_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, September 7, 2008

வாங்க ரஜினி சார்!...

வாங்க ரஜினி சார்!...

30 நாளில் புது முடிவு அறிவிக்கிறார் ரஜினி: ரசிகர்கள் கோரிக்கை ஏற்பு
அரசியல் கட்சி துவக்கப்படுமா, இல்லையா என்பது குறித்த தன் புதிய முடிவை அடுத்த 30 நாளில் அறிவிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நன்றி viduppu.com


=>வாங்க ரஜினி சார்! நல்லது செய்ய தொனுச்சினா வாங்க ரஜினி சார்!

=>வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவீர்களாமே! வாங்க ரஜினி சார்!

=>நல்லது செய்யனும்னா நல்லநாள் நேரம் தேவையில்லை, தொண்டுழியனை யார் தடுக்க முடியும் வாங்க ரஜினி சார்!

=>வாய்ஸ் மட்டுமே கொடுப்பதை நிருத்திவிட்டு ஏதாவது நல்லது செய்யுங்க ரஜினி சார்!

=>இங்கே அரசியல் செய்ய ஆயிரம் பேருள்ளனர், இமயமலை சாக்கு சொல்லாமல் நல்லது செய்யனும் ரஜினி சார்!

=>இயக்குனர் பாரதிராஜாவின் "முதல்மரியதை" பாணியில் எனக்கு ஒரு உண்மை தெரியுனும், உங்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள் நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் நாலுகாசு பாக்கலாம் என்று காத்திருப்பவர்களுக்காக நிர்பந்தம் காரணமாக அரசியலுக்கு வருவீர்களாமே! நல்ல பெரும்தன்மை ரஜினி சார்! ஏதாவது நல்லது செய்யுங்க ரஜினி சார்!

=>கடினப்பட்டு தூக்கிய கையை படம்பிடித்து பின் பின்னனியிசையிட்டு, தொழில்நூட்பக் கலைஞர்களின் பெருமுயற்சியில் ஸ்டைலாக காட்டி ரசிகனின் சாபாஸ் வாங்கலாம்! அரசியலில் ஏதாவது நல்லது செய்யனும் ரஜினி சார்!

=>"ஒருதுளி ஓருபவுனு" கவிஞர் வைரமுத்து வரிகளுக்கு வாயசைத்தது போதும் வாங்க சார் ஏதாவது நல்லது செய்யுங்க ரஜினி சார்!

=>நல்லா படித்த நண்பர் நான்காவது முறையாக பாபா படம் பார்க்க சென்றார் ஏனெனில் தலைவர் அரசியலுக்கு வருவதாக இந்தப் படத்தில் சொல்வதாக சொன்னார்கள் தெரியவில்லை அதுதான் எங்கேயாவது சொல்லியுள்ளாரா என்று பார்க்கப் போறேன் என்றார்.. எனக்கு தலைசுற்றியது அரசியலுக்கு வருவதை ஏன் படத்தில் சொல்லவேண்டும்? பத்திரிக்கையாளர்களிடம் சொன்னா பொதுமே.... இவர்கள்தான் உங்கள் வாக்கு வங்கிகள், இவர்களுக்கு ஏதாவது நல்லது செய்யனும் ரஜினி சார்!

=>ஏதாவது நல்லது செய்யனும் ரஜினி சார்! 25 ஆண்டுகளாக திரைப்படதுறைக்கு என்ன செய்தீர்களோ? அதுபொல ஏதாவது செய்யனும் ரஜினி சார்!

=>சுனாமி காலங்களில் ஓடோடி வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினீர்கள் அதுபொல ஏதாவது செய்யனும் ரஜினி சார்!

=>குசராத் பூகம்பத்தில் உங்கள் சேவை உங்கள் மன்றத்தின் சேவைகளை பாராட்டதவர்களில்லை அதுபொல ஏதாவது செய்யுங்க ரஜினி சார்!

=>திட்டமிடாத காவேரி கங்கை இணைப்பு திட்டதிற்கு ஒரு கோடி நன்கொடை செய்ததுபொல ஏதாவது செய்யுங்க ரஜினி சார்!

=>இந்தியா உலகிலே முழுஜனநாயக நாடாகும். இங்கு யார்வேனாலும் அரசியலுக்கு வரலாம்.. உங்களை பொன்ற மக்கள் பலம்கொண்டவர்கள் ஏதாவது நல்லது செய்யனும் ரஜினி சார்!

=>சிவாஜி படத்துக்கு சங்கர் கதை வசனம் எழுதிக்கொடுத்தார். அரசியலில் நீங்கள்தான் எழுதனும் செயல்படுத்தனும்(நடிக்கனும்) . நல்லது செய்யுனும்ன்னு தோனுச்சினா வாங்க ரஜினி சார்! ஏதாவது செய்யுங்க! பொங்கி வரும் வெள்ளத்தை யார் தடுக்க முடியும்..

=> என்றும் நல்லதுக்காக காத்திருக்கும் மக்களின் ஒருவன்

4 comments:

கிரி said...

30 நாளில் அறிவிக்கப்போவதாக ரஜினி எதுவும் கூறவில்லை..

இவர்களே ஏதாவது செய்தி போட்டு பத்திரிகை விற்பனைக்காகவும் ஒரு பரபரப்பாகவும் போட்டு கொண்டு இருக்கிறார்கள்.

அப்புறம் ரஜினி, ரசிகர்களை ஏமாற்றி விட்டார்.. சும்மா இதையே கூறி மக்களை குழப்பி கொண்டு இருக்கிறார் என்று போட்டு பக்கம் பக்கமாக எழுத வேண்டியது..

ஆ.ஞானசேகரன் said...

//30 நாளில் அறிவிக்கப்போவதாக ரஜினி எதுவும் கூறவில்லை..

இவர்களே ஏதாவது செய்தி போட்டு பத்திரிகை விற்பனைக்காகவும் ஒரு பரபரப்பாகவும் போட்டு கொண்டு இருக்கிறார்கள்.//

நன்றி கிரி, எப்படியொ ரஜினி அரசியலுக்கு வந்துதான் பார்க்கட்டுமே!ரசிகனின் கனவு நிறைவேறும்...

Anonymous said...

ரஜினி 30 நாளில் முடிவு அறிவிக்க போவதாக இன்னும் சொல்லவில்லை. 1996-ல் இருந்தே ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த எதிர்பார்ப்பு இன்னும் 10 ஆண்டுகளுக்கு இருக்கும். அதற்கு காரணம் ரஜினி என்ற காந்த சக்தி தான். நிம்மதியை விரும்பும் அவருக்கு நிம்மதியை கொடுப்போம். அரசியலுக்கு அவர் வரவேண்டாம். வர வேண்டும் என்று அவர் நினைத்தால் அவர் பெறும் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அவருக்கு என்று தமிழகத்தில் பெரும்வாரியான வாக்குவங்கி இருக்கிறது. இதை உணர்ந்து தான் அரசியல்வாதிகள் அவர் மீது காலம் காலமாக புழுதியை வாரி வீசி வருகிறhர்கள். அந்த புழுதிக்குள் அவர் சிக்க வேண்டாம் என்பது தான் ரசிகர்களின் கருத்து.

ஆ.ஞானசேகரன் said...

கடையம் ஆனந்த் //வர வேண்டும் என்று அவர் நினைத்தால் அவர் பெறும் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அவருக்கு என்று தமிழகத்தில் பெரும்வாரியான வாக்குவங்கி இருக்கிறது.//

வருகைக்கு நன்றி நண்பரே! அவருக்கு வாக்கு வங்கி இருந்தது உண்மையானாலும், தற்பொது இருக்குமா என்பதும் சந்தேகமெ? அப்படியே இருந்தாலும் அவருக்கு தலமையேற்று வழிநடத்த முடியுமா என்பது நீங்கள்தான் சொல்லவேண்டும்