_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, August 16, 2008

இந்நிலை எப்பொழுதும் மாறும்!

இந்நிலை எப்பொழுதும் மாறும்!


தன்நாடு, அந்நாட்டு மக்கள், மனைவி பிள்ளைகள், செல்வங்கள் அனைத்தும் அன்னியரின் படையெடுப்பால் இழந்த மாபெரும் சக்கரவத்தி மனம்நொந்து காட்டில் சென்றுகொண்டிருந்தார். எதிரே வந்த முனிவர் ஒருவர் சக்கரவர்த்தியின் சோகநிலையறிந்து என்னவென்று விசாரித்தார். தான் அன்னியரின் படையெடுப்பால் தன் நாடு நாகரமனைத்தும் இழந்தேன், தற்பொது எனக்கென்றும் ஒன்றுமில்லை அனாதயாக இந்தக் காட்டில் சென்றுக்கொண்டுள்ளேன் என்று முனிவரிடம் சொன்னார். அதற்கு அந்த முனிவர் கவலைப் படாதே! நான் உனக்கு ஒரு மந்திரம் சொல்லித்தருகின்றேன், அதை நீ சொன்னால் இழந்த செல்வங்கள் அனைத்தையும் நீ அடைவாய் என்று, ஒரு ஓலையில் அந்த மந்திர சொல்லை தந்தார். இதை தனியாக நீ படித்து பார் என்று சொல்லிவிட்டு அந்த முனிவர் சென்றுவிட்டார்.

அதன்படி சக்கரவத்தி அந்த ஓலையை படித்தார் " இந்நிலை எப்பொழுதும் மாறும் " என்றார்.... அதேபொல் முனிவர் சொன்னதுபொல இழந்த அனைத்து செல்வங்கள், நாடும் கிடைத்தது.... மிகவும் முனிவருக்கு நன்றியை சொல்லி நல்லாட்சி செய்துக்கொண்டு வந்தான்.... ஒருநாள் அந்த ஓலை அவன் கண்ணில் பட்டது, உடன் எடுத்து மகிழ்வுடன் படித்தான் " இந்நிலை எப்பொழுதும் மாறும்" என்றான்..... மீண்டு எல்லாச் செல்வங்களையும் இழந்து காடுச்சென்றான்.....

வாழ்வியலில் இன்பம் துன்பம், மகிழ்ச்சி சோகம், ஏற்றம் இறக்கம் அனைத்தும் இவ்வுலகில் நிரந்தரமில்லை. இந்த நிலை எப்பொழுதும் மாறும் அல்லது மாற்றப்படலாம் ......

2 comments:

Karthik J said...

இந்நிலை எப்போதும் மாறும்.. என்பதில் மாற்றம் இல்லை ஆனால் எந்த விதமான மாற்றம் இருக்க வேண்டும் என்பதில்தான் மாற்றம் இருக்க கூடாது

-ஜே கே

ஆ.ஞானசேகரன் said...

// Karthik J said...
இந்நிலை எப்போதும் மாறும்.. என்பதில் மாற்றம் இல்லை ஆனால் எந்த விதமான மாற்றம் இருக்க வேண்டும் என்பதில்தான் மாற்றம் இருக்க கூடாது

-ஜே கே//
வணக்கம் நண்பரே! எந்த ஒரு துன்பங்களும் நம்மை விட்டு ஒருநாள் கடந்து போகும் என்ற நம்பிக்கையுட்டுவதற்காகவும், மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டு முயற்சியை மறக்கவேண்டாம் என்பதற்காகவும் கூறப்பட்டதாகும்.... உங்களின் நல்ல எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள்..