_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, November 8, 2008

ஜார்ஜ் புஷ்ஸை சந்தித்து ரஜினி பேசியது என்ன?

ஜார்ஜ் புஷ்ஸை சந்தித்து ரஜினி பேசியது என்ன?

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்குப் பிறகு, அப்பதவியை வகிக்கவுள்ள பராக் ஒபமாவிற்கு வாழ்த்துகள். அமெரிக்கா இந்தியாவிடம் நல்லுரவு காணும் வேலையில் ஒபமாவின் வருகை நலமாக இருக்கும் என்றே நம்புவோம்.



ரஜினிசார் பேரைச் சொல்லி, அவரின் செய்தியை வெளியிட்டும் பணம் பார்க்கும் பத்திரிக்கைகள், அரசியல் வாதிகள் மத்தியில் நானும் கொஞ்சம் அவர் பெயரை பயன் படுத்தி ...........ஹி ஹி ஹி
எந்த பத்திரிகைகள் அவர் பெயரை சொல்லி பணம் பார்க்கின்றதோ அதே பத்திரிகைதான் அவருக்கும் அவர் நடிக்கும் படத்திற்கும் விளம்பரமும், புகழும் கொடுக்கின்றது என்பதை ரசிகர்கள் மறந்து பேசலாம். ஆனால் ரஜினி சார் மறக்க முடியாது, அப்படியே மறந்தாலும் நியாமும் இல்லை. (சிவாஜி படத்திற்கு பெயர் வைக்க நடிகர் திலகம் வீட்டில் அனுமதி வாங்கினார்களாம் என்று விளம்பரம் கொடுக்கவில்லையா என்ன?)

ரஜினி , கமல் பற்றி அவர்கள் ரசிகர்கள் என்ன நினைக்கின்றார்களோ எனனவோ? அவர்களின் நட்பு இன்றும் பாரட்டகூடியதாக உள்ளது. இதில் கமலை விட ரஜினின் எதார்த்தம் அதிகமாகவே தெரிகின்றது. கமலின் கொள்கையில் கருத்து வேறுபாடு கொஞ்சம் அதிகமாக இருப்பதால் நட்பை நேரடியாக காட்ட தவறிவிடுவார்.....

0 comments: