ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-4 (முற்றும்)
முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
ஏழை, ஏழையாக இருப்பதேன்?...
ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-2
ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-3
"ஒருவர் ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு குறைவான வருமானம் என்றால் அது வறுமை என உலக வங்கி நிர்ணயத்துள்ளது. அப்படி பார்த்தால் இந்தியாவில் 41% மக்கள் வறுமையில் இருக்கின்றனர். இது ஆப்பிரிக்கா நாட்டைவிட அதிகம் என சொல்லப்படுகின்றது. 2015 ல் இன்னும் அதிகமானோர் வறுமையில் இருப்பார்கள் என்ற எச்சரிக்கையும் நம்மை கலங்க வைக்கின்றது."
என்னதான் ஏழ்மைக்காண காரணங்களையும் சொல்லியும், அதற்கு பொறுப்பானவர்களை குறை சொல்லிக்கொண்டே போனாலும் மேலே உள்ள செய்தி நம் அடிவயிற்றை கலக்க செய்கின்றது. என்னுடன் படித்த நண்பன் ராம்ராஜ் என்பவன் நன்றாக படிப்பான். கணிதத்தில் 100 சதவிகிதம் வாங்குபவன். அவனது குடும்பம் கல் உடைத்து அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் காலம் நடத்தியது. தினம் அவன் பள்ளிக்கு பழைய சோறும் வெங்காயமும் எடுத்துவருவான். சகமாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட கூச்சப்படுவான். ஆனால் நாங்கள் அவனை சேர்த்துக்கொள்ளுவோம். நான் என்னுடைய சாப்பாட்டை பகிர்ந்துக்கொள்வேன். நான் அவன் எடுத்து வரும் வெங்காயத்தை எடுத்து சாப்பிடுவேன். காலங்கள் ஓடியது எல்லோரும் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் வெற்றியும் பெற்றோம். ராம்ராஜ் நல்ல மதிப்பெண் பெற்றான். கணிதத்தில் 98 சதவிகிதம் எடுத்தான். என் நண்பர்கள் அனைவரும் +2 வில் சேர்ந்து படித்தோம். அவன் மட்டும் பாலிடெக்னிகில் சேர்ந்து படிப்பதாக கூறினான். பின்னர் அவனுடைய தொடர்பு கிடைக்கவில்லை. ஒரு 15 வருடத்திற்கு பின் அவனை பார்க்க நேரிட்டது அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது மூன்று குழந்தைகள், குழந்தைகளின் நிலையை பார்த்தாலே அவனின் வறுமையை புரிந்துக்கொள்ள முடிந்தது. "ராம் ராஜ் என்ன செய்கின்றாய் என்றேன்". அவன் "பாலிடெக்னிக் சேர்ந்து இரண்டாம் ஆண்டுடன் நிறுத்திவிட்டதாகவும், தந்தையின் உடல்நிலை மோசமானதால் குடும்பத்தின் சுமையை ஏற்க வேண்டி வந்தது. வேறு வழியில்லாமல் அப்பா சென்ற அதே இடத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டேன். அங்கு "பாறை வெடி" வெடிக்க செய்யும் வேலைக் கிடைத்தது. எனக்கு திருமணமும் ஆகிவிட்டது" என்றான். என்னால் அதற்கு மேல் கேள்விகளை கேட்க முடியவில்லை. அவன் குழந்தையிடம் 50 ருபாய் கொடுத்து விட்டு வந்துவிட்டேன். அதற்கு பின் அவனை பார்க்க முடியவில்லை, என் எண்ணங்கள் அவனை பற்றியே சில நாட்கள் ஓடியது பின் எப்பொழுதும் போல சகசநிலைக்கு வந்துவிட்டேன்.
