இன்னும் ஓர் மானுடம் வென்றது!........
ஒரிசாவில் இனக்கலவரம், பெங்களூரில் ஆலயங்களில் கல்லெரிதல், சென்னையில் இரண்டு வயது சிறுவனை கடத்தி கொலை, அகாங்கே வெடிகுண்டு சம்பவம், இனம் மதம் சாதிப்பெயரால்..மனிதன் நடத்திவரும் மிருக செயல்களுக்கு மத்தியில்,.... மானுடம் வென்று வருகின்றது. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் இருப்பதனால்தான். உலகம் கடவுளின் பெயர் சொல்லிக்கொண்டுள்ளது. கடவுள் இருகின்றாரோ இல்லையோ நல்லவர்களை உலகம் கைகுப்பி வரவேற்கின்றது......
மறைந்த நல்ல உயிர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!.........
கார்ட்டூனிஸ்ட் மதன் தம்பி மரணம்-உறுப்புகள் தானம் நன்றி தட்ஸ் தமிழ்
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 26, 2008
சென்னை: பிரபல கார்ட்டூன் கலைஞர், திரை விமர்சகர் மதனின் தம்பி முரளி மரணமடைந்தார். அவரது இதயம், ஈரல் மற்றும் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன். இவர் 2 சகோதரர்கள் மற்றும் 4 சகோதரிகளுடன் ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். மதனின் 2வது தம்பி முரளி (50). தனியார் டிவி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றினார். இவரது மனைவி மீனா (42). மகன் அர்ஜூன் (16).
கடந்த 21ம் தேதி வீட்டில் இருந்தபோது முரளி மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்த கசிவு ஏற்பட்டு மூளை செயலிழந்துவிட்டதாக கூறி அவரது மரணத்தை உறுதிபடுத்தினர்.
இதையடுத்து முரளியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்யதனர். டாக்டர் செரியன் மருத்துவமனையில் இதய நோயால் சிகிச்சை பெற்று வரும் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு முரளியின் இதயத்தை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு பேருக்கு சிறுநீரகம் தேவைப்பட்டது.
குஜராத்தில் ஈரல் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவருக்காக அவசரமாக ஈரல் தேவைபட்டது தெரிய வந்தது. ஈரலை பொறுத்த வரை 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். இதையடுத்து குஜராத் டாக்டர்களுடன் சென்னை செரியன் மருத்துவமனை டாக்டர்கள் பேசி முடிவு செய்தனர்.
விமானத்தில் சென்ற ஈரல்:விமான நிலையத்துக்கு செல்ல 30 நிமிடங்களும், அங்கு சோதனைகளுக்கு 30 நிமிடமும் ஆகும் என்பதால் விமான நிலைய அதிகாரிகளுடன் டாக்டர்கள் பேசினர். விமான நிலைய அதிகாரிகள் உதவி செய்வதாக கூறியதை அடுத்து நேற்று காலை 5 மணிக்கு முரளியின் ஈரல், இதயம், சிறுநீரகம் அகற்றப்பட்டு ஐஸ்பெட்டிகளில் தனித்தனியாக வைக்கப்பட்டன.
சென்னையில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான இதயம் மற்றும் சிறுநீரகத்தை டாக்டர்கள் குழுவினர் எடுத்துக் கொண்டு விரைந்தனர். ஈரலை எடுத்துக் கொண்டு டாக்டர்கள் குழுவினர் குஜராத் விரைந்தனர்.
செரியன் மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தவருக்கு 30 நிமிடத்தில் இதயம் பொருத்தப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு சாதனைகள் அதிவேகமாக நடந்தன.
இதையடுத்து முரளியின் உடல் நேற்று காலை 9 மணிக்கு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு பிற்பகல் 2.30 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் டாக்டர் தம்பதிகள் தனது மகன் ஹிதேந்திரன் மூளை செயலிழந்து இறந்ததை அடுத்து பெங்களூர் சிறுமிக்கு தனது மகனின் இதயத்தை இரு தினங்களுக்கு முன் தானம் செய்தனர். இந் நிலையில் முரளியின் உறுப்புகளும் தானம் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மனித நேயம் இன்னும் சிறப்பாகவே உள்ளது என்பதை இந்த இரு சம்பவங்களும் நினைவுபடுத்துகின்றன.
Saturday, September 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment