_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, August 8, 2008

நல்ல முதலீட்டை வீனடிக்காதீர்!.....

நல்ல முதலீட்டை வீனடிக்காதீர்!.....
அனைவரும் இவரை பிள்ளைக்குட்டிகாரன் என்று அழைப்பார்கள். அப்படி அழைப்பதும் பொருத்தமாகதான் இருக்கும். இவர் வீட்டுப்பக்கம் சென்றால் நஞ்சானும் குன்சானுமாக பிள்ளைகள் அப்படி இப்படி விளையாடிக்கொண்டு இருப்பார்கள்... உண்மைதான் இவருக்கு பத்து பிள்ளைகள் ஒன்பது ஆண் பிள்ளை மற்றும் ஒரு பெண் பிள்ளை. நல்ல வசதியான குடும்பம் என்று சொல்ல முடியாது, விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.. பலசமயங்களில் சாப்பாட்டுக்கே கடினமான நிலையும் வருவதுமுண்டு. எப்படியோ எல்லா பிள்ளைகலும் வளர்ந்துவிட்டது. ( மரம் வைத்தவன் தண்ணிர் ஊற்றி விட்டான் -பி.கு அவன் கஷ்டம் அவனுக்குதான் தெரியும்)
பெரிய பையன் முதலில் ஒரு தொழிச்சலைக்கு கூலி வேலைக்கு சென்றான். குடும்பதில் ஒரளவிற்க்கு கஷ்டங்களை சமாளிக்கப்பட்டது, பிறகு அவனது திறமையால் தனியாக வேலை எடுத்து செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டான். தன் தம்பிகளையும் அங்கு வேலைக்கு அமர்த்தினான். பணம் குடும்பத்திற்கு வந்தவண்ணம் இருந்தது, மிக செழிப்பாக வாழ்ந்தனர். திருவிழா பண்டிகை சமயங்களில் அந்தக்குடுப்பத்தில் குதுகலம் மற்றவர் கண்படும்..

பெரியவன் திருமணத்திற்கு பிறகு, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக எல்லொரும் தனித்தனியாக பிரிந்தனர். அத்தோடு குடும்ப செல்வாக்கும் செழிப்பும் அழிந்தது, அல்லது அழிக்கப்பட்டது... இப்படியாக குடும்ப ஒற்றுமையின்மையின் விளைவையும் காணமுடிந்தது.

ஒரு நாட்டின் முக்கிய சொத்து அந்நாட்டின் பிள்ளைகள். இப்பிள்ளைகள் முறைப்படுத்தாமல் முதலீடு செய்யப்படுமானால் அப்படிப்பட்ட முதலீடு வறுமைதான் கொடுக்கும். ஒரு நாட்டின் வறுமை அந்நாட்டின் மக்கள் தொகை ஒரு காரணாமே இல்லை என்பது என் எண்ணம். ஒரு பிள்ளை வளர்ந்து தன் கைக் கால்களை இந்நாட்டை வாழப்படுத்த பயன் படுத்தப்படுகின்றது. இந்நாட்டை பாதுக்காக்க எல்லையில் துப்பாக்கியேந்துகின்றது.. இப்படிப்பட்ட வளம் இப்பிள்ளைகலால் கொடுக்க முடியும். இந்தியா வளமிக்க இளஞர்கள் வாழும் நாடு, இந்நாட்டின் வளம் இவர்கள் கையில்தான்யுள்ளது.. மக்கள் தொகை ஒருநாட்டின் சிறந்த முதலீடுதான். மக்கள்தொகையின் பாதிப்பை சமநிலைப்படுத்த மக்கள் நெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமேயோழிய மக்கள் தொகையை காரணம் சொல்ல முடியாது.

கிராமங்கள் அதிகமாகயுள்ள இந்தியாவில் கிராமங்களிலிருந்து பிழைப்புக்காக நகரங்கள் நோக்கி மக்கள் சென்றவண்ணம் இருப்பது, சமமான இந்திய வளர்ச்சியை பாதிக்கும் என்பது உண்மையே!. கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத நிலை அரசுதான் பொருப்பாக வேண்டும்.

தமிழ்நாட்டில் நகரங்களின் மக்கள் நெருக்கம் அதிகமாகயுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரம் "சென்னை" மாநிலத்தின் வடதுருவத்தில்யுள்ளது.

முக்கிய அலுவலகம் இந்நகரத்தை சார்ந்தேயுள்ளது. எந்த ஒரு வளர்ச்சியும் தென்மாவட்டகளடைய காலதாமதமாகின்றது. மாநிலத்தின் மையப்பகுதியில் முக்கிய அலுவாலகங்கள் மாற்றப்பட்டால், மக்கள் நெருக்கத்தை குறைக்கமுடியும் அதே வேலையில் எல்லாமக்களுக்கும் வளர்ச்சிப் பணிகள் சென்றடைய வசதியும் கிடைக்கப்படும்........ மறைந்த முதல்வர் டாக்டர் எம். ஜீ.ராமச்சந்திரன் கனவுகளின் ஒன்று திருச்சிராப்பள்ளிக்கு தலைநகரத்தை மாற்றுதல்,... மருத்துவ கல்லூரி, தொழிநுட்பக் கல்லூரி, விவசாய கல்லூரி மூன்றும் ஒரேயிடத்தில் திருச்சிராப்பள்ளியில் அமைப்பது... அரசியல் காரணமாக செயல்படுத்த முடியாமலே பொனதும் வருந்தக்கூடியது.
நாட்டின் செல்வத்தை சரியான முறையில் பயன்படுத்தாமல் பொகுமேயானால், மெல்ல மெல்ல வறுமையை வாங்கவேண்டி வரும் என்பதும் உண்மை..........
பின்குறிப்பு: எத்தனை சட்டங்கள் இருந்தும் குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு மற்றும் சீர்திருத்தமும் நடைமுறைச் செயல்பாடுகள் குறைகளாகவே இருக்கின்றது........

2 comments:

செங்கதிர் said...

// இந்தியா வளமிக்க இளஞர்கள் வாழும் நாடு, இந்நாட்டின் வளம் இவர்கள் கையில்தான்யுள்ளது. நாட்டின் செல்வத்தை சரியான முறையில் பயன்படுத்தாமல் போகுமேயானால், மெல்ல மெல்ல வறுமையை வாங்கவேண்டி வரும் என்பதும் உண்மை.
பின்குறிப்பு: எத்தனை சட்டங்கள் இருந்தும் குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு மற்றும் சீர்திருத்தமும் நடைமுறைச் செயல்பாடுகள் குறைகளாகவே இருக்கின்றது.//

ந‌ண்ப‌ரே, த‌ங்க‌ளின் ப‌திவைப்ப‌டித்தேன். நோக்க‌மெல்லாம் ச‌ரிதான். ந‌ட‌ப்பும் செய‌ல்பாடும் மிக‌ முக்கிய‌ம‌ல்ல‌வா? இந்தியா வளமிக்க இளைஞர்களை கொண்டிருக்க‌வில்லை, எண்ணிக்கையில் தான் வ‌ள‌ம், 23கோடி இளைஞ‌ருக்கு சுத்தமாக வேலையில்லை, 15கோடி இளைஞ‌ர்க‌ள் த‌ற்காலிக‌ வேலையில், பெரும்பாலானோர் அற்பசுயநலத்துக்காக‌ சுய‌சிந்த‌னையின்றி யார் யார் பின்னோ சென்றுகொண்டிருக்கிறான். 80கோடி ம‌க்க‌ளின் தின‌ச‌ரி வ‌ருமான‌ம் வெறும் 30 ரூபாய்க்கும் குறைவு, உழைக்கிற‌ ம‌க்க‌ளுக்கு அடிப்ப‌டை நியாய‌ம் கூட‌ ம‌றுக்க‌ப்ப‌ட்டு ஒடுக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இத‌ற்கெல்லாம் யார் கார‌ண‌ம், எப்ப‌டி இவைக‌ளை க‌ண்டறிந்து தீர்ப்ப‌து என்று ஆறாய‌வேண்டும். அப்போது தான் எல்லோருக்குமான‌ விடிய‌ல்.

ஆ.ஞானசேகரன் said...

// redflame said...நண்ப‌ரே, த‌ங்க‌ளின் ப‌திவைப்ப‌டித்தேன். நோக்க‌மெல்லாம் ச‌ரிதான். ந‌ட‌ப்பும் செய‌ல்பாடும் மிக‌ முக்கிய‌ம‌ல்ல‌வா? இந்தியா வளமிக்க இளைஞர்களை கொண்டிருக்க‌வில்லை, எண்ணிக்கையில் தான் வ‌ள‌ம், 23கோடி இளைஞ‌ருக்கு சுத்தமாக வேலையில்லை, 15கோடி இளைஞ‌ர்க‌ள் த‌ற்காலிக‌ வேலையில், பெரும்பாலானோர் அற்பசுயநலத்துக்காக‌ சுய‌சிந்த‌னையின்றி யார் யார் பின்னோ சென்றுகொண்டிருக்கிறான். 80கோடி ம‌க்க‌ளின் தின‌ச‌ரி வ‌ருமான‌ம் வெறும் 30 ரூபாய்க்கும் குறைவு, உழைக்கிற‌ ம‌க்க‌ளுக்கு அடிப்ப‌டை நியாய‌ம் கூட‌ ம‌றுக்க‌ப்ப‌ட்டு ஒடுக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இத‌ற்கெல்லாம் யார் கார‌ண‌ம், எப்ப‌டி இவைக‌ளை க‌ண்டறிந்து தீர்ப்ப‌து என்று ஆறாய‌வேண்டும். அப்போது தான் எல்லோருக்குமான‌ விடிய‌ல்.///

நீங்கள் சொல்வதும் ஞாயமானதுதான் எல்லாவற்றிக்கும் அரசாங்கத்தை எதிர்ப்பார்பதும் சரியான நிலையில்லை முறையான முயற்ச்சி இளஞர்களுக்கும் வேண்டும் என்பதும் என் ஆசைகள்