_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, October 7, 2008

அறிவுரை அவசியமா! மாறுபட்ட சூழல்கள்...

அறிவுரை அவசியமா! மாறுபட்ட சூழல்கள்...

விஞ்ஞானம், நவீனம், அதிநவீனம், தொலைப்தொடர்பு வசதிகளில் தொலைப்பேசி, கையடக்க தொலைப்பேசி, கனனி, இணையம்..... என்று வளர்ந்துக்கொண்டே போகிறகாலம். தனக்காகவும், குடும்பத்திற்காகவும் செலவிட கொஞ்சமும் நேரமும் மனநிலையும் இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கி வருகின்ற காலமிது.

இக்கால இளஞர்களில் பலருக்கு குடும்ப சூழல்களிலிருந்து விலகியிருக்கும் மனோநிலையும் மெத்தன போக்கும் உருவாக்கிக் கொண்டுள்ளது. ஏன் திருமண சடங்கே தேவையா? என்ற போக்கும், ஒரு பெண்ணை துணையாக்கிக் கொண்டு அவளுடன் காலமெல்லாம் இருக்க வேண்டுமா? என்ற கேள்விகளும் இன்றைய இளஞர்களுக்கு வந்துக்கொண்டுள்ளது. இதே போல் இளஞிகளும் திருமணம் என்ற பெயரில் ஒரு ஆணுக்கு நான் அடிமையாக விரும்பவில்லை என்றும் நாங்கள் குழந்தை பெறும் இயந்திரம்மில்லை என்றும். உடலுரவுக்காக திருமணம் செய்யவெண்டிய அவசியமும் தேவையும் இல்லை, தேவைப்படும்போது விருப்பியவர்களுடன் உடல்கொள்ளுதல் தவறொன்றுமில்லை என்று சொல்லும் நிலைக்கு இளஞிகள் வந்துகொண்டுள்ளார்கள்.

இன்னும் சில இடங்களில் பெற்றொர்களின் விருப்பத்தின் பெயரில் திருமணம் செய்துவிடுவதும், பின்னர் தானும் தன் துணையும் நிம்மதியில்லா சூழலுக்கு செல்லும் பலர். இவர்கள் திருமணத்தை தவிற்பவர்களை விட மோசமான மனபோக்குயுள்ளவர்கள்.

இன்னும் சிலர் திருமணத்திற்க்கு பிறகு குழந்தையும் அதன் வளர்ப்பை தவிற்கின்றனர். குழந்தைகள், தங்களின் சுதந்திரத்திற்க்கு தடையாக கருதுகின்றர்.

இப்படியாக குடும்பம், பெற்றோரிடம் அன்புக்கொள்ளுதல், எதாற்த்த வாழ்க்கையை தொலைக்க துடிக்கும் இளஞர் இள்ஞிகளுக்கு கனைக்கள்.....
1. நீங்கள் நம்பும் சுதந்திரமும் மகிழ்ச்சியையும் உங்கள் பெற்றவர்கள் நினைத்திருந்தால் நீங்கள்தான் இந்த மண்ணில் தவழமுடியுமா?
2. உங்களை பெற்றவர்கள் சுமையாக கருதியிருந்தால் நீங்கள் சுவைக்கும் மகிழ்ச்சி எங்கிருந்து வரும்?
3. இன்றய இளஞர்கள் நாளைய முதியோர்கள், நாளைய நிலையை எப்படி கழிப்பீர்கள்?
4. இளஞிகளே! உங்கள் இளமையும் அழகும் உள்ளவரை நீங்கள் நீங்களாக இருப்பீர்கள் இரண்டில் ஒன்று போனால் உங்களின் நிலை?
5. இளஞர்களே! இளமையும் நோயின்மையும் உள்ளவரைதான், உங்களை நீங்கள் உணரமுடியும். ஒன்று போய் ஒன்று வந்தால்! உங்களால் உணரதான் முடியுமா?
6. இதற்க்காக காலமெல்லாம் ஒரு பெண்ணுடனோ! ஆணுடனோ! வாழவேண்டிய அவசியமில்லை என்றால் உங்களால் உங்களுக்குதான் என்ன லாபம்? உலகிற்க்கு விட்டுச் சென்ற சுவடுகள்தான் என்ன?
7. நாம் சாப்பிடும் உணவு ஆற்றலாக எரிக்கப்பட்டும் கழிவாக தள்ளப்படுகின்றது, எனவே சாப்பிடாமல்தான் இருக்க முடியுமா?

