இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்...
செய்த பொம்மைகள் இரண்டு, பொம்மைகள் சேர்ந்து செய்த பொம்மைகளோ கோடான கோடி. இந்த பொம்மைகளுக்கு உணர்வுகளும் உறவுகளும் எக்கச்சக்கம். உறவுகளில் முதன்மை அம்மா அப்பா, அதற்கு பின்தான் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மாமி,தாத்தா, பாட்டி, மனைவி கணவன் இப்படியெல்லாம்.
இன்றய அம்மா, அப்பா நேற்றய பிள்ளைகள்; இன்றய பிள்
ளைகள் நாளைய அம்மா,அப்பா. உலகமும் உறவுகளும் சுற்றி வருவது இதேபோலதான். இதில் ஏன் என்ற கேள்விகள் அர்த்தம் கொடுக்க முடியாது. அப்பன் துப்பிய எச்சிலில் பிறந்தோம் என்றால் அதில் உணர்வுகளை மறுக்க வேண்டி வரும். யார் என்னை பெற்றெடுக்க சொன்னது? என்ற கேள்வியை யாரிடம் கேட்பது; நாளைய பெற்றொராய் நீ இருந்தால்..... இலங்கை போரில் குண்டு மழைக்குள் தன் பிஞ்சு பிள்ளைகளை தோலில் தூக்கிக்கொண்டு உயிருக்கு போராடி ஓடி வரும் காட்சியை பார்த்தபிறகு, யார் என்னை பெற்றெடுக்க சொன்னது என்ற கேள்வியை கேட்க யாருக்கு துணிவுள்ளது? இந்த உறவுகளில் உணர்வுகளைதான் பார்க்கமுடிகின்றது. இங்கே யாரும் யாருக்காவோ பிறந்தவர்கள் இல்லை. எல்லோரும் ஒருவர் வழி வந்தவர்கள் என்பதும் சந்தேகம் இல்லை. நமக்குள் இருக்கும் உணர்வுகள் உறவுகளால் பின்னபட்டுள்ளது என்பதும் உண்மை. இந்த உறவுகளை உருவாக்குவதுதான் கணவன் மனைவி என்ற ஒரு முக்கிய நிகழ்வு. இந்த கணவன் மனைவி உறவுக்கு நம்மை நாம் தயார்படுத்த வேண்டும். இந்த உறவுகளில் காமதிற்கு அப்பால் உணர்வும் சார்ந்துள்ளது என்பதை புரியப் படுத்துவது யார்? இதற்கு ஒரு ஆலோசனை(கவுன்சிலிங்) தேவைப்படுகின்றது. கிருஸ்துவ மதத்தில் திருமணத்திற்கு ஆலோசனை நடத்தப்படுகின்றது பாராட்டப் படவேண்டிய விடயம்.
பரிணாம வளர்ச்சியில் நாம் பல மாற்றங்களை கண்டுள்ளோம். முன்பெல்லாம் கணவன் மனைவியிடையே உள்ள சண்டைகள் தெருமுனைக்கே வரும், நான் என் சிறுவயதில் பல பார்த்துள்ளேன். இன்று அப்படியில்லை என்றாலும் பல உறவுகள் கோர்ட்களில் முறிக்கப்படுகின்றது. இதற்கும் கவுன்சிலிங் தேவைப்படுகின்றதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். இதற்கு தன்னைப் பற்றியும் தன் உறவுகளைப் பற்றியும் சரியாக புரிதல் இல்லாததுதான் என்பதும் என் எண்ணங்கள். ஒரு பெண் திருமணதிற்கு பின் கணவனை சார்ந்து வாழத் தொடங்குகின்றாள், என்பதுதான் இன்றைய வழக்கம். இதில் பெற்றோரின் சுயநல தலையிடால்தான் இந்த பிரச்சனைக்கு வேராகின்றது. என்னை பொருத்தவரை தன் மகன் அல்லது தன் மகள் திருமணத்திற்கு முன் இவர்களுக்கும் கவுன்சிலிங் (ஆலோசணை) வழங்கப்பட வேண்டும் என்பது முக்கியம். திருமணதிற்கு பின் தன் மகனிடம் அல்லது தன் மகளிடம் எப்படி புரிதல் வேண்டும் என்பதை ஆலோசனை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். குறிப்பாக இவர்களாகவே ஆலோசனை பெறுவதும் நல்லதே......
பெற்றொர்களிடம் முக்கிய குறைகளாக தன் மகளுக்கும், தன் மருமகளுக்கும் உள்ள புரிதலின் குறைகள்தான் ஒட்டுமொத்த குடும்ப பிரச்சனைக்கு காரணங்களாக இருக்கும். இதற்கு பாரம்பரிய இடைவெளி என்று சொல்லிவிட முடியாது. காலத்தின் மாறங்களாலும் நாகரிக வளர்ச்சிகாளாலும் உடைகள் பழக்கவழக்கங்கள் இளையத் தலைமுறையினரிடம் மாற்றத்தை காணமுடியும். இதை மகள்களிடமும் மருமகளிடமும் காணமுடியும். ஒரு பொற்றோர் தன் மகளின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏன் மருமகளின் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை? இந்த மனோபோக்குதான் இவர்களின் குறைபாடுகளின் அடிநாதம். இதை ஒட்டு மொத்தமாக பாரம்பரிய இடைவெளி என்று சொல்லிவிட முடியாது. மகன் மீது உள்ள அலாதியான பாசம் நமக்கு கிடைக்காமல் போகுமோ என்ற பயம் இப்படியாக நடக்க வாய்ப்பழிக்கின்றது. இதை மகனாலோ மருமகளாலோ புரிய வைப்பது இன்று வாழும் வாழ்க்கை முறையில் கடினமான காரியம். எனவேதான் தன் மகன் மகள் திருமணத்திற்கு முன் தானாகவே சென்று ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றேன்....
நான் மருத்துவமனையில் என் நண்பருக்காக காத்திருந்தேன், அங்கு இருக்கும் செவிலியர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது எல்லாம் வயதான முதியோர்களை மருமகன்கள்தான் அழைத்து வருகின்றனர். ஏன் மகன்கள் அழைத்து வருவதில்லை என்று கேலியுடன் பேசிக்கொண்டார்கள். இவர்களின் கனிப்பும் ஏற்றுகொள்ள வேண்டிய ஒன்று. நான் இதை ஒரு பரினாம மாற்றங்களாக பார்க்கிறேன். இந்த மகன் வேறு ஒருவருக்கு மருமகனாக இருக்கின்றான் என்பதையும் மறந்துவிட கூடாது. என் தந்தைய காலகட்டத்தில் மனைவியானவள் குடும்ப அமைதிக்காக என்ன நேர்ந்தாலும் அமைதி காப்பவளாகவும், கணவன் எப்படி அடித்தாலும் ஏற்றுக்கொண்டு தன் பிள்ளைகளுக்காக சகிக்கும் குணத்துடன் வாழ்ந்ததை என்னால் பார்க்க முடிந்தது. இன்றைய கல்வியறிவு அப்படி ஒரு நிலையைக் ஆண்களுக்கு கொடுக்கவில்லை என்பது பாராட்டக்கூடிய விடயம். இதை பெண்கள் தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்வார்கலோ என்ற எண்ணங்களும் இருக்கத்தான் செய்கின்றது. அப்படி பெண்கள் தனக்கு சாதகமாக எடுத்து கொள்வார்களேயாயின் நாளைய தினங்களில் ஆண் அடிமைப்பற்றி பேச வேண்டி வரலாம் என்பதும் உண்மை.
சிறுவனாக இருக்கும் பொழுது பல வீடுகளில் பார்த்துள்ளேன். அப்பாக்கள் வேலைக்கு சென்று வருவார்கள். சமைக்கும் பலார்த்தங்களை அப்பாவிற்காக தனியாக எடுத்து வைப்பார்கள். இது அரசாங்க வேலையில் இருக்கும் அப்பாக்கள் வீட்டில் அதிகம் பார்த்துள்ளேன். இன்னும் தனி சிறப்பாக முட்டை, பால் என்று தனிக் கவனிப்பு அப்பாக்களுக்கு இருக்கும். இதை பிள்ளைகளும் பெரிப்படுத்திக் கொள்வதில்லை. நாம் அப்பா ஆனால் நமக்கும் கிடைக்கும் என்ற எண்ணம் இருந்திருக்குமோ என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இன்றய பாரம்பரிய மாற்றங்களில் பிள்ளைக்கு பின் தான் மீதம் உள்ளதை பெற்றோர்கள் எடுத்துக்கொள்கின்றனர். (அப்படியெல்லாம் இல்லை என்ற வாதம் வரலாம் நான் எதையும் குறையாக சொல்லவில்லை மாற்றங்களை சொல்கின்றேன்) பிள்ளையின் பெயர் என்ன? பிள்ளை என்ன படிக்கின்றார்கள் என்று தெரியாமல் இருக்கும் பெற்றோர்கள் கூட இருந்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இன்றைய காலம் அப்படியில்லை கல்வியால் பரினாம வளர்ச்சியால் மாற்றங்கள் இருக்கின்றது. இதை நேற்றய அம்மா அப்பாக்கள புரிந்துக்கொள்ளதான் வேண்டும். எனவேதான் கவுன்சிலிங் வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கின்றேன்.
ஒவ்வொரு உறவுகளின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு வாழ்ந்தால் நாம் மகிழ்வதுடன் நம்மை சாந்தவர்களும், நம் உறவுகளும் மகிழ்வுடன் இருப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இப்படிப்பட்ட புரிதல் வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதிவு... நேரமும் எழுதுவதற்கு ஏற்ற உந்துதலும் வந்தால் மேலும் உணர்வுகளின் பகிர்வுகளைப்பற்றி எழுதுகின்றேன்...
அன்புடன்..
ஆ.ஞானசேகரன்.