_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, June 16, 2018

"மகிழ்ச்சி"

"மகிழ்ச்சி"
இது மூளையுடன் தொடர்புடையது. பணத்தால் மற்ற காரணிகளால் மகிழ்வை கொடுக்க முடியாது. மகிழ்வை உணர சில காரணிகள் தேவைபடலாம். அதில் ஒன்று பணமாக கூட இருக்கலாம்.
பணம்தான் மகிழ்வை கொடுக்க முடியும் என்ற நிலை உங்களுடையது என்றால், அதற்கு எய்ட்ஸ் வந்து சாகலாம்.
பணம் இருந்தால் மகிழ்ச்சி தன்னால வரும் என்ற நினைப்பு சிலருக்கு இருக்கலாம். முற்றிலும் தவறான எண்ணம். மகிழ்வு என்பது துக்கம், பயம், ஆச்சரியம், கோபம் போன்ற உணர்வலை சம்பந்தபட்ட நிலை.
மகிழ்ச்சி மட்டுமே குறைந்த அதிர்வை கொடுக்கும் உணர்வு. ஆகவே அதை எல்லோரும் விரும்புகின்றோம். அதற்கும் மட்டுமே அதிகம் ஆற்றல் தேவைபடாது. கோபத்திற்கு அதிக ஆற்றல் தேவைபடுவதால் விரைவில் சோர்வடைகின்றோம். கோபத்திற்கு எப்படி பணம் தேவையில்லையோ அதுபோலதான் மகிழ்ச்சிக்கு தேவைபடாது.
நம் முன்னோர்கள் தியாண நிலையில் மகிழ்ச்சியை உணர்திருக்கின்றார்கள். அந்த மகிழ்ச்சியில் ருசி அதிகமாகவும் நிரந்தரமாகவும் இருப்பதை சொல்லிவிட்டு போய்யுள்ளார்கள். (தியாணம் என்பது கடவுள் சார்ந்த விடயம் இல்லை அறிவு சார்ந்த விடயம்)
சிரிப்பூட்டும் வாயுமூலம் சிரிக்க முடியும் என்றால் ஏன் பணத்தால் மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கமுடியும் என்று எண்ணுகின்றோம்....
சேவல் இல்லாமல் கோழியால் குப்பையை கிழருதல் மூலம் முட்டையிட முடியும். அப்படியிருக்க பணம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க கற்றல் நன்று.
மீண்டும் ஒரு தூண்டலுடன்
ஆ.ஞானசேகரன்

Sunday, March 20, 2016

Beskin with song

Tuesday, September 23, 2014

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 4

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 4

அட ஆமாங்க எங்க ஊரில் ஒரு பாணி பூரி கடை வைத்திருந்தார்கள்  பேருந்து நிலையம் ஓரமாய் இருந்தாலும் நல்ல ஓட்டம்,  சுவையும் பரவாயில்லை...   ஒரு சில நாட்களில்  அருகில் 10 கடை அதே பாணி பூரி கடைகள்  முளைத்துவிட்டது.    அடுத்த ஒரு வாரத்தில் 10 ம்   காணவில்லை.......!!!!!  ( ஒரு தொழில் ஆரம்பிக்கும்பொழுது சமுகவியல், பொருளாதாரம், சூழ்நிலை தெரிந்து செய்தால் நல்லதுதான்...  அவன் செய்யுரான் நானும் செய்யுரேன் என்பது    கேள்விதான்)

அப்படிதான் நம்ம ஊரின் படிப்பும் ஆங்காங்கே முளைக்கும்  கல்லூரிகள், அதில் படிக்கம் மாணவர்களும்.  இதையெல்லாம்  யார் முறைப்படுத்துவது? (அம்மா அப்பாவின் கேள்வி?)  அட போங்க சார்  அரசாங்கம் சாராய வியபாரம் செய்யுது அப்பரம் நாங்களெல்லாம் சும்மாவ இருக்க முடியும் அதுதான் கல்விக்கு தொண்டு செய்ய வந்துவிட்டோம்.  இப்பெல்லாம்  கல்வி நாயகர்களே  நாங்கதான்.  கல்வி கடவுள் என்று சொல்லிக்கொள்ளவும் ஆசைப்படுகின்றோம்.  (நாங்கள் நல்லவனா தெரியுறோம்,  அரசு சாராயம் விற்கிது) 

அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அவங்க அவங்க பேரை போட்டு கொள்ளுறாங்க,  சாரயக்கடைக்கு மட்டும்  அரசு சாரயக்கடைனு வைக்கிறாங்க!  ஏம்பா?  தப்புனு தெரிந்தே செய்யுறோம்......    நல்லவேலை  காந்தி சாரயக்கடைனு வைக்கம விட்டுடோமோ!!!!!!!  (ஹி ஹி  சும்மா ஒரு வைத்தெரிச்சல்) அரசுதான் யோசிக்கல நம கொஞ்சம் யோசிச்சி வைப்போம்...

மேலும் கேள்விகள் தொடரும்
ஆ.ஞானசேகரன்


Thursday, November 7, 2013

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 3

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 3



கொலை என்பது ஒரு மனிதரை இன்னொரு மனிதர் கொல்வது அல்லது மரணம் அடையச் செய்வதாகும். பொதுவான சூழ்நிலைகளில் கொலை ஒரு குற்றச்செயலாகவே கருதப்படுகிறது. ஆனால் போர், எதிர்ப்புப் போராட்டம் போன்ற சூழ்நிலைகளில் கொலை தொடர்பான ஒரு தெளிவான அற நிலைப்பாடு கடினமானது. ( நன்றி  விக்கிப்பீடியா )

விக்கிப்பீடியா:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

கொலை ஒன்று நடந்துவிடுகின்றது...     சூழ்நிலை காரணமாகவோ,  அல்லது திட்டமிட்டோ நடக்கின்றது.   கொலையாலி பிடிபடுகின்றான்  வலக்கு  மற்றத்திற்கு செல்கின்றது.   சாட்சியங்கள் சந்திகத்தின் அடிப்படையில் நிறுபணம் இல்லாமல் போய்விடுகின்றது (சந்தேகங்கள்  குற்றவாளிக்கு சாதகமாகின்றது இதுதான் சட்டமும் சொல்கின்றது!!!!!!!)  குற்றவாளி   விடுதலையாகிவிடுகின்றான்.( என்ன கொடுமை சரவணன் இது)    

 அம்மா அப்பாவின்  கேள்வி இதுதான்   கொலை நடந்தது உண்மை   அப்படியானால் அந்த கொலையை செய்தது யார்?  அதை யார் கண்டுபிடிப்பது?  இறந்தவரின் குடும்பத்திற்கு யார் பாதுகாப்பாகவும் நஷ்டத்தை சரிகட்டவும் செய்வது?  இந்த அரசாங்கம் இதற்கு  என்ன பதில் சொல்லுகின்றது? (மக்களால்  தேர்தெடுக்கப்பட்ட  மக்களாட்சி)    சாதாண மனிதனுக்கு பாதுப்பு தராத அரசியல் அமைப்பிற்கு  என்ன தண்டனை கொடுப்பது?    

உண்மையில்  நடப்பது என்ன?  கொலையாளி விடுதலையாவதும்  கோப்பை உடப்பில் போடுவதும்தான்...  வாடிக்கையும்  வேடிக்கையும்.........

போங்கடா நீங்களும்..........   உங்க ..............!

மாற்றங்களை  எதிர்ப்பார்க்கும் மக்கள் முட்டாளாகின்றனர்........


இன்னும் கேள்விகள் தொடரும்


Friday, October 4, 2013

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்... சுற்று 2

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 2

ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவை காந்தியடிகள் அகிம்சை முறை போராட்டத்தில்  சுந்திர இந்தியாவை கண்டார்........

அன்று அவர் கையாண்ட அகிம்சை போராட்டம் வென்றது.   அந்த அகிம்சை வெற்றிக்கு காரணம்   காந்தியடிகளா?  வெள்ளையர்களா? 



அடுத்த சுற்றில் கேள்விகள் தொடரும்....
ஆ.ஞானசேகரன்

Friday, July 13, 2012

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...



வணக்கம் நண்பர்களே!... பல நாட்களாக இணையம் பக்கம் வரமுடியவில்லை, வேலை பளூ ஒரு பக்கம் இருந்தாலும் மன இறுக்கமும் ஒரு காரணம்தான்... என்னமோ இணையத்தில் எழுதிவைத்தால் இந்த சமுக அவலங்களையும், அநீதிகளையும் தட்டி கேட்டு விடமுடியும் என்ற எண்ணம் எனக்கு இல்லாமல் போய்விட்டது. அப்பறம் என்ன ஒரு பொழுதுபோக்காக எழுதி காலம் கடத்துவதும் பிடிக்கவில்லை. அப்படி எழுதுவதையும் வன்மையாக கண்டனம் செய்கின்றேன். இப்ப என்னதான் சொல்ல வந்தே என்று நினைகின்றீர்களா? என்னுள் கேட்கபடும் கேள்விகளை உங்களுள் கேட்டுப்பார்க்கலாம் என்ற நட்பாசைதான்.... தனி ஒருவனால் எந்த ஒரு மாற்றதையும் எதிர்பார்க்க முடியது. ஒரு சமூக புரட்சி கண்டிப்பாக தேவைபடுகின்றது. அப்படிப்பட்ட ஒரு சமுக புரட்சியை இட்டு செல்ல தன்னலமில்லா தலைவர்கள் இல்லாதது இந்தியாவிற்கே விட்ட சாபமோ என்னமோ!.... அது இருக்கட்டும் அந்த கேள்விதான் என்ன?..... ம்ம்ம்ம்ம் சொல்லுரேன்.

1. லஞ்சம்(கையூட்டு), லஞ்சம் என்று சொல்லுராங்க, அதை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுராங்க, அதற்கான சட்டமும், அரசு அமைப்பும்கூட இருக்கின்றது. அதற்காக பல சமூக அமைப்புகளும் போராடி வருகின்றது. இந்தியாவை பொருத்த வரை லஞ்சத்தை ஒழிக்க வாய்ப்புகள் இருக்கின்றதா? எப்படி? ஏன்?

2. லஞ்சம் பெருகி வருவதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதியா? அரசாங்க அதிகாரிகளா? அவர்களும் நம்மில் ஒருவர்தானே! இருந்தாலும் நம்மால் ஏன் ஒழிக்க முடிவதில்லை?

3. லஞ்சம் கொடுப்பது குற்றமா? வாங்குவது குற்றமா? அல்லது இரண்டுமே குற்றமா? ஒரு தனி மனிதன் இந்த சமூகத்தில் லஞ்சம் வாங்காமல், மேலும் கொடுக்காமல் இருக்க முடியுமா? அப்படி முடிவதில்லை என்றால் அதற்கு யார் (எது?) காரணம்? லஞ்சம் என்பது பணம் மட்டுமில்லை மேலிடத்து சிபாரிசும் லஞ்சம்தான்...

4.1947 க்கு பின் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக பிரகடனம் செய்யப்பட்டது.... இந்த 64 வருடங்களுக்கு பின் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முழு சுதந்திரம் கிடைக்கின்றதா? அந்த சுதந்திரம் முறையாக வழங்கப்படுகின்றதா? அது இருக்கட்டும் முழுமையான பாதுகாப்பை இந்த இந்திய அரசும், இந்திய சட்டமும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தருகின்றதா?

5. நேற்று நாம் குழந்தைகளாக இருந்த பொழுது அந்த தெருவே, ஏன் அந்த ஊரே நம்முடையதுதான். இன்று நம் பிள்ளைகள் பக்கத்து விட்டில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பபடுகின்றதா? பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பாகதான் இருகின்றது, என்று முழுமையாக நம்பப்படுகின்றதா? எத்தனை கோர சமூக அவலங்கள்... அத்தனைக்கும் சட்டம் பாதுக்காப்பாக இருக்கின்றதா? அப்படிப்பட்ட சமுக குற்றவாளிகளுக்கு இந்த இந்திய சட்டம் தகுந்த தண்டனையை கொடுக்க முடிகின்றதா? ஏன்?......

6.இன்று நம் பிள்ளைகளை பள்ளிகளுக்கு வேன், மற்றும் ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றோம். அது நம்முடைய வசதி என்று நினைக்கின்றீர்களா?.... தனியாக பிள்ளைகளை அனுப்ப முடிகின்றதா?.... பக்கத்து தெருவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நாமே சென்றுதான் விட்டு வருகின்றோம் ஏன்?.... அப்படிப்பட்ட சமூக அமைப்பு உருவாக காரணம் என்ன? சட்டமும், சட்ட அமுலாக்கமும் காரணமாக இருக்கும் என்று நினைக்கலாமா? அதற்கு முக்கிய காரணம் என்ன?

7.சட்டம் சரியாக இருந்தாலும், சட்ட அமுலாக்கம், சட்டபாதுகாப்பு ஏன் சரியாக அமைவதில்லை? அரசியல் தலையீடா? அரசு அதிகாரிகளின் சுயநலமும் மெத்தன போக்கு காரணமா? அதற்க்காக யார் போராட வேண்டும்.....

8. சட்டம் தெரிந்த வள்ளுனர்கள் செய்து வருவது தொழிலா? சேவையா? வக்கில்கள் செய்வது தொழில் என்றால் அதை ஏன் அரசு ஏற்று நடத்த வேண்டும்?

9. காவல் துறை மற்றும் காவலிகள் யாருக்கு பாதுக்காப்பாக இருக்கின்றார்கள்? காவலாலிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகலுக்கு சட்டம் தெரிய வேண்டுமா? அப்படி தெரிந்து வைத்துள்ளார்களா? அதனை பரிசோதித்து பார்பதுண்டா?

10. இந்த இந்திய மக்களுக்கு நாட்டை பற்றியோ? சமூகத்தை பற்றியோ? அக்கரை இருக்கின்றதா? இல்லை என்றால் ஏன்? அந்த அக்கரையை யார் வளரும் பிள்ளைகளுக்கு ஊட்டுவது? அந்த விடயத்தில் அரசு நம்பிக்கை இழந்துவிட்டதா?............

இன்னும் கேள்விகள் தொடரும்........
ஆ.ஞானசேகரன்



Friday, June 1, 2012

கண்ணீர் அஞ்சலி (திருப்பூர் சொல்லரசன்)

கண்ணீர் அஞ்சலி (திருப்பூர் சொல்லரசன்)




நமது பதிவுலக நண்பர் சொல்லரசன் என்கின்ற ஜேம்ஸ் சகாயராஜ் நேற்று (31.05.2012) காலை இயற்கை எய்தினார். அதன் பின் திருச்சி பாலக்கரையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் சிறிது காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டார். அண்ணாரின் குடும்பத்தாருக்கு பதிவுலகமே ஆழ்ந்த இரங்கல்களை தெரியப்படுத்துவோம்.

ஒரு நல்ல நண்பரை இழந்ததை நினைக்கின்ற பொழுது மனம் அழுத்தமாக உள்ளது. அவர் பழகுவதற்கு நல்ல மனிதர், பலமுறை நேரில் பார்த்ததால் அவரின் இழப்பு மிகவும் பாதிப்பாக இருக்கின்றது.

அவரைப்பற்றி அவரே சொல்லும் காணோளி (பழையது) .....





அவர் சொல்லரசன் என்ற தளத்தில் தனது கருத்துகளை பகிர்ந்துக் கொண்டார் அவருடைய தளம் செல்ல சொல்லரசன்

Friday, January 27, 2012

ஏன்? எதற்கு? எப்படி?....15

ஏன்? எதற்கு? எப்படி?....15

ஒரு பொருள் ஒரே இடத்தில் இருக்கின்றது என்றால் என்ன காரணமாக இருக்கலாம்? அந்த பொருளை வேறு நிலைக்கு மாற்ற என்ன தேவைப் படுகின்றது?


வணக்கங்க,.. நாம் நடக்கின்றோம், ஓடுகின்றோம், அதற்கு நம்முடைய கால்கள் தேவையாகின்றது. கால் மட்டும் இருந்தால் போதுமா? நாம் நடக்க, ஓட வேறு என்ன காரணிகள் தேவையாகின்றது. " அவனின்றி ஒரு அணுவும் அசையாது" என்பார்கள். ஆனால் ஆற்றல் இன்றி இங்கு ஒன்றுமே இல்லைங்க. அந்த ஆற்றல்தால் கடவுளாக சொல்லுகின்றார்களோ என்னவோ? இந்த அண்டம் என்பது ஆற்றலின் கூடாரம். நாம் அண்டத்தில் உள்ள எல்லா ஆற்றல்களையும் முழுமையாக பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. ஆற்றலை பற்றி முன்பே சொல்லியுள்ளோம். அதன் சுட்டி இதோ ஏன்? எதற்கு? எப்படி?..... 2

இப்போ! ஒரு பொருள் நிலையாக இருக்கின்றது என்றால் என்ன அர்த்தமாக இருக்கும்? அந்த பொருள் இடம் மாற வேண்டும் என்றால் அந்த பொருளுக்கு என்ன தேவையாகின்றது? அந்த பொருளை இடம் மாற்ற வேண்டும் என்றால் தள்ளுகின்றோம், இழுக்கின்றோம். அந்த தள்ளுதல், இழுத்தல் 'விசை'யின் அடிப்படையாக உள்ளது. ஒரு பொருள் இடம் மாற வேண்டும் என்றால் அந்த பொருளுக்கு விசை தேவையாகின்றது.

ஆமாம் விசை என்றால் என்ன? அதை காண முடியுமா? விசையை பார்க்கவோ, ருசிக்கவோ முடியாது. அதன் விளைவை மட்டுமோ உணரமுடியும். ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு உண்டாக்கும் விளைவைதான் காணமுடியும். அதன் மூலம்தான் விசையை விளக்க முடியும். அதேபோல ஒரு பொருள் நிலையாக இருக்கின்றது என்றால் அந்த பொருளின் மேல் எந்த புறவிசையும் தாக்காமல் இருக்கின்றது என்பது அர்த்தம். தொடர் இயக்க நிலையில் இருக்கும் பொருளும் நிலையான பொருள் என்றுதான் சொல்ல வேண்டும். இயக்க நிலையில் உள்ள பொருளை நிறுத்தவோ அல்லது திசை மாற்றவோ விசை தேவையாகின்றது. நிலையாக இருக்கும் பொருளில் எப்பொழுதுமே நிலையான உராய்வு விசை செயல்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த உராய்வு விசைக்கு சாமமான புறவிசை செயல்படும்பொழுது அந்த பொருள் நிலையாகவே இருக்கின்றது.

விசையை பற்றி கலிலியோ, நீயூட்டன் இருவரும் பல ஆய்வுகள் செய்து விசையை பற்றிய விதிகளும் சொல்லியுள்ளார்கள். ஒரு பொருளின் மீது விசை செயல் படாதவரை அந்த பொருள் மாறாத வேகத்தில் இயங்குவதாக கலிலியோ கூறியுள்ளார். நியூட்டன் தம் பங்கிற்கு விசையை பற்றி மூன்று விதிகளையும் கூறியுள்ளார். அதை நீயூட்டன் விதி என்று அழைக்கின்றோம்.

விசையை பற்றி ஓரளவிற்கு புறிந்துகொண்டோம்...... ஒரு சின்ன கேள்வி நாம் காரில் (மகிழுந்து) செல்கின்றோம், ஓட்டுனர் திடீர் என்று காரை நிறுத்தும் பொழுது நாம் ஏன் முன்னோக்கி சாய்கின்றோம்?

மேலும் ஏன்? எதற்கு? எப்படி?... தொடரும்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Monday, January 23, 2012

எல்லை தாண்டி......

எல்லை தாண்டி......


* எல்லை தாண்டி வந்ததாக கூறி, இந்திய மீனவர்கள் 31 பேர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டனர்
* படகு பழுதானதால் தவித்துக் கொண்டிருந்த ராமேசுரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு (இலங்கை கடற்படை அட்டூழியம்)
* ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் (வலைகளை அறுத்து மீன்களை அள்ளி சென்றனர்)

ஆதிமனிதன் பெண்ணிற்கு பின்னால் ஒரு குடும்பமாக, பின்னர் குழுக்களாக வாழத்தொடங்கினான். அந்த குழுக்கள் பெரும் குழுக்களாகவும் மாறியது. வலிமையுள்ளவர்கள் குழுவின் தலைவராக இருந்தனர். ஒவ்வொரு குழுவும் தாங்கள் வாழும் இடத்தை எல்லைகளாக வகுந்துக்கொண்டனர். எல்லை தாண்டி வேற்று குழுவினர் வந்தால் அங்கேதான் பிரச்சனை ஆரம்பமானது. எல்லை தாண்ட காரணிகளாக இருப்பது, உணவிற்காக அதற்கு மேல் மண்ணிற்கும் பெண்ணிற்கும்தான்.

