_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, August 3, 2008

ரஜினி சார்க்கு சில கேள்விகள்.

ரஜினி சார்க்கு சில கேள்விகள்.
சென்னை: ""யார் வன்முறையில் ஈடுபடுகிறார்களோ அவர்களை உதைக்க வேண்டும் என்று நான் சொல்லியிருந்தால், இவ்வளவு பிரச்னை வந்திருக்காது. நான் பேசிய பேச்சில் ஒரு பெரிய பாடம் கற்றுக் கொண்டேன்,'' என்று ரஜினி பேசினார்.

"குசேலன்' படத்தில் நடித்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நடிகர் ரஜினி மற்றும் இயக்குனர் வாசு, தயாரிப்பாளர்கள் சார்பில் நிதி வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இயக்குனர் கே.பாலச்சந்தர் பேசியதாவது: கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டு தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக ரஜினியைப் பற்றி ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ரஜினி மன்னிப்பு கேட்கவில்லை; வருத்தம் தான் தெரிவித்துள்ளார். "உதைக்க வேண்டும்' என்ற வார்த்தையை பயன்படுத்தியது தான் மொத்த பிரச்னையே. அதற்காகத் தான் ரஜினி வருத்தம் தெரிவித்துள்ளார் என்றார்.

ரஜினி பேசியதாவது: குசேலன் படத்தை போல இனி வரும் என் படங்கள் அனைத்திலும் இதுபோன்ற நிதி உதவி வழங்குவது தொடரும். இப்போது நடக்கும் விஷயம் பற்றி பாலச்சந்தர் இங்கே சொன்னார். அதற்கு மேல் நான் பேச விரும்பவில்லை. மேலும் யூகங்களை அதிகரிக்க விரும்பவில்லை. அன்று நான் பேசிய பேச்சில் ஒரு பெரிய பாடம் கற்றுக்கொண்டேன். யார் வன்முறையில் ஈடுபடுகிறார்களோ அவர்களை உதைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் இவ்வளவு பிரச்னை வந்திருக்காது. இவ்வாறு ரஜினி பேசினார்.

நிருபர்களிடம் "எஸ்கேப்': விழா முடிந்த நிலையில், செய்தியாளர்கள் மேடையில் ஏறி ரஜினியை சுற்றிவளைத்து கேள்விகளை எழுப்பினர். "உங்களிடம் விளக்கம் கேட்கப்படும் என, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளாரே' என்ற ஒரு கேள்வியை மட்டும் நின்று கேட்ட ரஜினி, ஒரு நொடி யோசித்துவிட்டு, "வேண்டாமே' என்று தனது பாணியில் ஸ்டைலாக சொல்லிவிட்டு வேகமாக நடக்கத் துவங்கினார். தொடர்ந்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. "பேசவேண்டியதை எல்லாம் விழாவிலேயே பேசிவிட்டேனே' என சொல்லிவிட்டு ரஜினி அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.
ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பேனர்கள் கிழிக்கப்பட்டது பற்றி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணாவிடம் கேட்டபோது, ""கோவையில் ரஜினி ரசிகர்கள் யாரும் இவ்வாறு செய்யவில்லை. வேறு யாரோ குடிபோதையில் செய்திருக்கலாம். ரஜினியின் கருத்தை ரசிகர்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வித கோபமும் இல்லை. எனக்கு கிடைத்த தகவல்படி எங்கும் ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,'' என்றார்.
தினமலரில் பார்க்க சுட்டவும்
ரஜினி சார்க்கு சில கேள்விகள்.
1. நீங்கள் குப்பனோ, சுப்பனோ அல்ல பல்லாயிரம் ரசிகர்கள், பொதுமக்கள் கவனிக்கும் மனிதன் என்பது உங்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும் உணர்சிவசப்பட்டு தவறான வார்ததை எப்படி சொல்ல முடியும்?
2. அப்படி சொன்ன வார்த்தையின் தவற்றை இரண்டுமாதங்களுக்கு பிறகு,. உங்கள் படப்பிரச்சனையில்தான் புரிந்துக்கொள்ள முடிந்ததா?
3. இமையமலைக்கு சென்று தியாணம் மேற்க்கொள்ளும் உங்களால் எப்படி உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்யமுடியும்?
4. உங்களை தெரிந்தோ தெரியாமலோ தலைவர் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். அந்த தகுதியை ஏற்பதும் முடியாததும் உங்கள் விருப்பம், இருப்பினும் அந்த தகுதிக்கேற்ப நடந்துக்கொள்ள முயற்ச்சிக்க கூடாதா?
5. சிறுவானாயிருந்த கரிகாலன் யானையின் மூலம் அரசனாக்கியதும், அவன் அதன்பிறகு அரசனாகி நல்லாட்சி செய்து இன்று கூட செய்திடாத கல்லணையை கட்டினான். தலைவா என்று அழைக்கும் உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் செய்ததுதான் என்ன? உங்கள் வியாபாரயுத்தியில் முட்டாளாக்கி நலன் அனுபவிக்கின்றீர்களா?.
6. வருதப்படுவதும், மன்னிப்பு கேட்பதும் அதிக வித்யாசம் தெரியாது, . கன்னட மக்களுக்கு வருத்தம் தெரியப்படுத்தின உங்களால் மனம்நொந்த தமிழ் ரசிகர்களுக்கு வருத்தமோ, விளக்கமோ தெரியப்படுத்த முடியவில்லை ஏன்? //கேள்வியை மட்டும் நின்று கேட்ட ரஜினி, ஒரு நொடி யோசித்துவிட்டு, "வேண்டாமே' என்று தனது பாணியில் ஸ்டைலாக சொல்லிவிட்டு வேகமாக நடக்கத் துவங்கினார்.// இதுதான் உங்கள் பாணி என்றால் இதுவும் ரசிகனின் தலையெழுத்தா?
7. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நிதி வழங்குதல் திட்டமிட்டதா? இந்தப் பிரச்சனைக்கு காட்டும் பொம்மலாட்டமா?
8. அன்று பேசியது தவறு என்று கூறும் உங்களால் இன்று பேசியதில் தமிழர் மனம் புண்படும் என்று புரியாதா? யாரும் தெரியப்படுத்தவில்லையா?
9. உங்களின் விபாரத்திற்காக மன்னிப்பு கேட்டதும், அதனால் இயக்குனர் தயாரிப்பாளர் பயன்ப்படுவதால் நன்றியை தெரியப்படுத்திகின்றேன். இருப்பினும் உங்களை நம்பி கெட்டொழியும் ரசிகர்களுக்கு நீங்கள் கிலிச்சதுதான் என்ன?
//ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,'' என்றார்.// இவர்கள் சிந்திக்காத வரைதான் உங்கள் காலடியில் கோடிகள். தமிழ் ரசிகர்களே இன்னும் எத்தனை நாட்களுக்கு விசிலடிச்சானாக இருக்கபோரிங்க.... உங்கள் பொலப்பை பாருங்க சார்.

26 comments:

வெண்பூ said...

சூப்பர் கேள்விகள் ஞானசேகரன், முக்கியமா
//
இமையமலைக்கு சென்று தியாணம் மேற்க்கொள்ளும் உங்களால் எப்படி உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்யமுடியும்?
//

யாராவது அவருக்கு ஃபார்வேர்ட் பண்ணுங்கப்பு...

தமிழ் ஓவியா said...

மிகச்சரியான கேள்விகளை எழுப்பி ரஜினியை மட்டுமல்ல ரஜினி பின்னாடிச் சுற்றும் விசிலடிச்சான் குஞ்சுகளையும் சிந்திக்க வைத்து, தமிழனுக்கு உணர்வை ஏற்படுத்தியது உங்கள் பதிவு.

ஆ.ஞானசேகரன் said...

