_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, August 10, 2009

இப்படிக்கு உதவும் கரம்...

இப்படிக்கு உதவும் கரம்...

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு நடந்த சம்பவம் ஒன்று. அவரசமான வேலையாக சென்றுக்கொண்டிருந்தார், கடைவீதி என்பதால் மக்கள் கூட்டம் நெரிசல் அதிகமாக இருந்தது. அந்த கூட்டத்திலும் ஒரு தாய் கைகுழந்தையுடன் "அண்ணா குழந்தை பசிக்காக அழுகின்றது உதவி செய்யுங்கள்" என்று சட்டையை பிடித்து கேட்டாள். கொஞ்சம் இரக்க குணம் உள்ளவர் வேறு வழியின்றி பணப்பையை சட்டையிலிருந்து எடுத்து உதவி செய்துவிட்டு அவசரமாக சென்று பேருந்து ஏறியதும்தான் தெரிந்தது அவரின் பணப்பை காணவில்லை. என்ன பன்னுவது உதவி செய்ததிற்கு கிடைத்த சன்மானம் ஏற்றுக்கொள்ளதானே வேண்டும். இதை அவர் வழியாக நான் கேட்டதிலிருந்து அப்படிப்பட்ட உதவிகளை நான் செய்வதில்லை என்றே சொல்லாம். ஏனனில் பயமும் ஒரு காரணம்.
இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் மேலே ஜென் கதை ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. சாது ஒருவன் குதிரையில் மலைப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தார். மாலை நேரம் இன்னும் நகரத்தை அடைய வெகுதூரம் இருந்ததால் வேகத்தை கூட்டினார். போகும் வழியில் ஒருவன் சாலை ஒரம் மயங்கி கிடந்தான். அதை கண்டதும் சாது குதிரையை விட்டு இறங்கி அவனை நகர்த்தி பார்த்தார். அவன் அசையாமல் கிடந்ததால் குதிரையில் தொங்கவிடப்பட்ட குடுவையில் நீரை எடுத்து முகத்தில் தெளித்து பின் சிறிது அவனை அருந்த செய்து அவனை குதிரையின் மேல் ஏற்றினார். குதிரையில் அந்த நபர் ஏறி குதிரையின் கடிவாளத்தை ஆட்டியதும் குதிரை சிட்டாக பறந்தது. குதிரை சென்று சிறிது நேரத்திற்கு பின் தான் சாதுக்கு புரிந்தது வந்தவன் திருடன் என்றும் தன்னுடைய குதிரை களவாட பட்டது என்றும். இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதையும் புரிந்துக் கொண்டார் சாது.

குதிரையை பறிக்கொடுத்துவிட்டு மெதுவாக நகரத்தை நோக்கி நடக்க தொடங்கினார். பொழுது புலரும் நேரத்தில் நகரத்தை அடைந்தார். பின் குளித்து உடை மாற்றிக்கொண்டு சந்தைக்கு சென்றார் சாது. சந்தையில் தன் குதிரையுடன் அந்த திருடன் நின்றுக்கொண்டிருந்தான். மெதுவாக சாது அவன் பின் புறம் கையால் தட்டினார். திருடன் பேயறைந்தது போல நின்றான்.

சாது மெல்ல சிரித்துகொண்டே "சொல்லாதே" என்றார். அவனோ என்னவென்று புரியாது விழித்தான்.

சாது சொன்னார் " குதிரையை நீயே வைத்துக்கொள் ஆனால் நீ அந்த குதிரையை எப்படி பெற்றாய் என்ற வித்தையை மட்டும் சொல்லி விடாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரிந்தால் எதிர் காலத்தில் உண்மையிலேயே மயங்கிகிடக்கும் ஒருவனுக்கு உதவி செய்யமாட்டார்கள் என்ன புரிகின்றதா? " என்று சாது கூறியதும் திருடன் கலங்கினான்.

இப்படிப்பட்ட ஏமாற்றுவாதிகள் இருப்பதால் தான் உண்மையில் உதவி கிடைக்க வேண்டியவர்களுக்கு உதவி கிடைக்காமலே போய் விடுகின்றது. அதே போல் லஞ்சமும் பொய் வாக்குறுதிகளும் கொடுக்கும் அரசியல் வாதிகள் மத்தியில் தோழர் கக்கன் போன்றவர்களுக்கு மதிப்பு இல்லாமலே போய்விடுகின்றது. உண்மையும் எதார்த்தமான வாழ்க்கையும் புதைந்துகொண்டுள்ளது என்பது தான் நாளைய உலகத்தின் கேள்விக்குறி?????........

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

56 comments:

காமராஜ் said...

ஒரு சம்பவம், ஜென் கதை, அதோடு அரசியல். அசத்துங்கள்
ஞானசேகரன்.

S.A. நவாஸுதீன் said...

சாது சொன்னார் " குதிரையை நீயே வைத்துக்கொள் ஆனால் நீ அந்த குதிரையை எப்படி பெற்றாய் என்ற வித்தையை மட்டும் சொல்லி விடாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரிந்தால் எதிர் காலத்தில் உண்மையிலேயே மயங்கிகிடக்கும் ஒருவனுக்கு உதவி செய்யமாட்டார்கள் என்ன புரிகின்றதா? " என்று சாது கூறியதும் திருடன் கலங்கினான்.

அசர வைத்த பகுதி. நல்ல பகிர்வு நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

// காமராஜ் said...

ஒரு சம்பவம், ஜென் கதை, அதோடு அரசியல். அசத்துங்கள்
ஞானசேகரன்.//

வாங்க நண்பா.. மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//S.A. நவாஸுதீன் said...

சாது சொன்னார் " குதிரையை நீயே வைத்துக்கொள் ஆனால் நீ அந்த குதிரையை எப்படி பெற்றாய் என்ற வித்தையை மட்டும் சொல்லி விடாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரிந்தால் எதிர் காலத்தில் உண்மையிலேயே மயங்கிகிடக்கும் ஒருவனுக்கு உதவி செய்யமாட்டார்கள் என்ன புரிகின்றதா? " என்று சாது கூறியதும் திருடன் கலங்கினான்.

அசர வைத்த பகுதி. நல்ல பகிர்வு நண்பரே//

வணக்கம் நண்பா,.. உங்களின் வருகை என்னை மகிழசெய்கின்றது

சி தயாளன் said...

சம்பவமும் அதனுடன் தொடர்புடைய கதையும் இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது..:-(

ராமலக்ஷ்மி said...

பொய் சொல்லி உதவிகளைப் பெற்றுக் கொள்பவர்கள் ஒரு ரகம் என்றால் நடித்து உதவி செய்தவர்களிடமே அடாவடியாகப் பறிப்பவர் இன்னொரு ரகம்.

முதல் ரகத்தினரைப் பற்றி தெரிய வரும் போது, சரி நாம் நல்லது நினைத்தே செய்தோம் என விட்டு விடலாம். ஆனால் அடுத்தது:(?

ஆ.ஞானசேகரன் said...

// ’டொன்’ லீ said...

சம்பவமும் அதனுடன் தொடர்புடைய கதையும் இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது..:-(//

வாங்க டொன் லீ ...
நீங்கள் கூறுவதும் உண்மை என்று சொல்லும் நிலையிதான் இருக்கின்றோம்..உங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

//ராமலக்ஷ்மி said...

பொய் சொல்லி உதவிகளைப் பெற்றுக் கொள்பவர்கள் ஒரு ரகம் என்றால் நடித்து உதவி செய்தவர்களிடமே அடாவடியாகப் பறிப்பவர் இன்னொரு ரகம்.

முதல் ரகத்தினரைப் பற்றி தெரிய வரும் போது, சரி நாம் நல்லது நினைத்தே செய்தோம் என விட்டு விடலாம். ஆனால் அடுத்தது:(?//

என்ன பன்னுவது...
கதையில் சாது சொல்வதுதான் நாமும் செய்யனுமா என்று நினைக்க தோன்றுகின்றதே!!!!!!!

உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா

வலசு - வேலணை said...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பதா? அல்லது, ஏமாற்றுபவர்கள் தாங்களாக திருந்தும்வரை யாராவது சிலர் ஏமாந்துகொண்டே இருப்பார்கள் என்பதா?

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல கதை.. படிப்பிணை!! நன்றி

priyamudanprabu said...

சாது சொன்னார் " குதிரையை நீயே வைத்துக்கொள் ஆனால் நீ அந்த குதிரையை எப்படி பெற்றாய் என்ற வித்தையை மட்டும் சொல்லி விடாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரிந்தால் எதிர் காலத்தில் உண்மையிலேயே மயங்கிகிடக்கும் ஒருவனுக்கு உதவி செய்யமாட்டார்கள் என்ன புரிகின்றதா? " என்று சாது கூறியதும் திருடன் கலங்கினான்.
..

//

நல்லகதை

நிஜம்தான்

என் நன்பன் ஒருவன் என்னை ஏமாற்றிய வலி இன்னும் என் மனதில் உள்ளது

இப்போதும் நன்பர்களுக்கு உதவுகிறேன்
ஆனால் அதிக கவனத்துடன்

Admin said...

எல்லோருக்கும் படிப்பினையை ஊட்டக்கூடிய கதை....

தொடருங்கள் உங்கள் பணியை வாழ்த்துக்கள்....

கலையரசன் said...

//உண்மையிலேயே மயங்கிகிடக்கும் ஒருவனுக்கு உதவி செய்யமாட்டார்கள் என்ன புரிகின்றதா?//
நம்ம ஊரு புலி வருது கதை போல் உள்ளது!
இருந்தாலும் நல்லாயிருக்கு.. நடத்துங்க!!

அன்புடன் அருணா said...

மனதை வலிக்கச் செய்கிறது....இருந்தாலும் அழகாகப் பதிந்திருக்கிறீர்கள்!

Anonymous said...

நல்லபதிவு நண்பா... உதவியையும் பார்த்து தான் செய்ய வேண்டும். கதை அருமை. உங்கள் எழுத்து நடை அழகாக இருக்கு.

சி.கருணாகரசு said...

உதவுவதா வேண்டாமா? எப்படித்தான் சரியானவர்கலுக்கு உதவுவது.

ப்ரியமுடன் வசந்த் said...

//இப்படிப்பட்ட ஏமாற்றுவாதிகள் இருப்பதால் தான் உண்மையில் உதவி கிடைக்க வேண்டியவர்களுக்கு உதவி கிடைக்காமலே போய் விடுகின்றது. //

உண்மைதான்...

ஆ.ஞானசேகரன் said...

//வலசு - வேலணை said...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பதா? அல்லது, ஏமாற்றுபவர்கள் தாங்களாக திருந்தும்வரை யாராவது சிலர் ஏமாந்துகொண்டே இருப்பார்கள் என்பதா?//

பாத்திரம் அறிந்து பிச்சையிடுங்கள் என்று சும்மாவா சொன்னார்கள்.... நாமும் கொஞ்சம் மின் எச்சரிகையுடன் இருப்பதும் நல்லதுதானே

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல கதை.. படிப்பிணை!! நன்றி//

வாங்க நண்பா.
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...

சாது சொன்னார் " குதிரையை நீயே வைத்துக்கொள் ஆனால் நீ அந்த குதிரையை எப்படி பெற்றாய் என்ற வித்தையை மட்டும் சொல்லி விடாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரிந்தால் எதிர் காலத்தில் உண்மையிலேயே மயங்கிகிடக்கும் ஒருவனுக்கு உதவி செய்யமாட்டார்கள் என்ன புரிகின்றதா? " என்று சாது கூறியதும் திருடன் கலங்கினான்.
..

//

நல்லகதை

நிஜம்தான்

என் நன்பன் ஒருவன் என்னை ஏமாற்றிய வலி இன்னும் என் மனதில் உள்ளது

இப்போதும் நன்பர்களுக்கு உதவுகிறேன்
ஆனால் அதிக கவனத்துடன்//

ஆம் மிக்க நல்லது நண்பா...
வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி பிரபு

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...

