_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, July 20, 2008

அந்தகாலத்தில நாங்களெல்லாம்!....

அந்தகாலத்தில நாங்களெல்லாம்!....

வகுப்பாசிரியர் மாணவர்களுக்கு எப்படி சொல்லிகொடுத்தாலும் புரியாமலும், சொன்னப்படிக் கேக்காமலும் வாலுபன்னும் மாணவனை பார்த்து,. ஏண்டா இப்படி நடந்துக்கிருங்க, உங்கவயசுல நேரு எப்படி நல்லா படிச்சு சிறந்து விளங்கினார் தெரியுமா? நீங்கலும் இருகிங்களே.. என்று கடிந்துக் கொண்டார். அதற்கு அந்த மாணவன் " ஐயா" நேரு உங்கவயசுல இந்திய பிரதமரா இருந்தார் ஆனால் நீங்க வாத்தியாராதானே இருகீங்க என்றான்.

இப்படிதாங்க எல்லா பெரியவர்களும் நாங்க அந்தக்காலத்துல இப்படியா இருந்தோம், என்று ஆரம்பிப்பார்கள். என்னமோ நாமெல்லாம் தப்புசெய்ய வந்தவர்கள் மாதிரி பேசுவார்கள்,. அப்படியெல்லாம் இல்லிங்க இந்த காலத்து இளஞர்கள் வீட்டைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் நன்றாக தெரிந்தவர்கள். நன்கு உழைப்பாவர்கள். நீங்கள் உற்று கவனித்தீர்களேயானால் 70 வதுகளுக்கு முன் உள்ளவர்களிடம் எதாவது ஒரு கெட்டப்பழக்கம் இருக்கும். உதாரணமாக வெற்றிலை விடாது போடுதல், மது அருந்துதல், பொடி போடுதல் பிறகு அப்படி இப்படி என இருக்கும். வீட்டில் அம்மா, அப்பா, பிள்ளைகள் எல்லொரும் சேர்ந்து வெற்றிலை போடுவார்கள். வெற்றிலை கெட்டப்பழக்கம் என்று சொல்ல வரவில்லை விடாது மதுப்பழக்கம் பொல போடுவார்கள்.

ஆனால் இன்றைய இளஞர்களிடம் பொதுவாக அப்படிப்பட்ட பழக்கம் குறைவு, மேலும் அதற்கு அடிமையாகாமல் இருப்பதை பார்க்கமுடிகிறது. தன்னுடைய வாழ்கையை தானே முடிவு பன்னும் தகுதியும் இருக்கிறது. இன்றைய மக்கள் தொகை கணக்கில் பார்த்தால், தவறும் சதம் மிக சொற்ப்பமே. பெண்களும் இவற்றுக்கு பொருந்தும். மது, புகை, மற்றும் கெட்டப்பழக்கமில்லா இளஞர்களை தற்பொது சுட்டிக்காட்ட முடியும் ஆனால் அந்தகாலத்தில்.... எனக்கு சந்தேகமே?

என்மகள் Lkg படிக்கிறாள், தன்னுடைய பென்சிலை மேல்வகுப்பு பையன் எடுத்துக்கொண்டான். வீட்டுக்கு வந்ததும் என்மனைவியிடம் "அம்மா என் பென்சிலை ஒரு அண்ணன் எடுத்துக்கொண்டான்" என்று அழுதாள். சரி நாளை வந்து அந்தப்பையனை ஏண்டா எடுத்த அடிபேன் பாருன்னு சொல்லுரேன் என்று அவளை சமாதனப்படுத்த என்மனைவி சொன்னாள். அதற்கு என் மகள் அப்படி சொல்லாதமா அந்த அண்ணன் மேடமிடம் சோல்லிருவான், பாப்பா பாவம் பென்சிலை கொடுத்துருன்னு சொல்லு என்றாள்.

இப்படிதாங்க இந்தகாலத்தில் பிள்ளைகள் மிகதெளிவாக இருக்கிறார்கள். எனவே "அந்தக்காலத்துல" என்று கொக்கி போடாமல் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.. இன்றைய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்....


4 comments:

வீரசுந்தர் said...

அந்தக் காலமாவது, இந்தக் காலமாவது!? அதையெல்லாம் விடுங்க!! உங்க வலைப்பதிவுல கீழ இருக்காங்களே, அந்த அக்கா யாரு!!??? :-D

ஆ.ஞானசேகரன் said...

புதுசு கண்ணா புதுசு! நல்லா இருந்தா பாத்துகோங்கா!!!!

கோவி.கண்ணன் said...

//"அம்மா என் பென்சிலை ஒரு அண்ணன் எடுத்துக்கொண்டான்" என்று அழுதாள்.//

யோவ்,

உசாரானு ஆளுங்கப்பா நீங்க, இப்பவே பசங்களை 'அண்ணன்' என்று கூப்பிட பழக்கி இருக்கிங்க. இந்த காலத்துக்கும் அது தேவைதான்

ஆ.ஞானசேகரன் said...

//உசாரானு ஆளுங்கப்பா நீங்க, இப்பவே பசங்களை 'அண்ணன்' என்று கூப்பிட பழக்கி இருக்கிங்க. இந்த காலத்துக்கும் அது தேவைதான்//
உசாரா இருந்தாலும் கவுத்துராங்கப்பா