_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, September 24, 2008

சாகும் உரிமை, அனுமதி யாரை கேட்கவேண்டும்? ...

சாகும் உரிமை, அனுமதி யாரை கேட்கவேண்டும்? ...
சாவு என்பது எதை குறிக்கும்? உயிர் என்பது எதை கண்டு உணரமுடியும்? உயிர் சென்றுவிட்டது என்பது எப்படி உணரமுடியும்? உயிர் உள்ள பொருளுக்கும் உயிரற்ற பொருளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இவன் (அல்லது இவள்) இறந்துவிட்டான் என்பதை சட்டம் எப்படி பார்க்கின்றது?

மனிதனுக்கு முக்கிய மூலம் மூளை, மூளைதான் உடலுக்கு எசமான். மூளை செயலிலந்தால் அந்த உடல் இறந்ததாகவும் சொல்லலாம். மூளைக்கு சக்தியை இரத்த அனுக்கள் மூலம் கொண்டுச்செல்வது இதயம், இதயம் செயலிலந்தால் அதனுடன் மூளையும் செயலிலக்கும் அந்த உடல் இறந்ததாக சொல்லலாம். இப்பதான் ஒரு சிக்கல் உள்ளது, 1. மூளை செயலிலந்த நிலையில் உள்ள ஒருவரின் இதயம் நல்ல நிலையில் வேலைச் செய்துக் கொண்டுயிருக்கும் இவரை சட்ட முறையிலும், மருத்துவமுறையிலும் இறந்தவராக சொல்ல முடியவில்லை. 2.மூளை வேலைச் செய்யும் நிலையில் இருக்கும் ஒருவரின் இதயம் செயலிலக்க நேரிட்டால் இவரையும் சட்ட முறையிலும் மாருத்துவ முறையிலும் இறந்தவராக சொல்ல முடியவில்லை.

திடீர் விபத்து காரணமாக (உதாரணம் மின்சாரம் தாக்குதல்) இதயம் நின்றுவிடும். இப்படிப்பட்ட சமயத்தில் வாயில் காற்றை ஊதி இதயத்தை அமுக்கி செயல்படுத்தலாம்(சிவாஜி படத்தில் காட்டியது பொல) . இன்னும் சிக்கலான முறையில் அருவை சிகிச்சை செய்து இதயத்தை இயங்க வைக்கப்படுகின்றது. மேலும் கருவிகள் பொருத்தி செயல்ப்படுத்த முடியும்.
மாற்று இதயம்கூட பொருத்தி இயக்கமுடியும். இப்படி இதயம் செயலிலந்த நிலையில் உள்ளவரை இறந்தவராக கூறமுடியவில்லை. சட்டமும் இதேதான் சொல்லும்.

ஒருவர் மாரடைப்பால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதும், அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்படுகின்றது. இப்பொழுது இவர் செயற்கையாக சுவாசிக்கின்றார், இதயம் செயற்கையாக வெலைச்செய்கின்றது. இப்பொழுது இவர் உயிருடன் இருக்கின்றார். இவருக்கு பொருத்தப்பட்ட கருவிகள் இல்லை என்றால் இந்த உடல் செயல்ப்படாது என்பதும் உண்மை. இந்த கருவிகளை எடுத்துவிட்டால் இவரை கொலைச் செய்தாக அர்த்தம் சட்டமும் இதைதான் சொல்கின்றது. மாரடைப்பால் தற்காலிகமாக செயலிலந்த இதயத்தை இயக்கவைக்கும் முயற்சிதான் இந்த கருவிகள். இதில் பலருக்கு வாய்ப்பும் குறைவுதான் இரண்டு மூன்று நாட்களில் சகசநிலை எட்டாத பச்சத்தில் வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம். இப்பொழுது இந்த உயிர்க்காக்கும் கருவியை எடுப்பதா? வேண்டாமா? எடுத்தால் உயிர் நின்றுவிடும், கருவிகளை வைத்துக்கொண்டு வாழவும் முடியாது. செலவோ மிக மிக அதிகம், சாமானியனுக்கு பொருந்தாது. இந்த நிலையில் உறவினர்களின் ஒப்பம் பேரிலே கருவிகளை எடுத்துவிடுவார்கள். இதுவும் ஒரு கொலைதான் என்றாலும் கருணைக்கொலையாக எடுத்துக்கொல்லப்படுகின்றது..