என்னதான் கல்வியும் சந்தர்ப்பமும் கிடைத்தாலும் காலம் பல வேளைகளில் எங்கேயோ எட்டி உதைத்துவிடுகின்றது. என்பதை என் நண்பன் மூலம் அறிய முடிந்தது. அது போல இன்னும் சிலர் இருப்பதையும் நான் பார்த்துள்ளேன். என்னை பொருத்தவரை சரியான விழிப்புணர்வு இல்லாததால் இவர்களை போன்றவர்கள் சரியாக வாய்ப்பை பயன்படுத்த முடியாமல் போய்விட்டது என்றே தோன்றுகின்றது. இன்றைக்கு இந்த பிரச்னையை தீர்த்து விட்டால் போதும் என்ற நோக்கில் வாழ்க்கையை அடகு வைத்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வறுமையை ஒழிக்க அரசாங்கம் கொடுக்கும் இலவசங்கள் போதுமானவை என்ற போக்கை அரசு நிறுத்திவிட்டு சரியான வழிகாட்டல்களும் விழிப்புணர்வுகளையும் உண்டாக்க முயன்றால் நன்றாக இருக்கும்.
(படம் வழக்கம்போல் இணையத்தில் சுட்டது)
நாட்டின் பொருளாதாரம் அதன் வளர்ச்சிக்கும் ஒரு நல்ல கட்டமைப்பும் ஆராய்ச்சியும் தேவை. அதைவிட முக்கியம் நல்ல திட்டங்களும் நிர்வாக திறமையும் உள்ள அரசும் தேவை. திட்டங்களை விட திட்டங்களின் செயல்வடிவம் மக்களுக்கு சென்றடைவதுதான் மிக முக்கியம். நமது நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்துதான் உள்ளது. நாளைய உலகின் மிக பெரிய பற்றாகுறை "உணவு" என்ற உண்மை உலகையே கலங்க செய்துக்கொண்டு உள்ளது. இந்தியாவின் வளங்களை சரியா பயன்படுத்தினால் இந்தியா உலக நாடுகளுக்கு சோறு போடமுடியும் என்பதை நாமும் இந்த அரசும் எப்பொழுது புரிந்துக்கொள்ள போகின்றதோ தெரியவில்லை. மக்கட் செல்வமும் விளைநிலப்பரப்பும் ஒருங்கே கொண்ட ஒரே நாடு நம் வாழும் பாரத நாடுதான். அதை முறையாக பயன்படுத்த நல்ல ஒரு அரசாங்கம் தேவை.
இன்று செயல்பட்டுகொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுகின்றது என்பது பாராட்டகூடியது. அதே சமயம் தமிழகத்தில் வேலை செய்பவர்கள் அதிகமானோர் வட இந்தியர்களாய் இருக்கின்றனர். இதிலிருந்து தமிழகத்தில் வறுமை நிலை நீங்கியுள்ளது என்று அர்த்தமும் கொள்ளமுடியாது. இங்குள்ளவர்கள் சரியாக வேலைக்கு வருவதில்லை மேலும் நெர்மை குறைவாக உள்ளது என்பதை நிர்வாகம் சொல்லும் பொழுது நாமும் வெட்கி தலைகுனியதான் வேண்டும். மேலும் வெளிநாட்டில் ஆள் எடுப்பதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளார்கள் என்ற செய்தியும் வேதனைக்குறியதே. சுமார் 20 வருடங்களுக்கு முன் இருந்ததை விட இன்று வேலை வாய்ப்புகள் அதிகமாகதான் இருக்கின்றது. ஆனால் அந்த வேலைதான் வேண்டும் என்று காத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றது.
வறுமை ஒழிப்புக்காகவும் சுயவேலை வாய்ப்புக்காகவும் அரசங்கம் சில திட்டங்களும் செயல்படுத்தியுள்ளது. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் கிடைத்தவர்கள் சரியாக பயன்படுத்தியுள்ளார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. மாடே வாங்காமல் மாட்டு கடன் வாங்குவது பின் அது இறந்துவிட்டதாக சொல்லி கடனை ரத்து செய்ய சொல்வதும் நடக்கின்றது. இதற்கு வங்கி அதிகரிகளும் துணைபோகின்றார்கள், அதற்காக இவர்கள் பணம்பெறுகின்றனர். எனக்கு தெரிந்து ஒருவர் மனைவி பெயரில் ஒன்று மகன் பெயரில் ஒன்றாக கறவை மாடு கடன் வாங்கி சரியாக உழைத்து அதிக லாபத்தை பார்த்துள்ளார். முறைகேடாக மூவர் பெயரில் கடன் வாங்கினாலும் அவரின் முறையான உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியாதே.
இந்தியாவில் வறுமை அதிகரித்தாலும் அதை ஒழிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதற்காக அரசாங்கத்தை மட்டுமே நம்பி இருக்காமல் நாமும் அதற்கான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசைகளாக இருக்கும். ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தேடி தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. நம் அருகில் உள்ள நம்முடைய உதவிகள் தேவை படுவோர்களுக்கு சிறிய உதவிகளையும் விழிபுணர்வுகளையும் கொடுத்தாலே போதும். நாளைய இந்தியா வளமாக இருக்கும் என்று நம்புகின்றேன்...
என்னால் இந்த நாட்டிற்கு ஏழ்மையை கொண்டு செல்ல விடமாட்டேன் என்ற உறுதிமொழியை நாம் ஒவ்வொருவரும் ஏற்று சுறுசுறுப்புடனும் நேர்மையுடனும் செல்படுவோம்.
வாழ்க இந்தியா!
வளர்க இந்தியர்!
அன்புடன்
ஆ,ஞானசேகரன்.
Friday, October 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
41 comments:
வறுமை என்பது சிந்திக்க வேண்டிய ஓன்று எத்தனை தான் அரசாங்கம் திட்டங்களை தீட்டினாலும் வறுமை ஒழிக்க முடியாத காரணம் ஓன்று சோம்பல் , உழைக்க வேண்டியாய பருவத்தில் ஊர் சுற்றி விட்டு பின்னர் அழுவது .
நல்ல ஒரு இடுகை
// Suresh Kumar said...
வறுமை என்பது சிந்திக்க வேண்டிய ஓன்று எத்தனை தான் அரசாங்கம் திட்டங்களை தீட்டினாலும் வறுமை ஒழிக்க முடியாத காரணம் ஓன்று சோம்பல் , உழைக்க வேண்டியாய பருவத்தில் ஊர் சுற்றி விட்டு பின்னர் அழுவது .
நல்ல ஒரு இடுகை//
உண்மைதான் நண்பா... உங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றிபா
ஒருவர் ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு குறைவான வருமானம் என்றால் அது வறுமை என உலக வங்கி நிர்ணயத்துள்ளது. அப்படி பார்த்தால் இந்தியாவில் 41% மக்கள் வறுமையில் இருக்கின்றனர். இது ஆப்பிரிக்கா நாட்டைவிட அதிகம் என சொல்லப்படுகின்றது. 2015 ல் இன்னும் அதிகமானோர் வறுமையில் இருப்பார்கள் என்ற எச்சரிக்கையும் நம்மை கலங்க வைக்கின்றது.///
அதிர்ச்சி செய்தியாக உள்ளதே!!
முடிந்ததா தொடர்?
// இந்தியாவின் வளங்களை சரியா பயன்படுத்தினால் இந்தியா உலக நாடுகளுக்கு சோறு போடமுடியும் என்பதை நாமும் இந்த அரசும் எப்பொழுது புரிந்துக்கொள்ள போகின்றதே தெரியவில்லை. மக்கட் செல்வமும் விளைநிலப்பரப்பும் ஒருங்கே கொண்ட ஒரே நாடு நம் வாழும் பாரத நாடுதான். அதை முறையாக பயன் படுத்த நல்ல ஒரு அரசாங்கம் தேவை//
நிஜத்தை சுடும் வரிகள்..வாழ்த்துகள்.தொடர்வோம் ஞான்ஸ்.
// தேவன் மாயம் said...
ஒருவர் ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு குறைவான வருமானம் என்றால் அது வறுமை என உலக வங்கி நிர்ணயத்துள்ளது. அப்படி பார்த்தால் இந்தியாவில் 41% மக்கள் வறுமையில் இருக்கின்றனர். இது ஆப்பிரிக்கா நாட்டைவிட அதிகம் என சொல்லப்படுகின்றது. 2015 ல் இன்னும் அதிகமானோர் வறுமையில் இருப்பார்கள் என்ற எச்சரிக்கையும் நம்மை கலங்க வைக்கின்றது.///
அதிர்ச்சி செய்தியாக உள்ளதே!!//
வணக்கம் டாக்டர்
உண்மைதான்
[[ ஜெரி ஈசானந்தா. said...
// இந்தியாவின் வளங்களை சரியா பயன்படுத்தினால் இந்தியா உலக நாடுகளுக்கு சோறு போடமுடியும் என்பதை நாமும் இந்த அரசும் எப்பொழுது புரிந்துக்கொள்ள போகின்றதே தெரியவில்லை. மக்கட் செல்வமும் விளைநிலப்பரப்பும் ஒருங்கே கொண்ட ஒரே நாடு நம் வாழும் பாரத நாடுதான். அதை முறையாக பயன் படுத்த நல்ல ஒரு அரசாங்கம் தேவை//
நிஜத்தை சுடும் வரிகள்..வாழ்த்துகள்.தொடர்வோம் ஞான்ஸ்.]]
மிக்க நன்றி சார்...தொடரலாம்
//வறுமையை ஒழிக்க அரசாங்கம் கொடுக்கும் இலவசங்கள் போதுமானவை என்ற போக்கை அரசு நிறுத்திவிட்டு சரியான வழிகாட்டல்களும் விழிப்புணர்வுகளையும் //
நியாயமான வரிகள்
சிந்திக்க வைக்கும் மற்றுமொரு படைப்பு
நன்றி நண்பா
இந்த நிலை மாறி இந்தியாவில் வறுமை ஒளிய வேண்டும். நடக்க வேண்டும்.
[[ கதிர் - ஈரோடு said...
//வறுமையை ஒழிக்க அரசாங்கம் கொடுக்கும் இலவசங்கள் போதுமானவை என்ற போக்கை அரசு நிறுத்திவிட்டு சரியான வழிகாட்டல்களும் விழிப்புணர்வுகளையும் //
நியாயமான வரிகள்
சிந்திக்க வைக்கும் மற்றுமொரு படைப்பு
நன்றி நண்பா]]
வணக்கம் கதிர் மிக்க நன்றி நண்பா
// பின்னோக்கி said...
இந்த நிலை மாறி இந்தியாவில் வறுமை ஒளிய வேண்டும். நடக்க வேண்டும்.//
வாங்க பின்னோக்கி
மிக்க நன்றிபா
நான்கு பாகத்திலும் விட்டுப்போன ஒரு செய்தி!
ஏழை ஏழையாக இருந்தால் தான், அரசியல்வாதிகள், அரசியல் செய்ய முடியும்!
[[ வால்பையன் said...
நான்கு பாகத்திலும் விட்டுப்போன ஒரு செய்தி!
ஏழை ஏழையாக இருந்தால் தான், அரசியல்வாதிகள், அரசியல் செய்ய முடியும்!]]
விட்டுப்போன செய்தி மட்டும் இல்லை உண்மை செய்தியும் கூட...
நன்றி நண்பா
ஞானம்,வறுமை பற்றி நீண்ட சிந்திப்பு.முற்றும் என்று பதிவை முடித்துவிட்டாலும் வறுமைக்கு முற்றும் யார் வைப்பது.எப்போது முற்றும் !தொடர்ந்தும் சிந்திப்போம்.
// ஹேமா said...
ஞானம்,வறுமை பற்றி நீண்ட சிந்திப்பு.முற்றும் என்று பதிவை முடித்துவிட்டாலும் வறுமைக்கு முற்றும் யார் வைப்பது.எப்போது முற்றும் !தொடர்ந்தும் சிந்திப்போம்//
வாங்க ஹேமா,... வறுமைக்கு முற்று வைக்க வேண்டியவர்களும் நாம்தான். அந்த நல்ல நாளை நோக்கி செல்வோம்... மிக்க நன்றி ஹேமா
//என்னதான் கல்வியும் சந்தர்ப்பமும் கிடைத்தாலும் காலம் பல வேலைகளில் எங்கேயோ எட்டி உதைத்துவிடுகின்றது.//
உண்மைத்தான்.
//வறுமையை ஒழிக்க அரசாங்கம் கொடுக்கும் இலவசங்கள் போதுமானவை என்ற போக்கை அரசு நிறுத்திவிட்டு சரியான வழிகாட்டல்களும் விழிப்புணர்வுகளையும் உண்டாக்க முயன்றால் நன்றாக இருக்கும்.//
இதுதான் சரி.
//மக்கட் செல்வமும் விளைநிலப்பரப்பும் ஒருங்கே கொண்ட ஒரே நாடு நம் வாழும் பாரத நாடுதான். அதை முறையாக பயன் படுத்த நல்ல ஒரு அரசாங்கம் தேவை//
நிறைவேற வேண்டிய ஆசை.
//இந்தியாவில் வறுமை அதிகரித்தாலும் அதை ஒழிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதற்காக அரசாங்கத்தை மட்டுமே நம்பி இருக்காமல் நாமும் அதற்கான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்//
நிகழுமா?
நல்ல பதிவு... நேர்மையான எண்ணம் .... பாராட்டுக்கள் நண்பா.
[[ சி. கருணாகரசு said...
//என்னதான் கல்வியும் சந்தர்ப்பமும் கிடைத்தாலும் காலம் பல வேலைகளில் எங்கேயோ எட்டி உதைத்துவிடுகின்றது.//
உண்மைத்தான்.
//வறுமையை ஒழிக்க அரசாங்கம் கொடுக்கும் இலவசங்கள் போதுமானவை என்ற போக்கை அரசு நிறுத்திவிட்டு சரியான வழிகாட்டல்களும் விழிப்புணர்வுகளையும் உண்டாக்க முயன்றால் நன்றாக இருக்கும்.//
இதுதான் சரி.
//மக்கட் செல்வமும் விளைநிலப்பரப்பும் ஒருங்கே கொண்ட ஒரே நாடு நம் வாழும் பாரத நாடுதான். அதை முறையாக பயன் படுத்த நல்ல ஒரு அரசாங்கம் தேவை//
நிறைவேற வேண்டிய ஆசை.
//இந்தியாவில் வறுமை அதிகரித்தாலும் அதை ஒழிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதற்காக அரசாங்கத்தை மட்டுமே நம்பி இருக்காமல் நாமும் அதற்கான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்//
நிகழுமா?
நல்ல பதிவு... நேர்மையான எண்ணம் .... பாராட்டுக்கள் நண்பா.]]
வணக்கம் சி. கருணாகரசு,
உங்களின் வருகையும் நல்ல சிந்தனைகளும் மகிச்சியை கொடுக்கின்றது. மிக்க நன்றி நண்பா
உங்கள் தொடர் முழக்கமும்,ஆதங்கமும் -உண்மையானது,நியாயமானது
மிக நல்ல இடுகை ஞானசேகரன்.
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
உங்கள் தொடர் முழக்கமும்,ஆதங்கமும் -உண்மையானது,நியாயமானது//
மிக்க நன்றிங்க ஜோதிபாரதி.
//ராமலக்ஷ்மி said...
மிக நல்ல இடுகை ஞானசேகரன்.//
மிக்க நன்றிங்க..
என்னதான் காரணங்கள் வறுமைக்கு, அதை அழிக்க, சொல்லப்பட்டாலும், அரசாங்ககம் எவ்வளவோ திட்டங்கள் போட்டாலும், இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மனிதர்கள் குறையமாட்டார்கள். இதற்கு அடிப்படைக்காரணம், இந்தியர்கள் வாழக்கைக்கோட்பாடு. அஃது அடிப்படையில் தன்னலத்தைத் எவ்வழியிலும் தேடுவ்து. Unethical conduct in public and private affairs.
All welfare programme achieve success only partially, initially and crashes totally in the end. Not a single person is found who can be entrusted with money to spend for the welfare of the poor. People have long since accepted the inexorable fact that corruption is a normal conduct of every Indian.
The above is from Amartya Sen, who won Nobel Prize for Welfare Economics.
உண்மையில் இதுப்போல ஒரு தலையங்கத்தில் அக்கறை எடுத்து எழுதிய உங்கள் உழைப்பிற்கு ஒரு Salute.
//கள்ளபிரான் said...
என்னதான் காரணங்கள் வறுமைக்கு, அதை அழிக்க, சொல்லப்பட்டாலும், அரசாங்ககம் எவ்வளவோ திட்டங்கள் போட்டாலும், இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மனிதர்கள் குறையமாட்டார்கள். இதற்கு அடிப்படைக்காரணம், இந்தியர்கள் வாழக்கைக்கோட்பாடு. அஃது அடிப்படையில் தன்னலத்தைத் எவ்வழியிலும் தேடுவ்து. Unethical conduct in public and private affairs.
All welfare programme achieve success only partially, initially and crashes totally in the end. Not a single person is found who can be entrusted with money to spend for the welfare of the poor. People have long since accepted the inexorable fact that corruption is a normal conduct of every Indian.
The above is from Amartya Sen, who won Nobel Prize for Welfare Economics.//
வணக்கம் கள்ளபிரான் உங்களின் வருகைக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறுவதுபோல இந்திய கோட்பாட்டில் தன்னலம் இருப்பதும் உண்மைதான். அது அதிகமாக இருப்பதுதான் பிரச்சனை. தனி மனித முன்னேற்ற சுயநலம் தேவைகள்தான் அதுவே தனிமனித ஏழமையை விரட்டும்.. உங்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு நன்றி நண்பா
//வினோத்கெளதம் said...
உண்மையில் இதுப்போல ஒரு தலையங்கத்தில் அக்கறை எடுத்து எழுதிய உங்கள் உழைப்பிற்கு ஒரு Salute.
//
நன்றி தலைவா!
சேகர்,பிரமிப்பா இருக்கு.நெகிழ்வும் கூட.கட்டுரையின் மொத்தமும் வாசிக்கும் போது என்ன எழவுடா நாம் பண்ணிக்கொண்டிருக்கோம் என்று இருக்கு.உங்களை மாதிரியான ஆட்க்களுக்காக எங்களை மாதிரியான ஆட்க்களை(கவிதை) கடவுள் மன்னிக்கட்டும்.!ரொம்ப நெருக்கமாய் உணர்கிறேன் சேகர்!
// பா.ராஜாராம் said...
சேகர்,பிரமிப்பா இருக்கு.நெகிழ்வும் கூட.கட்டுரையின் மொத்தமும் வாசிக்கும் போது என்ன எழவுடா நாம் பண்ணிக்கொண்டிருக்கோம் என்று இருக்கு.உங்களை மாதிரியான ஆட்க்களுக்காக எங்களை மாதிரியான ஆட்க்களை(கவிதை) கடவுள் மன்னிக்கட்டும்.!ரொம்ப நெருக்கமாய் உணர்கிறேன் சேகர்!//
வணக்கம் பா.ராஜாராம்... உங்களை போன்றோர்களின் ஊக்கமே என்னை எழுதவைக்கின்றது. நமது நெருக்கம் தொடரட்டும்....
மிக்க நன்றிங்க...
The economic part of Agriculture has come down to 23 % of the total economy of India,that means people have started leaving to other economic segments.As you've pointed outr,our people also should change from their selfishness.
// Muniappan Pakkangal said...
The economic part of Agriculture has come down to 23 % of the total economy of India,that means people have started leaving to other economic segments.As you've pointed outr,our people also should change from their selfishness.//
உங்களின் கருத்துரைக்கும் நன்றி டாகடர்...
அருமையான தொடர்.
அத்தனையும் உண்மை.
என் மனதில் தோன்றுவது ஒன்றையும் இங்கே குறிப்பிடத் தோணுது.
நம் நாட்டில் மதங்களுக்கு வளைஞ்சு கொடுக்காமல் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினாலே பாதிக் கஷ்டம் தீர்ந்துரும்.
ஏழையா இருப்பது கொடுமை. அதிலும் அவர்கள் அளவுக்கதிகமாகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு அவர்களையும் வறுமையில் உழலவிடுவது என்ன மாதிரி நியாயமுன்னு புரியலை.
போதாததுக்கு அரசாங்கம் மக்களைப் பிச்சைக்கார லெவலுக்குக் கொண்டு போயிருக்கு(-:
// துளசி கோபால் said...
அருமையான தொடர்.
அத்தனையும் உண்மை.
என் மனதில் தோன்றுவது ஒன்றையும் இங்கே குறிப்பிடத் தோணுது.
நம் நாட்டில் மதங்களுக்கு வளைஞ்சு கொடுக்காமல் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினாலே பாதிக் கஷ்டம் தீர்ந்துரும்.
ஏழையா இருப்பது கொடுமை. அதிலும் அவர்கள் அளவுக்கதிகமாகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு அவர்களையும் வறுமையில் உழலவிடுவது என்ன மாதிரி நியாயமுன்னு புரியலை.
போதாததுக்கு அரசாங்கம் மக்களைப் பிச்சைக்கார லெவலுக்குக் கொண்டு போயிருக்கு(-://
வணக்கம் அம்மா,..
உங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியை கொடுக்கின்றது. நீங்கள் சொல்வதும் சரிதான் ஆனாலும் தற்பொழுது மக்கள் குடுப்ப கட்டுப்பாடை தாங்களாகவே ஏற்றுக்கொள்கின்றார்கள்... சூழலும் ஒரு காரணம்.. நமக்கும் விழிப்புணர்வு வேண்டும் என்பது என் விருப்பங்கள்
மிக்க நன்றி அம்மா,.. அடிக்கடி வந்து கருத்தை பதியவையுங்கள் ஊக்கமாக இருக்கும்..
//வறுமை ஒழிப்புக்காகவும் சுயவேலை வாய்ப்புக்காகவும் அரசங்கம் சில திட்டங்களும் செயல்படுத்தியுள்ளது. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் கிடைத்தவர்கள் சரியாக பயன்படுத்தியுள்ளார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.//
முற்றிலும் உண்மை அரசங்கத்தை நம்புவதைவிட நம்மால் செய்யமுடியும் வேலைகளை சரியாக செய்தால் நலம்
[[ சொல்லரசன் said...
//வறுமை ஒழிப்புக்காகவும் சுயவேலை வாய்ப்புக்காகவும் அரசங்கம் சில திட்டங்களும் செயல்படுத்தியுள்ளது. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் கிடைத்தவர்கள் சரியாக பயன்படுத்தியுள்ளார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.//
முற்றிலும் உண்மை அரசங்கத்தை நம்புவதைவிட நம்மால் செய்யமுடியும் வேலைகளை சரியாக செய்தால் நலம்]]
Thanks sollarasan..
சிந்திக்க வேண்டிய விடயங்கள் நல்ல பதிவு
//
இன்றைக்கு இந்த பிரச்னையை தீர்த்து விட்டால் போதும் என்ற நோக்கில் வாழ்க்கையை அடகு வைத்துவிட்டார்கள்
//
சிந்திக்க வைக்கும் வரிகள். நன்றி
// சந்ரு said...
சிந்திக்க வேண்டிய விடயங்கள் நல்ல பதிவு//
நன்றி சந்ரு
[[ வலசு - வேலணை said...
//
இன்றைக்கு இந்த பிரச்னையை தீர்த்து விட்டால் போதும் என்ற நோக்கில் வாழ்க்கையை அடகு வைத்துவிட்டார்கள்
//
சிந்திக்க வைக்கும் வரிகள். நன்றி]]
மிக்க நன்றி நண்பா
ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தேடி தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. நம் அருகில் உள்ள நம்முடைய உதவிகள் தேவை படுவோர்களுக்கு சிறிய உதவிகளையும் விழிபுணர்வுகளையும் கொடுத்தாலே போதும். நாளைய இந்தியா வளமாக இருக்கும் என்று நம்புகின்றேன்
நல்ல வரிகள் ஒவ்வொருவருக்கும் உதவும் எணனம் இருந்தாலே போதும் வறுமை ஒழியும்...
சோ.ஞானசேகர்.
[[ S.Gnanasekar said...
ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தேடி தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. நம் அருகில் உள்ள நம்முடைய உதவிகள் தேவை படுவோர்களுக்கு சிறிய உதவிகளையும் விழிபுணர்வுகளையும் கொடுத்தாலே போதும். நாளைய இந்தியா வளமாக இருக்கும் என்று நம்புகின்றேன்
நல்ல வரிகள் ஒவ்வொருவருக்கும் உதவும் எணனம் இருந்தாலே போதும் வறுமை ஒழியும்...
சோ.ஞானசேகர்.]]
வணக்கங்க,... நீங்கள் சொல்லுவதும் சரியான வாதங்கள்.. மிக்க நன்றிங்க
ப்ச்.. என்ன பண்ணுறது? :-(
// " உழவன் " " Uzhavan " said...
ப்ச்.. என்ன பண்ணுறது? :-(//
வாங்க நண்பா
Post a Comment