எல்லோருக்கும் படிப்பினையை ஊட்டக்கூடிய கதை....

தொடருங்கள் உங்கள் பணியை வாழ்த்துக்கள்....//

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

/// கலையரசன் said...

//உண்மையிலேயே மயங்கிகிடக்கும் ஒருவனுக்கு உதவி செய்யமாட்டார்கள் என்ன புரிகின்றதா?//
நம்ம ஊரு புலி வருது கதை போல் உள்ளது!
இருந்தாலும் நல்லாயிருக்கு.. நடத்துங்க!!///

வணக்கம் நண்பா,..
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// அன்புடன் அருணா said...

மனதை வலிக்கச் செய்கிறது....இருந்தாலும் அழகாகப் பதிந்திருக்கிறீர்கள்!//

ங்ங்ங்... வாங்க அருணா..
நன்றி நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// கடையம் ஆனந்த் said...

நல்லபதிவு நண்பா... உதவியையும் பார்த்து தான் செய்ய வேண்டும். கதை அருமை. உங்கள் எழுத்து நடை அழகாக இருக்கு.//

வணககம் ஆனந்,..
உங்களின் பாராட்டுகளுக்கும் ஊக்கங்களுக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.. நெஞ்சார்ந்த நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// சி.கருணாகரசு said...

உதவுவதா வேண்டாமா? எப்படித்தான் சரியானவர்கலுக்கு உதவுவது.//

வாங்க நண்பா,,..
நாம் மற்றவர்களை ஏமாற்றாமல் இருப்பதே நாம் இந்த சமுகத்திற்கு செய்யும் நல்ல சேவையே... நாம் அருகில் உள்ளவர்களுக்கு செய்யும் சிறு உதவியே பேருதவிதான்... பாத்திரம் அரிந்து பிச்சை இடுதல் என்பது ஒரு அனுபவ வாக்கியம்..

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன்.........வசந்த் said...

//இப்படிப்பட்ட ஏமாற்றுவாதிகள் இருப்பதால் தான் உண்மையில் உதவி கிடைக்க வேண்டியவர்களுக்கு உதவி கிடைக்காமலே போய் விடுகின்றது. //

உண்மைதான்...//

வாங்க நண்பா,..
உங்களின் வருகைக்கும் கருத்துரைக்க்கும் மிக்க நன்றிங்க

கிடுகுவேலி said...

சொல்ல வேண்டிய விடயத்தை சும்மா நசூக்காக 'நச்' என்று போட்டது போல சொல்லிவிட்டீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.

A.G.LOUIS said...

ஐயா உன்மையானவனை அடையாலம் கான்பது எப்படி

ஆ.ஞானசேகரன் said...

//கதியால் said...

சொல்ல வேண்டிய விடயத்தை சும்மா நசூக்காக 'நச்' என்று போட்டது போல சொல்லிவிட்டீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// A.G.LOUIS said...

ஐயா உண்மையானவனை அடையாள்ம் காண்பது எப்படி?//

உண்மையானவனை அடையாளம் காண்பது நம்முடைய வேலையில்லையே!.. அப்படிபட்ட ஏமாற்று வேலைகளை நாம் செய்யாமல் இருப்பதே நாம் இந்த சமுகதிற்கு செய்யும் சேவை.. அதே போல் நாம் செய்யும் உதவி சாரியான இடத்திற்குதான் செல்கின்றதா? என்பதை ஆராய்ந்து செய்தலும் முக்கியம்.. பாத்திரம் அறிந்து பிச்சையிடு..

மிக்க நன்றி நண்பரே

தேவன் மாயம் said...

ஞான்ஸ்!!!
ஒரு கட்டுரை அனுப்பியுள்ளேன்!!!

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம் said...

ஞான்ஸ்!!!
ஒரு கட்டுரை அனுப்பியுள்ளேன்!!!//

மிக்க நன்றி தேவன் சார்... இன்னும் வரவேற்கின்றோம் நண்பர்களிடம் சொல்லுங்கள்.. முடிந்தால் தேதி ஒத்திவைக்க சொல்லியுள்ளேன்.. மிக்க நன்றி சார்.. மேலும் ஒரு கட்டுரை அனுப்பி வையுங்கள்

Raju said...

\\இப்படிப்பட்ட ஏமாற்றுவாதிகள் இருப்பதால் தான் உண்மையில் உதவி கிடைக்க வேண்டியவர்களுக்கு உதவி கிடைக்காமலே போய் விடுகின்றது. \\

100 % உண்மை.

ஆ.ஞானசேகரன் said...

// டக்ளஸ்... said...

\\இப்படிப்பட்ட ஏமாற்றுவாதிகள் இருப்பதால் தான் உண்மையில் உதவி கிடைக்க வேண்டியவர்களுக்கு உதவி கிடைக்காமலே போய் விடுகின்றது. \\

100 % உண்மை.//

வாங்க நண்பா,..
மிக்க நன்றிங்க

Suresh Kumar said...

நல்ல பகிர்வு நண்பா நன் லேட் ஆகிட்டேன் போல இருக்கு

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

நல்ல பகிர்வு நண்பா நன் லேட் ஆகிட்டேன் போல இருக்கு//

வாங்க நண்பா,..
மிக்க நன்றிபா

குடந்தை அன்புமணி said...

நல்ல பகிர்வு நண்பா. பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று முதுமொழிதான். ஆனாலும் பல சமயம் ஏமாந்துதான் போய்விடுகிறோம்.

பிழைகள் திருத்துங்கள்...

நெருசல் - நெரிசல்
சன்மாணம் - சன்மானம்
வாக்குருதி - வாக்குறுதி

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தை அன்புமணி said...

நல்ல பகிர்வு நண்பா. பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று முதுமொழிதான். ஆனாலும் பல சமயம் ஏமாந்துதான் போய்விடுகிறோம்.

பிழைகள் திருத்துங்கள்...

நெருசல் - நெரிசல்
சன்மாணம் - சன்மானம்
வாக்குருதி - வாக்குறுதி//

வணக்கம் நண்பா,.. மிக்க நன்றி
பிழைகளை திருத்திவிட்டேன் மீண்டும் நன்றி

சப்ராஸ் அபூ பக்கர் said...

சாதுவின் கதை படிப்பினை நிறைந்த ஒரு கதை....

அருமையாக இருந்தது.. வாழ்த்துக்கள்....

ஆ.ஞானசேகரன் said...

//சப்ராஸ் அபூ பக்கர் said...

சாதுவின் கதை படிப்பினை நிறைந்த ஒரு கதை....

அருமையாக இருந்தது.. வாழ்த்துக்கள்....//

உங்களின் வருகைக்கும் பதிப்புக்கும் மிக்க நன்றி நண்பா

Muniappan Pakkangal said...

Yarukkum uthavi seyya payamaaha irukkirathu Gnanaseharan.Neengal solluvathu sari.

சொல்லரசன் said...

//இப்படிப்பட்ட ஏமாற்றுவாதிகள் இருப்பதால் தான் உண்மையில் உதவி கிடைக்க வேண்டியவர்களுக்கு உதவி கிடைக்காமலே போய் விடுகின்றது.//

உண்மைதான்

ஹேமா said...

ஞானம் நீங்க சொன்ன கதை மாதிரி அனுபவிச்சே இருக்கேன்.யாரை யார் எப்போ நம்புறதுன்னு பயமாவே இருக்கு.

உதவியும் வேணாம்.
உபத்திரவமும் வேணாம்.
ஆளை விடுங்கோ.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...
Yarukkum uthavi seyya payamaaha irukkirathu Gnanaseharan.Neengal solluvathu sari.//

உங்கள் கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்..

ஆ.ஞானசேகரன் said...

///சொல்லரசன் said...
//இப்படிப்பட்ட ஏமாற்றுவாதிகள் இருப்பதால் தான் உண்மையில் உதவி கிடைக்க வேண்டியவர்களுக்கு உதவி கிடைக்காமலே போய் விடுகின்றது.//

உண்மைதான்///

வாங்க சொல்லரசன் மிக்க நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
ஞானம் நீங்க சொன்ன கதை மாதிரி அனுபவிச்சே இருக்கேன்.யாரை யார் எப்போ நம்புறதுன்னு பயமாவே இருக்கு.

உதவியும் வேணாம்.
உபத்திரவமும் வேணாம்.
ஆளை விடுங்கோ.
//

ரொம்ப அனுபவித்து இருப்பீங்கனு நினைக்கின்றேன் ஹேமா...
உங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றஇ ஹேமா..

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்வான ஜென் கதையோடு நல்ல பகிர்வு சேகர்.ரொம்ப சந்தோசமாய் இருக்கு சமூகத்தையும் மனிதத்தையும் அணுகும் அக்கறை.வாழ்த்துக்கள் நண்பரே.நவாஸ் குறிப்பிட்ட அந்த பகுதி கலங்க வைத்தது.

ஆ.ஞானசேகரன் said...

//பா.ராஜாராம் said...
மிக நெகிழ்வான ஜென் கதையோடு நல்ல பகிர்வு சேகர்.ரொம்ப சந்தோசமாய் இருக்கு சமூகத்தையும் மனிதத்தையும் அணுகும் அக்கறை.வாழ்த்துக்கள் நண்பரே.நவாஸ் குறிப்பிட்ட அந்த பகுதி கலங்க வைத்தது.//

மிக்க நன்றி நண்பா

ஷண்முகப்ரியன் said...

அருமையான ஜென் கதை,ஞானசேகரன்.நல்ல பகிர்வு.

ஆ.ஞானசேகரன் said...

//ஷண்முகப்ரியன் said...
அருமையான ஜென் கதை,ஞானசேகரன்.நல்ல பகிர்வு.//

மிக்க நன்றி சார்..

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

நல்ல கதை வாழ்த்துக்கள்.............

ஆ.ஞானசேகரன் said...

// முனைவர் சே.கல்பனா said...

நல்ல கதை வாழ்த்துக்கள்.............//

மிக்க நன்றிங்க

"உழவன்" "Uzhavan" said...

அற்புதமான நீதிக்கதை.

ஆ.ஞானசேகரன் said...

//" உழவன் " " Uzhavan " said...

அற்புதமான நீதிக்கதை.//

மிக்க நன்றி நண்பா

கிரி said...

//குதிரையை நீயே வைத்துக்கொள் ஆனால் நீ அந்த குதிரையை எப்படி பெற்றாய் என்ற வித்தையை மட்டும் சொல்லி விடாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரிந்தால் எதிர் காலத்தில் உண்மையிலேயே மயங்கிகிடக்கும் ஒருவனுக்கு உதவி செய்யமாட்டார்கள் என்ன புரிகின்றதா//

அருமை..

எனக்கும் சில நேரங்களில் இதை போல நடந்து இருக்கிறது.. வெறுப்பை தந்து இருந்தாலும் இன்னும் வெறுத்து ஒதுக்கவில்லை

ஆ.ஞானசேகரன் said...

[[ கிரி said...
//குதிரையை நீயே வைத்துக்கொள் ஆனால் நீ அந்த குதிரையை எப்படி பெற்றாய் என்ற வித்தையை மட்டும் சொல்லி விடாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரிந்தால் எதிர் காலத்தில் உண்மையிலேயே மயங்கிகிடக்கும் ஒருவனுக்கு உதவி செய்யமாட்டார்கள் என்ன புரிகின்றதா//

அருமை..

எனக்கும் சில நேரங்களில் இதை போல நடந்து இருக்கிறது.. வெறுப்பை தந்து இருந்தாலும் இன்னும் வெறுத்து ஒதுக்கவில்லை]]

வணக்கம் கிரி,... உங்களின் அனுபவ கருத்துகளுக்கும் மிக்க நன்றிங்க‌