




புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்




புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
படிக்கனுங்க?.. அய்யோ! இப்பதான் "சிலம்டாக் மில்லியனியர்" திரைப்படத்தை பார்த்தேன்.... சேரில இருந்த ஜமால் மில்லியனியர் ஆகமுடியுமா?... வாழ்கையின் அனுபவக்கல்வி இருந்தா முடியும் போலதான் தோனுதுங்க,... சிறிய கதை, பெரிய காவியம், நல்ல திரைக்கதை அமைப்பு (திரைக்கதை பற்றி சொன்னா நம்மாளு பாக்கியராஜ் சாரை நினைக்க தோன்றும் "அந்த ஏழு நாட்கள்" திரைக்கதை சொல்லவேண்டியதில்லை படம் பார்த்தவர்களுக்கு புரியும். சிலம்டாக் மில்லியனியர் படத்தில் உள்ள திரைக்கதை அமைப்பு எனக்கு பாக்கியராஜ் சாரை நினைக்க தொன்றியது, கொஞ்சம் ஓவர்தான் இருந்தாலும் சொல்ல வேண்டியதாக நினைக்கின்றேன்). சிலம்டாக் மில்லியனியர் படம் எட்டு ஆஸ்கர் விருதை தட்டி சென்றுவிட்டது. இது இந்தியர் அனைவரும் பெறுமைப் படக்கூடியது. அதில் இரண்டு விருது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்தது தமிழகத்திற்கே பெறுமை சேர்கின்றது.... படத்தில் இசை சோக காட்சிகளில் கூட வெற்றிப் பெறவேண்டும் என்ற எண்ணம் தூண்டும்படி எழுற்சியாக இருப்பதுதான் வெற்றியின் ரகசியம்... அந்த பெறுமை ஏ.ஆர். ரகுமானை சேரும். முக்கியமாக சொல்ல வேண்டும் Sound Mixing (சிறப்பு ஒலி சேர்ப்பு) ஒரு புதிய உணர்வையும், அவற்றுக்காண முகவரியும் கொடுக்கின்றது, ரெசுல் பூக்குட்டி பாராட்டலாம்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது எல்லா சாமானியனின் எதிர்ப்புகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. மேலும் முத்துகுமார் போன்றவர்களின் தீக்குளிப்புகளும் உருவாக்கியுள்ளது. எதுவாகினும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடுகள் இருக்க கூடாது. அது இலங்கை தமிழாரக இருந்தாலும் இல்லை ஈழத்தமிழராக இருந்தாலும் இருந்துவிட்டு போகட்டும் அது ஒரு பிரச்சனையில்லை.
ப்பேன்... என் பாட்டி கதை சொல்லனும்னா நான் ங்ங்ங்ங்.. சொல்லனும். நான் ங்ங்ங்ங்.. சொல்லனா நான் தூங்கிடேனு அர்த்தம். எப்பவும் இப்படிதான் என் கதை கேட்கும் நேரம். பாட்டி சொன்ன கதைனா நல்லதங்காள் கதை, அர்ச்சந்திரன் கதை அப்பறம் சாமி கதைகள். சாமி கதைனா நான் கொஞ்சம் ங்ங்ங்ங்... அதிகமா சொல்லுவேன். சாமிக்கு நல்லது செய்யுறவுங்களதான் புடிக்கும் என்று சொல்லும் பாட்டியிடம் நான் எப்பவும் கேட்கும் கேள்வி தப்பு செஞ்சா என்ன பன்னும் சாமி கேட்பேன். தப்பு பன்னுறவுங்களை சாமி அவுங்க இறந்த பிறகு நரகத்தில் போடுவார்கள் என்பாள். எப்பவும் நல்லது செய்தால் நாம் சொர்க்கத்திற்கு போகாலாம் என்றும் சொல்லுவாள் என் பாட்டி....
ஒன்றை நாம் நம்பும்படி இன்னமும் காலம் கடத்திக்கொண்டே இருக்கின்றோம். அப்பறம் சில கேள்விகள் என் மனதில் தோன்றிய காலங்கள் அர்ச்சந்திரன் மாதிரி உண்மை பேசி எந்த துண்பதிலும் நல்லதே செய்து காத்திருந்த சொர்க்கம் என்னா என்றால் பசி இல்லா உலகம் உழைபே இல்லா உலகமுனு நினைச்சா! புரியலங்க ...... இந்த பூமியை விட சிறந்த சொர்க்கம் இருக்கா என்னால ஒத்துக்க முடியலங்க! இதுதான் சொர்க்கமா தோனுது. எனக்கு பசிக்கனும் அதனால உழைக்கனும் இதுல கிடைக்குற மகிழ்சியை பாட்டி சொன்ன சொர்க்கத்தில இருக்கா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இப்படி சொர்க்கமா இருக்குற பூமியை சொர்க்கமாவே இருக்க நாம தாங்க நல்லது பன்னனும். இந்த சொர்க்கத்தை விட்டு விட்டு எங்கேயோ இருக்கா இல்லையா என்று தெரியா சொர்க்கத்தை காண இந்த வாழ்நாள் எல்லாம் தேடிகொண்டே இருப்பதுதான் தெரியலங்க.அன்புடன் ஆ.ஞானசேகரன்

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்.
நன்றி தினமலர்:
சந்திரயான் -1 விண்கலம் 100வது நாள் வெற்றி விழா
ஜனவரி 29,2009,12:54 IST
பெங்களூரு : கடந்த வருடத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி பதிவேட்டில் ஒரு மைல்கல்லாக அமைந்ததது , சந்திரயான்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது . கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி சந்திரயான்-1 விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-1 விண்கலம் நிலவில் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து இன்றுடன் வெற்றிகரமாக 100வது நாள் ஆகிறது. இதை கொண்டாடும் வகையில் இந்தியா மற்றும் சில வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 100 விஞ்ஞானிகள் இன்று பெங்களூருவில் நடக்கும் வெற்றி விழாவில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகின்றனர். விஞ்ஞானிகள் சந்திரயான் -1 விண்கலம் சேகரித்த முக்கியத் தகவல்கள் குறித்து ஆய்வு செய்யவிருக்கிறார்கள். இத்தகவலை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். சந்திரயான்- 1 விண்கலத்தினால் விண்ணில் இறக்கப்பட்டுள்ள ' மூன் இம்பாக்டர் பிரோப் ' நிலவின் வியத்தகு படங்களை அனுப்பியுள்ளது. இதுவரை யாருமே கண்டிராத கோணங்களில் புகைப்படங்களை ' மூன் இம்பாக்டர் பிரோப் ' எடுத்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் புகைப்படங்கள் தற்போதைக்கு இஸ்ரோவிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரயான் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : குழந்தை சந்திரயான் -1 நலமாக இருக்கிறது. அத்துடன் செலுத்தப்பட்ட 11 கருவிகளும் சிறப்பாக இயங்குகின்றன. இந்தியாவின் இந்த சாதனை பயணம் நிலவு குறித்த இதுவரை புரியாமல் இருந்த புதிரை நீக்கி, விசித்திரமாக தோன்றியவற்றிற்கு விளக்கம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார். இன்று பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஈசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் சில விஞ்ஞானிகளும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது
ல்லை. ஒருநாள் ஒரு கிளி வெளியில் பறந்து சென்று விட்டது என்று மிகவும் வருத்தப்பட்டார். நான் பரவாயில்லை விடுங்கள் அது சந்தோசமாக இருந்துவிட்டு போகட்டும் என்றேன். அவர் சொன்னார் இல்லை சார் அந்த கிளி எங்கள் வீட்டில் 10வருடம் இருந்துவிட்டது வெளியில் சென்றால் மற்றகிளிகளுடன் போராட பழக்கமில்லாமல் இறந்துவிடும் "அதுதான்" வருத்தமாக இருக்கின்றது என்றார்...........??????? மேற்கண்ட படத்தின் சாரம், ... உங்களின் உணவு அவைகளுக்கு ஏற்றவையாக இல்லை என்பதை குறிக்கும்... சிங்கபூரில் இயற்கையான விலங்கினங்களுக்கு உணவழித்தால் அபதாரமும் விதிக்கப்படுகின்றது..
மனிதன் இயற்கையின் அங்கமாக இருந்தாலும் அவனின் ஆறரறிவு இயற்கையை ரசிக்கலாமே தவிற அவற்றை தடுக்கவோ கெடுக்கவோ செய்வானாயின், தீவிறமான பாதிப்பை சந்தித்தே ஆகவேண்டும்.. அந்த இயற்கையின் அழகிற்கு இயற்கையே சொந்தகாரன்..... அந்த இயற்கையின் அழகில் (படம் பார்க்க.....) கல்லை கக்கத்தில் வைத்துக்கொண்டு வளரும் மரம்,....... மர கிளைகளில் பூத்தும் காய்த்தும் சிரிக்கும் மரம்,...... முயலின் முக சாயலில் இருக்கும் பூ..... இப்படி இயற்கை இயற்கையாக இருக்கும் வரை அவைகள் அழகுடனும் நம்மோடு வாழும் என்பதே என் எண்ணம்!.......
மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்., ஆ.ஞானசெகரன்.