_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, July 22, 2008

புலவன் வாக்கு!....


புலவன் வாக்கு!....

என் நண்பனின் தந்தையை அந்த ஊரில் "புலவரே" என்றுதான் அழைப்பார்கள். எல்லா புலவர்கள் போல இவருக்கும் ஊரில் நல்லப்பெயர்தான். வெள்ளை வேட்டியுடன் திண்னையில் உற்க்காந்தி வெட்டி பேசி பேசி பொழுதை கழிக்கும் நல்லவரென்று. எப்பொழுதும் சலவை வேட்டி சட்டையில்தான் இருப்பார். என் வயதுக்கு அந்த அளவிற்க்கு புரியாது ஏதோ ஒன்றுரெண்டு வார்த்தை பேசுவேன்.


வேலைவெட்டியில்லாதவன் என்று பேசுபவர்கள் பலமுறை புலவரெ! ஒரு மனு எழுதனும் என்று கேட்டு வருவார்கள். இப்படி அவர் எழுதிய ஒரு விண்ணப்பத்தை நான் பார்க்க நேர்ந்தது அப்படியொரு நடை, சொற்க்கள், கோர்வை என்னை வியக்கவைத்தது. அன்றையிலிருந்து அவரை பார்க்க பேச தொடங்கினேன்.


அவர் சில புத்தகங்களூம் எழுதியுள்ளார் அவற்றை என்னிடன் காட்டி படிக்க சொல்வார். எனக்கு அந்த அளவிற்க்கு புரியாது. நல்ல கவிதைகள் சொல்வார், ஒருமுறை என்னிடம்


மழையென்னும் நங்கை,

மண்ணுலகில் வந்து..

நடனமாடிச் சென்றாள்.....


இந்த மூன்று வரிகளும் இடமாற்றி போட்டாலும் இதன் பொருளும் மாறாது, சந்தமும் மாறாது என்று கூறினார்.

இப்படி நாட்கள் செல்ல நான் ஒரு லேத் பற்றரையில் வேலை செய்தேன் குறைந்த வருமாணம்தான். என்னிடம் வந்து 50ரூபாய் கேட்டார் நான் எதுவும் கேட்காமல் கொடுத்தேன். மிகவும் மகிழ்ந்துப்போனார் "இந்த புலவருக்கு எந்தவார்த்தையும்

கேட்காமல் 50ரூபாய் கேட்டேன் கொடுத்தாய் மறுமுறை நீ 500ரூபாய் கொடுக்கும்மலவுக்கு வளர்வாய் புலவனின் வாக்கு பொய்க்காது என்று கூறிச்சென்றார். "


இன்று சிங்கபூரில் போதிய வருமாணத்தில் வேலைச்செய்கிறேன். அவரைப்பார்த்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. 500ரூபாய் அவர் கெட்கவுமில்லை நான் கொடுக்கவும்மில்லை........

0 comments: