_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, July 3, 2008

ஓலைக்கால் சீலைக்கால்!......

ஓலைக்கால் சீலைக்கால்!......

எங்கள் ஊரில் மில்ரிமாமா என்று அனைவராலும் அழைக்கப்படுவார், எனக்கும் மிகவும் பிடிததவர். அவர் எப்பொழுதும் ராணுவ கதைகள் சொல்லுவார். 1971 இந்தியா பாகிஸ்தான் சண்டைப்பற்றி அடிக்கடி சொல்லுவார். எனக்கு புரியாத வயது இருப்பினும் புரிந்தது போல தலையாட்டுவேன். அவர் அந்த சண்டையில்தான் தனது வலது காலில் எதிரியின் துப்பாக்கி சுவைத்தால் கொஞ்சம் தாங்கி தாங்கி நடப்பார். பிறகு மருத்துவ அனுமதியில்லாததால் தொடர்ந்து ராணுவத்தில் வேலைச் செய்ய முடியாமல் ஓய்வுப்பெற்றவர்.இந்தியா சுதந்திரத்திற்க்கு பிறகு நாட்டின் பாதுக்காப்பிற்க்காக திடமான ஆண்களை ராணுவராக்கினார்கள். அவர்களில் படித்தவர்கள் படிக்காதவர்கள் பணியில் அமர்த்தி பயிற்ச்சி கொடுத்து திறமையான ராணுவராக்கினர். ஆரம்பக்காலங்களில் பயிற்ச்சியின்பொது Left and Right பதிலாக ஒரு காலில் ஓலையும் மறுகாலில் சீலை துணியும் கட்டிவைத்து, பயிற்ச்சியின் போது நடக்கையில் "ஓலைக்கால் சீலைக்கால்" என்று சொல்லியவாறு பயிற்ச்சிக்கொடுக்கப்பட்டதாம். பிறகுப் படிப்படியாக "வலது இடது" என்றும் தற்ப்பொது "Left Right" என்றும் பயிற்ச்சி கொடுக்கப்படுகின்றது என்பார்....நான் தற்போது நினைப்பது, ராணுவத்திற்க்காகவும் மற்றும் அதனையொத்த பயிற்ச்சிக்காகவும் கொடுக்கப்படும் கட்டளை வார்த்தைகள் நம் தமிழ் மொழியில் எவ்வாறு காணக்கிடைக்கிறது. பொதுவாக ஆங்கில மொழிதான் பயன்படுத்தப்படுகிறது. நம் வழக்கத்திலும் கட்டளை வார்த்தைகளை ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்துகின்றோம். அதிகாரபூர்வா கட்டளை சொல் ஆங்கில வழியாகதான் பயன்படுத்துகின்றொம். உதாரணமாக left right, stop, hands up , run fast, மெலும் ராணுவ அனைத்துக்கட்டளைகள்.தமிழ் மொழியின் இனிமை கட்டளை வார்த்தைகளுக்கு ஒலியின் அடர்த்தி குறைவாகதான் இருக்கின்றது. அதே வார்த்தைகள் ஆங்கிலத்தில் ஒலியின் அடர்த்தி மிக அதிகமாக உணரப்படுவதும் உண்மைதான். அதனால் பயிற்ச்சிக்கு தேவையான வெகம் கிடைக்கிறது, மெலும் அவசரகாலங்களில் பயன்படும் வார்த்தையும் ஆங்கிலம்மாக இருக்கிறது ( உ.ம் stop, run, close it ) . இதுபொல தமிழில் கடிந்து பேசுதலும் இனிமையைதான் கொடுக்கிறது. இப்படி எல்லாவகையிலும் இனிமையை கொடுக்கும் தமிழ் சில இடங்களில் பயன்படுத்த முடியாமை எப்படி? இதற்க்கு தீர்வு காணலாமா? வேண்டாமா? தீர்வு இருக்கின்றதா? இல்லை தமிழின் இனிமை தொடரட்டுமா!!!......