உயிர்களின் ஆண், பெண்... அதில் ஆணுக்கு பெண்துணை! பெண்ணுக்கு ஆண் துணை! இருவரின் வாழ்வின் அர்த்தமான சுவடுகள் குழந்தைகள்...... இதுதான் நியதி....

தான் தனக்காகவும் தன் சுதந்திர மகிழ்ச்சிக்காகவும் வாழும் இளஞர் இளஞிகளே!!!.. உங்களை நீங்கள் இழக்கும் நேரத்தில் நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் என்ற கேள்வியை உங்கள் முன்வைக்கின்றேன்........

இப்படி வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பலரின் பதில் எங்களால் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வாழமுடியும் வரை வாழ்வோம்! அதன் பிறகு தானே மரணத்தை நேசிப்போம் என்பதுதான்........

வாழ்கையில் தோல்விகளை சுவைத்த ஒருவரிடம் பேச நேர்ந்தது,. மிகவும் சந்தோஷ சலிப்புடன் அவர் சொன்னார் நான் யாருக்காகவும் வாழவேண்டிய அவசியமில்லை இருக்கும் வரை பணம் சம்பாரிப்பேன். கிடைக்கும் பணத்தில் மகிழ்ச்சியாக செலவு செய்வேன். எதைப்பற்றியும் கவலையில்லை என்றார். எனக்கோ, என்னமோ மனதில் பட்டது! எதை சொல்லுவது எப்படிச் சொல்லுவது ஒரு பொராட்டம். ஆனால் சொல்லியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.

நாம் இந்த வலிமையும் ஆரோக்கியமும் உள்ளவரைதான். இப்படியெல்லாம் பேசமுடியும். இதில் ஒன்று போனால்கூட எதை செய்யமுடியும் எதை இழக்கமுடியும்.... எல்லாமே மனதிற்க் கொள்ளுதல்தான் நம்மை நாம் காப்பாற்றிகொள்ள முடியும். இதில் "தானே உயிர் நேசிப்பு" என்பது கசப்பான நிலை இதற்காக இத்தனை நாற்கள் கடக்கவேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு மனிதனுக்கும் முதுமைத் தொடும்போது இன்னும் வாழவேண்டும் ஆசைவரும். மரணப்படுக்கையில் இருப்பவனுக்கும் நாம் பிழைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கையும் ஆசையும் இருக்குமேயொழிய மரணத்தை நேசிக்க மாட்டான் . இதை என் அறிவுறையாக சொல்லாமல் விளையாட்டாக அவரிடம் சொல்லியே விட்டேன்.

ஒருவாரம் கழித்து அவர் என்னிடம் வந்து நன்றி என்று சொன்னார். உங்களிடம் பேசியதிலிருந்து தூக்கமில்லை, என்னமோ சிந்தித்துக்கொண்டே இருந்தேன். பின்னர் நான் எனக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நிலைக்கு வந்தேன்.... என் முதுமைகாலத்தை கருத்தில்கொண்டு மாதம் சேமிக்கும் முறையை தேர்வு செய்து வங்கியில் அதற்கான பதிவையும் செய்துவிட்டேன் என்றார்.. பின் இயலாதவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்கின்றேன், மேலும் செய்வேன் என்றார். இப்படி என் மனமாற்றதிற்க்கு காரணமாக இருந்த உங்களுக்கு நன்றி என்று மனமகிழ்ந்து சொன்னார். மேலும் நான் கண்ட சிரமம் என்நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று கண்கலங்கி சொன்னார்.. அன்று என்னால் சாப்பிடமுடியவில்லை, அவர் மனமாற்றம் அந்த அளவிற்க்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அந்த நண்பர் எடுத்த முடிவில் எக்காரணத்தாலும் நிலைமாறாமல் இருக்க வேண்டும் என்பதால்தான் இந்தப் பதிவை எழுதுகின்றேன்.. மேலும் இந்த பதிவை அவருக்கு காணிக்கையாக்குகின்றேன்...........
(பி.கு: ரகசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதால் நண்பர் பெயரும் சூழலும் தவிற்க்கப்பட்டுள்ளது)

11 comments:

Dr. சாரதி said...

நன்றி நண்பரே....
அருமையான பதிவு, இந்த விதமான போக்கு கடந்த சில ஆண்டுகளுக்குள் வந்த மாற்றமே ....

ஆ.ஞானசேகரன் said...

//Dr. சாரதி said... நன்றி நண்பரே....
அருமையான பதிவு, இந்த விதமான போக்கு கடந்த சில ஆண்டுகளுக்குள் வந்த மாற்றமே ....//
வருகைக்கு மிக்க நன்றி! சார்(ஐயா)

Anonymous said...

அருமை

Anonymous said...

அருமை

Anonymous said...

அருமை

ஆ.ஞானசேகரன் said...

//nedumaran said... அருமை//

வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி

CorTexT (Old) said...

சமயம், திருமணம், கூட்டு குடும்பம் இவையாவும் நாம் ஏற்படுத்திக் கொண்ட கோட்பாடுகள். இந்த சித்தாந்தாங்கள் சிறு வயதில் திணிக்கபடுவதால், பெரும்பாலோர் இச்சமூக கோட்பாடுகளின் கைதிகளாக வாழ்கின்றனர். சூழ்நிழைகள் மாறும் போதும், இக்கோட்பாடுகள் மாற மறுக்கின்றன; பெரிய போராட்டத்திற்க்கு பிறகே இதன் பிடி மெல்ல‌ தளற்கிறது. ஒரு காலத்தில் கூட்டு குடும்பத்திற்காக போராடினோம்; இன்று அதைப் பற்றி பெரிதாக பேச்சில்லை!

பல விசங்களில், நம்முள் திணிக்கப்பட்டுள்ள நம்பிக்கைகள் (Beliefs and Moral-values) இன்றைய அறிவுக்கு (Scientific knowledge and understanding) முரன்பாடுகளாக உள்ளன. இதில் இன்றைய இளைஞர்கள் குழம்பிபோய் உள்ளனர். இவர்களை இச்சமூகம் நவீன உலகிற்க்கு தயார்படுத்தவில்லை. ஆனால், இவர்கள் எடுக்கும் புதிய பாதையில் (சரியானதோ அல்லது தவறானதோ) இச்சமூகம் புதிய சூழலை நோக்கி அனுபவ‌மடைகிறிது.

மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனுக்கு துனை, குடும்பம், குழந்தைகள் யாவும் வேண்டும். அவ்வாறே நாம் பரிமான வளற்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் குடும்ப, சமூக கட்டுபாடுகள் அவனை அவ்வாறு வாழவிடாமல் (It won't be peaceful to live without listening our genes), அதைவிட சத்திவாந்த சுதந்திரத்தை நோக்கி அவனை தள்ளுகின்றன. இப்படி வெளியே தள்ளியவனை, முதுமை, நோய் என்று பயமுறுத்தி (கடவுள் பயம் போல்), பழைய சித்தாங்களுக்கு இழுத்து அலைகழிக்கப்படுகின்றான்.

ஒரு படி மேல்...

ஆணும், பெண்ணும் இணைந்து குழந்தைகள் பெறுவது மரபணுக்களின் கோட்பாடு. குழந்தைகளை பெறுவதும், வளற்பதும், அவற்களுக்காக வாழ்வதும்; நம்முடைய அன்பும், நேசமும்; பிறர்க்கு செய்யும் உதவிகளும், தியாகங்களும் ‍‍- மரபணுக்களின் ஆதிக்கமே! இதையே மற்ற விலங்குகளும் செய்கின்றன. இந்த மரபணுக்களுக்கு (சில வேதியல் மூலகூறுகள்) கட்டுபட்டு வாழ்வதில்தான் வாழ்வின் அர்த்தம் உள்ளதா? மரபணுக்களை, குழந்தைகள் பெறுவதின் மூலம் விட்டு செல்வதில் மூலம் தான் சுவடுகளை இவ்வுலகிற்க்கு தரவேண்டுமா? அதை இன்னும் எளிதாக செய்ய முடியும்! (Preserving our one cell, or clone, or just having our personal genome). அதற்க்கு பதில், அறிவை (new ideas, knowledge, understanding) சுவடுகளாக இவ்வுலகிற்க்கு விட்டு செல்வதை சிறந்தது என்பேன்! மக்கள் மனித விலங்குகளாக (I mean it in scientific sense; living with basic instinct and emotional brain) வாழ்தில் வறுத்தம் இல்லை. ஆனால் அதைவிட மேலாக வாழ்வதை (living with thinking brain - neocortex) குறைசொல்லுவதில் தான் வறுத்தம்.

இன்னும் ஒரு படி மேல்...

வாழ்வின் அர்த்தம் தான் என்ன? மரபணுக்களுக்கு கட்டுபட்டு வாழ்வதா? இன்றைய அறிவின்படி (based on current scientific understanding) அப்படி பெரிதாக எதுவும் இருப்பதாக தெரியவில்லை!
(http://theory-of-theory.blogspot.com/2008/08/origin-of-orders.html)

எப்படி ஆனாலும், அடுத்தவற்கு தொல்லை தராமல் எப்படி வாழ்தாலும் சரி. அது அவரவர் முடிவு. இதில் சரி, தவறு என்று பெரிதாக ஒன்றும் இல்லை!

CorTexT (Old) said...

இப்பொழுது உலக மக்கள் தொகை, புவியின் இயற்கை வளங்களை பாதிக்கும் வகையில் பெரிகியுள்ளது. பல உயிர்கள், விலங்குகள் அழிந்து விட்டன, இன்னும் அழிந்து வருகின்றன. உயிரியல் மற்றும் சமூகவியலின் படி, எந்த உயிர்களின் தொகை அதிகமாக உயரும் போது, சில மாறுதல்கள் (Biologically, Socially, Behaviorally) ஏற்பட்டு சமன்நிலை செய்யப்படும். இது இந்தியாவிற்க்கு இன்னும் அவசியமானது. இதை நாம், கலாச்சாரம் என்ற பெயரில் செயற்கையாக தடுத்து வைத்துள்ளோம்.

* மலடிகளை கேவலப்படுத்தாதீர்கள்
* அலிகளை கேலி செய்யாதீர்கள்
* ஓரின பால் ஈர்ப்பு கொன்டோரையும் வாழவிடுங்கள்
* குழந்தைகள், திருமணம் வேண்டாம் என்போரையும் ஏற்று கொள்ளுங்கள்

எல்லா வகையினர்க்கும் சரியான வழிகால்கள் மற்றும் அங்கீகரிப்பும் கிடைத்தால் சுமூகமான சமன்நிலை கிடைக்கும். அவர்களால் எல்லாருக்கும் நன்மை பயக்கும். அவர்களுடைய உழைப்பும், அறிவும் பயன்பெறும். Diversity is the secret of evolution, life, and also for a healthy society!

இதை ந‌ம் கலாச்சாரம் அவ்வ‌ளவு எளிதாக‌ அங்கீகரிக்க‌ப்போவ‌தில்லை. இதை நாம் த‌ள்ளி வைத்தாலும், இய‌ற்கையே செய்யும் சமன்நிலை இன்னும் கொடூர‌மாக‌த்தான் இருக்கும்.

கோவி.கண்ணன் said...

மேலே உள்ள பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

// RajK said... // 1,2 அனைத்தும் அறிவு ஏற்றுக் கொண்டதுபோல் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை... வாதத்திற்கும், வலையில் எழுதிக் குவிப்பதற்க்கும் சரியாக இருக்கும். நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்பாது. உதாரணமாக அழகான பெண்ணை ரசிப்பதில் தவறொன்றும் இல்லை தான் என் அறிவிற்க்கு சரி என்றே படுகின்றது. ஆனால் தன் தமக்கையோ, தன்மனைவியையோ வேறொருவன் ரசிப்பதில் மனம் ஏற்றுகொள்ளவில்லை. நடைமுறை வாழ்க்கைக்கு முரனாக வாழ்வதுதான் தியரி என்றால் சாப்பாட்டை எழுதிவைத்து வாழ்ந்துவிடலாம். உயிர் வாழ உணவு அவசியம் என்பது தியரி.உணவுக்கு சுவை நடைமுறை வாழ்க்கை.

>>>>>>>>>>>

//சூழ்நிலைகள் மாறும் போதும், இக்கோட்பாடுகள் மாற மறுக்கின்றன; பெரிய போராட்டத்திற்க்கு பிறகே இதன் பிடி மெல்ல‌ தளற்கிறது.//
சூழ்நிலை மாறுபொது கோட்பாடுகள் மாற போராடதான் வேண்டும் என்பதும் இயற்கையே! அதில் எது மனித வாழ்கைக்கு தேவையோ அது வெல்லும் அதற்காக நான் மட்டும் மாறிவிட்டேன் என்பதும் மடமைதான் அறிவிற்க்கு அபாற்பட்டதுதான்...

>>>>>>>>>

//ஆணும், பெண்ணும் இணைந்து குழந்தைகள் பெறுவது மரபணுக்களின் கோட்பாடு. குழந்தைகளை பெறுவதும், வளற்பதும், அவற்களுக்காக வாழ்வதும்; நம்முடைய அன்பும், நேசமும்; பிறர்க்கு செய்யும் உதவிகளும், தியாகங்களும் ‍‍- மரபணுக்களின் ஆதிக்கமே! இதையே மற்ற விலங்குகளும் செய்கின்றன. இந்த மரபணுக்களுக்கு (சில வேதியல் மூலகூறுகள்) கட்டுபட்டு வாழ்வதில்தான் வாழ்வின் அர்த்தம் உள்ளதா//
இப்படி எல்லாம் மரபணு கட்டுபாடாக இருக்கட்டும், இதில் மாற்றுக்கூறு எதன் கட்டுபாடாக இருக்ககூடும். அதில் கட்டுப்பட்டு வாழ்வது மட்டும் ஞாயம் கற்பிக்கமுடியுமா?

>>>>>>>

//குழந்தைகள் பெறுவதின் மூலம் விட்டு செல்வதில் மூலம் தான் சுவடுகளை இவ்வுலகிற்க்கு தரவேண்டுமா? அதை இன்னும் எளிதாக செய்ய முடியும்! (Preserving our one cell, or clone, or just having our personal genome). அதற்க்கு பதில், அறிவை (new ideas, knowledge, understanding) சுவடுகளாக இவ்வுலகிற்க்கு விட்டு செல்வதை சிறந்தது என்பேன்!//
இவ்வுலகிற்கு அறிவை சுவடுகளாக விட்டு செல்வதிற்க்கு மாற்று கருத்து இல்லை. இதில் குழந்தைகளுடன் விட்டு செல்வதில் என்ன குற்றம் காணமுடியும்...

