_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, August 12, 2009

பச்சை முத்து தாத்தாவும் நானும்...

பச்சை முத்து தாத்தாவும் நானும்...பச்சை முத்து தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர். இந்திய மக்களால் நேதாஜி என்று அன்புடன் அழைகப்படும் சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அன்பாலும் சிந்தனைகளாலும் ஈக்கப்பட்டு அவர் வழியில் போராடிய ஒரு சுதந்திர போராட்ட வீரர்தான் என்றாலும், இன்றைய இந்திய அரசால் சுதந்திர போராட்ட வீரர்களுக்காண உதவிதொகை பெறமுடியாதவர். இந்திய தேசிய ராணுவத்தில்(INA) சேர்ந்து சுபாஸின் வழியில் போராடிய பலருக்கு இந்த உதவித்தொகை கிடைக்கவில்லை என்பது இவர் சொல்லிதான் எனக்கு தெரியும். போராட்டக்  காலத்தில் இவர் சிங்கபூர், மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக அடிக்கடி சொல்லுவார். சுதந்திர போராட்டத்தில் தன் வாழ்வில் பெரும்பகுதி இருந்துவிட்டதால் திருமணம் ஆகாமலே இருந்துவிட்டார். நான் ஊருக்கு எப்பொழுது சென்றாலும் இவரை பார்க்காமல் வருவதில்லை....

நான்: தாத்தா நல்லாயிருக்கிங்களா?

தாத்தா: யாரு சேகரா? வாப்பா பேராண்டி எப்படியிருக்க? சிங்கபூரிலிருந்து எப்ப வந்த? மனைவி பிள்ளைங்க எல்லாம் நல்லாயிருக்காங்களா?

நான்: நாங்க எல்லாம் நல்லாயிருக்கோம் தாத்தா. நீங்க எப்படியிருக்கீங்க? நம்ம நாட்டின் 63வது சுதந்திர தினம் வருகின்றது. உங்களை போன்றவர்களை பார்ப்பதில் பெருமையா இருக்கு தாத்தா. இந்த வயதிலும் கம்பீரமாக இருக்கின்றீர்கள் எப்படி தாத்தா?

தாத்தா: இந்த உடம்பு வெள்ளக்காரனுக்கு முன்னாடி துப்பாக்கியை தோளுல தூக்கிய உடம்பு. ஒருபக்கம் காந்திமகான் அமைதி வழியிலேயும் மறுபக்கம் சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் போன்றவர்கள் ஆயுதம் ஏந்தியும் போராடி பெற்ற சுதந்திரம் தான் நாம் இப்பொழுது அனுபவிப்பது. இவர்களுகுள் கருத்து வேறுபாடு இருந்ததென்னவோ உண்மைதான் ஆனால் நோக்கம் ஒன்னுதான், இந்தியா அடிமை தளத்திலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணங்கள இவர்களுக்கு இருந்தது. ம்ம்ம்.. இப்ப என்ன சொல்லுரதுன்னு தான் தெரியல மறுபடியும் இந்த அரசியல்வாதிகள் நாட்டை துண்டு போட்டு அந்த ஆங்கிலேயனுக்கே வித்துவிடுவானுங்க போல இருக்கு. நான் சாகரதுக்குள்ள அப்படியெல்லாம் நடக்க கூடாதுப்பா....

நான்: அப்படியெல்லாம் நடக்காது தாத்தா இந்த காலத்து இளைஞர்கள் தெளிவா இருக்கின்றார்கள். நாளைய அரசியலிலும் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு தாத்தா. (என்று தாத்தாவிற்காக சொன்னாலும் நடந்துவரும் லஞ்சம், அரசியல் அராசகம் எல்லாம் பார்த்தால் என்னாலும் பொறுக்க முடியவில்லைதான்)

தாத்தா: நீ சொல்லுரதும் சரிதான் ஆனால் இப்ப நடக்குர சாதிக்கலவரம், படிக்கரதுக்கு காசு வாங்குரானுங்க, நோவுனு போனா பணம் பணமுனு பேயா அழையுரானுங்க. இதெல்லாம் பார்க்க முடியலப்பா. வெள்ளைக்காரனுக்கு எதிரா துப்பாக்கி ஏந்திய எனக்கு இந்த கொள்ளை காரனுக்கு எதிரா ஏந்தனுமோ என்ற எண்ணம்தான் இருக்கு. வயசாயிருச்சி கண்ணும் மங்கி போச்சு ஆனா நம்ம நாடு நல்லாயிருக்கனும் என்ற வேறி மட்டும் அடங்கலப்பா சேகர்.

நான்: நீங்க சொல்லுரதும் சரிதான் தாத்தா. இதுகெல்லாம் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டதான் முடியும்னு தோனுது. லஞ்சம் வாங்குறவன், பணம் பணமுனு பேயா அழையுறவன் எல்லாம் யாரு தாத்தா. நம்மல ஒருத்தன் தானே! நம்ம அண்ணனோ தம்பியோ தானே! இவங்கள நாம திருத்த முடியாதா என்ன?

தாத்தா: பேராண்டி நீயும் சரியாதான் பேசுர ... அதுகெல்லாம் என்ன செய்யலாம்னு நீ நினைகிற? சுதந்திரம் வாங்கி 62 வருசம் ஆகியும் ஏழை ஏழையாதான் இருக்கான், பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிட்டான்.

நான்: ஆமாம் தாத்தா இந்தியா ஒரு ஏழை நாடு ஆனால் பணம் படைத்தவர்கள் அதிகம் உள்ள நாடு. அம்பானி வாழ்க்கை சரித்திரம் புத்தகம் ஒன்றில் படித்தேன் " நான் எனது முன்னேற்றதிற்கு காரணம் இந்திய அரசை நான் சரியாக புரிந்துக்கொண்டேன்" என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கு சரியான அர்த்தம் நமக்கு புரியாமலா போகும். ஆமாம் தாத்தா பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கவே லஞ்சம் வாங்கியவர்கள் தானே நம்முடைய பிரதிநிதிகள். இவர்களை சட்டதிற்கு முன் நிறுத்தி தண்டனை பெறமுடியுற காரியமா என்ன?...

தாத்தா: அதுக்குதான் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் சொன்னாரு. நீங்கள் எல்லாம் அரசியலுக்கு போங்க நல்லது செய்யுங்க.

நான்: தாத்தா நீங்க சொல்லுவது பேச்சுக்கு நல்லாதான் இருக்கு ஆனா இந்த பாழபோன அரசியலுல போராடி வெற்றிபெற முடியுமா? அப்படி வெற்றி பெற வேண்டும் என்றால், அவர்கள் செய்யுற தவற்றைதான் நாமும் செய்யனும். அதுல என்ன ஞாயம் இருக்கு?

தாத்தா: நீ நினைப்பதை போல மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சுபாஸ்சந்திர போஸ், பகத்சிங் போன்றவர்கள் நினைத்துருந்தால் இன்றைய சுதந்திர இந்தியாவை பார்க்கமுடியுமா? பேராண்டி... "போராடினால்தான் வெற்றி! உழைத்தால்தான் உணவு!"

நான்: இப்படிதான் தோழர் கக்கன் போன்றோர் நேர்மையா அரசியல் பன்னுனாங்க அவர்களுக்கு இந்த சமுதாயம் என்ன செய்தது? ஒரு தகர பெட்டியும், உடுத்திகொள்ள ஒரு சில வேஷ்டியும் தானே இருந்தது.

தாத்தா: அப்படி நேர்மையா இருந்ததாலேதான் அவரைப் பற்றி பெருமையா நீ பேசுகின்றாய்.. அப்படிதான் நல்லது செய்யனும், ஒதுங்கி நின்னு கேள்வியை கேட்டுட்டு போரதுல என்ன முன்னேற்றம் காணமுடியும். ஏரில இறங்கி கலக்கினாதான் மீன் பிடிக்க முடியும். அப்படிதான் நாங்க அந்த வெள்ளையனை எதிர்த்து நின்னோம். அப்ப எங்கள் மனசுல நினைத்தது எல்லாம் நம்ம நாடு, நாட்டின் சுதந்திரம் மட்டும்தானே!

நான்: தாத்தா போன பாராளுமன்ற தேர்தலில் (2009) சென்னை சேப்பாக்கம் தொகுதில் படித்த இளைஞர் சரத் பாபு நின்றார். நல்ல நேர்மையாக உள்ளவர் அவருக்கு இந்த மக்கள் வாக்களித்தார்களா? இதை பார்த்த எந்த இளைஞன் அரசியலுக்கு வருவான்.

தாத்தா: அரசியலுக்கு வரவேண்டும் என்றால் தேர்தலில் நின்று வெற்றி பெர வேண்டும் என்று யார் சொன்னது. அப்படி வெற்றிப்பெற்றால் அவர்கள் செய்வதைதான் நீங்களும் செய்வீர்கள். போராடனும் சேவை செய்யனும் அதுதான் அரசியல். அப்படிதான் காமராஜர், அறிஞர் அண்ணா போன்றவர்கள் வெற்றி பெற்றார்கள். இன்னக்கி எல்லா கிராமத்திலயும் பள்ளிகூடம் இருக்குனா காமராஜர் புண்ணியம்தானே. அப்படிப்பட்ட அரசியல்வாதிகளை வேண்டிதான் நாம் நாடு இருக்கு... வெற்றி பெற்று சட்டசபைக்கோ நாடாளும் மன்றதிற்கோ போனால்தால் மக்களுக்கு நல்லது பன்னமுடியுமா? அப்படி அங்கே போனவர்களுக்கு நாமதானே புரியவைக்கனும். அதுக்கு மக்களோட மக்களாதானே போராடனும் சேவையும் செய்யனும்..

நான்: நீங்கள் வெள்ளையனை எதிர்த்து போராடினீங்க. வெற்றியும் கண்டீர்கள். நாங்கள் எதுக்காக போராடனும் எங்களின் அடிப்படை உரிமைகளை கொடுப்பது அரசின் கடமையள்ளவா?... பிறகு ஏன் அது மறுக்கப்படுகின்றது?

தாத்தா: அதுக்குதான் நீங்களெல்லாம் அரசிலுக்கு போங்கனு சொல்லுறேன். நல்லது பன்னுங்க யாரு வேனாமுன்னு சொன்னாங்க?.. விவேகாணந்தர் சொன்னது போல
இந்நாட்டை வளப்படுத்த துடிப்புள்ள 100 இளைஞர்கள் போதுமே, தேவை நேர்மையும் உழைப்பும் மட்டும்தானே!... என்ன புரியுதா பேராண்டி?.....

நான்: ""தலைய சொருஞ்சுகிட்டு நீங்க என்ன நினைக்கின்றீர்களோ அதைதான் நானும் நினைத்துக் கோண்டு இருக்கேன்!""

வாழ்க இந்தியா!
வளர்க இந்தியர்கள்!

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

(முற்றிலும் கர்ப்பனையானாலும் செய்திகள் உண்மை)




40 comments:

Raju said...

சரியான ஆதங்கம்தான்.

Suresh Kumar said...

முற்றிலும் கர்ப்பனையானாலும் செய்திகள் உண்மை) /////////

கர்ப்பனையானாலும் நல்ல ஒரு செய்தி

ஆ.ஞானசேகரன் said...

// டக்ளஸ்... said...

சரியான ஆதங்கம்தான்.//

வாங்க நண்பா மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

முற்றிலும் கர்ப்பனையானாலும் செய்திகள் உண்மை) /////////

கர்ப்பனையானாலும் நல்ல ஒரு செய்தி//

வணக்கம் சுரெஷ் குமார்
மிக்க நன்றிபா

S.A. நவாஸுதீன் said...

உங்க நல்ல மனசும் ஆதங்கமும் புரியுது நண்பா. தேவையான பதிவு

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

உங்க நல்ல மனசும் ஆதங்கமும் புரியுது நண்பா. தேவையான பதிவு//

மிக்க நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

கற்பனை மாதிரியே இல்லை நண்பா.. உண்மைய புட்டு புட்டு வச்சிருக்கீங்க.. நியாயமான ஆதங்கம்..

நட்புடன் ஜமால் said...

தாத்தா: அதுக்குதான் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் சொன்னாரு. நீங்கள் எல்லாம் அரசியலுக்கு போங்க நல்லது செய்யுங்க.]]


செய்யனும் பாஸ்

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

கற்பனை மாதிரியே இல்லை நண்பா.. உண்மைய புட்டு புட்டு வச்சிருக்கீங்க.. நியாயமான ஆதங்கம்..//

வணக்கம் கார்த்திகைப் பாண்டியன்,..
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// நட்புடன் ஜமால் said...

தாத்தா: அதுக்குதான் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் சொன்னாரு. நீங்கள் எல்லாம் அரசியலுக்கு போங்க நல்லது செய்யுங்க.]]


செய்யனும் பாஸ்//

வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தோழா...
உங்களுடன் தோழ் கொடுக்கும் தோழர்கள் நாங்களும் இருக்கின்றோம்

குறை ஒன்றும் இல்லை !!! said...

நிஜமாக வேண்டிய கற்பனை!!!

சி தயாளன் said...

:-) ஆதங்கம் நியாயமானது தான்

ஆ.ஞானசேகரன் said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
நிஜமாக வேண்டிய கற்பனை!!!//

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// ’டொன்’ லீ said...
:-) ஆதங்கம் நியாயமானது தான்//


மிக்க நன்றி நண்பா

Admin said...

நியாயமான ஆதங்கங்களே

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...

நியாயமான ஆதங்கங்களே//
வாங்க சந்ரு,..
மிக்க நன்றிங்க

காமராஜ் said...

கலங்கடிக்கும் பதிவு.

பச்சைமுத்து தாத்தாக்கள் நீக்கமற இருக்கிறார்கள்.
ஆனால் மறைக்கப்படிருக்கிறார்கள். எங்கள் ஊரிலும் ஐஎன்ஏ
சிப்பாய் ஒருவர் இருந்தார், கடைசிவரை கூலிவேலைசெய்து
செத்துப்போனார். இப்போதுதான் அவர் மனைவி உதவித்தொகை
வாங்குகிறார். அவரது பெயர் பிச்சைமுத்து.

ஆ.ஞானசேகரன் said...

//காமராஜ் said...

கலங்கடிக்கும் பதிவு.

பச்சைமுத்து தாத்தாக்கள் நீக்கமற இருக்கிறார்கள்.
ஆனால் மறைக்கப்படிருக்கிறார்கள். எங்கள் ஊரிலும் ஐஎன்ஏ
சிப்பாய் ஒருவர் இருந்தார், கடைசிவரை கூலிவேலைசெய்து
செத்துப்போனார். இப்போதுதான் அவர் மனைவி உதவித்தொகை
வாங்குகிறார். அவரது பெயர் பிச்சைமுத்து.//

வணக்கம் நண்பா,..
இப்படிப்பட்ட பிச்சமுத்துகளுக்கு உதவிகள் கிடைக்காமலே சென்றுவிடுகின்றது. நம் அரசாங்கமும் அதன் பிரநிதிகளும் தன்னையும் தன்னை சார்ந்தவர்கள் முன்னேற்றத்திற்கே செயல் படுகின்றார்கள் இதற்கெல்லாம் ஒரு மாபெரும் புரட்சியை எதிர்ப்பார்க்க வேண்டி இருக்கின்றது..

உங்களி பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா!

Sanjai Gandhi said...

//தாத்தா: அதுக்குதான் நீங்களெல்லாம் அரசிலுக்கு போங்கனு சொல்லுறேன். நல்லது பன்னுங்க யாரு வேனாமுன்னு சொன்னாங்க?.. விவேகாணந்தர் சொன்னது போல இந்நாட்டை வளப்படுத்த துடிப்புள்ள 100 இளைஞர்கள் போதுமே, தேவை நேர்மையும் உழைப்பும் மட்டும்தானே!... என்ன புரியுதா பேராண்டி?.....//

குட்

ஆ.ஞானசேகரன் said...

/// SanjaiGandhi said...
//தாத்தா: அதுக்குதான் நீங்களெல்லாம் அரசிலுக்கு போங்கனு சொல்லுறேன். நல்லது பன்னுங்க யாரு வேனாமுன்னு சொன்னாங்க?.. விவேகாணந்தர் சொன்னது போல இந்நாட்டை வளப்படுத்த துடிப்புள்ள 100 இளைஞர்கள் போதுமே, தேவை நேர்மையும் உழைப்பும் மட்டும்தானே!... என்ன புரியுதா பேராண்டி?.....//

குட்
///
மிக்க நன்றி நண்பா

ஷண்முகப்ரியன் said...

லஞ்சம் வாங்குரவன், பணம் பணமுனு பேயா அழையுறவன் எல்லாம் யாரு தாத்தா. நம்மல ஒருத்தன் தானே! நம்ம அண்ணனோ தம்பியோ தானே! இவங்கள நாம திருத்த முடியாதா என்ன?//

அருமையான் சிந்தனை.பச்சைமுத்துத் தாத்தாவின் கனவுகள் பலிக்கும் நாளே நமது உண்மையான சுதந்திர நாள்.வாழ்த்துக்கள் ஞானசேகரன்.

Muniappan Pakkangal said...

I had one INA person here but he is no more.You've given a nice post mixing the past & the present.

