_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, September 20, 2008

வாங்க! வாங்க! சாப்பிடலாம்....

வாங்க! வாங்க! சாப்பிடலாம்....


என்ன சாப்பிடுரீங்க! அசைவமா? சைவமா? என்ன இறைச்சியை பார்த்ததும் முகம் சுழிக்கிரிங்க, சாப்பிடதிற்கு முன் இதகேழுங்க, ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானிகள் என்ன சொல்லுராங்ன்னா,.....

காய்கறி மட்டுமே சாப்பிட்டால் மூளை என்னாகும்?
"முழு நேரமும் சைவ உணவுகளை சாப்பிடுவோருக்கு விட்டமின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், அவர்கள் மூளை சுருங்குவதற்கான வாய்ப்பு உள்ளது"என, ஆக்ஸ்போர்டு பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:"பி12" விட்டமின் சத்து உடலுக்கு மிகவும் முக்கியம். இறைச்சி, மீன், பால் போன்றவற்றில் இந்த விட்டமின் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் அனைத்து காய்கறிகளிலும் போதிய அளவில் விட்டமின் இருப்பதாக கூற முடியாது. ஒரு சில சைவ உணவுகளில் மட்டுமே போதிய விட்டமின் சத்துக்கள் உள்ளன. "பி12" விட்டமின் பற்றாக்குறையால் ரத்த சோகை, அழற்சி ஆகியவை ஏற்படுகின்றன. இதனால், முழு நேரமும் சைவ உணவுகளை சாப்பிடுவோருக்கு மூளை சுருக்கம் ஏற்படுகிறது. 61 முதல் 87 வயதுக்கு உட்பட்ட 107 பேரிடம் நினைவு, உளவியல் பரிசோதனை செய்யப்பட்டதன் மூலம், அவர்களது மூளையை "ஸ்கேன்" செய்ததன் மூலமும் இந்த விவரம் தெரியவந்தது.இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது

அவர்கள் அப்படிதாங்க சொல்லுராங்க நீங்களே சொல்லுங்க, இயற்கையிலே மனிதனுக்கு இறைச்சி சாப்பிட்டால் செறிமானமாகும் தகுதி உள்ளது. அப்படியிருந்தும் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது என்று சொல்லுகின்றனர். ஓ உயிர்களை கொல்லகூடாது என்பதனாலா! என்னங்க தாவரங்களுக்கும் உயிர் இருக்குதே? ம்ம்ம் நீங்க சொல்லுறது புரியுது, தாவரத்தை வெட்டினாலும் வளரும் என்பது, அப்படியினா வேரோட புடுங்கி சாப்பிடும்போது உயிரைப்பற்றி கவலையில்லையா? இன்னும் கொஞ்சம் யோசிச்சி பார்க்கலாமே! ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் என்ன சொல்லுகின்றார்கள்,........

அசைவ உணவை தவிர்ப்பது ஆபத்து
"சைவ உணவே சிறந்தது, அசைவ உணவை தவிர்ப்பது நல்லது'' என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு முடிவில் மாறுபட்ட கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.வெறும் சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு சில வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது. மூளை சுருங்கும் பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் கூறியுள்ளனர். "பி12" வைட்டமின் சத்து பால், இறைச்சி, மீன், ஈரல் போன்றவற்றில் அதிகமாக உள்ளது.இவற்றை சாப்பிடாத வர்களுக்கு "பி12" குறைபாடு ஏற்பட்டு மூளை திறன், உடல் திறன், ஞாபக சக்தி குறைபாடு போன்றவை ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.குடிப்பழக்கம் உள்ளவர் களும், இந்த பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகம். அசைவ உணவும் அவசியம் என்பதற்காக கொழுப்பு சத்துஉணவை அதிகம் சாப்பிட வேண்டும் என்பதில்லை

இந்த விஞ்ஞானிகள் அசைவம் தவிர்ப்பது ஆபத்து என்று கூறுகின்றார்கள். கறி சாப்பிடுவதால் என்னதான் உங்களுக்கு பிரச்சனை, பழக்கமில்லை என்று சொல்லுகின்றீர்களா? இப்பயெல்லாம் சைவர்கள் எல்லாம் முட்டை சாப்பிடுகின்றார்கள். முட்டைகுள்ள முழுகோழியே இருக்குதுங்க! என்ன சொல்லுரிங்க சதையை தின்று சைதையை வளர்ப்பதைவிட சாவதே மேல் என்று பட்டினத்தார் போல கூறுகின்றீர்களா! ஆமங்க இரத்தமும் சதையும் கடிச்சி சாப்பிடனும் என்று நினைத்து பார்த்தால் சாப்பிடமுடியுமா? என்னங்க காரட்டை சாப்பிடும்போது அய்யோ! என்று கத்தினால் சாப்பிடமுடியுமா? காரட்டுக்கும் உயிர் இருக்குங்க, ஊட்டி கொடைக்காணல் போனிங்கினா இலையோட காரட் கிடைக்கும் சிலர் அப்படியே கடிச்சி சாப்பிடிகின்றார்கள். உயிரோட காரட் தலையை பிடிச்சி சாப்பிடுவாதாக நினைத்தால் சாப்பிடமுடியுமாங்க? எல்லமே ஒரு உணவு வகைதாங்க,... இப்ப எனக்கு கண்ணதாசன் சொன்னது ஞாபகம் வருதுங்க, அவர் அரங்கமும் அந்தரங்கமும் என்ற நூலில் "கறி சாப்பிட வந்த பிறகு அது என்ன ஆட்டுகறி மாட்டுக்கறி? அடுப்பு கரியும் சேர்த்து சாப்பிடவேண்டியதுதானே என்று கூறுகின்றார். கறியை பொருத்து மனிதன் தரம் பிரிப்பதும் உண்டுங்க. ஏழைகள், தலித்துகள் சாப்பிடுவது மாட்டு கறி என்று பிரித்து பார்க்கின்றனர். (தற்ப்போது மாட்டுக்கறிக்கும் கிராக்கி அதிகம்)

இதுபோல முஸ்லீம்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை. இந்துக்கள் பசு இறைச்சி சாப்பிடுவதில்லை, இது இவர்களின் இறைநம்பிக்கை. முதுகெலும்பு வானத்தை நோக்கி இருக்கும் எல்லா விலங்குகளையும் சாப்பிடலாம் என்பது சீனர்களின் பழக்கம். சீனர்கள் இறைச்சி மட்டுமில்லைங்க காய்கறிகள் நிறைய சேர்த்துக்கொள்வார்கள். சீனர் காய்கறிகள் 365 வகைக்கு மேல் உள்ளதாக கூறுவார்கள். நாள் ஒன்றுக்கு ஒரு காய் என்றால் வருடம் ஓடிவிடும். இவர்கள் காய்களில் மருத்துவ குணம் நிறைய உள்ளதுங்க.

இப்பபாருங்க விலங்குகளை உணவுப் பழக்கத்தை வைத்து தாவரஉண்ணி, விலங்குண்ணி, அனைத்துண்ணி என்று மூன்று வைகையாக பிரிக்கின்றோம். நாம அனைத்துண்ணி வகையை சார்ந்தவங்க,.... தாவரங்களையும் மாமிசத்தையும் உண்ணுகின்றோம். இவற்றிக்கு நம்முடல் ஏற்றவகையாக உள்ளது. தாவரங்களில் காய்கள், பழங்கள். கீரைவகைகள், மற்றும் கிழங்கு வகைகள், பருப்பு வகைகள் அனைத்தும் சாப்பிடுகின்றோம். மாமிசத்தில் மீன் இறைச்சி சாப்பிடுகின்றோம். இந்த வகை உணவுகளில் வைட்டமின்கள் நேரடியாக நமக்கு கிடைக்கின்றது. மாமிச உணவுகளில் வைட்டமின் B12 அதிகமாக உள்ளது. சைவ உணவு சாப்பிடுவதால் மனிதனுக்கு தேவையான அனைத்து சக்தியும் பெற்றுவிட முடிவதில்லை, மாமிச உணவில் மனிதன் சக்தியிழந்த திசுக்களுக்கு சக்தி கிடைப்பதாக அறிவியல் சொல்லுதுங்க.

மனிதன் இறைச்சிக்காக பயன்படுத்தும் விலங்குகள் பொதுவாக தாவரயுண்ணி வகைச் சார்ந்ததாக இருக்கும், இதனால் தாவரச்சத்தும் சேர்ந்தே கிடைக்குதுங்க. மாடு ஆடு போன்றவை தாவரயுண்ணிகள். அதுபோல நாய், பூனை மற்றும் காட்டு விலங்குகளை சாப்பிடுவதில்லை இவைகள் அனைத்துண்ணிகள். (ஆனால் நாகலாந்தில் நாய் இறைச்சி சாப்பிடுகின்றனர், பூனையும் சிலர் சாப்பிடுகின்றனர்) . காகம், பருந்து, கழகு போன்ற அனைத்துண்ணி சார்ந்த பறவைகளையும் மனிதன் சாப்பிடுவதில்லை. பொதுவாக அனைத்துண்ணி வகை விலங்குகளை சாப்பிடுதல் உடலுக்கு கெடுதல் தரும்முங்க,...

