_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, July 3, 2008

தமிழ் திரைப்படத்திற்க்கு பாடல் எந்தவகையில் தேவைப்படுகிறது...

தமிழ் திரைப்படத்திற்க்கு பாடல் எந்தவகையில் தேவைப்படுகிறது...


19ம் நூற்றாண்டில் லூமியெர சகோதரர்களால் நகரும்படம் கண்டுப்பிடிக்கப்பட்டது. 1897 ஆம் ஆண்டு சென்னை நகரில் "எட்வர்டு" என்ற ஆங்கிலெயரால் நகரும் படம் காட்டப்பட்டது, இவ்வகை நகரும் படம் பேச்சின்றி காட்டப்பட்டது.


1931 ம் ஆண்டுதான் முதல் தமிழ் பேசும் படம் காட்டப்பட்டது. இந்தப்படம் (குறத்திப்பாட்டும் டான்சூம்) வெறும் நான்கே அடிகல் கொண்ட குறும்படம். பிறகு முழுநீலப்படமாக "காளீதாஸ்" வெளிவந்தது . இதன்பிறகுதான் திரைப்படத்தின் வளர்ச்சி நவீனத் தொழில்நுட்பம் கொண்டதாக திரையிடப்படுகிறது.


ஆரம்பாகாலங்களில் இலக்கியநடையாக பேசப்பட்டு பாட்டும் முக்கிய பங்காக காட்டாப்பட்டது. பிறகு இரவல் குரல் கொடுக்கும் தொழில்நுட்பம் வந்தபின் மேலும் வண்ணப்பட வளர்ச்சியும் பாடலுக்கு மெருகேற்றி திரைப்படத்திற்க்கு பாடலின் அவசியத்தை ஏற்ப்படுத்தியது.


தற்போதய காலகட்டத்தில் இந்திய மொழி படங்களில் மட்டுமே பாடல்கள் இடம்பெறுகின்றது. ஐரோப்பிய, ஆங்கில படங்களில் பாடல்கள் அமைக்கப்படுவதில்லை. பாடல்கள் தனியாக வெளிவருகின்றது (ஆல்பம்) திரைப்படத்துடன் வருவதில்லை..


தமிழ் மொழிப்படங்கள் பாடல்களை திரைக்கதையுடன் தொடர்புள்ளவையாக அமைக்கப்படுகிறது. இவ்வகை பாடல்களைதான் ரசிகர்கள் விருப்புகின்றார்கள்.. தனியாக எடுக்கப்படும் (ஆல்பம்) பாடல் தொகுப்பு வெற்றிபெருவதில்லை, ஒரு சில மட்டும் வெற்றிபெருகின்றது. மேலும் பாடல்களினால் திரைப்படமும் சுவைக்கூடி வெற்றிபெறுகிறது. எனவே பாடல்கள் தமிழ்த்திரைப்படங்களில் முக்கியத்துவம் பெருகிறது

தமிழ்த்திரைப்படத்தில் பாடல்கள் எந்தவகையில் சிறப்பாக இருக்கின்றது என்று ஒரு சில பாடல் காட்சிகளை பார்ப்போம்........


இயக்குனர் மணிரெத்திணம் படம் என்றாலே பாடல் சிறப்பாகவும் நயம்படவும் எடுக்கப்பட்டுருக்கும். திருடா திருடா படத்தில் வீரப்பாண்டிக்கொட்டயிலே பாடல், அந்தப்பாடலில் ஒரு பெரிய கதையை சொல்லுமளவு எடுக்கப்பட்டுருக்கும்.........

கிராமத்து இயக்குனர் பாரதிராஜாவின் முதல்மரியாதை இசைஞானியால் இசையமைத்த பூங்காற்று திரும்புமா, பாடல் படத்துடன் கதை சொல்லிகொண்டுவரும்...........
சமிபத்தில் வெளியான பத்மஸ்ரீ கமலஹாசனின் தசாவதரம் படத்தில் கல்லை மட்டும் கண்டால்... என்ற பாடலில் ஒரு திரைக்காவியத்தை காணமுடியும்.....இதைப்போன்று குனா திரைப்படதில் கண்மனி அன்பொடு என்ற பாடல் காதல் கதை சொல்லிகொண்டு வரும்,.....
ஆஸ்கர் விருதிற்க்கு பரிந்துரை செய்யப்பட்ட நாயகன் படத்தின் தென்பாண்டிசீமையிலே எனற பாடல் படத்தின்கூடவே உணர்வை தூண்டிகொண்டே வரும்...
கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒருதெய்வம் தந்த பூவே! என்ற பாடலின் மூலம் தாயின் அன்பையும் குழந்தையின் ஏக்கமும் காட்டி திரைப்படத்தின் கருவை தாங்கி வரும்,,....

இப்படி பாடல்கள் திரைப்படத்தோடும், திரைப்படத்தின் உணர்வோடும் வருவதால்.... நம்மால் எப்பொழுதும் ரசிக்கமுடிகிறது. எனவே பாடல்கள் திரைப்படத்திற்க்கு தேவையாக உணரப்படுகிறது. இப்படிப்பட்ட பாடல்கள் வளர்ச்சி பெருமேன்றி தவிர்க்கப்படாது,..........

2 comments:

கோவி.கண்ணன் said...

இயல் - இசை - நாடகம் தான் தமிழர்களின் பொழுது போக்கு. இவை மூன்றும் ஒன்றாக கொடுக்கவேண்டு மென்பதான் திரைப்படங்களில் பாட்டு தவிர்க்க முடியாத பகுதி ஆகிவிட்டது.


//நன்றி மீண்டும் வருக் !//

கிழே போட்டு இருப்பது போல் படம் அவ்வ்போது போட்டால்,மீண்டும் மீண்டும் வருவாங்க ! :)

ஆ.ஞானசேகரன் said...

//நன்றி மீண்டும் வருக் !//

கிழே போட்டு இருப்பது போல் படம் அவ்வ்போது போட்டால்,மீண்டும் மீண்டும் வருவாங்க ! :)//

நன்றி கண்ணன்