ஆ.ஞானசேகரன் said...

//ஷண்முகப்ரியன் said...
லஞ்சம் வாங்குரவன், பணம் பணமுனு பேயா அழையுறவன் எல்லாம் யாரு தாத்தா. நம்மல ஒருத்தன் தானே! நம்ம அண்ணனோ தம்பியோ தானே! இவங்கள நாம திருத்த முடியாதா என்ன?//

அருமையான் சிந்தனை.பச்சைமுத்துத் தாத்தாவின் கனவுகள் பலிக்கும் நாளே நமது உண்மையான சுதந்திர நாள்.வாழ்த்துக்கள் ஞானசேகரன்.//


வணக்கம் ஷண்முகப்ரியன் சார்,..
உங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றி..
அப்படிப்பட்ட நன்னாளை ஆவலுடன் எதிர்ப்பார்ப்போம்

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...
I had one INA person here but he is no more.You've given a nice post mixing the past & the present.//



உங்களின் கருத்துரைக்கும்,.. பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சார்... உங்களின் ஊக்கம் என்னை மேலும் நல்ல இடுகை கொடுக்க துணையாய் இருக்கின்றது, மிக்க நன்றி சார்

ஹேமா said...

ஞானம் இப்போ எல்லாம் வரவர உங்களுக்கு சமூக அக்கறை அதிகமாகவதை உங்கள் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.ஆதங்கத்தோடும் நாட்டின் பற்றோடும் எழுதிய எண்ணங்கள் அருமை.செயல்படத் தொடங்குங்கள்.வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

ஞானம் இப்போ எல்லாம் வரவர உங்களுக்கு சமூக அக்கறை அதிகமாகவதை உங்கள் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.ஆதங்கத்தோடும் நாட்டின் பற்றோடும் எழுதிய எண்ணங்கள் அருமை.செயல்படத் தொடங்குங்கள்.வாழ்த்துக்கள்.//

உங்களின் ஆழ்ந்த கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஹேமா. உங்களின் ஊக்கம் என்னை மேலும் மேலும் நல்ல கட்டுரைகளை எழுத வைக்கின்றது. மேலும் நன்றி ஹேமா

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

உண்மையான சமுதாய அக்கறை ...........எழுத்தோடு மட்டுமல்லாமல் செயல்படுத்தவும் துணியவேண்டும்........பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற நிலைதான் இன்னும்.......தொடர்கிறது........

ஆ.ஞானசேகரன் said...

// முனைவர் சே.கல்பனா said...

உண்மையான சமுதாய அக்கறை ...........எழுத்தோடு மட்டுமல்லாமல் செயல்படுத்தவும் துணியவேண்டும்........பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற நிலைதான் இன்னும்.......தொடர்கிறது........//

நீங்கள் கூறுவதும் சரிதாங்க...
கண்டிப்பாக இந்த பூனைக்கும் மணி கட்டப்படும். என்ன கொஞ்சம் காலமாகலாம். 200 ஆண்டுகள் பின்னர்தான் ஆங்கிலேயரிடமிருந்து நம் நாட்டை பெறமுடிந்தது ...

Anonymous said...

நியாயமான ஆதங்கம்..

ஆ.ஞானசேகரன் said...

//கடையம் ஆனந்த் said...
நியாயமான ஆதங்கம்//
வாங்க நண்பா மிக்க நன்றிங்க

Joe said...

நல்ல இடுகை, கற்பனை நிஜமாகாது என்றாலும், இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்பது நிஜம்.

எழுத்துப் பிழைகள் அதிகம்.

ஹேமா said...

ஞானம்,வாங்க.ஒரு அழைப்பு உங்களுக்கு உப்புமடச் சந்தில.வாங்க.பேசலாம்.

S.Gnanasekar said...

"பச்சை முத்து தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர்"
பச்சை முத்து தாத்தாவை போலே நமது கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் (ஐஎன்ஏ) நிரையப் பேர் உதவித்தொகை கிடைக்காமல் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டவர்கள் நிறையப்பேர் கூலிவேலைசெய்து கடைசிகாலத்தை கழித்தார்கள் என்பதை வெக்கத்துடன் வேதணையுடன் சொல்கிறேன்........

ஆ.ஞானசேகரன் said...

// Joe said...

நல்ல இடுகை, கற்பனை நிஜமாகாது என்றாலும், இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்பது நிஜம்.

எழுத்துப் பிழைகள் அதிகம்.//

மிக்க நன்றி நண்பா.. பிழைகளை கழைய முயற்சிக்கின்றேன்

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

ஞானம்,வாங்க.ஒரு அழைப்பு உங்களுக்கு உப்புமடச் சந்தில.வாங்க.பேசலாம்.//

நன்றி ஹேமா

ஆ.ஞானசேகரன் said...

// S.Gnanasekar Somasundaram said...

"பச்சை முத்து தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர்"
பச்சை முத்து தாத்தாவை போலே நமது கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் (ஐஎன்ஏ) நிரையப் பேர் உதவித்தொகை கிடைக்காமல் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டவர்கள் நிறையப்பேர் கூலிவேலைசெய்து கடைசிகாலத்தை கழித்தார்கள் என்பதை வெக்கத்துடன் வேதணையுடன் சொல்கிறேன்........//

உண்மைதான் தோழரே!
உங்களின் வருகை என்னை மகிழசெய்கின்றது. அதிலும் என் பெயரும் உங்களிடத்தில் உள்ளதும் பெரும் மகிழ்ச்சி.. மிக்க நன்றிங்க

"உழவன்" "Uzhavan" said...

அவசியமான பதிவு. அன்றாடச் சோற்றுக்கே போராடும் மக்களால் இவர்களை எதிர்த்து எப்படிப் போராடமுடியுமோ

உமா said...

//அரசியலுக்கு வரவேண்டும் என்றால் தேர்தலில் நின்று வெற்றி பெர வேண்டும் என்று யார் சொன்னது. அப்படி வெற்றிப்பெற்றால் அவர்கள் செய்வதைதான் நீங்களும் செய்வீர்கள். போராடனும் சேவை செய்யனும் அதுதான் அரசியல். அப்படிதான் காமராஜர், அறிஞர் அண்ணா போன்றவர்கள் வெற்றி பெற்றார்கள். இன்னக்கி எல்லா கிராமத்திலயும் பள்ளிகூடம் இருக்குனா காமராஜர் புண்ணியம்தானே. அப்படிப்பட்ட அரசியல்வாதிகளை வேண்டிதான் நாம் நாடு இருக்கு... வெற்றி பெற்று சட்டசபைக்கோ நாடாளும் மன்றதிற்கோ போனால்தால் மக்களுக்கு நல்லது பன்னமுடியுமா? அப்படி அங்கே போனவர்களுக்கு நாமதானே புரியவைக்கனும். அதுக்கு மக்களோட மக்களாதானே போராடனும் சேவையும் செய்யனும்..//
மிக அழகான கருத்துக்களை உரையாடல் வடிவில்கொடுத்திருப்பதுதான் கொள்ளை அழகு.
வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...

அவசியமான பதிவு. அன்றாடச் சோற்றுக்கே போராடும் மக்களால் இவர்களை எதிர்த்து எப்படிப் போராடமுடியுமோ//

வாங்க நண்பா,..
காலம் இதற்கெல்லாம் பதில் சொல்லியே தீரும்.

ஆ.ஞானசேகரன் said...

// உமா said...

//அரசியலுக்கு வரவேண்டும் என்றால் தேர்தலில் நின்று வெற்றி பெர வேண்டும் என்று யார் சொன்னது. அப்படி வெற்றிப்பெற்றால் அவர்கள் செய்வதைதான் நீங்களும் செய்வீர்கள். போராடனும் சேவை செய்யனும் அதுதான் அரசியல். அப்படிதான் காமராஜர், அறிஞர் அண்ணா போன்றவர்கள் வெற்றி பெற்றார்கள். இன்னக்கி எல்லா கிராமத்திலயும் பள்ளிகூடம் இருக்குனா காமராஜர் புண்ணியம்தானே. அப்படிப்பட்ட அரசியல்வாதிகளை வேண்டிதான் நாம் நாடு இருக்கு... வெற்றி பெற்று சட்டசபைக்கோ நாடாளும் மன்றதிற்கோ போனால்தால் மக்களுக்கு நல்லது பன்னமுடியுமா? அப்படி அங்கே போனவர்களுக்கு நாமதானே புரியவைக்கனும். அதுக்கு மக்களோட மக்களாதானே போராடனும் சேவையும் செய்யனும்..//
மிக அழகான கருத்துக்களை உரையாடல் வடிவில்கொடுத்திருப்பதுதான் கொள்ளை அழகு.
வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி உமா