசத்தால் கோவிலுக்கு சென்றேன், தற்போது நானும் பக்தனானேன் என்பார்கள்.
இதுபொல 10-09-2008 ஆனந்த விகடனில் பெரியாருடன் வாழ்ந்து அவர் கொள்கையில் ஈர்க்கப்பட்ட பெருமாள் தற்பொது தினம் இரண்டு வேலை பூஜை செய்து நெற்றியில் விபூதியுடன் வாழ்கின்றார். இவர் சொல்வதை அருகில் உள்ள படத்தை அமுக்கி காணலாம்,.. நாம் நல்லதை பண்ணணும் அதை பெரியார் பேரால பண்ணினா என்னா... பிள்ளையார் பேரால பண்ணினா என்னா?.... என்று சொல்லும் பெருமாள்...


எங்கள் ஊரில் மூக்குப்பொடிக்காரர் என்று எல்லோராலும் சொல்லும் ஒருவர்.(ஏனெனில் மூக்குப்பொடி அதிகம் போடுவார்) முற்போக்கு கருத்துகளை சொல்லுவார்.. பெளடர் டப்பா தகரத்தில் விசில், காற்றாடி போன்றவற்றை செய்துகொண்டு எல்லா ஊர்களுக்கும் சென்று வருவார். நல்ல மனிதர் சமூக அக்கறையுள்ளவர் ஆனால் மனநிலையில் குழம்பியுள்ளார்.. இவரிடம் குழப்பம்தான் என்ன? நாத்திகத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் நடந்த போராட்டத்தில் வெற்றி பெராமலே இவரின் இந்த நிலை!,.. மேலெயுள்ள பெருமாள் அவர்கள் மனதளவில் வெற்றிப் பெற்றதால்தான், இன்று அவர் அந்த நிலையில் உள்ளார்,......

அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கவியரசு கண்ணதாசன், போலி மதவாதிகளையும் போலி சாமியார்களையும் கண்ட வெறுப்பில் கிருஸ்துவ பாதியாரிடம் சென்று நான் மதம்மாற வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு அந்த பாதிரியார் ஒரு மதம் பிடிக்கவில்லை என்பதற்காக மதம் மாறவேண்டாம் உங்கள் மனதிற்கு பிடித்தால் மட்டுமே மாறுங்கள். உங்கள் மனசாந்திக்காக பைபிளை படிங்கள் என்று ஒரு பைபிள் கண்ணதாசனிடம் கொடுத்தாராம். அந்த பைபிளை படித்துதான் ஏசு காவியம் எழுதினார். அப்பொழுது எனக்கு தெரிந்த கவிஞர் ஒருவர், கவிஞனுக்கு தன் முடிவுகாலத்தை கனிக்க முடியும் அவ்வாறு கண்ணதாசன் தன்னை கனித்துவிட்டதால்தான் ஏசு காவியம் எழுதுகின்றார் என்று கூறினார் ( அதேபோல ஏசு காவியம் முடித்ததும் இயற்கை எய்தினார்) மேற்கண்ட செய்தி செவிவழி கேட்டதே.....

தாழ்த்தப்பட்ட சமுகத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்டவர்களுக்காக அரும்பாடுப்பட்ட டாக்டர் அம்பேத்கார், தான் சார்ந்த இந்துமதத்தில் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக பார்க்கின்றது என்று, நான் ஒரு இந்துவாக சாக விரும்பவில்லை இந்திய சட்டத்தில் மதம் சாராமைக்கு பிரிவு இல்லை என்பதால் அவர் பெரியாரில் அலோசனையின் பேரில் புத்த மதத்தில் சேர்ந்தார்,....

மரணத்தின் விளிம்பில் உள்ள மனிதன் தளர்ந்த நிலையில் மனதை அமைதிப்படுத்த நம்பியோ! நம்பாமலோ! கடவுளின் தஞ்சம் புகுந்துவிடுவது இயற்கையே! கொடூர கொலையாலி ஆட்டோ சங்கர் தனது மரணத் தண்டனையின் போது கையில் பைபிள் வைத்திருந்தானாம்..

இப்படி மனிதன் பல்வேறு சூழ்நிலைகளில் தன்னை மாற்றி அமைத்துக்கொள்வது தன்னை சார்ந்தவர்களுக்காகவும், தனது மனம் நிம்மதியாக இருந்துவிட்டு போகட்டும் என்ற எண்ணத்தினாலுமே!......

0 comments: