அந்தர்ப் பல்டி! ஆகாசப் பல்டி!
சென்னை: ஒகேனக்கல் பிரச்னை குறித்து, சென்னையில் திரைப்படத் துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் "தண்ணீரைக் கூட பிரச்னையாக்குபவர்களை உதைக்க வேண்டாமா?' என ஆவேசமாக பேசிய ரஜினிகாந்த், "குசேலன்' திரைப்படம் வெளியிடுவதற்காக கன்னட மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில், தமிழ்த் திரைப்படத் துறையினர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர். கூட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், "கர்நாடக - தமிழக மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஆனால், சிலர் இந்த ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் தூண்டி விடுகின்றனர். குடிக்கிற தண்ணியில கூட பிரச்னை கிளப்புறவங்களை உதைக்க வேண்டாமா?' என ஆவேசமாக பேசினார். ரஜினியின் இந்த பேச்சு கன்னட அமைப்புகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. "கர்நாடகாவில் ரஜினி சினிமாக்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என எச்சரிக்கப்பட்டது.
இந்தப் பிரச்னை அமுங்கியிருந்த நிலையில், ரஜினி நடித்த "குசேலன்' திரைப்படம் இன்று வெளியாகிறது. கர்நாடகாவில் தனது திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா பிலிம் சேம்பருக்கு கடிதம் எழுதியுள்ளார் ரஜினிகாந்த். அதில், "எனது பேச்சு கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தியதை நான் அறிவேன். எனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளேன்; இனிமேல் இதுபோல் பேசமாட்டேன். எனது திரைப்படத்தை தமிழ், கன்னட ரசிகர்கள் உட்பட அனைத்து ரசிகர்களும் பார்த்து மகிழ்கின்றனர். எனவே, "குசேலன்' திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். இதையடுத்து, இன்று "குசேலன்' திரைப்படத்தை வெளியிட கர்நாடகா பிலிம் சேம்பர் அனுமதித்தது.
இதை அறிந்த கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள், கர்நாடகா பிலிம் சேம்பர் முன் கூடி, "ரஜினி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை "குசேலன்' திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என்று கோஷமிட்டனர். "ரஜினி, கன்னடர்களை அவமரியாதையாக பேசியுள்ளார். எனவே, அவர் நேரடியாக மக்களிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்' என "வாட்டாள்' நாகராஜ் கூறினார்
இதுகுறித்து கர்நாடகா பிலிம் சேம்பர் துணைத் தலைவர் ராக்லைன் வெங்கடேஷ் கூறும்போது, ""ரஜினி ஏற்கனவே "டிவி' சேனல்கள் மூலமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தற்போது கடிதம் மூலமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரது திரைப்படத்தை இன்று வெளியிட அனுமதித்துள்ளோம்,'' என்றார்.ஆனாலும், கன்னட அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி "குசேலன்' திரைப்படம் இன்று வெளியாகுமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
ரஜினி உருவப்படம் தீ வைப்பு: கன்னட அமைப்பினர் போராட்டம் : நடிகர் ரஜினி நடித்த "குசேலன்' படத்தை திரையிட அனுமதித்ததைக் கண்டித்து கர்நாடகா ஃபிலிம் சேம்பர் முன் கன்னட அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினி உருவப் படம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு, கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியபோது, தமிழ் சினிமா நடிகர்கள் அனைவரும் இணைந்து சென்னையில் போராட்டம் நடத்தினர். அதில் நடிகர் ரஜினியும் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியது, கன்னட வெறியர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் ஆத்திரத்தில் இருந்த கன்னட வெறியர்கள், ரஜினியின் குசேலன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கர்நாடகாவில் 18 திரையரங்குகளில் குசேலன் படம் வெளியிட அனுமதி தரப்பட்டது. அதையடுத்து கன்னட அமைப்பைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ், நாராயண கவுடா, பிரவீன் ஷெட்டி ஆகியோர் தலைமையில் நேற்று கர்நாடகா பிலிம் சேம்பர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.அப்போது ரஜினி உருவப் படத்தை தரையில் போட்டு அதைச் சுற்றி செருப்புகள் வைத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து அப்படத்தை எடுத்து வாட்டாள் நாகராஜ் தீ வைத்து கொளுத்தினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குசேலன் திரைப்படம் வெளியிடும் தியேட்டர்கள் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலு விவரங்களுக்கு சுட்டவும்
இங்கே சுட்டவும்www.dailythanthi.com/article.asp?NewsID=429170&disdate=8/1/2008&advt=1
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=1420&cls=row4
மனிதன் உணர்சிவசப்பட்டு பேசும்பொது தவறுதல் இயற்கைதான்,. அதிலும் இமயமலை சென்று தியாணம் பன்னும் அறிவு ஜிவிகள் தவறுபன்னதான் செய்வார்கள்.. இவர்கள் ஞானம் மிக்கவர்கள் பணமே குறிகோளாகா கொண்டவர்கள். , தமிழர்களின் பணத்தை சுரண்ட ஆசையற்றவர்கள்' . தமிழக முதலமைசருக்கு முற்றிலும் தகுதியானவர்கள். ஒகேனக்கல் பிரச்னை நடந்தது இரண்டுமாதங்களுக்கு முன் ஆனால் தற்ப்பொதுதான் ஞானம் பிறந்து மன்னிப்பு கேட்பார்கள். பணமே எண்ணம் கொண்ட இவர்களுக்கு எல்லாம் சாத்தியமே.. தமிழ் மாக்களுக்கு தலைவராக தகுதியானவர்கள்.. இவர் ஒருமுறை சொன்னா! நூறு முறைச்சொல்ல நாங்கள் இருக்கிறோம்... நாங்களும் மன்னிப்பு கேட்கின்றொம்...
Friday, August 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//தமிழ் மாக்களுக்கு தலைவராக தகுதியானவர்கள்.. //
இங்கே 'மா'க்களுக்கு என்று வேண்டுமென்றே தானே எழுதினீர்கள் ?
//இங்கே 'மா'க்களுக்கு என்று வேண்டுமென்றே தானே எழுதினீர்கள்//
ஆமாங்க,... சரியாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்
சரியாச் சொண்ணீங்க...
மக்களுக்கு ஒரு முறை பட்டா புத்தி வரனும்..
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" மாட்டுக்கே ஒரு சூடு தான்னா, மக்களுக்கு??
அப்படி பார்த்தா, மாக்கள் என்ற சொல்கூட இந்த ஜென்மங்களுக்கு பொறுந்தாது..
please go thru'
sensiblesen.blogspot.com
///சரியாச் சொண்ணீங்க...
மக்களுக்கு ஒரு முறை பட்டா புத்தி வரனும்..
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" மாட்டுக்கே ஒரு சூடு தான்னா, மக்களுக்கு??
அப்படி பார்த்தா, மாக்கள் என்ற சொல்கூட இந்த ஜென்மங்களுக்கு பொறுந்தாது//
என்ன பன்னுவது சொல்லதான் முடியும்
பெங்களுரின் இப்போதைய நிலையென்ன
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
Post a Comment