_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, May 29, 2010

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!.. விழாக்கோலம் கண்டது

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!..விழாக்கோலம் கண்டது

சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு விழா இன்று(மே 28,2010) மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஆர்கெட் அருகில் உள்ள அப்பல்லோ பனானிலீஃப் உணவகத்தில் மாலை 6.00 மணியிலிருந்து கலைக்கட்டியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மணற்கேணி 2009 சிறந்த கட்டுரைகள் எழுதி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு (
திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம்) விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.






அதனை அடுத்து சிங்கை வலைப்பதிவர்களின் கட்டுரை தொகுப்பு நூல் "மணற்கேணி" வெளியிடப்படுகின்றது.



இந்த மாபெரும் விழாவை திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ்,திருமதி ஜெயந்தி சங்கர், திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான்,திரு.பாண்டியன், திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க துணையாக இருந்தார்கள். விழாவின் முடிவில் உணவும் வழங்கப்பட்டது.


விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அணைத்து நண்பர்களுக்கும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் சார்பாக நன்றியை தெரியப்படுத்துகின்றேன்.... மேலும் அம்மா அப்பா வலை பூவின் சார்பாக அணைவருக்கும் நன்றி!


விழாக்கோலத்தை புகைப்படக் கோலமாக காண கீழ் உள்ள சுட்டியை சுட்டி மகிழலாம்....
விழாக்கோலம் கண்ட சிங்கை பதிவுலக புகைப்படங்களை காணலாம்....


அன்புடன்..
ஆ.ஞானசேகரன்..

37 comments:

பழமைபேசி said...

வாழ்த்துகள் நண்பரே!

ஆ.ஞானசேகரன் said...

// பழமைபேசி said...

வாழ்த்துகள் நண்பரே!//
வணக்கம் பழம.. மிக்க நன்றிங்க

ப.கந்தசாமி said...

தகவலுக்கு நன்றி

தேவன் மாயம் said...

Dear Gnans,

Everything was awsome! I couldnot express it in words!!!

Deva.

தேவன் மாயம் said...

I thank the MANARKENI organaisers for their love on TAMIL. I hope in future this organisation will do a lot to TAMIL in Singai.

பாலு மணிமாறன் said...

நிகழ்ச்சியைப் போலவே உங்கள் பதிவும் அருமை. நீங்கள் படம் பிடிக்கும்போது 'ஆ...'வென்று வாயைத் திறந்து வைக்கக்கூடாது என்று ஒரு கவளம் சோற்றைத் தாமதித்து சாப்பிட்டது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை...;)

வெற்றி-[க்]-கதிரவன் said...

இவ்வளவு வேகத்துல பதிவா ?? கலக்குறேல்

அறிவிலி said...

Great pictures

காமராஜ் said...

வாழ்த்துக்கள் நண்பா. ஞான்ஸ்.
பரிசுபெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள் .

சத்ரியன் said...

ஞானம்,

சிறந்த வரலாற்று பதிவாக - இந்த நிகழ்வை பதிவு செய்து இருக்கின்றீர்கள்.

புகைப்படங்கள் அருமையாக வந்துள்ளது.

மணற்கேணி அமைப்பின் நிகழ்வுகள் மென்மேலும் சிறப்புற என் வாழ்த்துகள்.

priyamudanprabu said...

வேகமா பதிவு போட்டாச்சு
அருமை

Ravichandran Somu said...

விழா மிகச்சிறப்பாக நடந்தது. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வழக்கம்போல் படங்கள் அருமை!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

விஜய் said...

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

கார்த்திகைப் பாண்டியன் said...

கலக்கிட்டீங்க.. சிங்கைப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் தல.. ஜெயிச்ச ஆளுங்க நம்ம ஊருனு பெருமையா சொல்லிப்போம்ல..:-)))

ஆ.ஞானசேகரன் said...

//Dr.P.Kandaswamy said...

தகவலுக்கு நன்றி//
மகிழ்ச்சியும் நன்றிம் டாக்டர்

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம் said...

Dear Gnans,

Everything was awsome! I couldnot express it in words!!!

Deva.//
மிக்க நன்றி தேவன் சார்...

ஆ.ஞானசேகரன் said...

//வெற்றி-[க்]-கதிரவன் said...

இவ்வளவு வேகத்துல பதிவா ?? கலக்குறேல்//


நன்றி நண்பா

கிரி said...

படங்களுக்கு நன்றி :-)

ஆ.ஞானசேகரன் said...

// அறிவிலி said...

Great pictures//

மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// காமராஜ் said...

வாழ்த்துக்கள் நண்பா. ஞான்ஸ்.
பரிசுபெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள் .//

வணக்கம் நண்பா,... மிக்க நன்றிங்க
வேலை பளு காரணமாக நீண்ட இடைவெளியின் சந்திக்கின்றோம்...

ஆ.ஞானசேகரன் said...

// பாலு மணிமாறன் said...