>>>>>>>

///இப்படி வெளியே தள்ளியவனை, முதுமை, நோய் என்று பயமுறுத்தி (கடவுள் பயம் போல்), பழைய சித்தாங்களுக்கு இழுத்து அலைகழிக்கப்படுகின்றான்.///
முதுமையும் முதுமையில் நோயும் நடைபெறும் உயிரியல் மாற்றம்தானே! மேலை நாடுகளில் முதியோருக்கும் குழந்தைகளுக்கும் தேவையான பாதுகாப்பு அரசு மற்றும் சமுகத்தால் கிடைப்பதால் உங்களின் கருத்து சரியானது போல தோன்றும். இந்தியா போன்ற நாடுகளில் சமுக அமைப்பு ஒருவர் மற்றொருவருடன் அன்பு , பாசம் என்ற வலைப்பின்னலில்தான் இருக்கின்றது.மேலை நாடுகளில் பாசம் இல்லை என்று சொல்லிவிட முடியாது, என்னைப் பொருத்தவரை குழந்தை வளர்ப்பதில் சிறந்து விளங்குகின்றனர்.

>>>>>>>>

//பல உயிர்கள், விலங்குகள் அழிந்து விட்டன, இன்னும் அழிந்து வருகின்றன. உயிரியல் மற்றும் சமூகவியலின் படி, எந்த உயிர்களின் தொகை அதிகமாக உயரும் போது, சில மாறுதல்கள் (Biologically, Socially, Behaviorally) ஏற்பட்டு சமன்நிலை செய்யப்படும்.//
இயற்கையே சமன் படுத்தும்போது நாம் ஏன் செயற்கையாக சமன் படுத்தவேண்டும்... இதற்காக உங்களுடைய சோம்பல்களையும், பொறுப்பின்மையும் ஞாயப்படுத்த வேண்டுமா? மனிதசமுதாயம் கலாச்சரம் மற்றும் சமுக அமைப்பு காலத்திற்கேற்றவாறு மாற்றத்தை ஏற்றுக்கொண்டுதான் வருகின்றது. அதற்காக மாற்றங்கள் சமசீர்யின்மை அழிவை கொடுக்குமேயொழிய நன்மையேதுமில்லை...புரிந்துவாழ்தலால் தமக்கும் தம்மை சார்தவர்களுக்கும் நலன் கொடுக்கும்....

///கோவி.கண்ணன் said...
மேலே உள்ள பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்./// இதை வழிமொழிந்த கண்ணன் சாருக்கும் இதே கருத்துதான் சொல்லமுடியும்

CorTexT (Old) said...

உயிர் வாழ உணவு அவசியம். அதற்கு காரணம் சொல்லுவது தியரி. எல்லா உண்வுக்கும் (பொருளுக்கும்) மணம், சுவை, நிறம் உண்டு. எந்த உணவு நமக்கு பயனாக‌ உள்ளதோ அதை சுவையாக உணர்த்துவது நம் மூளை. ஆனால் இதில் குறைகளும் உள்ளன. அதை கண்டறிந்து புதிய வழிமுறைகள் செய்வது நம் அறிவு.

‍‍‍-------

அறிவுக்கு (Thinking brain) எட்டியதெல்லாம் நம் மனம் (Emotional Brain) ஏற்பது எளிதான காறியம் அல்ல. மனிதன் ஒன்றும் அந்த அளவிற்கு மற்ற விலங்குகளிடமிறுந்து வெகு தொலைவு பரிமான வளர்ச்சி பெறவில்லை. மேலும், அது எந்த அளவிற்கு மற்றும் எதை நோக்கி நாம் நம் அறிவை வளர்க்கிறோம் என்பதை பொறுத்து.

மனிதனும் விலங்கு தான். குரங்கை விட கொஞ்சம் அதிகமான அறிவு பகுதி மூளை கொண்டுள்ளான் (Approximately same emotional-brain part; little extra thinking-brain part). மனிதன் விலங்குகளாக வாழ்வதில் (living with basic instinct and emotional-brain) எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இதுவே எளிதானதும் கூட. ஆனால் இது மட்டுமே சரியானது என்பதில்தான் கருத்து வேறுபாடு.

-------

நான் சொல்ல வருவது, இயற்கை சமன்பாட்டை நாம் கலாச்சாரம் என்ற பெயரில் செயற்கையாக தடுத்து வைத்துள்ளோம் என்பது தான்.