பேசும் மொழிகளில் மொழிக் கலப்பு என்பது எல்லா மொழிகளிலும் இருக்கும் ஒரு பிரச்சனை. ஆங்கிலம் தற்போழுது எல்லா மொழிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. அதற்கு வலைதளம் மற்றும் கையடக்க தொலைபேசியில் தகவல் அனுப்புதல் போன்றவற்றில் ஆங்கிலம் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் அந்தந்த மொழிகளில் ஆங்கில கலப்பு சாதாரணமாக உள்ளது. இந்த மொழி கலப்பு பிரச்சனையை தீர்ப்பது மக்களின் கடமையா? இல்லை அரசும் இதற்கான பொறுப்பை தவற விட்டுவிட்டதா?
நாம் வலைதளங்களின் படிக்கும்பொழுதும் எழுதும் பொழுதும் கனனி, வலைதளம், விரிவாக்கு, ஏற்றம் செய் போன்ற வார்த்தைகள் பயன் படுத்துவது போல பேசுவதில் பயன் படுத்த முடியவில்லை, பயன்படுத்த முயல்வதும் இல்லை. இதுபோன்ற பல இடங்களில் தமிழ் மொழியில் ஆங்கில கலப்பு ஆதிக்கம் செய்து வருகின்றது. இப்படி பட்ட கலப்பு தேவைதானா? இப்படிபட்ட கலப்பு புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பதில்தான் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்த குறைபாட்டை தவிற்க்க புதிய கலைசொற்கள் உடனுக்குடன் உருவாக்க வேண்டும், அப்படி தவறவிட்டதால்தான் இந்த ஆங்கில கலப்பு காணப்படுகின்றது .
சீனர்கள் வலைதளங்களில் அவர்கள் மொழிதான் அதிகம் பயன்படுத்துகின்றனர், அவர்களுக்கும் வசதியாக உள்ளது. காரணம் அரசு அதற்கான வளர்ச்சியை கொடுக்கின்றது. கூகுள் நிர்வணம் தற்போது தமிழில் மின் அஞ்சல் சேவை கொடுத்துள்ளார்கள். புதிதாக இதை பயன் படுத்தும்போது மிகவும் சிரமபடவேண்டியுள்ளது. இதற்கு காரணம் நமக்கு சரியான பயிற்சி இல்லாமைதான். நம் பழக்கத்தில் இல்லாத வார்த்தைகள் புதிதாக படுகின்றது.
பொதுவாக தொழில் இடங்களில் ஆங்கில கலப்பு அதிகம் உள்ளது. இயந்திர தொழிற்சாலைகளில் ஆங்கில வார்த்தைகள்தான் பயன்பாட்டில் உள்ளது. உதாரணமாக டூலை எடுத்துவா, டூலை க்ரைண்டிங் பன்னு, மெசினை ஆன் பன்னு போன்றே பேசி வருகின்றோம். இதற்கான காரணங்கள் என்னை பொறுத்தவரை ஆரம்ப காலங்களில் தவறவிட்ட கலைசொல் உருவாக்கம்தான். இதற்கு அரசும் அறிஞர்களும்தான் பொறுப்பு ஏற்கவேண்டும். இப்படி தவறவிட்டுவிட்டு தற்போழுது தவிற்க முடியாத நிலையிதான் நாம் உள்ளோம். எழுதும்போழுது உள்ள மனம் பேசும்பொழுது தமிழை காணமுடிவதில்லை என்பதும் கவலைக்குறியது. இன்று நாம் நினைத்தால் கூட முழுமையான தமிழை பார்க்க பல நூற்றாண்டுகள் ஆகலாம் என்றே தோண்றுகின்றது.
என்னுடன் வேலை செய்யும் மலேசியா தமிழ் நண்பர்கள் சிலர், தமிழில் தொழில் வார்தைகள் பேசும்பொழுது ஆச்சரியமாகவும் வெட்கமும் படவேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நம்மால் பேசமுடியாமல் போனது ஏன்? இவர்கள் தமிழில் "கத்தி மலுங்கி விட்டது சாணை பிடிங்கள் " என்றும் "எந்திரம் பழுதாகிவிட்டது" என்றும் "கத்தியை லாவகமாக கட்டுங்கள்" என்றும் பேசிக்கொள்வதை வாழ்த்தாமல் என்ன சொல்வது. முதலில் கேட்கும்பொது நகைப்பாக இருந்ததும் உண்மைதான் பின்னர்தான் நம்மால் இயலாமை புரிந்தது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பேச்சு தமிழ் வேறுபாடு காணமுடிகின்றது. இதுபோன்று எல்லா மொழிகளுக்கும் உண்டு, உதரணமாக ஆங்கிலமும் லண்டனில் ஒரு சாயலும் அமெரிக்காவில் ஒரு சாயலும் பேசுவார்கள். அதுபோல தமிழும் அப்படிதான் இதுவும் தவிற்க முடியாது. இதற்கு ஒரு உதாரணம் ஞாபகம் வரும். மதுரையில் வாழை தோட்டதில் வாழைகாய் பறிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பப்படுகின்றது. பின்னர் திருச்சியிலிருந்து சென்னைக்கு அனுப்பபடுகின்றது. மதுரையில் வாழை காயாக உள்ளதால் மதுரையில் வாழைப்பழத்தை "வாளப்பளம்" என்று கூறுகின்றனர். திருச்சி வரும்போது காய் பழுத்துவிடுகின்றது எனவே வாழைப்பழமாகின்றது. பின்னர் சென்னைக்கு சென்றால்
பழம் கனிந்து கூழாகி குழறிவிட்டு "வாயப்பயம்" என்ற நிலையடைகின்றது. என்று கொஞ்சம் காமடியாக சொல்வதும் சிந்தனைக்குறியது.
எப்படியோ அன்னிய மொழி ஆதிக்கத்தாலும் நம் கவனகுறைவாலும் தமிழை ட்தமிலாகவும் சிதைத்துள்ளோம். சில இடங்களில் மொழிக்கலப்பு தேவைப்பட்டாலும் பல இடங்களில் தவிற்க்கப்பட வேண்டியுள்ளது. முடிந்தவரை தவிற்ப்பதால் நாளைய சந்நதிக்கு முழுமையான தமிழை நம்மால் கொடுக்க முடியும்.
வாழிய தமிழ்! வாழிய தமிழர்!
மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்
2 comments:
வணக்கம்,
நம்முடைய பள்ளிகளில் தமிழ் தட்டச்சி ஒரு பாடமாக இருந்தாலே தமிழ் வளரும். இல்லையெனில் தமிழில் எழுத ஆங்கிலத்தைத்தான் நாடவேண்டி இருக்கும்.
செல்வராஜ்
//
செல்வராஜ் said... நம்முடைய பள்ளிகளில் தமிழ் தட்டச்சி ஒரு பாடமாக இருந்தாலே தமிழ் வளரும். இல்லையெனில் தமிழில் எழுத ஆங்கிலத்தைத்தான் நாடவேண்டி இருக்கும்.//
வணக்கம் செல்வராஜ், வருகைக்கும் கருதுரைக்கும் நன்றி! அரசு அலுவலகங்களில் தமிழ் தட்டச்சு உள்ளதே ஆச்சரியமும் பாராட்டும் கொண்டது.
Post a Comment