இன்று (24-09-2008) தினமலரில் வந்த செய்தியை இங்கே கொடுத்துள்ளேன் அமுக்கி பார்க்கலாம் மேலும் கீழே கொடுத்துள்ளேன்

சாகும் உரிமைக்கு சட்ட அனுமதி : கேரள கமிஷன் சிபாரிசு
செப்டம்பர் 24,2008,00:00 IST
திருவனந்தபுரம் : "கருணை கொலைக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்க வேண்டும்; எந்த வித கட்டுப்பாடும் இதில் விதிக்கக்கூடாது!' பல முறை இந்த விஷயம், தேசிய அளவில் ஆலோசிக்கப்பட்டு அரசிடம், சிபாரிசு செய்யப்பட்டும் நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில், கேரளாவில், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி கிருஷ்ண அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட சட்ட சீர்திருத்த கமிஷன் இப்படி சிபாரிசு செய்துள்ளது. சாகப்போகும் நோயாளிக்கு உயிர் காக்க பொருத்தப்பட்டுள்ள கருவிகளை, நோயாளியின் அனுமதியுடன் அகற்றுவது தான் கருணைக்கொலை. அதுபோல, மருந்துகள் தந்து தற்கொலை செய்ய உதவுவதும் இந்த வகையில் அடங்கும். கருணைக்கொலை, தற்கொலைக்கு உதவுவது ஆகிய இரு விஷயங்கள் பற்றி தேசிய சட்ட கமிஷன் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது. கேரள கமிஷன் ஒரு படி மேலபோய் பரிந்துரை செய்துள்ளது. சாகக்கிடக்கும் ஒரு நோயாளி இனி பிழைக்க மாட்டார் என்று உறுதியாக தெரிந்தால், அங்கீகரிக்கப்பட்ட மூன்று டாக்டர்களின் ஒப்புதல் கடிதத்தை பெற்று, அந்த நோயாளியை கருணைக் கொலை செய்யலாம் என்பது தான் கமிஷன் பரிந்துரை. கேரள சட்டசபையில் இதை மசோதாவாக தாக்கல் செய்ய சிபாரிசும் செய்துள்ளது கமிஷன். இதன்படி, தாக்கல் செய்யப்படலாம்; தாக்கல் செய்ய அனுமதியும் மறுக்க வாய்ப்புண்டு. "கருணைக்கொலைக்கு தயாராகும் நோயாளியின் நெருங்கிய உறவினர்கள் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். டாக்டர்களுக்கு அவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் நோயாளியின் நிலையை கருத்தில் கொண்டு டாக்டர்கள் முடிவெடுக்க முடியும்' என்றும் கிருஷ்ணய்யர் கமிஷன் கூறியுள்ளது. தற்கொலை முயற்சியை குற்றம் என்று சொல்லும், இந்திய குற்றச்சட்டம் 309 ம் பிரிவை நீக்க வேண்டும் என்றும் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.


இப்படி சாகும் நிலையில் இருக்கும் நோயாளியை, மரணக் கொடுமையிலிருந்து விடுவிக்க கருணை கொலைச் செய்யலாமா? இதை சட்டத்தில் வழிகொடுப்பதும் சரிதானா? சிங்கபூர் போன்ற நாடுகளில் இதை ஏற்றுக்கொண்டுவிட்டனர். இந்தியாவில் இது சாத்தியமா? நமது கலாச்சர பாசம் எந்த அளவிற்கு நம்மிடையே சரிப்படுத்த முடியும்... என்பது சிந்திக்க வேண்டியுள்ளது.......... ( பி.கு: இதிலும் அரசியல் தலையிடாமல் இருந்தால் நல்லது)

0 comments: