_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, November 30, 2008

இனிய இயந்திரா! நேற்று மும்பையில்..

இனிய இயந்திரா! நேற்று மும்பையில்..


இனிய இயந்திரா! கொடுக்கப்பட்ட கட்டளையை திரம்பட செய்தவனே! வணக்கம்!...... உனக்கு இதில் ஈடுபாடு இருக்கோ இல்லையொ? முதலில் வணக்கம் சொல்லி வைத்துக்கொள்வோம். பதிமவயதில் என்னா லாவகமாக துப்பாக்கியேந்தி போர்களம் பூண்டாய். உனக்குள் இருக்கும் மூளையின் பலத்தை எப்போதாவது அறிந்ததுண்டா? உன்னால் சுடப்பட்டவர்களின் இரத்தமும் சதையும் உனக்குள் இருக்கின்றதை அறிந்ததுண்டா?


உன்னை ஏவியவன் யாரென்பதும் உன்னால் புரிந்துக்கொள்ள முடியுமா? கொடுக்கப்பட்ட கட்டளையை தவிற உனக்காக எதையாவது புரிந்துக் கொண்டதுண்டா? நீ கொன்று குவித்த மானிடத்தின் இரத்த நாளங்களின் துடிப்பில் என்ன உணர்ந்தாய்?..... உனக்காக நாங்கள் வருந்துகின்றோம்.. ஏவியவன் எங்கோ இருக்க, அம்பை என்ன செய்யமுடியும்?


உன்னில் உள்ள வேகம் எங்களிடத்தில் இல்லை என்பதை ஒப்புகொள்கின்றோம். அதற்காக நாங்கள் ஏமாந்துவிட மாட்டோம். எத்தனை உயிர்களை பறித்தாலும் உன்னால் உன்னை புரிந்துகொள்ளமுடிந்ததா? சலவை செய்த முளையில் நீமட்டும் கரைபடிந்துள்ளாய். அதனால்தான் உயிருடன் பிடிப்பட்டாய். கவலைப்படதே நீ உன்னை புரிந்துக்கொள்ளும்வரை என்தேசம் ஒன்றும் செய்யாது.


உன்னால் பலியான அதிகாரிகளின் பிள்ளைகள் உன்னைபோல ஆதரவின்றி இருப்பார்கள் என்று உனக்கு புரிந்திருக்க முடியாது. நண்பர்களின் உடல் சிதைந்துபோனதை பார்த்த பிறகுதான் நீ வாழவேண்டும் என்பதும் உணர்ந்திருப்பாய். உன்போராட்டத்தின் நோக்கமாவது உனக்கு உண்டா? தேசமே உன்னை பார்க்க வைத்த அறிவை உனக்காக செலவு செய்ததுண்டா?


உன்னை சீர்திருத்த கல்விக் கொடுத்து மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதுதான் என் தேசத்தின் செயல்பாடு. ஆனால் நீ அதை எதிர்பாக்காதே? மனித உயிரை எடுக்க யாருக்கும் உரிமையில்லைதான்... ஆனால் உயிரின் முக்கியம் உன்னை போன்றவருக்கு புரிதல் வரவேண்டும். அந்த வேதியல் மாற்றம் உன் போன்ற மூளை சலவை பெற்றவர்களுக்கு புரியவேண்டும் என்பதும் என்போன்ற இந்தியர்களின் ஆசையும்.


நீ ஏற்ற பணியின் பொருப்புணர்வு என் தேச அரசியல்வாதிகளுக்கு வந்திருந்தால், நீ வளர்ந்திருக்கவே முடியாது? நீ உணர்வற்று செய்யும் கடமையை நாங்கள் உணர்வோடு மதம், சாதி, இனம் பேயரால் புதைத்துவிட்டோம். அதனால்தான் இன்னும் நீ உயிரோடு இருக்கின்றாய்... உன்னால் ஒரு உதவிமட்டும் நீ இறக்கும் முன் உன் பொருப்புணர்வை, கடமையின் வேகத்தை என் தேசத்திற்கு விட்டு செல்.


உன்னை பார்த்த பிறகாவது என்தேச மகன்களுக்கு கடமையின் உணர்வை புரிந்திருக்கும். உன் வேகம் பார்த்த பிறகாவது உளவுதுறையின் மெத்தன போக்கும், அரசின் அலச்சியமும் புரிந்திருக்கும். நாங்கள் திறமையற்றவர்கள் இல்லை, திறமையை விற்றவர்கள்.


உன்னை நம்பி யாரும் இருக்க மாட்டார்கள். உன்னை பிடித்த என் தேச வீரர்களுக்கு குடும்பம் உள்ளது. அதையும் பொருள்படுத்தாது உன்னை வென்றாகளே அவர்களுக்கு முன் நீ ஒரு தூசிதான். எங்களின் கவனகுறைவால் நீ முளைத்துவிட்டாய்,.... இனி வரும் காலம்...........இந்திய தேசமே நீயே சொல்!

10 comments:

CorTexT (Old) said...

கொடிய இயந்திரா என்பது பொருத்தமாக இருக்கும். புரையோடிப்போன இயந்திரா என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

/// RajK said...
கொடிய இயந்திரா என்பது பொருத்தமாக இருக்கும். புரையோடிப்போன இயந்திரா என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்.//

கருத்துக்கு நன்றி! இயந்திரா என்றாலே இதயமில்லாதவன் என்று பொருள்தானே...

ஆட்காட்டி said...

வலியில்லாமல் வாழ்க்கையா?

ஆ.ஞானசேகரன் said...

//ஆட்காட்டி , வலியில்லாமல் வாழ்க்கையா?//

வணக்கம் ஆல்காட்டி, கொஞ்சம் விளக்கமாக சொல்லி இருக்கலாம்..

அன்புடன் அருணா said...

இனிய இயந்திரா??????? :((
அன்புடன் அருணா

ஆ.ஞானசேகரன் said...

// அன்புடன் அருணா said...
இனிய இயந்திரா??????? :((
அன்புடன் அருணா//
வருகைக்கு நன்றி அருணா...

உமா said...

நன்று திரு ஞானசேகரன். எல்லோரையும் சிந்திக்க வைத்தது இப் படம்.

ஆ.ஞானசேகரன் said...

// உமா said...

நன்று திரு ஞானசேகரன். எல்லோரையும் சிந்திக்க வைத்தது இப் படம்.//

நன்றிங்க உமா

karthi said...

muslim saithal ineekkum
hindu saithal kasakkum.

enna bhuthida unakku

karthi said...

muslim saithal ineekkum
hindu saithal kasakkum.

enna bhuthida unakku