வெண்பூ, தமிழ் ஓவியா

உங்கள் வரிகைக்கு நன்றி,
கேள்வி கேட்கதான் முடிந்தது, புரிந்துக் கொள்வதும், அதன்படி நடப்பதும் அவர்கள் விருப்பம்....சம்மந்தப்பட்டவர்கள் புரிந்துக்கொள்வார்கள் என்பது எனனைப்பொருத்தவரை முடியாது...

ராஜ நடராஜன் said...

வந்தேன்.விட்டுடுங்கப்பு.அவர் முகத்தைப் பார்த்து விட்டுடுங்கப்பு.

Anonymous said...

இமயமலைக்கு போவது, தியானம் செய்வது போன்ற செயல்கள் தன்னை மேன்மைப்படுத்த என்று அவர் ஏற்கனவே சொல்லியுள்ளாரே.
(2006 தேர்தலின் போது ராமதாஸ் குறித்து பேசும் போது ”நான் துறவி கிடையாது;ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டும் அளவுக்கு இன்னமும் பக்குவப்படவில்லை.
ரஜினிய இகழ்வது என்பது காலம் காலமாக வரும் சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது.அவரின் குறைகளை தேடித் தேடி சுகம் காணூவோர் சற்றே கலைஞரிடம் இந்த ஓகனேக்கல் விஷயம் என்னவாயிற்று என்றும் ஒரு பதிவு போட்டிருக்கலாம்.

ஆ.ஞானசேகரன் said...

Vijay சார்
ரஜினி சார் எப்ப ஒரே மாதிரி பேசினார்? ஒருமாதிரிதானே பேசுவார்.

//சற்றே கலைஞரிடம் இந்த ஓகனேக்கல் விஷயம் என்னவாயிற்று என்றும் ஒரு பதிவு போட்டிருக்கலாம்.//
நீங்களே ஒருபதிவு போடுங்க சார். அவலுடன் எதிர்ப்பார்கின்றோம்..

ஆ.ஞானசேகரன் said...

// ராஜ நடராஜன் said...
வந்தேன்.விட்டுடுங்கப்பு.அவர் முகத்தைப் பார்த்து விட்டுடுங்கப்பு.//

நன்றி! உங்களுக்காக இதை மட்டும் விட்டுடுடலாம். மீண்டும் வராம பாத்துகோங்க ஒகேவா?

ஆ.ஞானசேகரன் said...

// Vijay said...
இமயமலைக்கு போவது, தியானம் செய்வது போன்ற செயல்கள் தன்னை மேன்மைப்படுத்த என்று அவர் ஏற்கனவே சொல்லியுள்ளாரே.
(2006 தேர்தலின் போது ராமதாஸ் குறித்து பேசும் போது ”நான் துறவி கிடையாது;ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டும் அளவுக்கு இன்னமும் பக்குவப்படவில்லை//
அதையும் சரியா செய்யலயா? உண்மையில் பாவம் ரஜினி சார்...

தமிழ் ஓவியா said...

உங்கலைப் போன்றவர்கள் இன்னும் கொஞ்சம் கடுமையாக உழைத்தால் தமிழன் விழித்துக் கொள்வான். அப்புறம் அனாமதேயங்கள் வாலாட்டம் அடங்கிவிடும். உங்களின் பங்களிப்புக்கு மிக்க நன்றி.

Anonymous said...

பாவம் ரஜினி அவரை விட்டுவிடுங்கள், முதலில் அவர் பேட்டி தந்த வீடியோவைப் பாருங்கள் அப்புறம் அவரைப் பற்றி குறைசொல்லுங்கள்.உண்மையிலேயே அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றுதான் என் மனதிற்குப் படுகிறது
பார்க்க.....உலகெல்லாம் தெரிந்த இட்லிவடை பதிவை!

ராஜ நடராஜன் said...

// நன்றி! உங்களுக்காக இதை மட்டும் விட்டுடுடலாம். மீண்டும் வராம பாத்துகோங்க ஒகேவா?//

இதெல்லாம் காய்ச்சல்,தலைவலி மாதிரி அப்பப்ப வர்றதுதான்,போறதுதான்.கண்டுக்காதீங்கப்பு.இப்பத்துப் பிரச்சினைகளையெல்லாம் ரோபோ காலத்துப் பேட்டியில வந்து எப்படி கலக்குறாருன்னு பொறுத்திருந்து பாருங்க:)

கிஷோர் said...

தேவையில்லாமல் நேரத்தை வீணடித்துவிட்டீர்கள். இதற்கு போய் இவ்வளவு யோசித்து... உங்களை எல்லாம் நெனச்சா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு :-)

ஆ.ஞானசேகரன் said...

// தமிழ் ஓவியா said...
உங்கலைப் போன்றவர்கள் இன்னும் கொஞ்சம் கடுமையாக உழைத்தால் தமிழன் விழித்துக் கொள்வான். அப்புறம் அனாமதேயங்கள் வாலாட்டம் அடங்கிவிடும். உங்களின் பங்களிப்புக்கு மிக்க நன்றி.//
நன்றி,.. முடிந்தவரை முயற்சிக்கிறேன்,.

ஆ.ஞானசேகரன் said...

//கிஷோர் said...
தேவையில்லாமல் நேரத்தை வீணடித்துவிட்டீர்கள். இதற்கு போய் இவ்வளவு யோசித்து... உங்களை எல்லாம் நெனச்சா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு :-)//
ரஜினியை பற்றி யோசிக்கவில்லை கிஷொர் விசிலடிச்சான் குஞ்சுகளை பற்றிய சிந்தனைதான்... ரொம்ப நன்றி பா!!!!

Anonymous said...

இந்த கேள்விகள் எல்லார் மனதிலும் எழ வேண்டும் என்பதே என் ஆவல்

VIKNESHWARAN ADAKKALAM said...

:)

கிஷோர் said...

ம்ம்ம் நமக்கு புரிஞ்சது 4 பேருக்கு புரிஞ்சா சரி.
4 பேருக்கு நல்லது நடக்கணும்னா எதுவும் தப்பில்ல‌ :)

ஆ.ஞானசேகரன் said...

//தமிழ்சினிமா said...
இந்த கேள்விகள் எல்லார் மனதிலும் எழ வேண்டும் என்பதே என் ஆவல்//
நீங்கள் சொல்வதும் சரிதான்,..

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஞானசேகரன்,

என்ன நம்மவர்கள் கொஞ்ச நாள் இதைப் பற்றி கதைப்பார்கள், பின்னர் விஜயகாந்துக்கோ, சரத்துக்கோ அல்லது டாக்டர் விஜயுக்கோ கொடிபிடிக்கக் கிளம்பிவிடுவார்கள்.

இப்படியான பதிவுகள் தமிழர் மனங்களில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தினால் நல்லதே.

மதுவதனன் மௌ.

Anonymous said...

திராவிட பறையர் சங்கம் கொடுத்த "சப்ப ஸ்டார் " பட்டம் ரஜினிக்கு பொருத்தமானதே!

Anonymous said...

நல்லா கேட்டீங்க அனாலும் சில ரசிகர்கள் திருந்தவே இல்லை

Anonymous said...

நல்லா கேட்டீங்க அனாலும் சில ரசிகர்கள் திருந்தவே இல்லை

hai iam prabu,singapore mail priyamudan_prabu@yahoo.com.sg
http://priyamudan-prabu.blogspot.com

CorTexT (Old) said...

Good said. When are we going to understand the difference an entertainer and a leader? :-)

மருதநாயகம் said...

இப்படி எல்லாம் லாஜிக்கா கேள்விகேட்டா பதில் வந்தா மாதிரி தான்

சரண் said...

ஞானசேகரன்.. ரஜினி ரசிகர்களுக்கும் இந்தக் கேள்விகள் தோன்றும்.. ஆனால் அவரது அடுத்த படம் வரும்போது இதேல்லாம் மறந்து விடுவார்கள்...

ஆட்காட்டி said...

ஏண்டா புழப்பத்தவங்களா ஏண்டா அவனவனுக்கு அடிச்சுக்கிறியள்.
பேசாம ரெண்டாவது மகளுக்கு ரூட் போடுங்கடா