சிலர் எலியை சாப்பிடுகின்றனர், இவ்வாறு சாப்பிடும் எலிகள் தாவரங்களை உண்பதாக இருக்கும், நெல்களை உண்டு வாழும் வயல் எலிகளை சாப்பிடுவார்கள்,

முட்டையில் புரொட்டின் அதிகம் உள்ளதுங்க, தற்ப்பொது சைவ விரும்பிகள் பலர் முட்டை உண்கின்றனர். சிலர் பச்சை (வேகவைக்காத) முட்டையை குடிப்பதும் உண்டு. இதில் அரவேக்காடு முட்டையை சாப்பிடுவதை மிகசிறப்பாக சொல்லுகின்றார்கள். முட்டையை சமைக்கும்பொது மஞ்சள் சேர்ப்பது நல்லதுங்கோ. அதேபோல் மாமிசத்தில் மிளகு சேர்ப்பதும் மிக நல்லதுங்க. (ஒரு மிளகு இருந்தால் எதிரி வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பழமொழி... மிளகு ஒரு விஷ முரிவு..... )

சில சைவ விரும்பிகள் பூண்டு சாப்பிடுவதில்லை. பூண்டில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் காமத்தை தூண்டும் என்று சாப்பிடுவதில்லை, மாமிசத்தில் பூண்டு சேர்த்து சமைப்பதால் சுவைகூடும்.

மேலை நாடுகளில் கொழுத்த மாட்டை கொன்று பூமியில் புதைத்து குறிப்பிட்ட நாளில் அதில் வளரும் புழுவை வறுத்து சாப்பிடுகின்றார்கள்.

சில கிராமங்களில் ஈசலை வறுத்து சாப்பிடுகின்றனர். மின்மினி பூச்சியை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் மாலைக்கண் நோய் சரியாகும் என்பதும் நம்பிகைங்க.

ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்தில் உயிர் மீன் வாயில் மருந்து வைத்து மனிதன் தொண்டை வழிவிடுவதால், ஆஸ்துமா குனமாகின்றது என்று பலர் சென்று வருகின்றனர்.
ஜப்பானியர்கள் வேகவைக்காத ஒருவகை மீன், கிழிஞ்சல்கள் உண்கின்றார்கள். இந்தியர்களும் சிலர் வேகவைக்காத கிழிஞ்சல்களை உண்கின்றனர்.

உணவு பொருள்களில் கால்சியம் அதிக படுத்துவது என்பது, இறந்த விலங்கு எலும்பு துகள் சேர்ப்பதுதான்.

என்னங்க இன்னும் என்ன யோசிக்கிரிங்க,.... உணவு வட்டம் என்பது இயற்கையானதுங்கோ, இறைச்சி சாப்பிட்டால் நம்முடல் ஏற்றுகொள்ளும் பொழுதும் மெலும் வைட்டமின் சக்திகள் நேரடியாக நம்முடல் திசுக்கு கிடைக்கும்பொதும் என்னங்க யோசனை.. வாங்க சாப்பிடலாம். சைவ உணவுக்கு தனி சிறப்போ அல்லது அசைவ உணவுக்கு தனி சிறப்போ இல்லைங்கோ! உங்களுக்கு எது சாப்பிட முடியுமோ! எது தேவையோ! ரொம்பவும் யோசிகாமல் சாப்பிடுங்க... கொண்றால் பாவம் தின்றால் போச்சி! என்பதும் உண்மைதாங்க.. வாங்க சாப்பிடலாம்.. மனிதன் எல்லொரும் சைவம் சாப்பிட ஆரம்பித்தால் இயற்கையில் உணவு பற்றாகுறையும், மனிதனுக்கு சக்திப் பற்றாகுறையும்தான் வரும். ஆடு, மாடு, மான் எல்லாம் மாமிசம் உண்டால் என்ன நிலை ஏற்படுமோ அதுதான் மனிதன் எல்லோரும் சைவம் மட்டும் உண்பதால் வரும். ரொம்ப யோசிக்காதீங்க எது உங்களால் முடியுமோ அதை சாப்பிடுங்க! பலியிடுதல் போன்று உயிர் வதைப்பை தவிற்கலாம்... இறைச்சிகாக கொல்வதை பற்றி அதிகம் யொசிக்க வேண்டிய அவசியம் இல்லைங்க!....

8 comments:

CorTexT (Old) said...

Every living organism depends on others for their survival in a very complex way. We need to kill many living organisms for food and for survival against virus, bacteria, fungus, etc.

Per evolution, meat eating was closely linked with development of bigger brain and survival of human species itself.

Just like everything else in life, meat eating also has its own (+) and (-) points. If you don't like to eat meat that is OK, as diversity of species is also important. But not eating it to avoid killing is just mere ignorance.

Our eating habits are stored in our brain. Often it is difficult to modify it at later stage. Whether you eat meat or not, give your child every option to choose.

கோவி.கண்ணன் said...

அப்பாடி இம்புட்டு பெரிய பதிவா ? தேவையான தகவல்கள் தான்.

இறைச்சி சாப்பிடனும் என்றாகிவிட்டால் கொரியர்கள், சீனர்கள் சாப்பிடும் நாய் கறி கூட சாப்பிடலாம் தப்பில்லை.

ஆ.ஞானசேகரன் said...

RajK said... //Whether you eat meat or not, give your child every option to choose.//
சரியா சொன்ன ராஜ், குழந்தைகளை கட்டாய படுத்தகூடாது என்பதும் சரிதான்.. நான் 20வயது வரை அசைவம் சாப்பிடவில்லை என்று அம்மா,கட்டயப்படுத்தவில்லை காலபோக்கில் சூழ்நிலைக் காரணமாக சாப்பிடுகின்றேன்.

ஆ.ஞானசேகரன் said...

கோவி.கண்ணன் said... //இறைச்சி சாப்பிடனும் என்றாகிவிட்டால் கொரியர்கள், சீனர்கள் சாப்பிடும் நாய் கறி கூட சாப்பிடலாம் தப்பில்லை.//
நாகலாந்தில் கூட நாய்கறி சாப்பிடுகின்றார்கள்.. கள்ளும் நாய்க்கறியும் அமோக வரவேப்பாம். கண்ணதாசன் சொன்னதுபொல அடுப்புக்கரியும் சாப்பிட வேண்டியதுதான்...ஹிஹிஹிஹி...பொதுவாக அனைத்துண்ணி வகை விலங்குகளை சாப்பிடுவது நல்லது இல்லை...

CorTexT (Old) said...

I never thought about it before...it is good idea to restrict only to grass-eaters to minimize exposure to many viruses. I think, even avoiding blood and brain is also good idea, as viruses mostly reside there; in USA they are not usually preferred; many federal (FDA) regulations exist in USA for meat-cutting to avoid mixing brain with other parts of the meat. But this risk can mostly be avoided, if we avoid sick animals.

ஆ.ஞானசேகரன் said...

//RajK said...

meat-cutting to avoid mixing brain with other parts of the meat. But this risk can mostly be avoided, if we avoid sick animals.//
தகவலுக்கு நன்றிபா!..

raj said...

ஆனால் மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே, அவைகளை இம்சைசெய்து ஆகாரமாகக் கொண்டால் அவை தாமச ஆகார மல்லவோ, அதனால் வந்த சந்தோஷம் அசுத்த மனோகரண சந்தோஷமல்லவோ என்னில்:- மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிர்கள்தான். அவைகளை இம்சைசெய்து ஆகாரங்கொண்டால் அது ஏகதேச தாமச ஆகாரந்தான். அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் அசுத்தாகரண சந்தோஷந்தான். ஆனாலும் அப்படியல்ல. மரம் புல் நெல் முதலான சீவர்கள் பரிசமென்கிற ஓரறிவையுடைய சீவர்களாதலாலும், அவ்வுடம்பில் சீவவிளக்கம் ஒருசார் விளங்குதலாலும், அவ்வுயிர்கள் தோன்றும் வித்துக்களும் மற்ற வித்துக்கள் போல் சயமாதலாலும், அவ்வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு செய்யக்கூடுமாதலாலும், அவ்வுயிர்களை வேறுசெய்யாமல் அவ்வுயிர்களினிடத்து உயிரில்லாமல் உயிர் தோன்றற்கிடமான சடங்களாகத் தோன்றிய வித்துக்களையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்குகளையும் தழைகளையும் ஆகாரங்களாகக் கொள்வதேயன்றி அவ்வுயிருள்ள முதல்களை ஆகாரமாகக் கொள்ளாதபடியாலும், அவைகளில் வித்து காய் கனி முதலானவை கொள்ளும்போது சுக்கிலம் நகம் ரோமம் முதலிய வைகளை வாங்கும் போது இம்சை உண்டாகாமை போல் இம்சை உண்டாகாத படியாலும், தாவர வர்க்கங்களுக்கு மன முதலான அந்தக் கரணங்கள் விருத்தி யில்லாதபடியாலும் அது உயிர்க்கொலையுமல்ல; துன்ப முண்டுபண்ணுவது மல்ல; அதனால் அது சீவகாருணிய விரோதமாகாது. அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் சீவவிளக்க சகிதமான கடவுள் விளக்கமேயாகு மென்று அறியவேண்டும்
http://www.vallalar.org/ArticlesTamil/40

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் raj
உங்களின் கருத்தையும் கவணத்தில் கொள்கின்றேன்... நன்றி