_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, July 12, 2008

பஸ் ஏற்றிவிட்டு வருகிறேன்டா!...

பஸ் ஏற்றிவிட்டு வருகிறேன்டா!..ஏதோ படித்துவிட்டு, வேலை தேடிக்கொண்டிருந்த நாட்கள், எப்பொழுதும் நண்பர்கள் சேர்ந்து கூடி பேசிகொண்டேருப்போம். டீக்கடை, பாலம், ரோட்டோரம் எல்லா இடங்களிலும் அது ஒரு இனிமையான காலம். பேசுவதற்கு தலைப்பு வேண்டியதில்லை எல்லாம் பேசுவோம் வீட்டைப்பற்றி, நாட்டைப்பற்றி அப்படி இப்படி கடைசியில் பிகரில் முடிப்போம்.


என்றும்போல அன்றும் நண்பர்கள் பேசிகொண்டிருந்தோம், தூரத்தில் ஒரு பெண் (பிகர்) பட்டு சேலையில் அழகாக வந்துக்கொண்டிருந்தாள். எல்லொரும் பார்த்தோம் யார்? என்று தூரத்தின் காரணமாக தெரியவில்லை. எங்களின் ஒருவன் படுசுட்டி மிதிவண்டியை எடுத்து எதிரே முதலில் பார்க்க சென்றான். நாங்கள் அனைவரும் பார்த்துக்கொண்டேருந்தோம்... அவள் அருகில் சென்றான், பேசினான் பின் அவளையும் மிதிவண்டியில் ஏற்றி வந்துகொண்டிருந்தான். ஆஆ.. போனவுடனே மடக்கிட்டாண்டா!!!! நண்பரில் ஒருவன் சொல்லி கொண்டிருக்க அவனும் அவளுடன் வந்துவிட்டான். "டேய், எந்தங்கை காலேஜ் ஒரு விழாவிற்கு போகனுமா, நான் பஸ் எற்றிவிட்டு வந்துவிடுகிறேண்டா" என்று சொல்லியவாறு சென்றுவிட்டான். எங்கள் முகங்கள் சிறிது நேரத்தில் கறுத்துவிட்டது.......

0 comments: