_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, June 22, 2008

சமைத்து பார்க்கலாம் வாங்க! சமையல் பற்றிய சிறப்பு!...

சமைத்து பார்க்கலாம் வாங்க! சமையல் பற்றிய சிறப்பு!...






மனிதன் நெருப்பை கட்டுப்படுத்தி தன்வசப்படுத்திய "காலம்" நாகரிகத்தின் பொற்க்காலம். நெருப்பை பயன்ப்படுத்தி உணவுப்பொருளின் சுவை, பண்பு, தொற்றம் அகியவற்றின் விரும்பியப்படி மாற்றப்படுவதுதான் சமையல். இவ்வாறு சூடுப்படுத்துவது மூலம் தீங்குவிளைக்கும் கிருமிகளை அழிக்கப்படுகிறது.

அரிசி, உப்பு, பருப்பு, காய்கள், எண்ணெய் எல்லாம் இருக்கலாம், இருப்பினும் சமையலுக்கு தேவையானதுதான் என்ன? நல்ல சமையலுக்கு ஆர்வமும் பொறுமையும் முதலில் தேவை. சமைத்த உணவுக்கு "சுவை" அன்பும் பரிமாரும் உணர்வும்தான் சுவையுட்டுகிறது. இப்படிபட்ட அன்பும் பொறுமையும் இயற்கையாகவே பெண்ணிகளிடம் காணப்படுவதால்தான், இல்லந்தோரும் அரசிகள் சமைக்கின்றனர்.

என்மகன் என்மனைவியின் சமையலைதான் சுவைத்து உண்பான். நான் என் அம்மாவின் சமையல் ருசிப்பேன். என் தந்தை என் பாட்டியின் சமையலை சிறப்பாக சொல்வார். உண்மையில் அம்மாக்காளின் சமையல் சுவைப்பது ஏன்? உலகில் சிறந்த உணவு அம்மா சமைத்ததுதான் என்று சொல்லும்பொது சுவை என்பது உணவிலா? அல்லது அம்மா சமைத்தது தானா?

சுவை என்பது உணர்வு சார்புடையது, சுவை நாவால் அறியப்படுகிறது. எனவே சுவை எங்குள்ளது? சுவை உணவிலா? நாவிலா? உணவில் என்று வைத்துக்கொண்டாள் எல்லொருக்கும் ஒரே நிலையில் சொல்லவேண்டும். அப்படியில்லையெனில், சுவை நாவால் உணர்நிலையடைகிறது.

நாசுவைபடவேண்டும் எனக்கொண்டால், அதற்க்கு தேவை அன்பும் பரிவும்தான். நல்ல ஸ்டார் ஹொட்டலில் சாப்பிட்டால் அழகாயிருக்கும், சுவையாக இருக்கும் என்று சொல்லமுட்டியுமா? அழகும் சுவை கூட்டும் என்றாலும் பரிவுயின்றி பரிமாறும் ஊணவு சுவைப்பதும் கடினமே என்பதும் என் என்னம். பக்கத்திலிருக்கும் அக்கா மெஸ்க்கு சென்றால் அக்கா விசாரிப்பும் உபசரிப்பும்தான் சாப்பாட்டின் சுவையுட்டுகிறது. என்ன தம்பி உடம்பு சரியில்லையா? கொஞசம் ரசம் சாப்புடுப்பா என்று பரிமாரும்பொது அம்மாவின் சமையல்தான் மனதில் தொன்றும். எந்த தொழிலுக்கும் தேவையில்லாத பண்பும் பரிவும் சாப்பாட்டு கடைக்கு தெவையென்பதும் என் என்னமே!


மனிதனின் வாழ்க்கைக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு தேவையென்பது பழமொழி. உணவின்றி வாழ்வது முடியாத ஒன்று. இப்படிப்பட்ட உணவை பரிமார வாய்ப்புள்ள அனைவரும் பாக்கியவான்களே!!...


நான் எதைகொடுத்தாலும் சாப்புடுவேன் என்று சொல்லும் ஒருவர்.

நல்ல ருசியாகயிருந்தது ஒருவெட்டு வெட்டிடேன் என்று சொல்லும் ஒருவர்.

எனக்கு பிடித்தால்தான் சாப்புடுவேன் என்று சொல்லும் ஒருவர்.

இப்படிப்பட்ட நிலை உணவுப்பற்றிய நிலையுள்ளவர்களும் இருக்கிறார்கள். மனிதன் உயிர்வாழ உணவு அவசியமே தவிர, உணவுக்காக வாழ்கிறோம் என்ற அர்த்தமில்லை. வயிற்றுக்கு கொஞ்சம் உணவு, உணவுக்கு கொஞ்சம் ருசி, ருசிக்கு பரிவும் உபசரிப்பும் தேவை. எதை கொடுத்தாலும் சாப்புடுவதும், ருசித்ததால் சாப்புடுவதும். பிடித்தால் மட்டுமே சப்புடுவதும் ஆரொக்கியத்திற்க்கு வம்புதான்.

6 comments:

TBR. JOSPEH said...

என்னதான் சொல்லுங்க தம்பி நாம சமைச்சத சாப்பிடறப்ப இருக்கற சந்தோசம் வேற எதுலயும் இருக்காது.

பேச்சிலர் சமையல் இருக்கே அதன் ருசியே தனிதான்.

அதப்பத்தி அந்த காலத்துல (அதாவது சுமார் முப்பது வருசத்துக்கு முன்னால )எனக்கு கிடைச்ச அனுபவத்த இந்த காலத்துக்கு ஏத்தாப்பல ஒரு குட்டி தொடர் எழுதலாம்னு இருக்கேன். படிச்சிட்டு சொல்லுங்க.

துளசி கோபால் said...

பதிவை விடுங்க. படம் சூப்பர்.

வடைகளை இங்கே தள்ளிவிடுங்க.

ஆமாம். அதென்ன தயிர் சாதத்துக்குக் கொம்பு முளைச்சிருக்கா? :-))))

கோவி.கண்ணன் said...

சாப்பாட்டு இராமன்கள் யார் சமைத்தாலும் சாப்பிடுவார்கள். பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு கிடைக்கும் எல்லாமே சுவையானதுதான்.
எச்சிலைக் கூட பிச்சைக்காரனுக்கு ருசியானது.

போதிய அளவு பொருள் இருப்பு உள்ளவர்களுக்குத்தான் உணவின் சுவையும் உணர்வின் சுவையும் ஒன்றாக வேண்டி இருக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

டி.பி.ஆர் said...
என்னதான் சொல்லுங்க தம்பி நாம சமைச்சத சாப்பிடறப்ப இருக்கற சந்தோசம் வேற எதுலயும் இருக்காது.

பேச்சிலர் சமையல் இருக்கே அதன் ருசியே தனிதான்.

அதப்பத்தி அந்த காலத்துல (அதாவது சுமார் முப்பது வருசத்துக்கு முன்னால )எனக்கு கிடைச்ச அனுபவத்த இந்த காலத்துக்கு ஏத்தாப்பல ஒரு குட்டி தொடர் எழுதலாம்னு இருக்கேன். படிச்சிட்டு சொல்லுங்க.

உண்மைதான் டி.பி.ஆர் அண்ணே! உணர்வொடு சமைத்த உணவு ருசியோ! ருசிதான். உணர்வோடு சமைக்க வேண்டும் எனபதே பதிவின் நோக்கம்..நன்றி

ஆ.ஞானசேகரன் said...

பதிவை விடுங்க. படம் சூப்பர்.

வடைகளை இங்கே தள்ளிவிடுங்க.

ஆமாம். அதென்ன தயிர் சாதத்துக்குக் கொம்பு முளைச்சிருக்கா? :-))))

தயிர் சாதத்திலிருப்பது மிளகாய் வத்தல்...

ஆ.ஞானசேகரன் said...

சாப்பாட்டு இராமன்கள் யார் சமைத்தாலும் சாப்பிடுவார்கள். பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு கிடைக்கும் எல்லாமே சுவையானதுதான்.
எச்சிலைக் கூட பிச்சைக்காரனுக்கு ருசியானது.

போதிய அளவு பொருள் இருப்பு உள்ளவர்களுக்குத்தான் உணவின் சுவையும் உணர்வின் சுவையும் ஒன்றாக வேண்டி இருக்கும்.

ருசி என்பதும் சுவையென்பது உணவில் இல்லை, நாவில் அத்துடன் சேர்ந்த உணர்வில் தான்,.. பசியோடு இருக்கும் ஏழையின் நாவிற்க்கு எல்லா உணவும் சுவைதான்.. அது அவன் உணர்வின் வெளிப்பாடு.
வயல்வெளியில் வேலை செய்பவனுக்கு வெங்காயமும் சுவைதான், சிக்கன் 65 தேவையில்லை...
உயிர் வாழ உணவு அவசியம், அந்த உணவை உணர்வோடு செய்வதே பதிவின் நோக்கம்... நன்றி கண்ணன்