பசியோடு... மனிதன் போராட்டங்கள்!...
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உயிர் வாழ உணவு அவசியம். உயிர்களின் உடம்பில் சக்தி தேவைப்படும்பொழுது அதன் தூண்டுதலால் ஏற்படுவதுதான் பசி. இந்த பசி இல்லா உயிர் இல்லை. அப்படிப்பட்ட பசியை போக்க உணவு மிக அவசியம். பசியை படைத்த இயற்கை கூடவே அந்தந்த உயிர்களுக்கான உணவையும் படைத்துள்ளது. இருப்பினும் உலகெங்கும் பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது.
"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்'' என்றான் பாரதி. ஆனால் இன்றைய நிலைமையில் பட்டினி சாவுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றது. இந்தியாவில் வறுமையின் காரணமாக 20 கோடி மக்கள் உணவின்றி பட்டினிகிடக்கின்றார்கள். என்று அண்மையில் ஒரு தொண்டுநிறுவனம் ஆய்வு ஒன்றில் தெரியப்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உணவில்லை என்ற நிலை உள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த நிலையில்லை உலகின் பணக்கார வரிசையில் உள்ள அமேரிக்கா போன்ற நாடுகளில் கூட பட்டினி சாவுகள் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட நிலைக்கு காரணம் மனிதனா? இயற்கையா?..
"மத்தேயு-6:26.(பைபிள்) ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?....."
மேற்கண்ட பைபிள் வாசகம் சரி என்றால் பட்டினி சாவுக்கு காரணம் யார்? இதுதான் இன்றய கேள்வி... உண்டு கொழுப்பவன் ஒரு புறம் இருக்க, பட்டியால் சாவோர் மறுபுறம் ஏன்? மனிதனின் மாறுப்பட்ட கொள்கைகளால் மடிந்துபோகும் மக்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. அமேரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லமை பெற்ற நாடுகளும் இருக்கு, சோமாலியா போன்ற வறுமைகள் உள்ள நாடுகளும் இருக்கு. இதில் எந்த மனுதருமம் பொது உடமைப் பற்றி பேச போகின்றது.
பசி என்றால் பத்தும் பறந்துபோகுமாம். ஒருமுறை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஒரு மனநோயாளி என்று நினைக்கின்றேன், தான் வாந்தி எடுத்த உணவை தன் பசிக்காக எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். என்ன கொடுமை பாருங்கள்! இந்த நிலமைதான் இன்றைய இந்தியாவில் இருக்கின்றது. உலக பணக்காரர் வரிசைகளில் எட்டு இடங்கள் நமக்குதான். அதே போல் இந்தியாவின் மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் உணவின்றி பட்டினி. இதுதான் நம் நாட்டின் இறையாண்மை.
"வசதியிருக்கின்றவன் தரமாட்டான்
வயிறுப் பசித்தவன் விடமாட்டான்"
உண்மைதான் வயிறுப் பசித்தவன் ஒருநாள் பிச்சி சாப்பிடும் காலங்களும் வரலாம். இன்றுவரை நில உச்சவரம்பு சட்டம் இந்தியாவில் அமுல் படுத்த முடியால் இருப்பதற்கு காரணம் என்ன? பல நிலப்பிரபுகள் அதிகார வர்க்கத்தில் இருப்பதால்தானே!.
பசியில்லா உணர்வும் ருசிக்காது அதற்காக பசியே வாழ்கையாக இருப்பதும் வெட்ககேடு. ஆதி மனிதன் தொட்டு இன்றைய மனிதன் வரை பசிக்காக அவற்றிக்கான உணவுக்காக போராட்டங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. குழுக்காளாக வாழ்ந்த மனித இனம் தனது உணவை சேமித்து வைக்கும் பழக்கம் வந்தது. இப்படி சேமித்த உணவுகளை வலியவர்கள் வந்து அபகரிப்பதும் இன்றைய தினம் வரை நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொல்வதுபோல்...
"பசியும் சுண்டல் ருசியும் போனால்,..
பக்தியில்லை பசனையில்லை
சுத்தமான சோம்பேறிகளின் வேசத்திலே!"
பசியும் அந்த உணவிற்கான ருசியும் இல்லை என்றால் வாழ்வில் போராட்டங்கள் இருக்க வாய்பில்லை என்றே சொல்லலாம். அதேபோல் மனிதன் வாழ்க்கை முறைகள் பசியும் உணவையும் பொருத்தே வளர்ந்து வருகின்றது. அப்படிப்பட்ட பசியை பற்றி இன்னும் கொஞ்சம் அடுத்த இடுகைகளில் சிந்திப்போம்...
அதற்குமுன் பின்வரும் காணோளியை பாருங்கள்..
அடுத்த சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.
Friday, August 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
50 comments:
பசியும் அந்த உணவிற்கான ருசியும் இல்லை என்றால் வாழ்வில் போராட்டங்கள் இருக்க வாய்பில்லை என்றே சொல்லலாம்.]]
லாம் ...
யோசிக்கப்பட வேண்டிய விடயம்... நல்ல பதிவு.. வெறும் பதிவாய் மட்டும் படித்து பின்னுட்டாம் போட்டு சென்று விடாமல், நம்மால் என்ன முடியுமென யோசிக்கலாமா.. பசிக் கொடுமையை நம்மால் முடிந்ததை செய்யலாமா... ????
அமாங்க.. நானும் உங்க கருத்த ஆமோதிக்கிறேன்!! ஏன்னா மன நிலை பாதிக்கப்பட்டவருக்கு கூட பசிக்கும்
:(
// நட்புடன் ஜமால் said...
பசியும் அந்த உணவிற்கான ருசியும் இல்லை என்றால் வாழ்வில் போராட்டங்கள் இருக்க வாய்பில்லை என்றே சொல்லலாம்.]]
லாம் ...//
வாங்க நண்பா...
// நாணல் said...
யோசிக்கப்பட வேண்டிய விடயம்... நல்ல பதிவு.. வெறும் பதிவாய் மட்டும் படித்து பின்னுட்டாம் போட்டு சென்று விடாமல், நம்மால் என்ன முடியுமென யோசிக்கலாமா.. பசிக் கொடுமையை நம்மால் முடிந்ததை செய்யலாமா... ????//
வணக்கம் நண்பா,..
உங்களின் நல்ல யோசனைகளுக்கும் வாழ்த்துகள்,.. மிக்க நன்றி நண்பா
// குறை ஒன்றும் இல்லை !!! said...
அமாங்க.. நானும் உங்க கருத்த ஆமோதிக்கிறேன்!! ஏன்னா மன நிலை பாதிக்கப்பட்டவருக்கு கூட பசிக்கும்
:(//
வணக்கம் நண்பா,..
மிக்க நன்றிங்க
வருத்தப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் இன்னும் சில வருடங்களில் நம்முடைய உணவு உற்பத்தி கணிசமாகக் குறைந்து போகக் கூடும் என்பதுதான்.. இன்றைக்கு எந்த விவசாயியும் சந்தோஷமாக இல்லை.. கூடிய சீக்கிரம் உழவு என்பதே இல்லாமல் போகக்கூடும்.. அப்போது நாம் என்ன செய்வது?
என்னத்த சொல்ல..?
:(
மனதை கனக்கச் செய்த இடுகை. பசியால் உயிரை விடுவோர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத்துக் கொண்டிருப்பது ஒருபுறம் என்றாலும், இன்னமும் பலர் உணவை வீணாக்குவதும் நடக்கத்தான் செய்கின்றனர். என்ன செய்ய...
நண்பா... அருமையான பதிவு நண்பா... சில இடங்களில் உள்ள பிழைகளை களையுங்கள்...
உணவுக்காக எல்லா உயிர்களும் போராடுகின்றன. அப்படிபட்டவையே உயிர் வாழ்ந்து அடுத்த தலைமுறை செல்லும். ஆனால், எல்லா உயிர்களுக்கும் பசி என்ற உணர்ச்சி கிடையாது. அதை உணர மூளை வேண்டும். எனவே விலங்குகள் (பறவைகள், மீன்கள்) மட்டுமே பசியை என்ற துன்பத்தை உணர்கின்றன. உலகின் உணவு இருப்புக்கு தகுந்து உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. குறிப்பிட்ட உணவு இல்லாத போது, அதை நம்பி வாழும் உயிர்களும் இல்லாமல் போகின்றன. பூமியின் வரலாற்றில் அப்படி அழிந்து போன உயிரினங்கள் கோடான கோடி; பரமபிதா அவற்றையெல்லாம் பிழைப்பூட்டவில்லை.
பூமியில், முக்கியமாக இந்தியா போன்ற நாடுகளில் இயற்கை வளங்களுக்கு மேலாக மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அதற்கான காரணங்கள் பல: முன்பெல்லாம் அடிக்கடி குட்டி நாடுகளாக சண்டைகள் நடந்து, மக்கள் தொகை குறைந்து; பிரசவத்தின் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருந்தது; கொள்ளை மற்றும் இதர நோய்களால் இறந்தவர்களும் அதிகம்.
இருப்பவர்களை நன்றாக இருக்க விஞ்ஞானம் முயல்கின்றது. மரபணு-பொறியியல் இல்லையென்றால், இந்தியா என்றோ பஞ்ச தேசமாகியிருக்கும். ஆனால் அது மட்டுமே போதாது; பொது மக்களும் சில தெளிவை பெற வேண்டும். நீங்கள் படத்தில் காட்டிய குழந்தைகள் போல் இந்த உலகில் ஏராளம். ஆனால், அது போன்ற காட்சியை மற்ற உயிரனங்களில் பார்க்க முடியாது. ஏனென்றால், பிழைக்க முடியா உயிர்கள் அதற்கு ஏற்றால் போல் ஆரம்பத்திலே அழிந்து போகும். நாம் மனித நேயம் என்ற பெயரில் பலரையும் காக்க நினைத்து, உண்மையில் பல ஜீவன்களை வேதனைக்கு உள்ளாக்குகின்றோம். உண்மையான மனித நேயம் வேண்டுமென்றால், நாம் வெறும் குழந்தைகளை பெற்றும் போடும் இயந்திரங்கள் போல் வாழாமல், பரமபிதாக்களை நம்பி மதிகெட்டு போகாமல், சற்று அறிவை பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், இந்த நிலை இன்னும் மோசமாக போகும். இதற்கு வெறும் கவிதை பாடி கொண்டிருந்தால் மட்டும் போதாது.
நீர், பின் பசி அடிப்படையான வாழ்விற்கு ஆதாரமான விடயங்கள். இன்றயச் சூழலில் சிந்திக்க வேண்டிய நல்ல கருத்துக்களை எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
//கார்த்திகைப் பாண்டியன் said...
வருத்தப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் இன்னும் சில வருடங்களில் நம்முடைய உணவு உற்பத்தி கணிசமாகக் குறைந்து போகக் கூடும் என்பதுதான்.. இன்றைக்கு எந்த விவசாயியும் சந்தோஷமாக இல்லை.. கூடிய சீக்கிரம் உழவு என்பதே இல்லாமல் போகக்கூடும்.. அப்போது நாம் என்ன செய்வது?//
நீங்கள் சொல்ல்வதும் முற்றிலும் சரியான கூற்று... இதற்காக நாம் என்ன செய்ய விளைகின்றோம் என்ற சிந்தனைக்குதான் இந்த இடுகை கூட்டி செல்கின்றது.. மிக்க நன்றி நண்பா
// டக்ளஸ்... said...
என்னத்த சொல்ல..?
:(//
வாங்க நண்பா,..
நாம் அதற்கான காரணங்களை கண்டறியக் கூடிய கட்டாயத்தில் இருக்கின்றோம்..
நல்ல கருத்துக்கள் நண்பா நாம் ஒவ்வெருவரும் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்
// குடந்தை அன்புமணி said...
மனதை கனக்கச் செய்த இடுகை. பசியால் உயிரை விடுவோர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத்துக் கொண்டிருப்பது ஒருபுறம் என்றாலும், இன்னமும் பலர் உணவை வீணாக்குவதும் நடக்கத்தான் செய்கின்றனர். என்ன செய்ய..//
ஆம் நண்பா... உணவை வீணாக்குவதை தடுக்கும் விழிப்புணர்வும் தேவைதான்... உங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா..
//நையாண்டி நைனா said...
நண்பா... அருமையான பதிவு நண்பா... சில இடங்களில் உள்ள பிழைகளை களையுங்கள்...//
மிக்க நன்றி நண்பா.. முயற்ச்சிக்கின்றேன்...
// RajK said...
உணவுக்காக எல்லா உயிர்களும் போராடுகின்றன. அப்படிபட்டவையே உயிர் வாழ்ந்து அடுத்த தலைமுறை செல்லும். ஆனால், எல்லா உயிர்களுக்கும் பசி என்ற உணர்ச்சி கிடையாது. அதை உணர மூளை வேண்டும். எனவே விலங்குகள் (பறவைகள், மீன்கள்) மட்டுமே பசியை என்ற துன்பத்தை உணர்கின்றன. உலகின் உணவு இருப்புக்கு தகுந்து உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. குறிப்பிட்ட உணவு இல்லாத போது, அதை நம்பி வாழும் உயிர்களும் இல்லாமல் போகின்றன. பூமியின் வரலாற்றில் அப்படி அழிந்து போன உயிரினங்கள் கோடான கோடி; பரமபிதா அவற்றையெல்லாம் பிழைப்பூட்டவில்லை.//
வாங்க ராஜ்.. தாவரங்களுக்கு பசி உணர்வு கிடையாது என்ற சான்றுகள் இருந்தால் சொல்லுங்களேன்...
//பூமியில், முக்கியமாக இந்தியா போன்ற நாடுகளில் இயற்கை வளங்களுக்கு மேலாக மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அதற்கான காரணங்கள் பல: முன்பெல்லாம் அடிக்கடி குட்டி நாடுகளாக சண்டைகள் நடந்து, மக்கள் தொகை குறைந்து; பிரசவத்தின் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருந்தது; கொள்ளை மற்றும் இதர நோய்களால் இறந்தவர்களும் அதிகம்.//
மக்கள் தோகை வளர்ச்சியும் ஒரு காரணமானாலும் நம்முடையா பொருப்புணர்வும் ஒரு காரணம்தானே! அதே போல் செல்வங்கள் ஓர் இடத்தில் குவிந்து கிடப்பதும் ஒரு காராணம்தானே!
//இருப்பவர்களை நன்றாக இருக்க விஞ்ஞானம் முயல்கின்றது. மரபணு-பொறியியல் இல்லையென்றால், இந்தியா என்றோ பஞ்ச தேசமாகியிருக்கும். ஆனால் அது மட்டுமே போதாது; பொது மக்களும் சில தெளிவை பெற வேண்டும். நீங்கள் படத்தில் காட்டிய குழந்தைகள் போல் இந்த உலகில் ஏராளம். ஆனால், அது போன்ற காட்சியை மற்ற உயிரனங்களில் பார்க்க முடியாது. ஏனென்றால், பிழைக்க முடியா உயிர்கள் அதற்கு ஏற்றால் போல் ஆரம்பத்திலே அழிந்து போகும். நாம் மனித நேயம் என்ற பெயரில் பலரையும் காக்க நினைத்து, உண்மையில் பல ஜீவன்களை வேதனைக்கு உள்ளாக்குகின்றோம்.//
ஒரு பக்கம் பார்த்தால் நீங்கள் சொல்வதும் சரியாகதான் இருக்கின்றது. அதை விட மனிதன் மற்ற விலங்கினங்களை காட்டிலும் அறிவுடையவன். ஆகையால் முறையான உணவு கோர்வையை உண்டாக்கினால் நன்றாக இருக்குமே...
// உமா said...
நீர், பின் பசி அடிப்படையான வாழ்விற்கு ஆதாரமான விடயங்கள். இன்றயச் சூழலில் சிந்திக்க வேண்டிய நல்ல கருத்துக்களை எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றிங்க
// Suresh Kumar said...
நல்ல கருத்துக்கள் நண்பா நாம் ஒவ்வெருவரும் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்//
வாங்க சுரேஷ் குமார்.. மிக்க நன்றி நண்பா...
உங்கள ஜக்கம்மா தேடுராங்க... அதனால கீழே உள்ள முகவரிக்கு வாங்க உடனே..
http://yellorumyellamum.blogspot.com/2009/08/blog-post_21.html
ஞானம் கொடுமை.வேணாம்.நான் ஒரு கவிதைக்கு இந்தப் படம் போட்டு எல்லார்கிட்டயும் நல்லா திட்டு வாங்கினேன்.
வறுமை பசி இப்போ சோமாலியைவைத் தாண்டி எங்கள் நாட்டில்-தமிழர் பகுதியில்தான் தங்கியிருக்கிறது.முடிந்தால் விரட்டுங்கள்.
ஞானம் தண்ணீர்,அடுத்து பசி.சமூகச் சிந்தனை உங்களை விரட்டிக்கொண்டிருக்கு.
அது சரி தொடர் பதிவு என்ன ஆச்சு.முதன் முதலாகத் தொடங்கி இன்னும் யாருமே போடல.அவ்ளோ கஸ்டமான கேள்விகளா?
நாலே நாலு கேள்விதானே !
இந்தியாவில் வறுமையின் காரணமாக 20 கோடி மக்கள் உணவின்றி பட்டினிகிடக்கின்றார்கள். என்று அண்மையில் ஒரு தொண்டுநிறுவனம் ஆய்வு ஒன்றில் தெரியப்படுத்தியுள்ளது.
ஆம் அதே நேரத்தில் தின்று தின்று பெருத்த கூட்டமும் சமீபமாய் இங்கு அதிகமாகிவிட்டது
மனிதனுக்கு பசி மட்டும் இல்லைனா நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை!
//தாவரங்களுக்கு பசி உணர்வு கிடையாது என்ற சான்றுகள் இருந்தால் சொல்லுங்களேன்//
உயிர் என்பது அடிப்படையில் ஒரு வேதிவினை. எந்த வேதிவினையிலும், சில தேவையான பொருட்கள் இல்லையென்றால், அது அவ்வினையை பாதிக்கும். [http://sites.google.com/site/artificialcortext/putiya-parvai/uyir-tolirnutpam] இங்கு உயிரை எளிமையாக விளக்க முயன்றுள்ளேன். தாவரங்கள் சில தூண்டுதல்களை நோக்கி வளரும். அவற்றுக்கு விலங்குகளைப் போல உணர, சிக்கலான நரம்பு மண்டலமும், மூளை எனும் கட்டுபாட்டு மையமும் இல்லை.
மூளை பலவற்றை கண்காணிக்கின்றது; அதில் ஒன்று இரத்தில் உள்ள போதுமான ஊட்டச்சத்து. அது குறையும் போது மூளை சில தூண்டுதல்களை தரும். இது மட்டும் கொண்ட விலங்குகளுக்கும் உணர்வு கிடையாது. அதற்கும் மேல், சில உயிர்நிலை விலங்குகளின் மூளை, அந்த உணவு பற்றாகுறை நிலையை உணரும் (consciousness); இதை முதல்நிலை உணர்ச்சி (First order consciousness) எனலாம். மனிதன் மற்றும் சில விலங்குகளுக்கு அதற்கு மேல், சுய உணர்ச்சி இருக்கும். இதை உயர்நிலை உணர்ச்சி (Higher order consciousness) எனலாம். இவற்றை பிறகு விரிவாக எழுத முயற்சிக்கின்றேன்.
//பொருப்புணர்வும் ஒரு காரணம்தானே! அதே போல் செல்வங்கள் ஓர் இடத்தில் குவிந்து கிடப்பதும் ஒரு காராணம்தானே!//
//முறையான உணவு கோர்வையை உண்டாக்கினால் நன்றாக இருக்குமே...//
பொருப்புணர்வு, செல்வங்கள் ஓர் இடத்தில் குவிந்து கிடப்பது, முறையான உணவு கோர்வையை உண்டாவது - இதெல்லாம் சமதர்ம (socialism) கருத்துக்கள். இதன் மூலம் பேண்தகுநிலையை (sustainability) உருவாக்குவது கடினம். செல்வங்கள் ஓர் இடத்தில் குவிந்து கிடப்பது இயற்கைக்கு அப்பாற்பட்டதல்ல. அதை எப்படி பொருளாதார சந்தைக்கு கொண்டுவர வேண்டும் என்பதை பற்றி ஆராய வேண்டும்.
// ஹேமா said...
ஞானம் கொடுமை.வேணாம்.நான் ஒரு கவிதைக்கு இந்தப் படம் போட்டு எல்லார்கிட்டயும் நல்லா திட்டு வாங்கினேன்.
