_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, July 24, 2008

கள்ளுக்கடைக்கு போகும் வழி என்னங்க?


கள்ளுக்கடைக்கு போகும் வழி என்னங்க?


எங்கள் வீடு தெருமுனையில்யுள்ளது. எங்கள் வீட்டை கடந்துதான் மற்ற பகுதிக்கு செல்லவேண்டும். எங்கள் தெரு எங்க வீட்டுக்குப்பிறகு மூன்றாக பிரிகிறது. பொதுவாக விலாசம் தேட எங்கள் வீட்டை நாடுவார்கள், எங்கள் வீட்டுக்கு பிறகு தெரு மூன்றுப் பகுதியாகயுள்ளதால் குழப்பத்தில் விசாரிப்பார்கள். ஒரு வீதிக் கடைசியில் கள்ளுக்கடையுள்ளது., அக்கம் பக்கத்து ஊர்களிடமிருந்தும் இங்கு வருவார்கள், சரக்கு நல்லாயிருக்கு என்று சொல்வார்கள்.


எதுஎப்படியோ? கள்ளுக்கடைக்கும் வழிக்கேட்டு வருவார்கள். ஓருசிலமுறை என்னை கள்ளுக்கடைக்கு எப்படி பொகவேண்டும்? என்று சிலர் கேட்ப்பதுமுண்டு. போக போக என்னை கள்ளுக்கடை வழிக்காட்டிப்பொல ஆக்கிவிட்டனர். என்னக்கொடுமை சார் பாவத்தில் பங்குபொட என்னையும் அழைப்பது. பலமுறை கொபம் வருவதும் அதனால் பலர் சண்டைமிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. யார் கள்ளுவிற்க? யார் வழிக்காட்டுவது? கள்ளுகுடிப்பவன் பாவத்தை நான் சுமக்க லாபத்தை கடைகாரன் சுமப்பதா? என்னை வழிக்கேட்ப்பது மருத்துவமனைக்கு இல்லை கள்ளுக்கடைக்கு!... மருத்துவமனைக்கு வழி சொன்னால் ஆத்ம திர்ப்தியாவது கிடைக்கும்.


இப்படிதான் ஒருநாள் அரை போதையில் ஒருவன் என்னிடம் கள்ளுக் கடைக்கு எப்படி போகனும் என்றான்., கையை மட்டும் காட்டினேன் மனமில்லாமல். வேரு வழியில் சென்று தேடியபின் என்னிடம் வந்து கடுமையான வார்த்தையில் திட்டினான். " வழி தெரியலனா ஏண்டா தெருமுனையில் வீட்டை கட்டின? " என்றான். நீங்களே சொல்லுங்க சரவணன், என் கொபத்தை என்ன செய்வது?


முதல் முறையாக சிங்கபூரிலிருந்து திருச்சிக்கு இண்டியன் ஏர்லைன் விமானத்தில் சென்றேன். சென்னையில் உள்நாட்டு விமானத்திற்கு மாற்ற வேண்டும். அதனால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்திற்கு சென்றேன். அதிகாரியை விசாரித்ததில் திருச்சி உள்நாட்டு விமானம் வெளிநாட்டு விமானநிலயத்திற்கு செல்ல வேண்டும் என்றார். சரிஎன்று திரும்பி செல்லும்போது அருகில்யுள்ள ஒருவன் இந்த வழியில் போங்கசார் என்றான், சரியென்று தலையாட்டினேன் அவன் திர்ப்திக்காக. பிறகு அவன் ஐந்து டாலர் கொடுங்க சார் என்றான். எதற்கு? என்றேன், வழிச்சொன்னதற்கு என்றான். வந்தவனுக்கு வழித்தெரியாதா? போயா என்று திட்டினேன். அவனோ இதுக்குதான் தமிழனுக்கு வழிச்சொல்லக்கூடாது என்றான். என்னசார் வழி கேற்ப்பதும் வழி சொல்வதும் பிரச்சனையாக வருகிறது......


முக்கிய குறிப்பு: கருத்துக்காக நிகழ்வும் கலமும் மாற்றப்பட்டுயுள்ளது.0 comments: