ஏன்? எதற்கு? எப்படி?....11
வணக்கம் நண்பர்களே!...
பல நாட்களாக நான் பதிவின் பக்கம் வருவது குறைவாகவே இருக்கின்றது. வேலையின் அழுத்தம் மற்றும் மனதில் ஏற்படும் புறத்தாக்குதல்களும் ஒரு காரணம். அவ்வப்பொழுது வந்தாலும் பதிவுகள் எழுதுவது மிக குறைவே. நான் எழுதிய சிந்தனை இடுக்கைகளின் தொடர் "ஏன்? எதற்கு? எப்படி?" அப்படியே நின்றுவிட்டது. அதை கொஞ்சம் தூசி தட்டி எழுப்பலாம் என்ற எண்ணத்தில் "தூக்கத்தைப்" பற்றி எனக்குள் எழும் கேள்விகள் இந்த பதிவாக இருக்கின்றது. இதற்கு முன் எழுதிய ஏன்? எதற்கு? எப்படி?.... இடுகைகளின் தொகுப்பு கீழே புதியவர்களுக்கு பயனாக இருக்கும்.
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?....
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 2
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 3
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 4
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 5
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 6
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 7
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 8
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 9
அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 10
தூக்கம் என்றால் என்ன? தூக்கம் ஏன் வருகின்றது? யாரேல்லாம் தூங்க வேண்டும்? தூக்கத்தினால் என்ன பயன்? ஏன் தூங்க வேண்டும்? தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? இப்படி எண்ணற்ற கேள்விகள் எனக்கும் மட்டுமில்லை எல்லோருக்கும் இருக்கும். அப்படிதான் எனக்கும் இருக்கின்றது. இது போல பல விஞ்ஞானிகளும் கேட்டுள்ளார்கள், கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதற்கான விடைகளை முழுமையாக அறியப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் பல விடயங்கள் பதிலழிக்கப்பட்டுள்ளது. இன்னும் துருவி துருவி பார்க்ககூடியவையாகவே இருக்கும் ஒரு ஆய்வு நிலைதான் தூக்கம்.
தூக்கம் என்பது தற்காலிக மரணம் என்ற நம்பிக்கை சீனர்களுக்கு உண்டு. நமது மூன்னோர்கள் கூட தூக்கம் என்பது மரணத்தை போல என்ற எண்ணங்கள்தான் இருந்தது. ஆனால் தற்கால அறிவியல் தூக்கம் என்பது ஒரு இயற்கையான ஒரு நிகழ்வு. இது எல்லா உயிர்களுக்கும் நடக்கும் ஒரு செயல் என்ற உண்மையை சொல்லியுள்ளார்கள்.
தூக்கம் இல்லா வாழ்கையை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. வாழ்கையில் வெற்றிப்பெற்றவர்கள் தூக்கத்தை வெறுக்கின்றார்கள் என்று சொல்வதுண்டு. அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. எந்த ஒரு மனிதனும் குறைந்தது ஒரு நாளைக்கு 4 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்பதுதான் இயற்கையின் கட்டாயம். சிலருக்கு குறைந்த தூக்கமாயினும் நிம்மதியான தூக்கமாக இருக்கும், சிலருக்கு பல மணி நேரம் தூங்கினாலும் நிம்மதில்லா நிலை இருக்கும்.
தூக்கம் எதனால் வருகின்றது? 'மெலட்டோனின்’ (melatonin) என்ற ஹார்மோன் தான் தூக்கத்தை தூண்டுகின்றது. நமது உடலில் மூளைப்பகுதியில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கின்றது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரந்தால் தூக்கம் வருகின்றது. இந்த ஹார்மோன் வெளிச்சத்தில் குறைவாகவும் இருளில் அதிகமாக சுரக்கின்றது. அதனால்தான் இரவில் உறங்க முடிகின்றது. நமது முன்னோர்கள் பகல் தூக்கம் கேடு என்றே சொல்லியுள்ளார்கள். இரவு பணியில் உள்ளவர்கள் பகலில் தூங்கிதான் ஆக வேண்டும். " பகலில் தூக்கம் பாடையில் போவான்" என்பது சித்தர்கள் வாக்கு.
எவ்வளவு நேரம் தூங்கலாம்? அதிக தூக்கமும் குறைவான தூக்கமும் நல்லதில்லை. சாதாரணமாக மனிதன் 8 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும். முதியவர்களுக்கு 8 மணி நேரம் தூக்கம் போதுமானது. பிறந்த குழந்தைகளுக்கு 16 முதல் 18 மணி நேரம் தூக்கம் அவசியம் இந்த தூக்கம்தான் அவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பதாக சொல்கின்றார்கள். பள்ளிக்கு செல்லாத வயது குழந்தைகள் 10 முதல் 12 மணி நேரம் தூங்கலாம்.
தூக்கத்தினால் என்ன பயன்? சமீபத்தில் ஒரு ஆய்வு ஜெர்மனியில் நடந்தது. அதன் முடிவில் தூக்கத்தினால் நினைவாற்றல் அதிகப்படுத்துகின்றது என்று கூறப்பட்டது. தூக்கம் புத்துணர்வை அதிகப்படுத்துகின்றது. தூங்கும் பொழுது இதயம் , மூளை போன்றவை இயக்க நிலையில் இருக்கின்றது. தூக்கம் என்பது மூளைக்கு ஒரு கட்டாய நிகழ்வாக இருக்கின்றது. தூக்கத்தின் பொழுதுதான் மூளை தன்னை அனைத்து பகுதிகளையும் சரி பார்க்க பயன் படுத்துகின்றது. தூக்கம் என்பது மூளையின் ஓய்வு என்பது முற்றிலும் உண்மையில்லை. மூளை தூக்கத்தின் பொழுதுதான் அதிகமாக வேலை செய்கின்றது. மூளை தன் கட்டளைகளை அனைத்து பகுதிகளுக்கும் செலுத்தி சரியாக செயல்படுகின்றதா? என்று சரிபார்க்கின்றது. அதாவது (overhaul) ஓவர்கால் செய்கின்றது. இந்த நிகழ்வு நடக்காமல் இருந்தால் புதிய செல்களில் உற்பத்தி இல்லாமேலே போய்விடும். நாம் செய்யும் செய்ய நினைக்கும் அனைத்து செயல்களையும் கட்டளைகளாக செலுத்தி பார்த்து அதில் குறைகள் இருந்தால் தானாகவே சரி செய்துவிடுகின்றது. காலை தூக்கு, கையை ஆட்டு , தலையை சொரி போன்ற கட்டளைகலாக இருக்கும். ஆனால் அந்த கட்டளைகள் செயல் படுத்தாமல் தன்னைதானே சரிபார்க்க உபயோகித்துக்கொள்ளும். சில வேலைகளில் அந்த கட்டளைகள் செயல் வடிவம் செல்ல வாய்ப்புகள் இருக்கும் அந்த சமயங்களில் கலை தூக்க முடியாமல் கடின படுவதாக நமக்கு இருக்கும். இதைதான் ஏதோ ஒன்று நம்மை அமுக்கி செல்கின்றதாக சொல்லுவார்கள். நல்ல ஆரோக்கிய வாழ்விற்கு ஆழ்ந்த தூக்கமே நல்லது.
ஆழ்ந்த தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்? சரியான நேரத்திற்கு தூங்குவதை பழக்கபடுத்திக்கொள்ள வேண்டும். தூக்கம் வரும் முன் படுக்கைக்கு செல்வதை தவிற்த்துவிட்டு தூக்கம் வந்ததும் தூங்க செல்வது நல்லது. சீரான உணவு பழக்கம் நல்லது.எளிதில் ஜீரனமாகும் உணவும் சமசீர்ரான உணவும் உடலுக்கும் உரக்கத்திற்கும் நல்லது. மது , புகையிலை தவிற்பது நல்லது. தினம் உடற்பயிற்ச்சி சால சிறப்பு.....
தூக்கமின்மை என்பது என்றால் என்ன? பலர் படுக்கையறை சென்று தூங்க முடியாமல் அப்படியும் இப்படியும் புரண்டு படுப்பார்கள். இப்படி பட்டவர்கள் தூக்கமின்மையால் மிகவும் துன்பபடுவார்கள். தூக்கமின்மை மன உளைச்சல், பயம், குரோதம், தெளிவான சிந்தனையின்மை, இயலாமை, டென்ஷன் போன்ற காரணங்களால் வரும்...
நான்கு மணி நேரத்திற்கு குறைவாகவும் 16 மணி நேரத்திற்கு அதிகமாகவும் தூங்குவது கேடு விளைவிற்கும். இதனால் தற்கொலைக்கு தூண்டுதல் ஆளாக வேண்டி வருவதாக ஆய்வு சொல்லுகின்றது.
தூக்கம் என்பது ஒரு பொக்கிஷம், அவற்றை முழுமையாக அனுபவிற்பதே உயிர்களின் கடமையாகும்...
மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.
Sunday, September 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
எல்லாமே சரிதாங்க. கடன் பிரச்சனைகள் இல்லாவிட்டாலே பாதிப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும். அப்புறம் கும்பகர்ண பரம்பரை தாங்க.
இடுகை தளத்தின் வடிவமைப்பு வாசிக்க எளிதாக இருக்கு.
// ஜோதிஜி said...
எல்லாமே சரிதாங்க. கடன் பிரச்சனைகள் இல்லாவிட்டாலே பாதிப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும். அப்புறம் கும்பகர்ண பரம்பரை தாங்க.//
வணக்கங்க... உண்மைதான் பிரச்சனையில்லா மனிதனே இல்லையே!
//இடுகை தளத்தின் வடிவமைப்பு வாசிக்க எளிதாக இருக்கு.//
மிக்க நன்றிங்க
நண்பா நீண்ட நாளைகப்புறமானாலும் நல்ல பயனுள்ள இடுகை.தெரியாத சின்ன சின்ன இருட்டுக்குள் ஒளி பாய்ச்சுகிற எழுத்து. அசத்து.
// காமராஜ் said...
நண்பா நீண்ட நாளைகப்புறமானாலும் நல்ல பயனுள்ள இடுகை.தெரியாத சின்ன சின்ன இருட்டுக்குள் ஒளி பாய்ச்சுகிற எழுத்து. அசத்து.//
வணக்கம் தோழரே... மிக்க நன்றிங்க
நன்றாக இருக்கின்றது ஞர்னசேகரன் சார்..அருமையான பதிவு...
வாழ்க வளமுடன்.
வேலன்.
நல்ல உபயோகமான பதிவு
வாழ்த்துக்கள்
விஜய்
தூக்கம் பற்றிய நல்ல பதிவு.
// வேலன். said...
நன்றாக இருக்கின்றது ஞர்னசேகரன் சார்..அருமையான பதிவு...
வாழ்க வளமுடன்.
வேலன்.//
வணக்கம் வேலன் சார்... மிக்க நன்றிங்க
// விஜய் said...
நல்ல உபயோகமான பதிவு
வாழ்த்துக்கள்
விஜய்///
மிக்க மகிழ்ச்சிங்க நண்பா
நன்றி
// மாதேவி said...
தூக்கம் பற்றிய நல்ல பதிவு.//
வாங்க மாதேவி நலமா? மிக்க நன்றிங்க
nalama sekhar...rombanal peragu vanthu irukenga...eppavum pola nalla pagirvu...
// தமிழரசி said...
nalama sekhar...rombanal peragu vanthu irukenga...eppavum pola nalla pagirvu...//
வணக்கம் தமிழ்.. மிக்க நலம், உங்களின் வருகை மகிழ்ச்சி
4-5 நாட்கள் வீட்டில் இல்லை ஞானம்.அதனால்தான் இன்று பார்க்கிறேன்.
உண்மைதான்.தூக்கம் குறைவதால் அடுத்தநாள் கோபமும்,
எரிச்சலும்,ஒரு நோயாளிபோல் சோர்வான உடலும் மனமும்...நான் சிலசமயம் அவஸ்தைப்படுகிறேன்.
//ஹேமா said...
4-5 நாட்கள் வீட்டில் இல்லை ஞானம்.அதனால்தான் இன்று பார்க்கிறேன்.//
வாங்க ஹேமா... வணக்கம்
//உண்மைதான்.தூக்கம் குறைவதால் அடுத்தநாள் கோபமும்,
எரிச்சலும்,ஒரு நோயாளிபோல் சோர்வான உடலும் மனமும்...நான் சிலசமயம் அவஸ்தைப்படுகிறேன்.//
இன்றைய சூழலில் அப்படிப்பட்ட அவஸ்தை நிறைய பேர்களிடம் இருக்குங்க..... தியானம் நல்லது.. குளிர்காலத்தில் வெந்நீரிலும் வேயில் காலத்தில் குளிர்ந்த நீரிலும் குளித்துவிட்டு தூங்க செல்லுங்கள் ....
//தூக்கம் என்பது ஒரு பொக்கிஷம், அவற்றை முழுமையாக அனுபவிற்பதே உயிர்களின் கடமையாகும்...//
மிக சரியான வரிகள்.
[[ அன்பரசன் said...
//தூக்கம் என்பது ஒரு பொக்கிஷம், அவற்றை முழுமையாக அனுபவிற்பதே உயிர்களின் கடமையாகும்...//
மிக சரியான வரிகள்.]]
வாங்க அன்பரசன்
உங்களின் வருகை மகிழ்ச்சி
பல நாட்களாக நான் பதிவின் பக்கம் வருவது குறைவாகவே இருக்கின்றது. வேலையின் அழுத்தம் மற்றும் மனதில் ஏற்படும் புறத்தாக்குதல்களும் ஒரு காரணம்.
///
தாமதமாக எழுதினாலும் தரமான பதிவு .
நான் தினமும் 6 .௩௦ முதல் 7 மணி நேரம் தூங்குகிறேன்
[[பிரியமுடன் பிரபு said...
பல நாட்களாக நான் பதிவின் பக்கம் வருவது குறைவாகவே இருக்கின்றது. வேலையின் அழுத்தம் மற்றும் மனதில் ஏற்படும் புறத்தாக்குதல்களும் ஒரு காரணம்.
///
தாமதமாக எழுதினாலும் தரமான பதிவு .]]
மிக்க நன்றி பிரபு
[[நான் தினமும் 6 .௩௦ முதல் 7 மணி நேரம் தூங்குகிறேன்]]
கொடுத்துவைத்தவர்... பலரால் தூங்கனுடியாமல் இருக்கின்றது
:)
// siva said...
:)//
வாங்க சிவா
//மூளை தூக்கத்தின் பொழுதுதான் அதிகமாக வேலை செய்கின்றது.//
பின்ன!இல்லைன்னா தூங்கிட்டே ஏழு உலகமும் எப்படி சுத்தி வரமுடியும்:)
//மது , புகையிலை தவிற்பது நல்லது. தினம் உடற்பயிற்ச்சி சால சிறப்பு.....//
எனக்கு சரி!ஆனா......
யாருகிட்ட இந்த சித்து வேலையெல்லாம் காண்பிக்கிறீங்கன்னு சொல்றவ்ங்களுக்கு மாற்று ஏதாவது இருக்கா?
[[ ராஜ நடராஜன் said...
//மூளை தூக்கத்தின் பொழுதுதான் அதிகமாக வேலை செய்கின்றது.//
பின்ன!இல்லைன்னா தூங்கிட்டே ஏழு உலகமும் எப்படி சுத்தி வரமுடியும்:)]]
வணக்கம் நண்பா... ம்ம்ம் மிக்க நன்றிங்க
[[ ராஜ நடராஜன் said...
//மது , புகையிலை தவிற்பது நல்லது. தினம் உடற்பயிற்ச்சி சால சிறப்பு.....//
எனக்கு சரி!ஆனா......
யாருகிட்ட இந்த சித்து வேலையெல்லாம் காண்பிக்கிறீங்கன்னு சொல்றவ்ங்களுக்கு மாற்று ஏதாவது இருக்கா?]]
மாற்றுன்னா.... குறைத்து கொள்வது நல்லது... எப்படியும் மது, புகையிலை போக போக தூக்கமின்மையை உண்டாக்கும்
Post a Comment