வறுமை பசி இப்போ சோமாலியைவைத் தாண்டி எங்கள் நாட்டில்-தமிழர் பகுதியில்தான் தங்கியிருக்கிறது.முடிந்தால் விரட்டுங்கள்.
ஞானம் தண்ணீர்,அடுத்து பசி.சமூகச் சிந்தனை உங்களை விரட்டிக்கொண்டிருக்கு.
அது சரி தொடர் பதிவு என்ன ஆச்சு.முதன் முதலாகத் தொடங்கி இன்னும் யாருமே போடல.அவ்ளோ கஸ்டமான கேள்விகளா?
நாலே நாலு கேள்விதானே !//
வறுமையும் பட்டினியும் இல்லை என்றால் நாம் எந்த பிரச்சனையும் இன்றி இருக்கலாம்.. இது ஒரு முக்கியமான சமுக பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது ஹேமா.. இதை ஒரு சமுக நோக்காக கருதவில்லை என்றால் நாளை உணவுக்காக போராட வேண்டிய சூழல் வரலாம்.. மிக்க நன்றி ஹேமா. உங்கள் தொடர் மிக விரைவில் எழுதுகின்றேன்...
//sakthi said...
இந்தியாவில் வறுமையின் காரணமாக 20 கோடி மக்கள் உணவின்றி பட்டினிகிடக்கின்றார்கள். என்று அண்மையில் ஒரு தொண்டுநிறுவனம் ஆய்வு ஒன்றில் தெரியப்படுத்தியுள்ளது.
ஆம் அதே நேரத்தில் தின்று தின்று பெருத்த கூட்டமும் சமீபமாய் இங்கு அதிகமாகிவிட்டது//
நீங்கள் சொல்வதும் உண்மைதான் சக்தி.. உணவையும் சேமிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கின்றோம்.. மேலும் இதன் தொடரில் பேசலாம்
//வால்பையன் said...
மனிதனுக்கு பசி மட்டும் இல்லைனா நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை!//
வணக்கம் நணபா,... இதைதான் நம்ம பட்டுகோட்டையாரும் சொன்னார்கள்.. மிக்க நன்றி நண்பா
//// RajK said...
//தாவரங்களுக்கு பசி உணர்வு கிடையாது என்ற சான்றுகள் இருந்தால் சொல்லுங்களேன்//
உயிர் என்பது அடிப்படையில் ஒரு வேதிவினை. எந்த வேதிவினையிலும், சில தேவையான பொருட்கள் இல்லையென்றால், அது அவ்வினையை பாதிக்கும். [http://sites.google.com/site/artificialcortext/putiya-parvai/uyir-tolirnutpam] இங்கு உயிரை எளிமையாக விளக்க முயன்றுள்ளேன். தாவரங்கள் சில தூண்டுதல்களை நோக்கி வளரும். அவற்றுக்கு விலங்குகளைப் போல உணர, சிக்கலான நரம்பு மண்டலமும், மூளை எனும் கட்டுபாட்டு மையமும் இல்லை.
மூளை பலவற்றை கண்காணிக்கின்றது; அதில் ஒன்று இரத்தில் உள்ள போதுமான ஊட்டச்சத்து. அது குறையும் போது மூளை சில தூண்டுதல்களை தரும். இது மட்டும் கொண்ட விலங்குகளுக்கும் உணர்வு கிடையாது. அதற்கும் மேல், சில உயிர்நிலை விலங்குகளின் மூளை, அந்த உணவு பற்றாகுறை நிலையை உணரும் (consciousness); இதை முதல்நிலை உணர்ச்சி (First order consciousness) எனலாம். மனிதன் மற்றும் சில விலங்குகளுக்கு அதற்கு மேல், சுய உணர்ச்சி இருக்கும். இதை உயர்நிலை உணர்ச்சி (Higher order consciousness) எனலாம். இவற்றை பிறகு விரிவாக எழுத முயற்சிக்கின்றேன்.///
உங்களின் விரிவான கருத்துகளுக்கும் மிக்க நன்றி ராஜ்.. மேலும் உங்களிடம் எதிர்ப்பார்க்கின்றேன்..
//////பொருப்புணர்வும் ஒரு காரணம்தானே! அதே போல் செல்வங்கள் ஓர் இடத்தில் குவிந்து கிடப்பதும் ஒரு காராணம்தானே!//
//முறையான உணவு கோர்வையை உண்டாக்கினால் நன்றாக இருக்குமே...//
பொருப்புணர்வு, செல்வங்கள் ஓர் இடத்தில் குவிந்து கிடப்பது, முறையான உணவு கோர்வையை உண்டாவது - இதெல்லாம் சமதர்ம (socialism) கருத்துக்கள். இதன் மூலம் பேண்தகுநிலையை (sustainability) உருவாக்குவது கடினம். செல்வங்கள் ஓர் இடத்தில் குவிந்து கிடப்பது இயற்கைக்கு அப்பாற்பட்டதல்ல. அதை எப்படி பொருளாதார சந்தைக்கு கொண்டுவர வேண்டும் என்பதை பற்றி ஆராய வேண்டும்.///
கண்டிப்பாக ஆராயப்பட வேண்டிய ஒன்றுதான்
மனது கனக்கிறது
பகிர்ந்து கொள்ள வார்த்தைகள் இல்லை
You have started nice things Gnanaseharan,the post on Hunger is fantastic.
//குறை ஒன்றும் இல்லை !!! said...
உங்கள ஜக்கம்மா தேடுராங்க... அதனால கீழே உள்ள முகவரிக்கு வாங்க உடனே..
http://yellorumyellamum.blogspot.com/2009/08/blog-post_21.html//
மிக்க நன்றி நண்பா
//கதிர் - ஈரோடு said...
மனது கனக்கிறது
பகிர்ந்து கொள்ள வார்த்தைகள் இல்லை//
வாங்க நண்பா,.. உங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சி
// Muniappan Pakkangal said...
You have started nice things Gnanaseharan,the post on Hunger is fantastic
//
மிக்க நன்றி சார்,.. உங்களின் ஊக்கம் என்னை மேலும் மேலும் நல்ல இடுகைகளை எழுத வைக்கின்றது...
உங்களுக்கு ஒரு சிறிய விருது
http://suryakannan.blogspot.com/2009/08/blog-post.html
// சூர்யா ௧ண்ணன் said...
உங்களுக்கு ஒரு சிறிய விருது
http://suryakannan.blogspot.com/2009/08/blog-post.html//
மிக்க நன்றி நண்பா,... உங்களின் வருகையும் விருதும் என்னை மகிழ்ச்சியிம் ஆழ்த்துகின்றது.
நல்ல பதிவு!
ஒருமுறை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஒரு மனநோயாளி என்று நினைக்கின்றேன், தான் வாந்தி எடுத்த உணவை தன் பசிக்காக எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். //
அவ்வ்வ்வ்வ்வ்!
கோயிலுக்கு போனாலும் புளிசாதமாவது கெடைக்குமே.
சமுதாய கண்ணோட்டத்தில் நல்லா யோசித்து எழுதியிருக்கீங்க தல. எல்லோரையும் படிக்க வைத்து யோசிக்க வைத்திருக்கீங்க. விவசாயம் நம் நாட்டின் முதுகுஎலும்பு அது இப்போம் உடைந்து போகும் நிலையில்.... வறுமை கழையப்பட வேண்டிய ஒன்று... உலகத்திலே மிக கொடுமையான விஷயம் பசி. அந்த கொடுமை மட்டும் யாருக்கும் வரக்கூடாது. இன்றைக்கு பிளாட்பாரத்தில்...., தெரு ஓரங்களில் வயிற்று பசிக்காக கையோந்தும் சின்ன சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்க்க முடிகிறது. வேதனை. என்ன செய்யலாம் ஞானசேகரன்...????
///அத்திவெட்டி ஜோதிபாரதி said...
நல்ல பதிவு!
ஒருமுறை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஒரு மனநோயாளி என்று நினைக்கின்றேன், தான் வாந்தி எடுத்த உணவை தன் பசிக்காக எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். //
அவ்வ்வ்வ்வ்வ்!
கோயிலுக்கு போனாலும் புளிசாதமாவது கெடைக்குமே.///
வணக்கம் ஜொதிபாரதி,... நீங்கள் சொல்வதை போல எல்லா கோவிலிலும் எல்லா நேரங்களிலும் அதிலும் எல்லா மனிதர்களுக்கும் கோவில் சாதம் கிடைப்பல்லையே!.... மிக்க நன்றிங்க்..
//கடையம் ஆனந்த் said...
சமுதாய கண்ணோட்டத்தில் நல்லா யோசித்து எழுதியிருக்கீங்க தல. எல்லோரையும் படிக்க வைத்து யோசிக்க வைத்திருக்கீங்க. விவசாயம் நம் நாட்டின் முதுகுஎலும்பு அது இப்போம் உடைந்து போகும் நிலையில்.... வறுமை கழையப்பட வேண்டிய ஒன்று... உலகத்திலே மிக கொடுமையான விஷயம் பசி. அந்த கொடுமை மட்டும் யாருக்கும் வரக்கூடாது. இன்றைக்கு பிளாட்பாரத்தில்...., தெரு ஓரங்களில் வயிற்று பசிக்காக கையோந்தும் சின்ன சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்க்க முடிகிறது. வேதனை. என்ன செய்யலாம் ஞானசேகரன்...????
//
வணக்கம் கடையம் ஆனந்த் ,...
உங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றிபா,.. வரும் காலங்களில் உணவு பற்றாகுறையை போக்க தோலைநோக்கு திட்டங்களும் நல்ல ஆலோசனைகளும் முக்கியம் என்பதை நாம் உணரவேண்டும் என்பதுதான் என் எண்ணங்கள். தற்காலிய தீர்வாக கொடுக்கும் இலவசங்களை விட்டுவிட்டு நல்ல தோலைநோக்கு வேண்டும். அரசு யோசிக்குமா? நொடிந்து வரும் விவசாயத்தை கவணிக்குமா?
சிறந்த சிந்தனை...பூங்கொத்து!
//அன்புடன் அருணா said...
சிறந்த சிந்தனை...பூங்கொத்து!//
வாங்க அருணா,.. மிக்க நன்றிங்க
மிகவும் அருமையான பதிவு மட்டுமல்ல அவசியமான பதிவும்கூட நண்பரே.
சிந்திக்கப்பட வேண்டிய விடயங்களே. பகிர்வுக்கு நன்றி நண்பா... தொடருங்கள்...
//சந்ரு said...
மிகவும் அருமையான பதிவு மட்டுமல்ல அவசியமான பதிவும்கூட நண்பரே.
சிந்திக்கப்பட வேண்டிய விடயங்களே. பகிர்வுக்கு நன்றி நண்பா... தொடருங்கள்...//
மிக்க நன்றி நண்பா
அருமை என் நண்பா அருமை
எவ்வளவு தொலைவிலிருந்தும்
எம் தேசத்து முரண்களை நுணுக்கமாகவும்
இலக்கியத்தோடும் பட்டியலிடுகிறாய்.
கூடுதல் ஈர்ப்பு மிக்க பதிவு.
// காமராஜ் said...
அருமை என் நண்பா அருமை
எவ்வளவு தொலைவிலிருந்தும்
எம் தேசத்து முரண்களை நுணுக்கமாகவும்
இலக்கியத்தோடும் பட்டியலிடுகிறாய்.
கூடுதல் ஈர்ப்பு மிக்க பதிவு.//
வணக்கம் நண்பா,..
மிக்க நன்றி!!!! உங்களின் ஊக்கம் என்னை மேலும் மேலும் படைக்க தூண்டும்... மீண்டும் நன்றி
நல்ல சமுதாய சிந்தனையுள்ள பதிவு...இன்று கவனிக்கப்பட வேண்டிய முக்கிய சிக்கல்..இது
// முனைவர் சே.கல்பனா said...
நல்ல சமுதாய சிந்தனையுள்ள பதிவு...இன்று கவனிக்கப்பட வேண்டிய முக்கிய சிக்கல்..இது//
ஆமங்க,.. முக்கியமான ஒன்று இன்னும் இதைப்பற்றி எழுதலாம் என்ற எண்ணம்....
உங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க
சமீபத்திய உங்கள் இடுகைகள் அனைத்துமே அருமை
// " உழவன் " " Uzhavan " said...
சமீபத்திய உங்கள் இடுகைகள் அனைத்துமே அருமை//
மிக்க நன்றி நண்பா,.. உங்களின் ஊக்கங்கள் என்னை மேலும் சிறப்பாக்கும்
Post a Comment