2 comments:

கோவி.கண்ணன் said...

//கொடுக்கும் தமிழ் சில இடங்களில் பயன்படுத்த முடியாமை எப்படி? இதற்க்கு தீர்வு காணலாமா? வேண்டாமா? தீர்வு இருக்கின்றதா? இல்லை தமிழின் இனிமை தொடரட்டுமா!!!......//

ஞானசேகர்,

தமிழில் போதிய சொல் இல்லையா என்பது ஆராய்ச்சிக்கு உரியதுதான். அதைத் தேடுவதிலும் பலரும் கவனம் கொள்வதில்லை. பலபுதிய சொற்கள் அவ்வப்போது புழக்கத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. தொழில் முறையால் ஆங்கிலம் மற்றும் பிறமொழி கலந்து பேசுவது இயல்பு தான் என்றாலும் தகுந்த பயிற்சியானால் தவிர்க்க முடியும்.

//அவசரகாலங்களில் பயன்படும் வார்த்தையும் ஆங்கிலம்மாக இருக்கிறது ( உ.ம் stop, run, close it ) .//

அப்படியெல்லாம் இல்லிங்க. ஆங்கிலமே தெரியாத கிராமங்களில் நில்லு நில்லு...ஓடு..ஓடு...மூடு மூடு ன்னு விரைவாகத்தான் சொல்வார்கள்.
:) நமக்கு பயிற்சி இன்மையும், தாய்மொழியை சரியாக பயன்படுத்தும் பொறுப்புனர்வும் இல்லை அவ்வளவுதான். மொழியின் குறையல்ல. மொழி பேசுபவர்களின் குறையே. ஆங்கிலமே தெரியாத சீனர்கள் விரைவு சொல் எதையும் பயன்படுத்தவில்லை என்று சொல்லமுடியாதே.

ஆ.ஞானசேகரன் said...

நன்றி கண்ணன்,..
நீங்கள் சொல்வதும் சரிதான், நமக்கு போதிய பயிற்சியில்லாமை ஒரு குறைதான்... இருப்பினும் நம்மொழியில் எல்லா சொல்களும் இருக்கின்றது, அப்படிப்பட்ட சொல்ற்களில் ஒலியின் அடர்த்தி குறைவாக தொன்றுகின்றது. உதாரணமாக ஆபத்திலிருக்கும்போது உதவிக்கு மற்றவர்களை அழைப்பது" தமிழில் உதவீ... என்றும் காப்பத்துங்க என்றும்.. அழைக்கலாம்" ஆங்லத்தில் ஹெல்ப்ப்ப்ப்ப் என்று அழைக்காலாம் இந்த இரண்டிலும் ஒலி அடர்த்தி ஹெல்பில் அதிகம்மாகவும் நீண்டதுரம் கடக்ககூடியதாகவும் இருக்கிறது மெலும் குறைந்த மாத்திரை பயன் படுகிறது என்பது என் எண்ணமே!!!!!! இது தமிழில் குறையாக சொல்லவில்லை மாறாக ஆங்கிலத்தில் உள்ள சிறப்பை நம்மொழிக்கு நடைமுறைக்கு ஏற்ப்படுத்த வேண்டும் என்ற ஆசைதான்.. சீனா, மலேசியா, ஜப்பான் பொன்ற நாடுகளில் அவர்கள் மொழியிலெயே ராணுவ கட்டளை சொல்லப்படுவதாக அறிந்தேன்.. சிங்கபூரீல் ராணுவ கட்டளை மாலாய் மொழியில் சொல்லப்படுவதாக நண்பார் முலம் அறிந்தேன் மாலாய் தெரியாதாவர்களுக்கு கட்டளைக்க்கு செயல்பட உணர்பூர்வமாக தடுமாற்றம் ஆரம்பத்தில் ஏற்படுவதாகவும் கூறினார்....