இந்த எல்லை தாண்டிய பிரச்சனையின் தீர்வுதான் என்ன? இரு குழுக்களும் பேசி வகுத்த கட்டுப்படுகள்தான். அந்த கட்டுப்படுகளை மீறும் பொழுது பிரச்சனைகளும் உருவாகின்றது. சின்ன சின்ன குழுக்கள் இன்று கிரமமாக, நாடக, கண்டமாக உருவாகியுள்ளது. வலியவன் நாட்டாமையாகின்றான், மக்களே! மக்கள் தேர்தெடுத்து நாட்டை ஆழ அதிகாரம் கொடுக்கவும் செய்ய தொடங்கிவிட்டான்......

இப்படி இருக்கும் நிலையில் மேலே கண்ட செய்தி நம் சிந்தனையை தூண்டுகின்றது. எல்லை தாண்டிய பிரச்சனை தினம் ஒரு செய்தியாக இருக்கின்றது. நம் நாட்டு மீனவர்கள் தினம் தண்டிக்கப்படுகின்றார்கள். இதை நம் அரசு இன்னுமும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஏன்? நம் நாட்டின் எல்லையை கடந்து கள்ள நோட்டுகள் மூலம் பொருளாதரத்தையே நசுக்க பார்கின்றபொழுதும், இன்னும் நம் அரசு மெளனமாக இருக்கின்றது ஏன்?

மீனவர்கள் உண்மையில் எல்லையை கடந்துவிடுகின்றார்களா? நமது எல்லை காவல் படையினர் அதற்கான பாதுகாப்பு எச்சரிக்கை சொல்லவில்லையா?

நமது மீனவர்கள் எந்த காரணிகளால் எல்லையை கடக்க வாய்புள்ளது? அதை நமது அரசு சிந்தித்து அதற்கான விழிப்புணர்வையும், நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை?

மீனவர்கள் எல்லை தாண்ட பல காரணிகள் இருந்தாலும், 1. வழிதவறி செல்ல வாய்புள்ளது. 2. மீன்களை தேடி எல்லையும் தாண்ட வாய்புள்ளது. அரசு அதற்காக என்ன என்ன நடவடிக்கை எடுக்கலாம், எல்லையை அறிந்துக்கொள்ள அனைத்து மீனவர்களுக்கும் எல்லையை கண்டறியும் கருவிகள் வழங்கலாம். நமது மீன் வளத்தை பெருக்க விஞ்ஞான முறைப்படி நடவடிக்கைகள் எடுக்கலாம். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளணமாக இருப்பது நம்மை நாமே அடகு வைப்பதற்கு சமமாகும். நமது எல்லை காவல் படையை நவீனத்துவம் செய்யும் காலகட்டத்தில் இருக்கின்றோம். நம் மீனவர்கள் எல்லை கடப்பது நமது காவல் படைக்கு தெரியாமல் இருப்பது நம்முடைய பலவீனம்தான்...... இந்த பலவீனம் நாட்டின் பாதுகாப்புகே பிரச்சனைதான். உடனே இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பார்களாக!


--------------------------------------------@-------------------------------------------

"தமிழுக்கு அமிழ்தென்று பெயர்"

தமிழ் மழலையில் இன்னும் அழகாக இருக்கின்றது...

"கவிதை" எனற வார்த்தையில் எந்த ஒரு எழுத்தையும் நீக்கினாலும் ஒரு பொருளை கொடுக்கும்.... ( நண்பர்களிடம் அறிந்துக்கொண்டது)

விதை- விதை
விதை- கதை
கவிதை- கவி
கவிதை- தை
விதை- ( ஒன்றை குறிக்கும், பிரமன், அக்னி என்ற பொருளும் உண்டு)

டிஸ்கி : பாகிஸ்தானிலிருந்து எல்லைத்தாண்டி கள்ள நோட்டுகளை புழங்கவிட உடந்தையாக இருந்த இந்திய குடிமகனுக்கும் , அதிகாரிகளுக்கும் என்ன நடவடிக்கை எடுக்கலாம்?....... எடுக்கப்படும்?......

