_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, June 11, 2008

தந்தைக்கு பணம் அனுப்பவேண்டாம்!.......

தந்தைக்கு பணம் அனுப்பவேண்டாம்!.......





அப்பொழுது, ஏழாம் வாகுப்பு படித்து வந்தேன். தமிழாசிரியர் பாடவெலையில் தினமும் கரும்பலகையில் ஒரு வாக்கியாம் எழுதவேண்டும். எல்லொரும் தினம் ஒரு வாக்கியம் எழுதுவார்கள். அவைகள் சிரிப்பும், சிந்தனையும் கலந்து இருக்கும், ஒருமுறை நானும் எழுதினேன் "தீயோரிடமும் பலக கற்ப்பொம்!" என்று எழுதிவைத்தேன்.

ஆசிரியர் வந்தார் படித்தார் பின்பு யார் எழுதியது என்று விளக்கமும் கேட்டார். தீயோர்களுக்கு தீயது எது என்று சரியாக புரியும், மேலும் நம்மை புரிந்த நண்பனாக இருந்தால் தீயதுலிருந்து தடுத்து காப்பர் என்றேன்.
ஆசிரியர் ஓரளவுக்கு சரியான விளக்கம் ஆனால், கொஞ்சம் கடினபாதை என்றார். பிறகு ஒரு முனிவர் கதையும் சொன்னார்.

" ஒரு குரு தன் சீடர்களுக்கு மூன்று அறிவுரை சொன்னார் 1. படுத்து உறங்காதே, 2. தாய் சொல்லை கேட்காதே, 3. தந்தைக்கு பணம் அனுப்பாதே அப்பொது சீடர்களோ புரியாது விளக்கம் கேட்டனர். ஒன்று படுத்து உறங்குவது சொம்பேரி தனம் எனவே துக்கம் வரும்போது படுக்க சொன்னார். அதுவரை வெலையில் இடுபடவேண்டுமாம். இரண்டு தாய் சொல்ல கேட்க வேண்டாம், அவள் சொல்லும் முன்பே செய்து முடித்து விட்டு, முடித்தேன் என்று மறுப்பு சொல்ல வேண்டும் என்றார். தந்தைக்கு பணம் அனுப்பாமல் அனைத்தும் தந்தையிடம் கொடுத்து பின் அவரிடம் நீ பெற்றுகொள்வாய் என்று சொன்னார். சீடர்களும் சரி என்றனர்."

பின்குறிப்பு: நானும் தந்தைக்கு பணம் அனுப்புவதில்லை, காசோலையாக அனுப்புகின்றென்....... அப்ப நீங்கள்?...

2 comments:

cheena (சீனா) said...

தந்தையிடம் பணம் வாங்குவதும் - கொடுப்பதும் இயல்பு - இதற்கெல்லாம் அறிவுரை தேவை இல்லை.

ஆ.ஞானசேகரன் said...

// cheena (சீனா) said...

தந்தையிடம் பணம் வாங்குவதும் - கொடுப்பதும் இயல்பு - இதற்கெல்லாம் அறிவுரை தேவை இல்லை//

மிக்க நன்றி ஐயா