இன்று செப்டம்பர் 28ம் தேதி மாதக்கடைசி ஞாயிறு உலக இருதய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உயிர்களின் வாழ்வில் இதயம் முக்கிய பங்கு பெறுகின்றது. இதயமே சக்திகளை மூளை மற்றும் இதறபாகங்களுக்கும் எடுத்து செல்கின்றது. இப்படி முக்கியமான இதயத்தை நோயின்றி காப்பாற்றவும், இதயநோய் பற்றிய விழிப்புனர்வு ஏற்படுத்தவும் உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் விரிவான செய்திகளை தினமலர் சுட்டியை சுட்டி பார்க்கவும்...
இன்று செப். 28 உலக இருதய தினம் இங்கே அமுக்கி பார்க்கலாம்
சுட்டாமல் செய்தி பார்க்க........
வாழ்க்கை முறை மாற்றத்தால் இருதய நோயை தடுக்கலாம் : இருதய நோயால் ஒவ்வொரு ஆண்டும் உலகில் ஒரு கோடியே 75 லட்சம் பேர் உயிரிழக் கின்றனர். மற்ற நோய்களைப் போல இல்லாமல் இருதய நோயை வாழ்க்கை முறை மாற்றங்களால் பெரிதளவு தடுக்கலாம். இந்தச் செய்தியை உலக மக்களுக்கு அறியச் செய்யும் நோக்கத்துடன் கொண்டாடப்படும் தினம்தான் உலக இருதய தினம். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத கடைசி ஞாயிறு ( 28ம் தேதி) உலக இருதய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இருதய நோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இருதய நோயை தடுக்கும் முறைகளை எடுத்துச் சொல்லவும் இந்த தினம் உதவுகிறது. இந்த ஆண்டு உலக இருதய தினத்தின் முதன்மைச் செய்தி என்னவென்றால், "இருதய நோய் ஏற்படுவதற்கான எச்சரிக்கை குறிகளை அறியவும்' என்பதே.
முக்கியமான காரணங்கள்:
1) உயர்ந்த ரத்த அழுத்தம், 2) ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக இருத்தல், 3) சர்க்கரை வியாதி, 4) சிகரெட் புகைப்பது, 5) உடல் பருமன், 6) உடற்பயிற்சி இல்லாமை, 7) தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், 8) மனஅழுத்தம். இவையாவும்தான் இருதய நோய் வருவதற்கான மிக முக்கியமான காரணங்களாகும்.
இவற்றை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் இருதய நோயை 85 சதவீதம் தடுக்க முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இதில் ஒருவருக்கு எந்தெந்த "ரிஸ்க்' இருப்பது என்று தெரிந்து கொள்வதே இந்த ஆண்டின் இருதய தினத்தின் சிறப்பு அம்சமாகும்
ரிஸ்கைக் குறைக்கும் வழி:
உங்கள் "ரிஸ்க்'கை குறைப்பதற்கான எளிய வழிமுறைகள் வருமாறு
1. சிகரெட் புகைப்பவரானால் அதனை விடுவதே முதற்படி ஆகும். சிகரெட்டுகளின் எண்ணிக்கையை குறைத்தால் மட்டும் போதாது. அறவே நிறுத்த வேண்டும்.
2. தினமும் உணவில் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை அதிகம் சேர்க்க வேண்டும்.
3. எண்ணெயில் பொறித்த உணவு வகைகள், உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை (பஜ்ஜி, அப்பளம் போன்றவற்றை) தவிர்க்க வேண்டும்.
4. ரத்தக் கொதிப்பு நோய் இருந்தால் ரத்த அழுத்தம் 140 / 90க்கு கீழ் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
5. ரத்தத்தில் எல்.டி.எல்., கொலஸ்ட் ரால் (கெட்ட கொழுப்பு) 100 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும்.
6. சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் 100 மி.கி.,யும், சாப்பிட்ட பின்னர் 140 மி.கி.,க்கு மேலும் இருக்கக் கூடாது.
7. தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப் பயிற்சி செய்வது முக்கியம்.
8. இன்றைய உலகில் மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வெளிச் சூழ்நிலை மனதை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது முக்கியம். யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் இதற்கு உதவும்.
மற்ற நோய்களைப் போல அல்லாமல் இருதய நோயை பெரிதளவில் தடுக்க முடியும் என்பதை உணர்ந்து நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்றாகும்.
மேலும்,.அறிந்துக்கொள்ள.. ..நன்றி வெப்துனியா
1.மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்
2.மனநோயின் அறிகுறிகள்!
3.மனநோய் ஏன் உண்டாகிறது?
4.மனநோய்க்கு அடிப்படை என்ன?
2 comments:
எல்லா இதமான இதயத்திற்கும் வாழ்த்துகள்
Anonymous said...
எல்லா இதமான இதயத்திற்கும் வாழ்த்துகள்
வாழ்த்துக்கு நன்றி! பெயரில் வந்தால் நலமாக இருக்கும்
Post a Comment