_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, April 4, 2009

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்...

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்...
செய்த பொம்மைகள் இரண்டு, பொம்மைகள் சேர்ந்து செய்த பொம்மைகளோ கோடான கோடி. இந்த பொம்மைகளுக்கு உணர்வுகளும் உறவுகளும் எக்கச்சக்கம். உறவுகளில் முதன்மை அம்மா அப்பா, அதற்கு பின்தான் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மாமி,தாத்தா, பாட்டி, மனைவி கணவன் இப்படியெல்லாம்.

இன்றய அம்மா, அப்பா நேற்றய பிள்ளைகள்; இன்றய பிள்ளைகள் நாளைய அம்மா,அப்பா. உலகமும் உறவுகளும் சுற்றி வருவது இதேபோலதான். இதில் ஏன் என்ற கேள்விகள் அர்த்தம் கொடுக்க முடியாது. அப்பன் துப்பிய எச்சிலில் பிறந்தோம் என்றால் அதில் உணர்வுகளை மறுக்க வேண்டி வரும். யார் என்னை பெற்றெடுக்க சொன்னது? என்ற கேள்வியை யாரிடம் கேட்பது; நாளைய பெற்றொராய் நீ இருந்தால்..... இலங்கை போரில் குண்டு மழைக்குள் தன் பிஞ்சு பிள்ளைகளை தோலில் தூக்கிக்கொண்டு உயிருக்கு போராடி ஓடி வரும் காட்சியை பார்த்தபிறகு, யார் என்னை பெற்றெடுக்க சொன்னது என்ற கேள்வியை கேட்க யாருக்கு துணிவுள்ளது? இந்த உறவுகளில் உணர்வுகளைதான் பார்க்கமுடிகின்றது.

இங்கே யாரும் யாருக்காவோ பிறந்தவர்கள் இல்லை. எல்லோரும் ஒருவர் வழி வந்தவர்கள் என்பதும் சந்தேகம் இல்லை. நமக்குள் இருக்கும் உணர்வுகள் உறவுகளால் பின்னபட்டுள்ளது என்பதும் உண்மை. இந்த உறவுகளை உருவாக்குவதுதான் கணவன் மனைவி என்ற ஒரு முக்கிய நிகழ்வு. இந்த கணவன் மனைவி உறவுக்கு நம்மை நாம் தயார்படுத்த வேண்டும். இந்த உறவுகளில் காமதிற்கு அப்பால் உணர்வும் சார்ந்துள்ளது என்பதை புரியப் படுத்துவது யார்? இதற்கு ஒரு ஆலோசனை(கவுன்சிலிங்) தேவைப்படுகின்றது. கிருஸ்துவ மதத்தில் திருமணத்திற்கு ஆலோசனை நடத்தப்படுகின்றது பாராட்டப் படவேண்டிய விடயம்.

பரிணாம வளர்ச்சியில் நாம் பல மாற்றங்களை கண்டுள்ளோம். முன்பெல்லாம் கணவன் மனைவியிடையே உள்ள சண்டைகள் தெருமுனைக்கே வரும், நான் என் சிறுவயதில் பல பார்த்துள்ளேன். இன்று அப்படியில்லை என்றாலும் பல உறவுகள் கோர்ட்களில் முறிக்கப்படுகின்றது. இதற்கும் கவுன்சிலிங் தேவைப்படுகின்றதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். இதற்கு தன்னைப் பற்றியும் தன் உறவுகளைப் பற்றியும் சரியாக புரிதல் இல்லாததுதான் என்பதும் என் எண்ணங்கள். ஒரு பெண் திருமணதிற்கு பின் கணவனை சார்ந்து வாழத் தொடங்குகின்றாள், என்பதுதான் இன்றைய வழக்கம். இதில் பெற்றோரின் சுயநல தலையிடால்தான் இந்த பிரச்சனைக்கு வேராகின்றது. என்னை பொருத்தவரை தன் மகன் அல்லது தன் மகள் திருமணத்திற்கு முன் இவர்களுக்கும் கவுன்சிலிங் (ஆலோசணை) வழங்கப்பட வேண்டும் என்பது முக்கியம். திருமணதிற்கு பின் தன் மகனிடம் அல்லது தன் மகளிடம் எப்படி புரிதல் வேண்டும் என்பதை ஆலோசனை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். குறிப்பாக இவர்களாகவே ஆலோசனை பெறுவதும் நல்லதே......

பெற்றொர்களிடம் முக்கிய குறைகளாக தன் மகளுக்கும், தன் மருமகளுக்கும் உள்ள புரிதலின் குறைகள்தான் ஒட்டுமொத்த குடும்ப பிரச்சனைக்கு காரணங்களாக இருக்கும். இதற்கு பாரம்பரிய இடைவெளி என்று சொல்லிவிட முடியாது. காலத்தின் மாறங்களாலும் நாகரிக வளர்ச்சிகாளாலும் உடைகள் பழக்கவழக்கங்கள் இளையத் தலைமுறையினரிடம் மாற்றத்தை காணமுடியும். இதை மகள்களிடமும் மருமகளிடமும் காணமுடியும். ஒரு பொற்றோர் தன் மகளின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏன் மருமகளின் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை? இந்த மனோபோக்குதான் இவர்களின் குறைபாடுகளின் அடிநாதம். இதை ஒட்டு மொத்தமாக பாரம்பரிய இடைவெளி என்று சொல்லிவிட முடியாது. மகன் மீது உள்ள அலாதியான பாசம் நமக்கு கிடைக்காமல் போகுமோ என்ற பயம் இப்படியாக நடக்க வாய்ப்பழிக்கின்றது. இதை மகனாலோ மருமகளாலோ புரிய வைப்பது இன்று வாழும் வாழ்க்கை முறையில் கடினமான காரியம். எனவேதான் தன் மகன் மகள் திருமணத்திற்கு முன் தானாகவே சென்று ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றேன்....

நான் மருத்துவமனையில் என் நண்பருக்காக காத்திருந்தேன், அங்கு இருக்கும் செவிலியர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது எல்லாம் வயதான முதியோர்களை மருமகன்கள்தான் அழைத்து வருகின்றனர். ஏன் மகன்கள் அழைத்து வருவதில்லை என்று கேலியுடன் பேசிக்கொண்டார்கள். இவர்களின் கனிப்பும் ஏற்றுகொள்ள வேண்டிய ஒன்று. நான் இதை ஒரு பரினாம மாற்றங்களாக பார்க்கிறேன். இந்த மகன் வேறு ஒருவருக்கு மருமகனாக இருக்கின்றான் என்பதையும் மறந்துவிட கூடாது. என் தந்தைய காலகட்டத்தில் மனைவியானவள் குடும்ப அமைதிக்காக என்ன நேர்ந்தாலும் அமைதி காப்பவளாகவும், கணவன் எப்படி அடித்தாலும் ஏற்றுக்கொண்டு தன் பிள்ளைகளுக்காக சகிக்கும் குணத்துடன் வாழ்ந்ததை என்னால் பார்க்க முடிந்தது. இன்றைய கல்வியறிவு அப்படி ஒரு நிலையைக் ஆண்களுக்கு கொடுக்கவில்லை என்பது பாராட்டக்கூடிய விடயம். இதை பெண்கள் தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்வார்கலோ என்ற எண்ணங்களும் இருக்கத்தான் செய்கின்றது. அப்படி பெண்கள் தனக்கு சாதகமாக எடுத்து கொள்வார்களேயாயின் நாளைய தினங்களில் ஆண் அடிமைப்பற்றி பேச வேண்டி வரலாம் என்பதும் உண்மை.

சிறுவனாக இருக்கும் பொழுது பல வீடுகளில் பார்த்துள்ளேன். அப்பாக்கள் வேலைக்கு சென்று வருவார்கள். சமைக்கும் பலார்த்தங்களை அப்பாவிற்காக தனியாக எடுத்து வைப்பார்கள். இது அரசாங்க வேலையில் இருக்கும் அப்பாக்கள் வீட்டில் அதிகம் பார்த்துள்ளேன். இன்னும் தனி சிறப்பாக முட்டை, பால் என்று தனிக் கவனிப்பு அப்பாக்களுக்கு இருக்கும். இதை பிள்ளைகளும் பெரிப்படுத்திக் கொள்வதில்லை. நாம் அப்பா ஆனால் நமக்கும் கிடைக்கும் என்ற எண்ணம் இருந்திருக்குமோ என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இன்றய பாரம்பரிய மாற்றங்களில் பிள்ளைக்கு பின் தான் மீதம் உள்ளதை பெற்றோர்கள் எடுத்துக்கொள்கின்றனர். (அப்படியெல்லாம் இல்லை என்ற வாதம் வரலாம் நான் எதையும் குறையாக சொல்லவில்லை மாற்றங்களை சொல்கின்றேன்) பிள்ளையின் பெயர் என்ன? பிள்ளை என்ன படிக்கின்றார்கள் என்று தெரியாமல் இருக்கும் பெற்றோர்கள் கூட இருந்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இன்றைய காலம் அப்படியில்லை கல்வியால் பரினாம வளர்ச்சியால் மாற்றங்கள் இருக்கின்றது. இதை நேற்றய அம்மா அப்பாக்கள புரிந்துக்கொள்ளதான் வேண்டும். எனவேதான் கவுன்சிலிங் வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கின்றேன்.

ஒவ்வொரு உறவுகளின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு வாழ்ந்தால் நாம் மகிழ்வதுடன் நம்மை சாந்தவர்களும், நம் உறவுகளும் மகிழ்வுடன் இருப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இப்படிப்பட்ட புரிதல் வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதிவு... நேரமும் எழுதுவதற்கு ஏற்ற உந்துதலும் வந்தால் மேலும் உணர்வுகளின் பகிர்வுகளைப்பற்றி எழுதுகின்றேன்...

அன்புடன்..
ஆ.ஞானசேகரன்.

28 comments:

Anonymous said...

me the first

Anonymous said...

very nice post

ஆ.ஞானசேகரன் said...

//கடையம் ஆனந்த் said...
very nice post//

நன்றி கடையம் ஆனந்த் சார்..

தமிழ்நெஞ்சம் said...

எப்படிங்க இப்படியெல்லாம். நல்லா எழுதி இருக்கிங்க. கலக்குங்க

ஆ.ஞானசேகரன் said...

//தமிழ்நெஞ்சம் said...
எப்படிங்க இப்படியெல்லாம். நல்லா எழுதி இருக்கிங்க. கலக்குங்க//

உங்கள் மனம்திறந்த பாராட்டுக்கும் நன்றி தமிழ்நெஞ்சம்

malar said...

நல்ல பதிவு

ஆ.ஞானசேகரன் said...

// malar said...
நல்ல பதிவு//

உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க

ஆ.முத்துராமலிங்கம் said...

உண்மை உணமை புரிதல் வேண்டும்
எல்லோரிடத்திலும்

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
உண்மை உணமை புரிதல் வேண்டும்
எல்லோரிடத்திலும்
//

வாங்க ஆ.முத்துராம்லிங்கம்.. உங்களின் கருத்துரைக்கு நன்றி

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
// malar said...
நல்ல பதிவு//

//

நல்ல பதிவில், நல்லதொரு இடுகை!

ஆ.ஞானசேகரன் said...

//பழமைபேசி said...
//ஆ.ஞானசேகரன் said...
// malar said...
நல்ல பதிவு//

//

நல்ல பதிவில், நல்லதொரு இடுகை!//

நன்றிங்க

ஆதவா said...

புரிதல்...

இந்த வார்த்தைக்கான முழு அர்த்தத்தைத்தான் நாம் புரிந்து கொள்வதில்லை... பிரச்சனைகளுக்கான காரணங்களை யாரும் ஆராய்வதில்லை. இருவர் பிரச்சனைக்கு நடுவில் அமர்ந்து யாரும் யோசிப்பதில்லை.

உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதற்கு முன் யாரும் மாத்திரைக்கும் யோசிப்பதில்லை!!

அருமையான பதிவு!!! ஒரு சுழற்சியின் வழியாக நம் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. காலப் போக்கில் அந்த சுழற்வுக்குள் நம்மைப் பொருத்திக் கொள்ளவேண்டும்!! அல்லது மெளனமாகவே இருந்துவிடவேண்டும்!!

அழகிய எழுத்து நடையும் ஆழமான உணர்வுள்ள கருத்தும் கொண்ட இப்பதிவை விட்டு சட்டென்று அகல எனக்கு மனம் வரவில்லை!! மீண்டும் ஒருமுறை வந்து பார்க்கிறேன்!!

அன்புடன்
ஆதவா

ஆ.ஞானசேகரன் said...

வாங்க ஆதவா,

உங்களின் ஆழமான கருத்து இந்த சமுக வாழ்வின் எதார்த்தங்களை புரிந்துகொண்ட உணர்வு தெரிகின்றது.
//இருவர் பிரச்சனைக்கு நடுவில் அமர்ந்து யாரும் யோசிப்பதில்லை.//

நல்ல சொல்லில் அடித்தீர்கள் இது எல்லா இடங்கலுக்கும் பொருத்தமாக இருக்கின்றது.

//ஒரு சுழற்சியின் வழியாக நம் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. காலப் போக்கில் அந்த சுழற்வுக்குள் நம்மைப் பொருத்திக் கொள்ளவேண்டும்!! அல்லது மெளனமாகவே இருந்துவிடவேண்டும்!!//

சமுதாயத்தின் மீது அக்கரையுள்ள இளஞானாக பிரதிபலிக்கின்றாய் ஆதவா....

நன்றி நன்றி நன்றி.......

கிரி said...

உங்கள் கருத்தை மட்டுமே வலியுறுத்தி கூறாமல் உங்கள் எண்ணங்களை கூறி இருப்பது ரசிக்கும் படி உள்ளது.

நல்ல பதிவு ஞானசேகரன்

ராம்.CM said...

நல்ல கருத்து... நல்லா எழுதியுள்ளீர்கள்.....

ஆ.ஞானசேகரன் said...

//கிரி said...
உங்கள் கருத்தை மட்டுமே வலியுறுத்தி கூறாமல் உங்கள் எண்ணங்களை கூறி இருப்பது ரசிக்கும் படி உள்ளது.

நல்ல பதிவு ஞானசேகரன்//

வாங்க கிரி... உங்களின் பாராட்டு என்னை மகிழசெய்கின்றது...

ஆ.ஞானசேகரன் said...

// ராம்.CM said...
நல்ல கருத்து... நல்லா எழுதியுள்ளீர்கள்.....//

வணக்கம் ராம்... உங்களின் பாராட்டுக்கு நன்றி..

பழமைபேசி said...

சிங்கப்பூர் ஞானசேகரன்...வாழ்த்துகள் ஐயா!

ஆ.ஞானசேகரன் said...

//பழமைபேசி said...
சிங்கப்பூர் ஞானசேகரன்...வாழ்த்துகள் ஐயா!//

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே...... நல்லா இருக்கிங்கலா..

RajK said...

குணா படத்திலிருந்து ஒரு பாடல்:

அப்பெனென்றும் அம்மையென்றும்
ஆணும் பெண்ணும் ஒட்டி வைத்த
குப்பையாக வந்த உடம்பு! - அது
புத்தனென்றும் சித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாக போகும் கரும்பு!
பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்...
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்!

இதை தான், ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ், "நாமெல்லாம் வேதியல் எச்சங்கள்!" என்கின்றார். இந்த குப்பை-உடம்பை எந்த கங்கை ஆற்றில் குளித்தாலும் அது போகாது; பந்தம், பாசம், உணர்வுகள் என்று எதை சேர்த்தாலும் இது குப்பை தான்... வெறும் வேதியல் எச்சம் தான்! பிள்ளைகளுக்காக உயிர் விடும் மனிதர்களையும் தெரியும்...அதற்கு எந்த வகையிலும் குறையாத விலங்குகளையும் தெரியும். அம்மா பிள்ளைகளுக்காக செய்யும் தியாகங்கள் எல்லாம் அவளின் சுயநலமே! அதை அவள் பெரிது படுத்தும் போது, பிள்ளை கேட்கும் கேள்வி - யார் என்னை பெற்றெடுக்க சொன்னது? இங்கே குப்பைகள் கிளரப்படுகின்றன.

(நீங்கள் கூறும் மாற்றங்கள் யாவும், கணவன்-மனைவி தெருமுனை சண்டைகள் உட்பட, சமூக பொருளாதார மாற்றங்களே...பரிணாம வளர்ச்சி மாற்றங்கள் அல்ல.)

தன் மகனோ, மகளோ திருமணமான பிறகு, கணவன்-மனைவி சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற ஒன்று மட்டுமே பெற்றோர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். இதில் பெற்றோர்களின் மற்ற குப்பைகள் தேவையற்றது - இதை சுயநலமாவோ அல்லது தியாகமாகவோ அவர்கள் செய்ய வேண்டும்.

உணர்வுகளை புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் சொல்லுகின்றனர். ஆனால், அவர்கள் உண்மையில் சொல்லுவதெல்லாம் அவர்களை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே...ஏனென்றால் அவரவருக்கு அவர் செய்வதே, தெரிந்ததே சரி. இதில் மிகவும் மோசமான ஒன்று, தன் கருத்தை அடுத்தவரிடம் திணிப்பது.

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான பதிவு நண்பா.. சிந்திக்க வைத்து விடுகிறீர்கள்..

ஆ.ஞானசேகரன் said...

//RajK said...
குணா படத்திலிருந்து ஒரு பாடல்:

அப்பெனென்றும் அம்மையென்றும்
ஆணும் பெண்ணும் ஒட்டி வைத்த
குப்பையாக வந்த உடம்பு! //

வணக்கம் ராஜ்.. உங்களின் கருத்து தவறு என்று சொல்வதிற்கில்லை,, இப்படிபட்ட கருத்துகள் வாழ்கையை ருசித்தவன் சொல்லமுடியாது... ஏதோ வாழ்கையை புறமிருந்து ஆராய்ச்சி செய்த்வனாலெயே சொல்லமுடியும்.. சில வேலைகளில் ருசிக்க கற்றுகொள்ளதான் வேண்டும்..


//அதற்கு எந்த வகையிலும் குறையாத விலங்குகளையும் தெரியும்.//
விலங்குகளுக்கும் உணர்வு இருக்கின்றது என்பதை நான் மறுக்கவில்லை.. விலங்குகளுக்கு இருக்கும் உணர்வு ஏன் மனிதன் மறுக்க முற்படுகின்றான் என்பதுதான் என் நிலை...


//(நீங்கள் கூறும் மாற்றங்கள் யாவும், கணவன்-மனைவி தெருமுனை சண்டைகள் உட்பட, சமூக பொருளாதார மாற்றங்களே...பரிணாம வளர்ச்சி மாற்றங்கள் அல்ல.)//

முழுமையாக பருணாம வளர்ச்சி இல்லை என்றாலும் பொருளாதார மாற்றம் என்று சொல்வதிற்கில்லை..

//உணர்வுகளை புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் சொல்லுகின்றனர். ஆனால், அவர்கள் உண்மையில் சொல்லுவதெல்லாம் அவர்களை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே...ஏனென்றால் அவரவருக்கு அவர் செய்வதே, தெரிந்ததே சரி. இதில் மிகவும் மோசமான ஒன்று, தன் கருத்தை அடுத்தவரிடம் திணிப்பது.//

எதிர்ப்பார்ப்பதையும் திணிப்பதையும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இரண்டுக்கும் இடைவெளி சிறிதுதான்.. அவற்றின் உணர்வுகள் வேறு வேறு.. பலனும் வேறு.. இதை புரியாமல்தான் பலர் பிற்போக்கு சிந்தனைகளை முற்போக்கு என்ற தவற்றை செய்கின்றனர்.. தன் உணர்வுகளை மற்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்ற சுயநலம் உள்ளவர்கள, மற்றவர்களின் எதிர்பார்ப்பையும், உணர்வுகளையும் மதிக்க தெரியவில்லை என்றுதான் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது... குறைந்தபச்சம் உறவுகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளாவிட்டாலும் பறவாயில்லை மதிக்க கற்றுகொண்டால்.... எல்லா உணர்வுகளும் மகிழும்.....


நல்ல கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி......

ஆ.ஞானசேகரன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
அருமையான பதிவு நண்பா.. சிந்திக்க வைத்து விடுகிறீர்கள்..//

வாங்க கார்த்திகைப் பாண்டியன்... உங்களின் வருகையும்.. சிந்தனைக்கும் நன்றியுடன் மகிழ்ச்சியடைகின்றேன்....

RajK said...

மனிதன் உணர்ச்சிக்கும் அறிவிற்கும் இடையே அலைகழிக்கப்படுகின்றான்...அடுத்தவரையும் அலைகழிக்க வைக்கின்றான். அதை அரைகுறையாக புரிந்தவன் காசிக்கும், இமயமலைக்கும் போகின்றான். அவன் வேண்டுமானால் வாழ்வின் ருசி தெரியாமல் இருக்கலாம். ஆனால் அறிவின் பார்வையில் வாழ்வின் அழகையையும் காண முடியும் - அது சமானியனின் பார்வையில் இருந்து வித்தியாசமாக இருக்கலாம். உண்மையில் அறிவு கொடுப்பது வெட்டி கட்டுபாடுகளிலிருந்து விடுதலை பெறும் ஒரு முக்தி நிலை.

எதிர்பார்ப்பதற்கும் திணிப்பதற்கும் உள்ள இடைவெளி மிக மிக பெரியது. (பிற்போக்கு முற்போக்கு சிந்தனைகளுக்கும் இதற்கும் எந்த சம்மந்தம் என்று தெறியவில்லை. மேலும் சுயநலம் அற்றவர்கள் யாரேனும் இருந்தால் கூறுங்கள்.) எதிர்பார்ப்பது தெரிந்த பழகி போன ஒன்றுக்குத்தான் வரும்; அதனால் அதன் உணர்வுகள் தெரிந்த ஒன்றாவே இருக்க வேண்டும். ஆனால் எதிர்பார்ப்புகளை திணிக்கும் போது தான், உணர்ச்சி தலைக்கேறி அடுத்தவர் கொடுக்கும் மதிப்பு தெரியாமல் போகும்.

கேள்வின் நாயகன் said...

//விலங்குகளுக்கு இருக்கும் உணர்வு ஏன் மனிதன் மறுக்க முற்படுகின்றான் என்பதுதான் என் நிலை.//
எல்லோரும் நீ மிருகம் போல் இருக்காதே, மனிதனாக இரு என்கிறார்கள். நீங்கள் என்னடான்ன, உங்கள் மிருகம் உணர்வு மறுக்க படுவதற்காக வருந்துகிறீர்கள்! பலே! அப்படி போடு, உட்டாலங்கடி! நண்பர் ஒருவர் உங்கள் blog-க்கை அறிமுக படுத்தினார். கேள்வியின் நாயகன் கேள்வி கேட்காமல் இருந்தால் எப்படி, இதோ...

//யார் என்னை பெற்றெடுக்க சொன்னது என்ற கேள்வியை கேட்க யாருக்கு துணிவுள்ளது?//
இப்படி நீங்களே முடிவெடுத்து விட்டால் எப்படி?

//இந்த உறவுகளில் காமதிற்கு அப்பால் உணர்வும் சார்ந்துள்ளது என்பதை புரியப் படுத்துவது யார்?//
அப்படி என்ன தான் பெரிதாக உள்ளது? ஆயிரமாயிரம் வருடங்களாகத் தொடரும் இந்த விளையாட்டில் அப்படி என்னத்தை புதிதாக புரிய வைக்க போகிறீர்கள்?

ஆ.ஞானசேகரன் said...

//கேள்வின் நாயகன் said...
நண்பர் ஒருவர் உங்கள் blog-க்கை அறிமுக படுத்தினார். //

வணக்கம் கேள்வின் நாயகன், உங்களின் கேள்வியே பலமா இருக்கு.. என்வலையை அறிமுகம் செய்த நண்பருக்கு நன்றிகள்.. அறிமுகம் செய்யும் அளவிற்கு என் வலை இருக்கா? என எனக்கு ஆச்சரியம்..

////யார் என்னை பெற்றெடுக்க சொன்னது என்ற கேள்வியை கேட்க யாருக்கு துணிவுள்ளது?//
இப்படி நீங்களே முடிவெடுத்து விட்டால் எப்படி?///

நண்பரே கேள்வியை மட்டுமே எடுத்து கேட்கின்றீர்கள்.. அதன் கூடே இருக்கும் வாக்கியத்தை விட்டுவிட்டால் அர்த்தம் அபந்தமாக இருக்கும்...>>>>>
என்ற கேள்வியை யாரிடம் கேட்பது; நாளைய பெற்றொராய் நீ இருந்தால்..... இலங்கை போரில் குண்டு மழைக்குள் தன் பிஞ்சு பிள்ளைகளை தோலில் தூக்கிக்கொண்டு உயிருக்கு போராடி ஓடி வரும் காட்சியை பார்த்தபிறகு, யார் என்னை பெற்றெடுக்க சொன்னது என்ற கேள்வியை கேட்க யாருக்கு துணிவுள்ளது? எதார்த்தமான உண்மைகளும் புதைந்துள்ளது. மேலேட்டமான கேள்வியை பல இளஞர்கள் கேட்டுகொண்டுதான் இருக்கின்றனர்... நீங்கள் தற்பொழுது செய்யும் நிகழ்வுக்கு அர்த்தம் கொடுக்க வாழ்கின்றீர்களா? அப்படி அர்த்தம் கொடுக்க வாழ முற்படுபவர்களுக்கு இந்த கேள்வியின் பதிலும் நான் சொன்ன சொற்களுக்கு சொந்தமாகதான் இருக்கும்..

////இந்த உறவுகளில் காமதிற்கு அப்பால் உணர்வும் சார்ந்துள்ளது என்பதை புரியப் படுத்துவது யார்?//
அப்படி என்ன தான் பெரிதாக உள்ளது? ஆயிரமாயிரம் வருடங்களாகத் தொடரும் இந்த விளையாட்டில் அப்படி என்னத்தை புதிதாக புரிய வைக்க போகிறீர்கள்?//

ஆயிரமாயிரம் வருடங்களாக தொடரும் இந்த விளையாட்டில் புதிதாக புரியவைக்க ஒன்றுமில்லை ஆனால் புரியவேண்டிய காலத்தில் புரிந்து கோள்ளவேண்டும் என்பதுதான் கவுன்சிலிங்.... அந்த நிலையை தாண்டிய பிறகு புரிந்துவிட்டு என்ன பயன்.. அதனால்தான் அதற்கு முன் நம்மை தயார்படுத்துதல் வேண்டும் என்று சொல்கின்றேன்..... "சாகுபொழுது சங்கரா சங்கரா என்று சொல்லவேண்டாமே"

நன்றி நண்பரே

ஹேமா said...

அறிவுபூர்வமான தேடல் ஒன்று.
உறவுகளோடு ஒன்றியே உணர்வுகளும் இருக்கும்.அதுவும் தமிழனின் உறவுப் பின்னல் சிக்கிக் கிடப்பதும் அதேவேளை பிரிக்கமுடியாததும்.

இங்கு நான் காணவில்லை எங்களைப்போல் பாசப் பிணைப்பான மனிதர்களை.நிறைய உண்மையாய் விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள் ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
அறிவுபூர்வமான தேடல் ஒன்று.
உறவுகளோடு ஒன்றியே உணர்வுகளும் இருக்கும்.அதுவும் தமிழனின் உறவுப் பின்னல் சிக்கிக் கிடப்பதும் அதேவேளை பிரிக்கமுடியாததும்.

இங்கு நான் காணவில்லை எங்களைப்போல் பாசப் பிணைப்பான மனிதர்களை.நிறைய உண்மையாய் விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள் ஞானசேகரன்.//


நன்றி ஹேமா....