_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, April 7, 2009

எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு...(சிரிக்கும் ஸ்டவ்கள்)

எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு...(சிரிக்கும் ஸ்டவ்கள்)

1986-ல் அப்பொழுது நான் தொழிற்கல்விக்காண பயிற்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பயின்றுகொண்டிருந்தேன். ரொம்ப சுறுசுறுப்பு என்று சொல்ல முடியாது, எதாயிருந்தாலும் நாமும் செய்துதான் பார்க்கலாமே என்ற ஆர்வம் அதிகம் இருக்கும். துப்பாக்கித் தொழிற்சாலையில் பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடுவார்கள். அவ்விழா கலை இலக்கிய விழாவாக இருக்கும்( இன்றும் அப்படியே கொண்டாடுகின்றார்கள் என்பது தனிப்பட்ட மகிழ்ச்சி).

அந்த பொங்கல் விழாவில் நாடகம், கவிதை, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், நடனம் என்ற பல அம்சங்கள் மிக நேர்த்தியாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் ஒரு பிரிவுக்கு சிறப்பு கொடுப்பார்கள். அதே போல் அந்த வருடம் வழக்காடு மன்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக பேராசிரியர் சாலாமன் பாப்பையா, பேராசிரியர் சத்தியசீலன், பேராசிரியை காந்திமதி அம்மா.. வருகை புரிந்தார்கள். அதற்கு முன் சில பகிர்வுகள்;- என்பதுக்கு முன் பட்டிமன்றம் மற்றும் வழக்காடு மன்றம் என்பது ஒரு இலக்கிய சொற்பொழிவாக "ராமன் வீரனா? ராவணன் வீரனா?" " கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?" இப்படி இதிகாச சம்மந்தபட்ட தலைபில் எடுத்து வழக்காடவொ, பட்டி மன்றமோ இருக்கும் அதுவும் சில கோவில் திருவிழாக்களில் மற்றும் இலக்கிய மன்றங்களில்... பேராசிரியர் சத்தியசீலன் தலைமையில் முதல் முதலாக சமுக நோக்கதில் சமுதாய சீர்திருத்த கருத்துகளை... சமுகத்தில் புழங்கும் சம்பவங்களை வாதிட வந்தார்கள்.. கொடைக்காணல் தொலைகாட்சி அலை வரிசைக்கு பின்தான் மக்கள் மத்தியில் வழக்காடு மன்றம் மற்றும் பட்டி மன்றம் பார்வைக்கு வந்தது.

இப்ப நம்ம மேடருக்கு வருவோம் அன்று நடக்க இருக்கும் வழக்காடு மன்றம் முன் கவிதை போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டது. நம்ம ஆர்வ கோளாரு என் பேரை முதலில் கொடுத்தேன். போட்டியின் விதி கவிஅரங்கம் ஆரம்பிக்கும் அரை மணிக்கு முன்தான் போட்டியாளர்கள் தலைப்பை கொடுப்பார்காள்... போச்சுடா நான் பரிச்சைக்கு படிப்பது போல நூலகம் சென்று படிக்க ஆரம்பித்தேன். போட்டிக்கு நீதிபதிகள் வழக்காடு மன்றத்திற்கு வந்த பேராசிரியர்கள், பயம் உதரல் என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஒரு வகையாக போட்டிக்கு தயாரானேன். போட்டியாளர்கள் வந்ததும் பரிச்சைக்கு கேள்வித்தாளை எதிர்நோக்கும் மனநிலை... ம்ம்ம்ம் தலைப்பை சொன்னார்கள் "சிரிக்கும் ஸ்டவ்கள்" . எனக்கு உண்மையில் பொருளே புரியவில்லை கொடுத்த தாளில் தாலம் போட ஆரம்பித்தேன்... 15 நிமிடங்கள்தான் உள்ளது ஒரு வழியாக இது ஒரு வரதச்சனை பற்றிய பொருள் என்று புரிந்தது. பொருள் புரிந்தது ஆனால் வரதச்சனைப் பற்றி அந்த வயதில் ஒரு அழுத்தமான உணர்வு எனக்கு இல்லை இதில் கவிதை எப்படி? ம்ம்ம்ம்ம்ம் . அப்படி இப்படி ஒரு 20 வரிகள் கிருக்கிவிட்டேன்..

அதில் சிலதான் ஞாபகம் இருக்கு பரணியில் இருக்கும் காகிதம் கிடைத்தால் பின் ஒரு நாளில் பதிவிடுகின்றேன் (தப்பித்துவிட்டீர்கள்).
அந்த சில வரிகளில்..

வெடிக்கும் ஸ்டவ்கள் மாமுனார் வீட்டில் இல்லை இல்லை..
பெண்ணே! நீ பெண்ணுக்கு எதிரியானாய்..
பெண்ணடிமை பற்றி பேசும் பெண்ணே! ..
உன் அடிமையிலிருந்து என்று நீ வெளியே வருவாய்..
சட்டங்கள் ஆழ்வது இருக்கட்டும்-இந்த வெடிக்கும் ஸ்டவ்கள்,
சிரிக்காமல் பார்த்துகொள்ளுங்கள்!..

என்று கைகளை நீட்டி இரண்டுமுறை வாசித்ததும் பேராசிரியை காந்திமதி அம்மா எழுந்து நின்று கைதட்டினார்கள்... இன்றும் என் நினைவுகளில் . அவர் கைதட்டியது என் வரிகளுக்கு இல்லை இந்த சமுகதில் உள்ள நியாங்களை வெளிகாடியதற்கு. ஒரு பெண்ணாக அனுபவ வார்த்தகளாக புரிந்ததால் அவர் அப்படி கைதட்டி வரவேற்றார்கள்.... என்னை பொருத்தவரை பெண்ணுரிமை என்பது.......

உரிமை என்பது-கேட்டு
பறிப்பதும் எடுப்பதுமில்லை;-மாறாக
பகிர்வதும் உணர்வதுமே!.....


அந்த கவியரங்கம் இனிதே முடிந்து வழக்காடு மன்றம் தொடர்ந்தது. பேராசிரியை கைதட்டல் மட்டுமெ கிடைத்த எனக்கு பரிசு கிடைக்காதது வருத்தம் இல்லை. எனது நண்பரும் நல்ல காவிஞருமான தோழர் கலியமூர்த்தி நல்ல சமுக பார்வையுடன் கவிபாடி பரிசையும் பெற்றார்.....

சின்ன காணோளி பகிர்வு

29 comments:

ராஜ நடராஜன் said...

வந்துட்டோமில்ல!கவிதை,இலக்கியம் பேசினா வராம இருக்க முடியுமா?

குடந்தைஅன்புமணி said...

பரிசு வாங்கலைன்னா என்ன? கைத்தட்டலே நமக்கு பெரிய பரிசுதானே!முழுக்கவிதை கிடைச்சா பதிவிடுங்க. காத்திருக்கிறோம்!

ஆ.ஞானசேகரன் said...

//ராஜ நடராஜன் said...
வந்துட்டோமில்ல!கவிதை,இலக்கியம் பேசினா வராம இருக்க முடியுமா?//

வாங்க வாங்க ராஜ நடராஜன், வருகைக்கு மகிழ்ச்சி அண்ணே

’டொன்’ லீ said...

ஹாஹா..:-)

ஆ.ஞானசேகரன் said...

//குடந்தைஅன்புமணி said...
பரிசு வாங்கலைன்னா என்ன? கைத்தட்டலே நமக்கு பெரிய பரிசுதானே!முழுக்கவிதை கிடைச்சா பதிவிடுங்க. காத்திருக்கிறோம்//

நன்றி குடந்தைஅன்புமணி.... முழு கவிதைக்கு முயற்சிக்கின்றேன்...தற்பொழுது திருச்சியில் உள்ளது.....ஹிஹிஹி

ஆ.ஞானசேகரன் said...

//’டொன்’ லீ said...
ஹாஹா..:-)//

வணக்கம் டொன்'லீ.......

ஆதவா said...

சார்... நீங்க ஏன் தளத்தில் கவிதை எழுதறதில்லை....

சிரிக்கும் ஸ்டவ்கள் என்றதும் எனக்கு வரதட்சனை அல்லது ஸ்டவ் வெடிப்பு ஞாபகம்தான் வந்தது.. உங்களுடைய வரிகள் அருமை... அதனால்தான் கைதட்டல் கிடைத்திருக்கிறது...

வீடியோ லோட் ஆவாது!! அதனால் பார்க்க வாய்ப்பில்லை :(

அன்புடன்
ஆதவா

ஆதவா said...

முழுகவிதையையும் தேடிப்பிடிச்சு போடுங்க..

ஆ.ஞானசேகரன் said...

//சார்... நீங்க ஏன் தளத்தில் கவிதை எழுதறதில்லை....

சிரிக்கும் ஸ்டவ்கள் என்றதும் எனக்கு வரதட்சனை அல்லது ஸ்டவ் வெடிப்பு ஞாபகம்தான் வந்தது.. உங்களுடைய வரிகள் அருமை... அதனால்தான் கைதட்டல் கிடைத்திருக்கிறது...

வீடியோ லோட் ஆவாது!! அதனால் பார்க்க வாய்ப்பில்லை :(

அன்புடன்
ஆதவா//

நன்றி ஆதவா...
என்னானு தெரியவில்லை மனம் நல்ல உந்துதல் வருவதில்லை அதனால் கவிவார்த்தை கோர்வை வரவதில்லை... ஞாபக மறதியும் அதிமாக இருக்கு ... வேலை பழு என்று நினைக்கின்றேன்...

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...
முழுகவிதையையும் தேடிப்பிடிச்சு போடுங்க..//

இந்த முறை ஊருக்கு செல்லும் பொழுது முயற்சிக்கின்றேன்..

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...
சார்... நீங்க ஏன் தளத்தில் கவிதை எழுதறதில்லை....
//

ஆதவா... உன்னிடம் நல்ல துறுதுறு என ஆர்வமும்.. தேடுதலுக்காண ஆர்வமும் நிறைய இருக்கின்றதை உங்கள் வலைகளில் பார்க்கின்றேன்... முற்போக்கான கருத்துகளை சேர்த்துக்கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்.. உன்னை போன்ற இளைஞர்களை இந்த எழுத்துலகம் தேடிக்கொண்டுதான் உள்ளது...

பிரேம்குமார் said...

//பேராசிரியை காந்திமதி அம்மா எழுந்து நின்று கைதட்டினார்கள்//

வாழ்த்துகள்

அந்த காணொளில நீங்க இருப்பீங்கன்னு ஆர்வமா போய் பார்த்தேன். நீங்க இல்லையா?

ஆ.ஞானசேகரன் said...

// பிரேம்குமார் said...
//பேராசிரியை காந்திமதி அம்மா எழுந்து நின்று கைதட்டினார்கள்//

வாழ்த்துகள்

அந்த காணொளில நீங்க இருப்பீங்கன்னு ஆர்வமா போய் பார்த்தேன். நீங்க இல்லையா?//

வணக்கம் பிரேம்குமார் ... சும்ம ஒரு ரிலாக்ஸ்காக அந்த காணோளி... ஏமாற்றதிற்கு மன்னிக்கவும்... காணோளியில் வரும் அளவிற்கு வளர்ச்சி இல்லைங்க... நன்றி நண்பரே

ஆ.முத்துராமலிங்கம் said...

அப்பவே ஆரம்பிசிருக்கீங்க...
ம்.. நல்லாவே இருக்கு, அப்புறமென்ன இங்கேயும் உங்க கவிதையை எழுதலாமே.

|பரணியில்| இது பரண்லதான..?

பகிர்வு நல்லாருந்திச்சு.
வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
அப்பவே ஆரம்பிசிருக்கீங்க...
ம்.. நல்லாவே இருக்கு, அப்புறமென்ன இங்கேயும் உங்க கவிதையை எழுதலாமே.

|பரணியில்| இது பரண்லதான..?

பகிர்வு நல்லாருந்திச்சு.
வாழ்த்துகள்.//


வாங்க ஆ.முத்துராமலிங்கம் உங்களின் வருக்கைக்கும் வாழ்த்துகலுக்கும் நன்றி... கவிதை எழுத ஆசைதான்.அப்படி ஒரு உந்துதல் வரவில்லை...
சமயம் வந்தால் கவியும் வரும்... நன்றி நண்பரே

சொல்லரசன் said...

//துப்பாக்கித் தொழிற்சாலையில் பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடுவார்கள். அவ்விழா கலை இலக்கிய விழாவாக இருக்கும்( இன்றும் அப்படியே கொண்டாடுகின்றார்கள் என்பது தனிப்பட்ட மகிழ்ச்சி).//

எங்களுக்கும்தான்.

துப்பாக்கித் தொழிற்சாலையில் "சிரிக்கும் ஸ்டவ்கள்" நல்ல தலைப்புதான்
//உரிமை என்பது-கேட்டு
பறிப்பதும் எடுப்பதுமில்லை;-மாறாக
பகிர்வதும் உணர்வதுமே!.....//

நல்ல வரிகள் நண்பரே.

ஆ.ஞானசேகரன் said...

வாங்க சொல்லரசன், உங்களின் பகிர்வும் மகிழசெய்கின்றது.. உங்களின் ஊக்கம் மீளசெய்கின்றது... மிக்க நன்றி நண்பா....

கார்த்திகைப் பாண்டியன் said...

சின்ன வயசுலேயே சமூக உணர்வோட இருந்து இருக்கீங்க.. கவிதையின் சாரம் அருமை.. முடிஞ்சா முழுசா எடுத்துப் போடுங்க.. பரிசு கிடைக்கலேன்னா என்னங்க.. நம்மளால கூட கவிதை எழுத முடியும்னு உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்து இருக்கு பாருங்க.. அதுதான் முக்கியம்..

அகநாழிகை said...

நல்ல அனுபவப்பதிவு.
உங்கள் கவிதைகளையும் பதிவிடுங்கள்.
வாசித்து மகிழ்கிறோம்.

- பொன். வாசுதேவன்

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
சின்ன வயசுலேயே சமூக உணர்வோட இருந்து இருக்கீங்க.. கவிதையின் சாரம் அருமை.. முடிஞ்சா முழுசா எடுத்துப் போடுங்க.. பரிசு கிடைக்கலேன்னா என்னங்க.. நம்மளால கூட கவிதை எழுத முடியும்னு உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்து இருக்கு பாருங்க.. அதுதான் முக்கியம்..//

நன்றி கார்த்திகைப் பாண்டியன் ...

ஆ.ஞானசேகரன் said...

//அகநாழிகை said...
நல்ல அனுபவப்பதிவு.
உங்கள் கவிதைகளையும் பதிவிடுங்கள்.
வாசித்து மகிழ்கிறோம்.

- பொன். வாசுதேவன்//

வணக்கம் பொன்.வாசுதேவன்... வருகைக்கு மிக்க நன்றி .. கவிதைகளை பதிய முயற்சிக்கின்றேன்..

ஹேமா said...

ஞானசேகரன் நானும் கை தட்டினேன்.கேட்டிச்சா ?சமூக
எரிச்சல் உங்ககிட்டயும் இருக்கு.

உங்க 2-3 பதிவுகள் தவறிப்போச்சு.இப்போ சமப்படுத்திட்டேன்.

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
ஞானசேகரன் நானும் கை தட்டினேன்.கேட்டிச்சா ?சமூக
எரிச்சல் உங்ககிட்டயும் இருக்கு.

உங்க 2-3 பதிவுகள் தவறிப்போச்சு.இப்போ சமப்படுத்திட்டேன்.//

வாங்க வாங்க ஹேமா, உங்கள் கைதட்டல்தான் என்னை தெளிய வச்சதே.. கைதட்டியதுக்கு நன்றி ஹேமா....

ராம்.CM said...

என் முழு கைத்தட்டல்.....

ஜோதிபாரதி said...

இலக்கிய வாதி ஆ.ஞானசேகரன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
கவிதை நன்று!

ஆ.ஞானசேகரன் said...

// ராம்.CM said...
என் முழு கைத்தட்டல்.....//

நன்றி ராம் சார்...

ஆ.ஞானசேகரன் said...

//ஜோதிபாரதி said...
இலக்கிய வாதி ஆ.ஞானசேகரன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
கவிதை நன்று!//

வணக்கம் ஜோதிபாரதி... உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிங்கோ!!!!

RajK said...

பொதுவாக மனித உணர்ச்சியின் வெளிபாடாகவே கவிதைகள் பிறக்கின்றன. இதனால் தான் கவிதைகளில் கற்பனைகளும் மிகை படுத்துதலும் அதிகமாக உள்ளன. உணர்ச்சி என்பது ஒவ்வொரு தனி மனிதனின் மூளையின் விலங்கு பகுதியிலிருந்து வெளிப்படும் மனநிலை. அதை அப்படியே சமூகத்திற்கு பயன்படுத்த முடியாது. அதற்கு அறிவியல், சமுகவியல் பார்வையும் வேண்டும். இங்கு தான், பாரதி போன்ற ஒரு சிலர் காலத்தை கடந்த மகாகவியாகின்றனர்.

பெண்ணடிமை என்பது ஒரு சமூக பிரச்சனை. இது கலாச்சார, பொருளாதார, குடும்ப அமைப்பில் சிக்கலாக பின்ன பட்ட ஒன்று. பெற்ற குழந்தை பெண் என்றால் தாயே கூட வெறுக்கலாம். பெண்ணே! நீ பெண்ணுக்கு எதிரியானாய் - என்பதெல்லாம் பிரச்சனையை வேறு திசையில் மிகை படுத்துவதாகவே நான் கருதுகின்றேன். தவறுகளை இரு பாலாரும் செய்கின்றனர். ஆனால், பெண் செய்தால் மட்டும், பெண்ணே இப்படி செய்யலாமா என்கின்றர்.

உரிமை என்பது அன்போ பாசமோ இல்லை, அதை பகிர்வதற்கும் உணர்வதற்கும். பெண்ணை நெருப்பில் தள்ளி, விதவையாக்கி தனியே வைத்த காலத்தையெல்லாம் மறந்து விடாதீர்கள். உரிமை என்பது பகிர்வதும் உணர்வதுமே என்று பல முஸ்லீம் நாடுகளில் இன்றும் சாட்டையடி வாங்கும் பெண்களிடம் கூறுங்கள். பெண்ணடிமை, சாதி கொடுமை, அமெரிக்க கருப்பரின அடிமை - இதில் பறிபோன உரிமையெல்லாம் ஒரு சமுதாய விழுப்புணர்ச்சி, இயக்கம், போராட்டம் மூலமே அடைய முடியும்.

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...
பொதுவாக மனித உணர்ச்சியின் வெளிபாடாகவே கவிதைகள் பிறக்கின்றன.//

வணக்கம்.. நீங்கள் கூறும் கூற்று ஏற்றுகொண்டாலும் முழுமையாக ஏற்றுக்கொள்வது அபந்தம்மாக இருக்கும். கவிதைகள் மனிதனின் உணர்வின் வெளிப்பாடே அன்றி.... உணர்வற்ற உணர்ச்சி என்று சொல்வது சரி என்று சொல்வதற்கில்லை...

//பெண்ணடிமை என்பது ஒரு சமூக பிரச்சனை.//

உண்மைதான் பெண்ணடிமை என்பது ஒரு சமுக பிரச்சனைதான். நாமும் (இருபாலரும்) சமுகத்தில் ஒரு அங்கம் என்பதை மறுக்க முடியாது.. பிரச்சனையை உள்ளிருந்தை வெளிப்படுத்த வேண்டும்... பெண்ணடிமை என்பது ஏதோ ஆண்களால் பெண்களுக்கு இழக்கப்படும் ஒரு கொடூரம் என்பதைதான் என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை... இதற்கு முழு சமுகம்தான் பொருபேற்க வேண்டும்... அதே போல் பெண் சுதந்திரம் என்பது ஆண்களை அடிமைப் படுத்தி பெண்கள் அவர்கள் விருப்பதிற்கு எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்பது போல நினைக்க வேண்டாம்.. அதற்கு பேர் பெண்சுதந்திரம் என்ற பொருள் இல்லை .. உரவுகளில் ஒரு உணர்வு வேண்டும்.. அதைதான் நான் இங்கு சொல்லியுள்ளேன்.. (சுதந்திரம் என்பது ஒருவரை அடிமைப்படுத்தி வருவதில்லை) புரிதலாலும் உணர்வாலுமே வரும்.. அப்படிதான் இந்தியாவும் சுதந்திரம் அடைந்தது...நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று வெள்ளைகாரனை அடிமைப்படுத்தவில்லை..

பெண்ணடிமை கழைய ஒரு விழிப்புணர்ச்சி தேவை என்பதை நான் மறுக்கவில்லை.. அதற்காக ஒட்டுமொத்த ஆண்களை குறைசொல்லமுடியாது... இதற்கு இருபாலருக்கும் விழிப்புணர்ச்சி தேவை.. அதிலும் பெண்களுக்கு அதிகமாகவே தேவை என்பதுதான் என் நோக்கம்... உணர்ச்சியில் சொல்லிவிட்டால் எல்லா சரி என்று சொல்லமுடியாது... ஒவ்வொருவரும் உணர்ந்து பகிரதான் வேண்டு,,....

கருத்து பரிமாற்றத்திற்கு நன்றி ராஜ்...