Wednesday, October 19, 2011

ஏன்? எதற்கு? எப்படி?....14

ஏன்? எதற்கு? எப்படி?....14

வணக்கம் நண்பர்களே!.......
நீண்ட நாட்களாக ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வி கேட்கபடாமலே போய்விட்டது. அதை தூசி தட்ட ஒரு வாய்ப்பு ஒரு நண்பர் வழங்கியுள்ளார். நேற்று ஒரு நண்பர் facebook ல் என்னுடைய தளத்தை படித்துவிட்டு மேலும் சில கேள்விகள் கேட்டிருந்தார். அதாவது உராய்வை பற்றி நான் எழுதியலிருந்து சந்தேகம் எழுந்ததாக சொல்லியுள்ளார்...
. அதன் சுட்டி ஏன்? எதற்கு? எப்படி?..... 4

அவர் கேட்ட கேள்வி. How to increase and decrease friction? அதாவது எப்படி உராய்வை அதிகப்படுத்துவது? மற்றும் குறைப்பது? இந்த கேள்விக்கு முன் உராய்வை பற்றி தெரிந்துக்கொள்ள சுட்டியை தட்டுங்கள் ஏன்? எதற்கு? எப்படி?..... 4 உராய்வு என்றால் என்ன என்பதை அறிந்துக்கொண்டோம். இரண்டு தளங்கள் அல்லது பரப்புகள் ஒன்றோடு ஒன்று உராயந்து நகரும் பொழுது உருவாகும் எதிர் விசைதான் "உராய்வு"(friction) என்று அழைக்கின்றோம். மேலே நண்பர் கேட்ட கேள்விக்கு முன் நாம் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது.... உராய்வினால் என்ன பயன்? உராய்வை ஏன் அதிகபடுத்த வேண்டும்? ஏன் குறைக்க வேண்டும்? அதன் பின் எப்படி குறைக்கலாம்?, அதிகப் படுத்தலாம்? என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

உராய்வு நடைபெறும் பொழுது இயக்காற்றல் வெப்பற்றலாக மாறுகின்றது. நாம் நடக்க, ஓட உராய்வு பயனாகின்றது. மேலும் எழுத, கார் ஓட்ட உராய்வு பயனாகின்றது...... இங்கே நாம் வேகமாக ஓட, நடக்க, எழுத, கார் ஓட்ட.... உராய்வு விசை தடையாக இருக்கின்றது. எனவேதான் மனிதன் சிந்தித்தான்... எப்படி உராய்வை குறைத்து வேகத்தை அதிகப்படுத்தலாம்? உராய்வு நடைபெறும் இடத்தில் உயவுநெய்கள், உயவு இளகிகள், மசகு,மசகெண்ணைகள் பயன்படுத்தினால்..... வேகம் அதிகமாகும் அதேபோல் தாங்கிகள் பயன்படுத்தும்பொழுது கார் மற்றும் எந்திரங்கள் வேகமும் அதிகப்படுத்த முடியும். இதிலிருந்து உராய்வை குறைக்க
உயவுநெய்கள், உயவு இளகிகள், மசகு,மசகெண்ணைகள்,தாங்கிகள் பயன்படுத்தபடுகின்றது.

அடுத்ததாக எப்படி உராய்வை அதிகப்படுத்தலாம்? அதிகபடுத்துவதால் என்ன பயன்? சொரசொரப்பான தளங்களை பயன் படுத்துவதின் மூலம் உராய்வை அதிகப்படுத்தலாம்.... உராய்வை அதிகப்படுத்துவதினால். ஓடும் வண்டியை நிறுத்தப்படுகின்றது. தீப்பெட்டியிருந்து தீக்குச்சியை உரசுவதினால் தீ உண்டாகின்றது.

மனிதனின் தேவைக்கெற்ப உராய்வை அதிகபடுத்தவோ! அல்லது குறைக்க செய்தோ! முழுமையாக பயன்படுத்துகின்றான்....


மேலும் கேள்விகளுடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்