நிகழ்ச்சியைப் போலவே உங்கள் பதிவும் அருமை. நீங்கள் படம் பிடிக்கும்போது 'ஆ...'வென்று வாயைத் திறந்து வைக்கக்கூடாது என்று ஒரு கவளம் சோற்றைத் தாமதித்து சாப்பிட்டது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை...;)//

வணக்கம் மிக்க நன்றிங்க... உங்களின் வருகைக்கு மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

// சத்ரியன் said...

ஞானம்,

சிறந்த வரலாற்று பதிவாக - இந்த நிகழ்வை பதிவு செய்து இருக்கின்றீர்கள்.

புகைப்படங்கள் அருமையாக வந்துள்ளது.

மணற்கேணி அமைப்பின் நிகழ்வுகள் மென்மேலும் சிறப்புற என் வாழ்த்துகள்.//


வணக்கம் நண்பா,...
மகிழ்ச்சியும் நன்றியும்பா....

ஆ.ஞானசேகரன் said...

//பிரியமுடன் பிரபு said...

வேகமா பதிவு போட்டாச்சு
அருமை//

வணக்கம் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி....

ஆ.ஞானசேகரன் said...

// ரவிச்சந்திரன் said...

விழா மிகச்சிறப்பாக நடந்தது. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வழக்கம்போல் படங்கள் அருமை!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்//

வணக்கம்... மிக்க நன்றி
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

//விஜய் said...

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்//

வணக்கம் நண்பா... நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

கலக்கிட்டீங்க.. சிங்கைப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் தல.. ஜெயிச்ச ஆளுங்க நம்ம ஊருனு பெருமையா சொல்லிப்போம்ல..:-)))//

வாங்க கார்த்திகைப் பாண்டியன்
மிக்க மகிழ்ச்சி,.. நிங்களும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

ஆ.ஞானசேகரன் said...

// கிரி said...

படங்களுக்கு நன்றி :-)//

வாங்க கிரி
மகிழ்ச்சிங்க

cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன்

விரிவினில் இடுகை வெளியிட்டு மகிழ்ழ்சியினி ஊட்டி விட்டீர்கள் - சுடச்சுட. அன்றே படித்தேன் பார்த்தேன் மகிழ்ந்தேன் - மறு மொழி இடும் முன்னர் மின்சாரத்தடை.

செயிச்சவங்க எங்க ஊர்க்காரங்கல்ல - இல்லயா பின்ன - அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

ஆ.ஞானசேகரன் said...

// cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன்

விரிவினில் இடுகை வெளியிட்டு மகிழ்ழ்சியினி ஊட்டி விட்டீர்கள் - சுடச்சுட. அன்றே படித்தேன் பார்த்தேன் மகிழ்ந்தேன் - மறு மொழி இடும் முன்னர் மின்சாரத்தடை.

செயிச்சவங்க எங்க ஊர்க்காரங்கல்ல - இல்லயா பின்ன - அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா//

வணக்கம் ஐயா.. மிக்க மகிழ்ச்சிங்க

ஷாகுல் said...

விருது பெற்றோருக்கும் அதை திறம்பட நடத்திய மனற்க்கேனி குமுமத்திற்க்கும் பாராட்டுகள்

ஆ.ஞானசேகரன் said...

// ஷாகுல் said...

விருது பெற்றோருக்கும் அதை திறம்பட நடத்திய மனற்க்கேனி குமுமத்திற்க்கும் பாராட்டுகள்//


நன்றிங்க ஷாகுல்

கையேடு said...

விழா சிறப்பாக நடைபெற்றதில் மகிழ்ச்சி. புகைப்படங்கள் சிறப்பாக வந்துள்ளன. பகிர்வுக்கு நன்றிகளும்.

ஆ.ஞானசேகரன் said...

// கையேடு said...

விழா சிறப்பாக நடைபெற்றதில் மகிழ்ச்சி. புகைப்படங்கள் சிறப்பாக வந்துள்ளன. பகிர்வுக்கு நன்றிகளும்.//

நன்றி நண்பா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

படங்கள்,பதிவு,பகிர்வு அருமை!

சிறந்த புகைப்படக்கருவி நுணுக்கங்கள்!

தொடரவும்

ஆ.ஞானசேகரன் said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

படங்கள்,பதிவு,பகிர்வு அருமை!

சிறந்த புகைப்படக்கருவி நுணுக்கங்கள்!

தொடரவும்//

மிக்க நன்றிங்க ஜோதிபாரதி

பா.ராஜாராம் said...

வாழ்த்துகள் சேகர்!

நல்லாருக்கீங்களா?

ஆ.ஞானசேகரன் said...

// பா.ராஜாராம் said...

வாழ்த்துகள் சேகர்!

நல்லாருக்கீங்களா?//

உங்கள் அன்புக்கு மகிழ்ச்சிங்க பா.ராஜாராம்.. நீங்கள் எப்படியுள்ளீர்கள்?

அன்புடன்
ஆ.ஞானசேகரன்