_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, September 9, 2008

ஆஆவியாஆஆஆஆஆ!... ஆவிகள் பற்றிய மனிதன் நம்பிக்கை

ஆஆவியாஆஆஆஆஆ!...ஆவிகள் பற்றிய மனிதன் நம்பிக்கை

நான் படித்துக்கொண்டிருந்த காலங்கள், என் தங்கையும் பக்கத்துவீட்டு பெண்களும் விளையாடிக்கொண்டிருந்தனர். நானும் மெதுவாக என்ன விளையாடுகின்றார்கள் என்று கவனித்தேன். ஆவியுடன் பேசபோவதாக சொன்னார்கள். தரையில் A B C D... மற்றும் 1 2 3... எழுதப்பட்டு அதன் நடுவில் ஹார்லிக்ஸ் பாட்டில் மூடியை கவுத்து வைக்கப்பட்டிருந்தது. எந்தங்கை மற்றும் இரு பெண்கள் நானும் கலந்துகொண்டேன். அந்த மூடியின் மேல் எல்லோரும் ஒரு விரலை சாதாரணமாக வைத்து நல்ல ஆவியே! இந்த மூடியின் மேல் வா! என்று பலமுறை நம்பிக்கையுடன் சொல்லவேண்டும், அதன்படி எல்லோரும் சொன்னொம். எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் என்ன நடக்கும் என்ற ஆவலுடன் நானும் சொன்னேன். சில நிமிடத்தில் அந்த மூடி நகர ஆரம்பித்தது, எனக்கு யாரோ நகர்த்துவதாக எண்ணம். எந்தங்கையின் தோழி நல்ல ஆவியே நீ யார்? என்று கேட்டது... அந்த மூடி நகர்ந்து R என்ற எழுத்து பின் A J I V... என்று நகர்ந்தது.. ஓஓஓ ராஜிவ்காந்தியா! பின் அவரவர் கேள்விகளை கேட்டலாம் என்று சொல்ல மூடிக்குள் என்ன இருக்கு என்று நகர்த்தி விட்டேன்... மூடியும் நின்றுவிட்டது மூடிக்குள் ஒன்றுமில்லை.......(என் கவனத்தில்: மூடியின் மேல் எல்லொரும் விரல் வைத்ததால் நம்முடைய உடல் வெப்பத்தால் மூடியின்னுள் உள்ள காற்று வெப்பமடைந்து மூடி நகர ஆரப்பித்தது பின் நம் நம்பிக்கையின் மனநிலைக் காரணமாக தேவையான எழுத்துக்கு நமக்கு அறியாமல் நகர்த்தியுள்ளோம். நான் மூடியை ஆர்வகோளாரால் நகர்த்தியதும் வெப்பம் சமநிலையடைந்து மூடி நின்றுவிட்டது)

எல்லா மதநம்பிக்கையிலும் ஆவிகள், பேய்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. ஆவிகளை கெட்ட ஆவிகள், நல்ல ஆவிகள் இருப்பதாகவும் நம்பிக்கை.
இறந்தவர்களின் ஆன்மாதான் அவற்றின் நிலையைப்பொருத்து ஆவிகளாகவும் பேய்களாகவும் வருவதாகவும் ஒரு நம்பிக்கை. ஆசை நிறைவேறாமல் இறந்க உயிர்களும், தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பதும் ஒருசாராரின் நம்பிக்கைகள்.

ஒரு மரணம் நிகழ்கிறது. அப்ப உடலை விட்டு உயிர் பிரியும். அப்படி பிரியும் போது அது இன்னொரு இடத்தில் போய் மீண்டும் உருவெடுக்கிறது. இது சில ஆத்மாக்களுக்கு உடனடியாக வாய்ப்பு தரப்படுவதில்லை. சில காலம் கழித்துதான் அந்த வாய்ப்பு தரப்படுகிறது. அதுவரை அந்த ஆன்மா ஆவிகளாக உலகை சுற்றுகிறது என்பதும் ஒருசாரர் கருத்து.

இறந்தவர்களின் சில ஆசைகள் நிறைவேராமல் இருந்தால் அந்த ஆன்மா ஆவிகளாக வருகின்றது. அந்த ஆவிகளின் ஆசையை நிறைவேற்றினால் நம்மை தீங்கு செய்யாது என்று ஆசை சம்மந்தமான பொருள்களை வைத்து பூஜை செய்வது சீனர்களின் நம்மிக்கை.

இப்படிப்பட்ட ஆவிகளை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து மந்திரவாதிகள் செய்வினை மற்றும் தீதுகள் செய்வார்கள் என்று நம்பிக்கையும் உண்டு. இப்படி நல்ல ஆவியின் துணையுடன் சிலர் இந்த உலகின் பினி பொக்க போவதாகவும் பலர் இன்னும் இருக்கின்றார்கள். இப்படி சமிபகாலமாக செய்திகளில் வருவது "ஆவி உமா" 11-09-2008 ல் குங்குமம் வாரயிதழில் அவரைப்பற்றிய செய்தி....அருகில் உள்ள படத்தை அமுத்தி பெரிதுப்படுத்தி பார்க்கவும்....



இந்த "ஆவி உமா" காரணம் இருக்குமாயின் பகுத்தறிவாதி பெரியார் ஆவியுடன் பேசமுடியும் என்றும் கூறுகின்றார்.. பகுத்தறிவதிக்கும் சமுக ஆராச்சியாளர்களுக்கும் ஆவிப்பற்றிய கருத்துப் போராட்டம் இருக்கத்தான் செய்கின்றது. ஆவிகள் ஒரு மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாதிகளும், ஆவிகள் நம்மை அடக்கியாளூம் வல்லமையுள்ளது இவற்றை பாக்தி தியானம் முறையில் அறியலாம் என்ற ஒரு பிரிவினரும் காலம்காலமாக சொல்லிய வண்ணம் இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட பழக்கங்களை ஆராய்ந்த அறிவியலறிஞர் உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மன மருத்துவருமான முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர், ஆவி, ஆதன்(ஆன்மா) தொடர்பாகக் கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் முழுவதுமாக ஆராய்ந்தவர்.அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்ட தலைசிறந்த ஓர் அறிவியலறிஞர் ஆவார். ஆதன், ஆதனல்லாதவை, ஆவி ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும், ஒன்றால் ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும் இன்றேல் மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனபதே அவரின் உறுதியான கருத்தாகும்.“இயற்கையை மீறிய ஆற்றல்களை எவரும் எக்காலத்திலும் பெற்றிருக்கவில்லை; அப்படடிப் பட்டவர்கள் மதநூலின் பக்கங்களிலும், உணர்ச்சிகளை வணிகமாக்கும் செயதித்தாள்களின் பக்கங்களிலுமே இருந்து வருகிறார்கள்” எனகிறார் கோவூர்.நன்றி தமிழ்நம்பி

ஒருமுறை எங்கள் கிராமத்தில்யுள்ள ஆலயத்திற்க்கு ஜேர்மனிலிருந்து ஒரு பாதிரியார் வந்திருந்தார். இவர் சக்திவாய்ந்தவர் என்றும், இவர் ஜெபம் செய்தால் நோய் மற்றும் சிரமங்கள் எல்லாம் தீரும் என்றும், பேய் கெட்ட ஆவிகளை விரட்டி விடுவார் என்றும் எங்கள் கிராமத்தில் எல்லொரும் அவரிடம் ஜெபம் செய்ய சென்றனர். நானும் எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் தெரிந்துக்கொள்ள வேண்டும் ஆசையில் வரிசையில் நின்றேன். அந்த பாதிரியார் ஒவ்வொருவராக அவர்கள் தலையில் கைவைத்து ஜேபம் செய்தார். அப்படி ஜேபம் செய்யும்போது அவர்கள் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள், இப்பொது எல்லா பினி பிசாசுகள் சென்றுவிட்டதாக அவர்களும் நம்பி மகிழ்ந்தனர். என்முறை வந்தது என்தலைமேல் கைவைத்து ஜெபம் செய்தார் ஒன்றும் நடக்கவில்லை அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். உனக்கு நம்பிக்கையில்லை மீண்டு நன்றாக ஜெபம் செய்துவிட்டு வா என்று அருகிலிருந்த அவர் உதவியாளர் சொன்னார். நான் மறுபடியும் செல்லவில்லை

சிங்கபூர் ஒலி 96.8 வானொலியில் நல்லிரவு நிகழ்சியில் பேய் கதைகள் நேயர்கள் தொலைபேசியில் பகிர்ந்து கொள்ளுதல் நிகழ்ச்சி. அவரவர் தான் கண்டதாக பல பேய்கதைகள் சொல்லுவார்கள். தற்பொது இல்லை என்று நினைக்கின்றேன். நானும் கலந்துக்கொண்டு இந்த கதை என்தாத்தா சொன்னதாக சொன்னேன். ஒரு பாதிரியார் பேய் பிசாசுக்கு பயப்படகூடாது, கடவுள் மேல் நம்பிக்கை வைய்யுங்கள் என்பார். நான் நல்லிரவில் சுடுகாடுவரை என்னால் செல்லமுடியும் என்றதும், அவ்வூரில் சிலர் அப்படியானால் நல்லிரவில் சுடுகாடு சென்று இந்த ஆணியை அடித்துவிட்டு வாருங்கள் என்றார்கள். அதேபோல் அன்று இரவு சென்றார் ஆனால் திரும்பி வாரவேயில்லை. காலையில் எல்லொரும் சென்றுபார்த்தனர் அந்த பாதியார் சுடுகாட்டில் இறந்து கிடந்தார். அருகில் சென்று பார்த்ததும்தான் தெரிந்தது அவர் இரவில் ஆணியை அடிக்கும்போது அவர் அங்கியையும் சேர்த்து அடித்துவிட்டார். அடித்த மகிழ்ச்சியில் செல்லும்பொது அங்கியை யாரோ இழுப்பதாக உணர்ந்து அதிர்ச்சியில் இறந்துவிட்டார் என்று... இந்த கதையை சொன்னதும் நிகழ்ச்சியாளர் நம்பிக்கையிருந்தால்தான் பேய்கள் கண்ணுக்கு தெரியும் என்று முடித்துக்கொண்டார்..

இந்த நூற்றாண்டுவரைலும் நம்பிக்கைக்கும் நம்பிக்கையில்லாமைக்கும், பகுத்தறிவுக்கும் ஆன்மீகத்துக்கும் போராட்டம் இருந்துகொண்டே இருக்கின்றது. நாளைய நம்முடிவு நமக்கு தெரியாதவரை இந்த பொராட்டம் இருந்துக்கொண்டேதான் இருக்கும். ஆசையும் அதை அடையவேண்டும் என்ற எண்ணம் இருக்குமேயானால் இப்பட்டி பட்ட நிலை இருக்கத்தான் செய்யும் என்பது என் எண்ணம்.........

2 comments:

கோவி.கண்ணன் said...

//ஆசையும் அதை அடையவேண்டும் என்ற எண்ணம் இருக்குமேயானால் இப்பட்டி பட்ட நிலை இருக்கத்தான் செய்யும் என்பது என் எண்ணம்.........//

ஞான்ஸ்,
மிகச் சரிதான். வர வர உங்கள் கட்டுரை பளிச்சிட்டுக் கொண்டே இருக்கிறது ! எழுத்தில் வளம் வந்துவிட்டது, எழுத்துப்பிழைகளையும் குறைத்துக்கொள்ளுங்கள் !

ஆ.ஞானசேகரன் said...

//கோவி.கண்ணன் said... ஞான்ஸ்,
மிகச் சரிதான். வர வர உங்கள் கட்டுரை பளிச்சிட்டுக் கொண்டே இருக்கிறது ! எழுத்தில் வளம் வந்துவிட்டது, எழுத்துப்பிழைகளையும் குறைத்துக்கொள்ளுங்கள் !//
நன்றி கண்ணன் சார்(ஐயா) எழுத்துப்பிழை குறைக்க முயற்ச்சி செய்துக்கொண்டே வருகின்றேன்..