_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, April 20, 2009

மாபெரும் சிங்கபூர் பதிவர் மாநாடு 2009 - ஏப்ரல்18 (காணொளி)

மாபெரும் சிங்கபூர் பதிவர் மாநாடு 2009 - ஏப்ரல்18 (காணொளி)

"அப்பாடி" 'டோன்' லீ ன் சிங்கபூர் பதிவர் மாநாடு அறிவுப்பு தெரிந்தும், இரவுப் பணியின் காரணமாக (18-04-2009) நல்ல உறக்க நிலையில் இருந்தேன். 'டிரிங் டிரிங்...' ஒன்னும் இல்லைங்க ஜோதிபாரதியின் அலைபேசி அழைப்புதான் "ஞானசேகரன் எப்படி இருக்கீங்க பதிவர் மாநாட்டுக்கு வருகின்றீர்களா?? ஓ ஆம்மாங்க இதோ புறப்பட்டு விட்டேன்.... " அப்பறம் என்னங்க அடிச்சி புடிச்சி கிளம்பி பெடோக் தொடரூந்து மாற்று நிலையத்திற்கு நான்கு மணிக்கு வந்துவிட்டேன்... சில்லுன்னு உக்கர காத்து அப்பப்பா நான்கரை மணிக்குதான் 401 பேருந்து வந்தது. அதன் பிறகு கிழக்கு கடற்கரை அடைய ஐந்து மணியாகிவிட்டது. பின்னர் கோவி.கண்ணனின் வழி அறிவிப்புடன் ஆக கடைசியாக நான் மாநாட்டில் ஐக்கியமானேன்..

கடைசியாக வந்ததால் சுண்டல், கேசரி அதிகமாகவே கிடைத்தது. ஜோதிபாரதியின் பார்வை அடுத்தமுறை காலதாமதமாக வந்தால்; வெளியில் முட்டிப்போட வைப்பேன் என்று சொல்வதுபோல் இருந்தது. முதல் முறையாக கிழக்கு கடற்கரை பார்த்ததில் மகிழ்ச்சிதான், மணல் வெளி இல்லாத நல்ல மக்கள் கூட்டம். ( மணல் இல்லாமல் என்ன கடற்கரைனு கேட்கபுடாது) அதன் பின் இனிதான பல விவாதங்கள்...... இவற்றை எல்லாம் நண்பர்கள் பதிவில் பார்க்கலாம் 'டோன்' லீ ன் சிங்கை பதிவர் மாநாடு 18.04.2009 அறிக்கை மற்றும் அறிவிலியின் சிங்கை பதிவர் மாநாடு 18-04-2009 . கடைசியாக மாநாட்டுக்கு வந்ததால் கடைசியாக பதிந்த என்னுடைய அறிக்கையை நண்பர்களும் பெரிதுப்படுத்த மாட்டார்கள்...

மாநாட்டின் அறிக்கை காணொளியில்.......


இனிதே முடிந்த மாநாட்டுக்கு பின் என்னுடன் டோன் லீ , ஜோதிபாரதி, இளங்குமரன், மீனாட்சி, அறிவிலி ஆகியோர் பேரூந்தில் ஏறி ஒரு சிற்றுலா சென்று விட்டு பெடொக் வந்தடைந்தோம். பின் அவரவர் வழியனுப்பியதற்கு பின் கடைசியாக என்னை "டோன் லீ" புக்கித் பாதோக் வரை விட்டு சென்றார். டோன் லீ க்கு நன்றி சொல்ல வேண்டும், வரும் வழிகளில் பல விடயங்கள் கதைத்ததில் பெரும் மகிழ்வு.... (முக்கிய குறிப்பு சில புகைப்படம் காணொளிக்காக அனுமதியின்றி டோன் லீ, அறிவிலி பதிவுகளில் சுட்டது)

நண்பர்களே காணொளியை You Tube ல் பார்க்க இயலாதவர்கள் கீழ்கண்ட சுட்டியில் இறக்கி பார்த்துக்கொள்ளலாம் நன்றி..... >>>> இறக்கவும்

அன்புடன்

ஆ.ஞானசேகரன்..

31 comments:

’டொன்’ லீ said...

:-)) haahaa

நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// ’டொன்’ லீ said...
:-)) haahaa

நன்றி//

வணக்கம் டொன் லீ

cheena (சீனா) said...

சந்திப்பினை அருமையாக காணொளியாகக் காட்டியது நன்று நன்று - நல்வாழ்த்துகள் ஞானசேகரன்

துளசி கோபால் said...

அருமையா ஏதோ பிக்னிக் போய்வந்தமாதிரி இருக்கே!!!

ரசித்தேன் காணொளியை.

நன்றி.

கோவி.கண்ணன் said...

காணொளி கலக்கல்

Muniappan Pakkangal said...

Glad,u had a nice blogger's meet.The place for it also is nice.

ஆ.முத்துராமலிங்கம் said...

ரொம்ப மகிழ்ச்சிங்க.
காணொளி பார்த்தேன் அருமை,

Suresh said...

சூப்பர் தான் போங்க ஹ ஹ நாங்களும் இருந்த மாதிரியே இருந்தது

அனுபவம் said...

காணொளி கண்டேன் மகிழ்ச்சியாய் இருந்தது.என்னையும் கூப்பிட்டிருக்கக்கூடாதா?

கார்த்திகைப் பாண்டியன் said...

இங்க என்னால வீடியோ பார்க்க முடியல நண்பா.. இருந்தாலும் பதிவர்கள் சந்திச்சு உரையாடி இருக்கீங்க.. கொண்டாட்டம்தான்.. வாழ்த்துக்கள்..

ஆ.ஞானசேகரன் said...

//cheena (சீனா) said...
சந்திப்பினை அருமையாக காணொளியாகக் காட்டியது நன்று நன்று - நல்வாழ்த்துகள் ஞானசேகரன்//

நன்றி அய்யா...

ஆ.ஞானசேகரன் said...

//துளசி கோபால் said...
அருமையா ஏதோ பிக்னிக் போய்வந்தமாதிரி இருக்கே!!!

ரசித்தேன் காணொளியை.

நன்றி.//

வணக்கம் அம்மா, இந்த முறை நீங்கள் இல்லாததுதான் குறை

ஆ.ஞானசேகரன் said...

//கோவி.கண்ணன் said...
காணொளி கலக்கல்//

நன்றி சார்...

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...
Glad,u had a nice blogger's meet.The place for it also is nice.//

Thaks sir

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
ரொம்ப மகிழ்ச்சிங்க.
காணொளி பார்த்தேன் அருமை,//

வணக்கம் ஆ. முத்துராமலிங்கம்...
மிக்க நன்றி உங்களுக்கும்..

ஆ.ஞானசேகரன் said...

//Suresh said...
சூப்பர் தான் போங்க ஹ ஹ நாங்களும் இருந்த மாதிரியே இருந்தது//

வங்க சுரெஷ்.... நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// அனுபவம் said...
காணொளி கண்டேன் மகிழ்ச்சியாய் இருந்தது.என்னையும் கூப்பிட்டிருக்கக்கூடாதா?//

வாங்க அனுபவம் உங்களின் வருகை மகிழ்ச்சியே! மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
இங்க என்னால வீடியோ பார்க்க முடியல நண்பா.. இருந்தாலும் பதிவர்கள் சந்திச்சு உரையாடி இருக்கீங்க.. கொண்டாட்டம்தான்.. வாழ்த்துக்கள்..//

வணக்கம் சார்... முடிந்தால் பின் ஒரு நாள் காணொளியை பாருங்கள்... e mail லில் அனுப்ப வேண்டும் என்றால் சொல்லுங்கள் அனுப்புகின்றேன்...

அறிவிலி said...

காணொளி....

அற்புதம்.

புதியவன் said...

மாநாட்டில் கலந்து கொண்ட திருப்தி இருந்தது காணொளியில் கண்டவுடன்...

வாழ்த்துக்கள் ஞானசேகரன்...

ஆ.ஞானசேகரன் said...

// அறிவிலி said...
காணொளி....

அற்புதம்.//

வணக்கம் அறிவிலி சார்.... வருகைக்கு மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// புதியவன் said...
மாநாட்டில் கலந்து கொண்ட திருப்தி இருந்தது காணொளியில் கண்டவுடன்...

வாழ்த்துக்கள் ஞானசேகரன்...//

வாங்க புதியவன், அடுத்த பதிவர் சந்திப்பில் உங்களை எதிர்ப்பார்கின்றோம்.......நன்றிபா

பிரியமுடன் பிரபு said...

என்னால் வரமுடியவில்லை
காணொளிக்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//பிரியமுடன் பிரபு said...
என்னால் வரமுடியவில்லை
காணொளிக்கு நன்றி//

வாங்க பிரபு, அடுத்த முறை உங்களை எதிர்பார்க்கின்றோம்.....
நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

நண்பர் பழமைபேசியும், நண்பர் RajK அவர்களும் சில(பல) எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழைகளை சுட்டிக்காட்டினார்கள். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்... பிழைகளை குறைத்துக்கொள்ள முயற்சி செய்கின்றேன்... மேலும் படிப்பவர்களுக்கு அதே பிழைகள்தான் முதலில் தெரியும் என்பதால் கருத்துகளை எடுத்துவிட்டேன்... என்றும் உங்களின் அமோக ஆதரவிற்கு.. நன்றி!

No said...

Hmmmmm............

கடையம் ஆனந்த் said...

இங்க என்னால வீடியோ பார்க்க முடியல நண்பா..
//

இதை நானும் சொல்கிறேன் நண்பா. வீடியோ தெரியவில்லை. பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்தற்கு வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// No said...
Hmmmmm............//

yessssssssssssss

ஆ.ஞானசேகரன் said...

//கடையம் ஆனந்த் said...
இங்க என்னால வீடியோ பார்க்க முடியல நண்பா..
//

இதை நானும் சொல்கிறேன் நண்பா. வீடியோ தெரியவில்லை. பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்தற்கு வாழ்த்துக்கள்.//

வணக்கம் நண்பா, You tube ல் தான் எற்றியுள்ளேன். ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை என்று தெரியவில்லை... மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//கடையம் ஆனந்த் said...
இங்க என்னால வீடியோ பார்க்க முடியல நண்பா..//


//கார்த்திகைப் பாண்டியன் said...
இங்க என்னால வீடியோ பார்க்க முடியல நண்பா.. இருந்தாலும் பதிவர்கள் சந்திச்சு உரையாடி இருக்கீங்க.. கொண்டாட்டம்தான்.. வாழ்த்துக்கள்..//


நண்பா, Tou Tube ல் பார்க்க முடியாவிட்டால் தற்பொழுது காணொளியை இறக்கி பார்த்துகொள்ள சுட்டியை இணைத்துள்ளேன் பயன்படுத்திக்கொள்ளவும் நன்றி

Anonymous said...

[p]You can not miss Women Nike Shox OZ shoes
The Women Nike Shox OZ shoes are among the most recent vary of footwear that [url=http://www.uggoutletuksale.co.uk]ugg boots outlet uk[/url] includes modern technology for providing increased grip, however conjointly provides a exertion for toning buns and thighs whereas sporting the trainers . Along with the shorter version of this [url=http://www.uggoutletuksale.co.uk]ugg boots clearance uk[/url] boot, they are the most popular styles and also they are the most classic . But if you're stout ugg classic argyle knit boots about the hunt to get a leather-based boot that's a bit more particular, colored leather-based footwear include the perfect selection . Wooden crucial appears one a lot much more outcome in is most likely the reality that women of all ages adore this system is versatile . These boots are made [url=http://www.uggoutletuksale.co.uk]ugg boots outlet sale[/url] out of sheepskin this will let you unique design and comfort . BA0823 Aquaracer Swiss Quartz Watch About TAG Heuer TAG Heuer has its roots in the small Swiss village of St Imier, where in 1860 a watchmaker named UGG Argyle Knit UGG 5879 Heuer opened his first shop . This is crucial to address your home-based business to be a task,bailey button, instead of a pastime . Possibly even some you possibly can make various hairstyle.[/p][p]The fleece is used as the inner lining to keep the feet dry and at body temperature . There are also fantastic knit types, such as extremely widespread Card . Complete your wardrobe by adding these boots in them, as without it your winter will not be the same . You do not need to store close to or invest a fortune to spice up your appearance even to please your require for severe elegance . Warm, cozy and comfortable, these slippers are fully lined with sheepskin and have a soft, flexible outer . Free [url=http://www.uggoutletuksale.co.uk]ugg boots outlet[/url] shipping . They are able to stand out near to the industry and retain a climbing research certainly merely because Women's Classic Short 5825 please most [url=http://www.uggoutletuksale.co.uk]cheap ugg boots outlet[/url] people needs . As we all known that Ugg refers to sheepskin boots, now the Uggs also have designed the Ugg high heels for all women.[/p]