மனிதனும்! குரங்கும்!....
சார்லஸ் ராபர்ட் டார்வின் இயற்கையியல் அறிஞர் கூற்றின்படி மனிதனின் இனம் குரங்கு இனத்திற்க்கு தொடர்புடையது.
உலகத்தில் உள்ள ஆறு அறிவு உடைய மனிதன் உயர்ந்த உயிரினம் என்றும், இந்த உயிரினத்தின் மூதாதையர் குரங்கு என்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை டார்வின் உலகத்தை கப்பலில் சுற்றித் தெரிந்துகொண்டார்.
மனிதன் குரங்கிலிருந்து பார்வையில் குறைந்த வித்தியாசம் குரங்கின் வால்தான். மனிதக்குரங்கு போல உள்ள குரங்கினத்திற்கு வாலும் இல்லை. குரங்குகள் சேட்டை எல்லா வயதினர்க்கும் பார்க்க ஆர்வமாக இருக்கும். பாபநாசத்தில் உள்ள குரங்குகள் புத்திசாலிகள் என்றும் கூறுவார்கள். ஒருமுறை தன் காலில் பட்ட புண்னுக்கு வைத்தியம் பார்க்க டாக்டரிடம் வந்தாகவும், அதை பார்த்த டாக்டர் மருந்திட்டார். அதன் பிறகு அந்த குரங்கு தன் வாயில் அடக்கி வைத்திருந்த நாணயத்தை கொடுத்ததாகவும் செய்திதாளில் படித்துள்ளேன்.
மனிதன் இடதுப்பக்க இடுப்புப் பகுதில் அரிப்பு வந்தால் வலது கையை எடுத்து சென்று சொரியுவான். அதேபோல் வலதுப்பக்க இடுப்புப் பகுதியில் அரிப்பு வந்தால் இடதுக் கையை எடுத்து சென்று சொரியுவான்......ஆனால் குரங்கு வலதுப்பக்க இடுப்பை சொரிய வலதுகையையும், இடதுப்பக்க இடுப்பை சொரிய இடதுக்கையையும் பயன் படுத்தும். மனிதன் வலது இடதுமாற்றி சொரிவதன் விளக்கம் என்ன?
குரங்குகள் காடுகளில் கிடைக்கும் உணவுப் பண்டங்களையும், நாம் கொடுக்கும் பண்டங்களையும் வேகமாக வாயில் போட்டுக்கொள்ளும். வாயில் போட்ட உணவை கீழ்தாடைப்பகுதியில் சேர்த்து வைத்துக்கொண்டு பின் ஓரிடத்தில் உற்க்காந்து மெதுவாக அரைத்து உண்ணும். ஆனால் மனிதன் லபக்கு டபக்குன்னு வாயில் போட்டு முழுங்கி முழுங்கி முடித்து விட்டு செறிமானத்திற்காக டாக்டரை அனுகுவான்..( இந்த அவசர காலத்தில் சொல்லவேண்டியதேயில்லை)
பரங்கிபழம் பொன்று பொருளை தூக்க வேண்டி குரங்கு முதலில் அதை சுற்றி சுற்றி வரும் பின் யோசிக்கும், அதன் பிறகு அதன் அருகில் உற்க்காந்து இரு கைகளால் தூக்கி மெதுவாக எழுந்து வயிற்றுப்பகுதில் அனைத்து தூக்கி செல்லும் ( இதுதான் நமக்கு எடுத்து சொல்லும் பாதுக்காப்பான முறை) ஆனால் மனிதன் டமால்னு குனிந்து டபக்குனு தூக்கி பலத்தை காட்டி பிறகென்ன இடுப்புவலியால் அவதிபடுவான்....
நவீனயுகத்தில் கனனி மற்றும் அலுவலக வேலையில் தன்னை மறந்து தன்னுடைய முதுகுதண்டைப் பாதுகாக்க மறந்த நிலைதான் மேலேயுள்ள படம் காட்டுகிறது.
பின்குறிப்பு: கனனியில் வேலை செய்யும் நண்பர்கள் அரை மணிக்கொருமுறை நடந்து வருவது நல்லது. உற்காரும் பொது பாதங்களை அசைத்த வண்ணம் இருப்பதும் நல்லது. நிமிர்ந்து உற்காருதல் மானிடரை கொஞ்சம் தொலைவில் பயன்படுத்துதல் நலனை கொடுக்கும்.... தலைவலியும் வயிற்றுவலியும் வந்தபிறகுதான்............?
0 comments:
Post a Comment