_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, November 10, 2008

வேலையில் குறைந்து வரும் நேர்மை! தமிழர்களிடம் தொற்றி வரும் அபாயம்....

வேலையில் குறைந்து வரும் நேர்மை! தமிழர்களிடம் தொற்றி வரும் அபாயம்........

வளர்ந்து வரும் விஞ்ஞானம், உலகமயமாக்கல், நவீன தொலைதொடர்பு உலகத்தை சுருக்கிவிட்டது. நம்ம சுப்பனுக்கும் குப்பனுக்கும் உள்ள பிரச்சனை வெள்ளை மாளிகை வரை தெரிந்துவிடுகின்றது.

நாங்கள் நால்வர் ஒருநாள் பீர் குடிக்கலாம் என்று பேசிகொண்டோம். அதில் ஒருவர் நான் வரவில்லை என்றார். அவரிடம் நான் காமடிக்காக ஒரு கதைச் சொன்னேன்....... அதாங்க எல்லோருக்கும் தெரிந்த மீன் கதை, நண்பர்கள் இருவர் சாமி கும்பிட கோயிலுக்கு சென்றனர். போகும் வழியில் ஒரு குட்டையில் மீன் அதிகமாக இருந்தது. இருவருக்கும் ஒரே குழப்பம் மீன் பிடிக்கலாமா? கோயிலுக்கு போகலாமா? ஒருவன் மீன் பிடிப்பதாக முடிவெடுத்தான். மற்றொருவன் இல்லை நான் சாமி கும்பிட போரேன் என்று சென்றுவிட்டான். ஆனால் இருவரின் மனதில் எண்ண ஓட்டங்கள், மீன் பிடிப்பவன் மனதில் கடவுளின் எண்ணமே அதிகம் இருந்தது. இதில் சாமி கும்பிட போனவன் மனம் முழுவதும் மீன் பிடிப்பதிலேயே இருந்தது.

மேற்கண்ட கதையில் மனதூய்மையை அடிகோல் காட்டுகின்றது. எந்த ஒரு செயல்பாட்டிற்கும் மன ஈடுபாடும் தூய்மையும் முக்கியம். அதேபோல தொழிலிலும் நேர்மை என்பது மிக முக்கியமானது. நேர்மையற்ற முறையினால் பணம் வருவதுபோல தெரிந்தாலும் முடிவில் அந்த தொழிலே நசுங்கும்..

ஆதிமனிதனின் முதல் தொழில் விபச்சாரம் என்று சொல்லப்படுகின்றது. விபச்சாரம் என்பது எனனை பொருத்தவரை ஆண்களால் பெண்களுக்கு அழிக்கபடும் அநீதி என்று சொல்வதிற்கில்லை. இது சமுகத்தால் அழிக்கப்படுகின்றதாகவே நான் கருதுகின்றேன். காசுக்காக தான் பெண்கள் விபச்சாரம் செய்வதும், மற்றும் ஈடுபடுத்த படுவதும். இது ஆண்களால் முடியும் என்றால் கண்டிப்பாக ஆண் விபச்சாரமும் சமுகத்தில் இருக்கும் என்பது நிச்சயம். ஆண் விபச்சாரம் பற்றிய என் முந்தய பதிவு ஆண் விபச்சாரம்,........ வடிகாலுக்காக இளஞன் விபச்சாரியை தேடி வருகின்றான். பணமும் கொடுக்கப்படுகின்றது அந்த பெண் தன்னை முழுமையாக அவனுக்கு அழிக்கவில்லை என்றால் அங்கே நடப்பது ஏமாற்றம். இதை கலாச்சாரம் என்ற போர்வையில் ஞாயப்படுத்த வேண்டாம். விபச்சாரம் சரியா? தாவறா? என்று கூற வரவில்லை ( இதை சமுகம் பதில் சொல்லட்டும்) நேர்மையின்மையை கூறுகின்றேன்.

மேற்சொன்ன எடுத்துக்காட்டு விரசமாக இருந்தாலும், தொழிலில் நேர்மையின்மை பாதிப்பு உணர்வு பூர்வமாக இருக்கும் என்று நம்புகின்றேன். தமிழர்களிடம் விபச்சாரம் என்பது மிக மிக குறைவு கலாச்சாரம் என்ற போர்வையில் நடக்கும் நேர்மையின்மையும் ஒரு காரணம். இந்த தொழில் நசியுற்றால் சமுகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை விட்டுவிடலாம்.

ஆனால் இன்று தமிழர்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வைகை தொழிகளிலும் நேர்மை குறைந்து வருவது அபாயத்தை கொடுக்கின்றது. மலேசியா, சிங்கபூர் நாடுகளில் பொதுவாக தமிழர்கள்தான் வேலைக்கு வருவார்கள். தற்போது தவிற்க படுகின்றது எனபது வெளிப்படையாக தெரிகின்றது. இதற்கு தொழில் நேர்மையின்மை மற்றும் குற்றம் செயல்கள் முக்கிய காரணம். முன்பெல்லாம் தொலை தொடர்பு துறையில் தமிழர்கள் அதிகமாக வருவார்கள். தற்போது ஆந்திரா மற்றும் வடஇந்தியர்கள் அதிகம் காணமுடிகின்றது. இதற்கு தமிழர்கள் ஞானம் குறைந்துவிட்டது என்பதில்லை, நேர்மையின்மைதான் காரணம்.

வெளிநாட்டில் மட்டும் இல்லை, உள்நாட்டு வேலைகளிலும் நேர்மையின்மை காணமுடிகின்றது. இதை தொழிலதிபர்கள் வெளிப்படையாகவே சொல்கின்றனர். தொழிலதிபர் தமிழராக இருந்தாலும் தமிழனை வேலைக்கு அமர்த்துவதில்லை காரணம் குறைந்து வரும் நேர்மை. தமிழகத்தில் நடக்கும் கட்டிட வேலை, சாலைப்பணிகளில் வடமாநிலங்களிலிருந்து ஒப்பந்த பேரில் ஆள் எடுத்து வேலை செய்கின்றனர். தமிழ் நாட்டில் ஆள் இல்லையா? இல்லை எல்லோரும் தன்நிறைவு பெற்றுவிட்டனறா? பிச்சை எடுக்கும் சோம்பேரிகள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கின்றது. வெளிப்படையாக தெரியும் இந்த தொழில் நேர்மையின்மையை உடன் கழையவில்லை என்றால் தமிழருக்கு உலகில் இடமில்லாமல் போகலாம்....

எந்த தொழிளாகட்டும் நேர்மையும் தூய்மையும் இல்லை என்றால் காலபோக்கில் நசுங்கும். நவின உலகில் எல்லோரும் எல்லா வேலையும் செய்ய நேரமில்லை அதற்காக புரோக்கர்கள் தேவையாகின்றது. தற்போது தமிழகத்தில் நடந்துவரும் ரியல் எஸ்டேட் தொழிலில் நேர்மை எந்த அளவிற்க்கு இருக்கின்றது என்பதும் பல வழக்குகளில் தெரிய வருகின்றது. ஒரே இடத்தை பலருக்கு விற்று பணம் பார்த்தும் இருக்கின்றார்கள். இவற்றுக்கு மேலெ சொன்ன விரசமான எடுத்துக்காட்டு பொருத்தமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் மிக மோசமான நிலைக்கு விவசாயம் தள்ளப்பட்டு வருகின்றது. இதற்க்கு வேலைக்கு ஆல் இல்லாதது மேலும் வேலையில் ஈடுபாடு இல்லாமை, நெர்மையின்மையும் காரணங்கள்.. பணம் ஒன்றெ குறிக்கோலாக இல்லாமல் நேர்மையுடன் செய்தால்தான் நாம் நினைக்கும் எதிர்கால இந்தியாவை காணமுடியும் என்பது உண்மை..........

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்
ஆ.ஞானசேகரன்

10 comments:

KaveriGanesh said...

what u said 100% correct.
surely the honesty , interesttowards work reduced from tamilans.
kaveriganesh

ஆ.ஞானசேகரன் said...

//KaveriGanesh said...
what u said 100% correct.
surely the honesty , interesttowards work reduced from tamilans///
நன்றி KaveriGanesh

Anonymous said...

இப்படி ஒட்டுமொத்தமா பழிய தமிழன் மேல போட்ட எப்படி?

எனக்கு தேய்ந்தவரை, அதிகலத்தில் இருந்து இந்த நாள் வரையில், வெளிநாட்டுக்கு வேலைக்கு போனவன் அதிகபட்சம் உயர் சாதிகள் or பிரமிணாதான் இருக்கும். எனவே, அவனுங்கள் உண்மையாய் வேலை செய்யலனு சொல்ல வேண்டியது தானே?

உண்ணாமை தமிழர்கள், வெளிநாட்டுக்கு நம்மளும் போக முடியாத? என்று இன்னும் ஏங்கிகொண்டுதானிருக்கன் இன்னும். இப்போ என்னடான, தமிழன நாட்டில வேலைக்கு எடுக்க மாற்றான்/தயங்குரன் அப்படின்னு சொல்லி, யாரை தூட்ட்ருறது?

என்ன கொடுமை இது?????

ஆ.ஞானசேகரன் said...

////Anonymous said...
இப்படி ஒட்டுமொத்தமா பழிய தமிழன் மேல போட்ட எப்படி?

எனக்கு தேய்ந்தவரை, அதிகலத்தில் இருந்து இந்த நாள் வரையில், வெளிநாட்டுக்கு வேலைக்கு போனவன் அதிகபட்சம் உயர் சாதிகள் or பிரமிணாதான் இருக்கும். எனவே, அவனுங்கள் உண்மையாய் வேலை செய்யலனு சொல்ல வேண்டியது தானே? ////இப்போ பிரச்சனையே தமிழ்நாட்டிலிருந்து வேலைக்கு ஆல் எடுக்க தயங்குவதுதான்... தமிழ்நாட்டிலும் இதே நிலைதான்... இதற்கு காரணம் மேல்சாதி கீழ்சாதி என்ற நிலையில்லை... நிர்வாக்துடன் ஒத்துபோகாதது பின் வேலையில் நேர்மையற்ற செயலும் காரணம்

ஆட்காட்டி said...

அப்படியும் இருக்கலாம்.

ஆ.ஞானசேகரன் said...

//ஆட்காட்டி said...
அப்படியும் இருக்கலாம்//
நன்றி ஆட்காட்டி... எப்படியானாலும் வேலையில் நேர்மையிமையை கழையவேண்டியது ஒன்று..

கோவி.கண்ணன் said...

//இது ஆண்களால் முடியும் என்றால் கண்டிப்பாக ஆண் விபச்சாரமும் சமுகத்தில் இருக்கும் என்பது நிச்சயம். //

அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது

ஆ.ஞானசேகரன் said...

கோவி.கண்ணன் said...
//இது ஆண்களால் முடியும் என்றால் கண்டிப்பாக ஆண் விபச்சாரமும் சமுகத்தில் இருக்கும் என்பது நிச்சயம். //

அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது//
நன்றி கோவி.கண்ணன் ...

அதிரை ஜமால் said...

நேர்மை மிக மிக முக்கியம்.

அதற்காக ஒட்டு மொத்த தமிழனையும் குற்றம் சொல்வது ஏற்றுகொல்லும் விடயமாக இல்லை.

உங்களிடம் நேர்மை இல்லை என்று தோன்றுகிறதா உங்களுக்கு. இல்லைதானே.

நீங்களும் தமிழர்தானே.

ஆ.ஞானசேகரன் said...

அதிரை ஜமால் said...
நேர்மை மிக மிக முக்கியம்.

// அதிரை ஜமால் அதற்காக ஒட்டு மொத்த தமிழனையும் குற்றம் சொல்வது ஏற்றுகொல்லும் விடயமாக இல்லை.

உங்களிடம் நேர்மை இல்லை என்று தோன்றுகிறதா உங்களுக்கு. இல்லைதானே.//

அதிரை ஜமால் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... குறை சொல்லவில்லை, தமிழர்க்கு வேலை வாய்ப்பு குறைகின்றதை வருத்தப்படுகின்றேன்..பல தொழிலதிபர்கள் சொல்லும் குறைகளை கழைய வேண்டும் என்ற எண்ணம்...