_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, August 25, 2008

சீனர்களின் நம்பிகையில்-என்பார்வை!

சீனர்களின் நம்பிகையில்-என்பார்வை!


மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்படும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. மக்கள் வளத்தை மட்டுமே நம்பி வளர்ந்து வரும் நாடு. இங்கு என்னுடன் இந்தியர், சீனர் மற்றும் மலாய் நண்பர்கள் வேலைசெய்து வருகின்றனர். சீனர்களிடம் கடவுள் நம்பிக்கையும் பிறவிப்பற்றிய பயமும் அதிகமாக இருக்கும்.



சந்தர்ப்பசூல்நிலையில் சீனர்கள் யாரிடமும் சில்லாரை நாணயம் வாங்க நேர்ந்தால், அவற்றை மறுநாளே வாங்கியவரிகளிடம் கொடுத்து விடுவார்கள். 10 சென் நாணயமாக இருந்தாலும் சரி தாவறாமலும் மறவாமலும் கொடுப்பதை நான் பலமுறை பார்த்துள்ளேன். (இந்தியர்களிடம் இந்த போக்கு பொதுவாக இல்லை என்பது என் எண்ணம்) இந்த பழக்கம் மலாய் நண்பர்களிடம் இருப்பதையும் பார்த்துள்ளேன். அதுபோல் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நாம் உதவி செய்ய நேர்ந்தால்( உ-ம் காணாமல் போன பொருளை கண்டுபிடித்து கொடுத்தால்) அதற்காக குறைந்த பச்சம் தேனீர் வாங்கி கொடுப்பார்கள்.



சீனர்கள் மறுப்பிறப்பில் நம்மிக்கையுள்ளவர்கள். ஆவி அதற்காக பூஜைகள் செய்யும் பழக்கமும் உண்டு. இந்தப் பிறவியில் நாம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் விட்டுவிட்டால், மறுபிறவில் அதன் வட்டியுடன் கொடுக்க வேண்டியதாக இருக்கும் என்ற நம்மிக்கையின் அடிப்படையில்தான் இப்பிறவில் உள்ள கடனை உடன் தீர்வு கொடுக்கின்றனர். மறுபிறவி என்பது இனிமையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. இந்த பிறவில் நாம் கொடுக்கவேண்டிய நிலையில் இருந்தால் அதற்கு காரணம் சென்றப்பிறவியின் கடனே என்பது அவர்களின் நம்பிக்கை.



சூது என்பது சீனர்களின் பிறப்பில் தோன்றியது.. "சூதுயில்லா சீனன் இறப்புக்கு சமமானவன் என்பது பொருள்" என்ற எண்ணம் உள்ளது. தாய் மகன், தந்தை மகள், கணவன் மனைவி என்ற பாகுபாடுயின்றிதான் சூதாடுவார்கள்.. அதேபொல் தோற்றவர் முறைப்படி கொடுக்கவேண்டியதை கொடித்துவிடுவதும் சீனர்களின் பழக்கம்.... இதற்கும் மேற்சொன்ன காரணதான் இப்பழக்கத்தின் நம்பிக்ககை....

இவர்களின் நம்பிக்கை எதுவானாலும், வாங்கியதை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

ரஜினியின் "ப்ரியா" படத்தின் என்னுயிர் நீதானே என்ற பாடல்..
அக்கரைச் சீமை அழகினிலே என்றப் பாடல் கிடைக்கவில்லை

4 comments:

கோவி.கண்ணன் said...

தகவல் தொகுப்பு மிக நன்று !

ஆ.ஞானசேகரன் said...

சரிங்க கண்ணன்,... மிக்க நன்றி

Test said...
This comment has been removed by the author.
ஆ.ஞானசேகரன் said...

//Logan said...
இதனோடு ஈமசடங்கு செய்வதிலும் உண்டு, இறந்தவரின் உடலை எத்தனை நாட்களுக்கு வீட்டில்/ப்ளொக்கில் வைத்து கொள்வார்களோ அவ்வளவு அன்பு வைத்து உள்ளார்கள் என்று ஒரு கணக்கு உண்டு, அதற்கு மொய் வரவு வேறு தனியாக உண்டு///

மேலும் தகவலுக்கு நன்றி logan...