_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, June 9, 2008

நெத்தியடி கொடுத்தவள்!......

நெத்தியடி கொடுத்தவள்!......
எப்பொழுதும்பொல என் மகளுடன் விளையடிக்கொண்டிருந்தேன், அவளிடம் உன்க்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா?.. என்னை பிடிக்கும் என்று சொல்வாள் நம்பிக்கையில் கேட்டேன். ஆனால் அவள் எனக்கு அம்மா பிடிக்கும், அப்பா பிடிக்கும், அண்ணன் பிடிக்கும், தாத்தா பிடிக்கும், ஆயா (என் அம்மா) பிடிக்கும்...... என்று ஒரு தொடரை சொன்னாள்.

ஒன்று மட்டும் சொல்லவேண்டும் என்றேன், அவள் அப்படியெல்லாம் சொல்லமுடியது? என்றாள்..

மறுபடியும் உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? என்னை பிடிக்கும் என்பாள் என்ற நம்பிக்கையில் அவளிடம் கேட்டேன்,.. மீண்டும் அதே தொடரை சொன்னாள். ஒருவரை மட்டும் சொல்லு என்று ஒரு நட்பாசையில்
கெட்ட்டேன், அப்படியெல்லாம் சொல்லகூடாது என்றாள்.

இப்பொழுதுதான் நான் கேட்ட கேள்வியின் தவற்றை புரிந்துகொள்ளமுடிந்தது.
ஒரு குழைந்தையிடம் கேக்ககூடாத கேள்வியை உண்ர்ந்துகொள்ள முடிந்தது.
நமக்கு பிறந்த பிள்ளைக்கு, நாம் எல்லோரையும் பிடிக்கவேண்டுமே தவிர என்னை மட்டும் பிடிக்க வேண்டும் என்ற குருகிய மனம் எங்கிருந்து வந்தது,.

இப்படிதான் குழந்தைகளிடம் பாரபச்சம் ( நமக்கு தெரிந்தோ! தெரியாமாலோ!) காட்டிக்கொண்டுள்ளொம். பெற்றப்பிள்ளைகளிடம்
பெரியவர் சிறியவர் பாரபச்சம், நிறத்தில் பாரபச்சம், படிப்பில் பாரபச்சம், ஆண் பெண் பாரபச்சம்,... இப்படியாக எல்லாவகையிலும் பாரபச்சம் காட்டுவது எந்தவகையில் சரியானது? .. விஜய் டீவி நிகழ்ச்சி (நீயா? நானா?) ஒன்றில்
பிள்ளைகள் தங்களிடம் பெற்றொர் காட்டும் பாரபச்சம் பற்றி கொட்டி தீர்த்தார்கள்.

பிள்ளைகள் நம்வழி வந்தவர்களெ தவிர நமக்காக வந்தவர்கள் அல்ல!. இதை
முற்றிலும் தெளிவுப்படவேண்டும். நம் கனவுகளை அவர்களிடம் தினிப்பதில் எந்தவகையில் சரியானது? நம்மைவிட பிள்ளைகள் மிக தெளிவாக நடைபொடுகின்றார்கள். அவர்களுக்கு வழிவிட வேண்டுமே தவிர தடையாக இருக்க வேண்டாம்.

5 comments:

கோவி.கண்ணன் said...

என்னங்க ஞான்ஸ்,

எழுதவரலை எழுதவரலை என்று சொல்லி கலக்கி இருக்கிங்க. ப்ளாகிங் அம்புட்டுதான். அப்படியே தமிழ் மணத்திலும் இணைச்சிடுங்க

ஆ.ஞானசேகரன் said...

மிகவும் நன்றி! கண்ணன்,.. தொடர்ந்து எழுத முயற்சி பன்னுகின்றேன்.

கோவி.கண்ணன் said...

தமிழ்மணத்தில் இணைத்துவிட்டீர்கள்...

வாழ்த்துகள்...வளர்க்க உங்கள் எழுத்துப்பணி.

Kam said...

Does your conclusion only apply to your children? Not to your brother?! :-)

பாலராஜன்கீதா said...

ஒரு நல்ல காணொளியை அளித்தமைக்கு நன்றி.