மனித சமுகத்தில் அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு வாழ்கைத் துணையை தேர்ந்தெடுக்கப்படுவது வெவ்வேறு முறையாக இருந்தாலும், எல்லோருடைய நோக்கம் ஒன்றாகத்தான் இருக்கமுடியும். இந்திய சமுகத்தில் பொதுவாக பெற்றோர்கள் தேடி வரண் அமைப்பதுதான் இன்றுவரை முறையாக உள்ளது. மேல்நாட்டினர் அவர்களாகவே தன் துணையை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் சில நேரங்களில் பெற்றோர்களிடம் ஆலோசித்தலும் இருக்கும்.
இதன் முதல் பகுதியை படிக்க இங்கே சுட்டவும் பெண்ணொன்று கண்டேன்...
ஆண்பாவம் திரைப்படத்தில் பாண்டியராஜன் சீதாவை பெண்பார்க்க செல்வார். அங்கே சில பெருசுகள் பெண் மாப்பிள்ளையைவிட உயரம் குறைவாக இருக்குமோ? என்று சொல்லி உயரத்தை சரிபார்க்க முதலில் பாண்டியராஜனை சுவரின் பக்கமாக நின்று அவரின் உயரத்தை ஒரு கோடு போடுவார்கள். பின்னர் சீத்தாவை அழைத்து அந்த கோடு இருக்கும் இடத்தில் நிற்க சொல்லுவார்கள், சீத்தாவோ தன்னுடைய உயரம் குறைவாக இருக்குமோ என்று எண்ணி காலை சற்று உந்தி நிற்பார். இதை கவனித்த பாண்டியராஜன் சீத்தாவையே திருமணம் முடிப்பார்... ( மணமகளின் மன ஒப்புதலுடன் மணமுடிந்தால் வாழ்கை சுகமாகத்தான் இருக்கும் என்பதும் உண்மைதானே).
பெண்ணை எனக்கு பிடிக்கவில்லை என்ற போக்கு ஆண்களுக்குத்தான் இருக்கும் என்று எண்ணம் வேண்டாம். பல நேரங்களில் பெண்களும் ஆண்களை பிடிக்க வில்லை என்று சொல்வதும் உண்டு. ஆனால் இதை பொதுவாக பெரிதுப் படுத்துவதில்லை. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் உயரம் சற்றே குறைவாக இருப்பார். எனவே அவர் தன்னைவிட உயரமான பெண்ணை மணமுடிக்க வேண்டும் என்பது அவரின் ஆசை. உயரமான பெண்ணை திருமணம் செய்தால் தனக்கு பிறக்கும் குழந்தை தன்னை விட உயரமாக இருக்கும் என்பதுதான் இவர் கணக்கு. பல பெண்கள் இவருக்கு பிடித்திருந்தும், இவர் அவர்களால் நிராகரிக்கப்பட்டார். கடைசியில் இவரை விரும்பிய பெண்ணை மணந்தார். அவர் மனைவி இவரைவிட உயரம் குறைவுதான், இருப்பினும் இவர்களின் பிள்ளைகள் நல்ல உயரமாக இருந்தனர்.
மேலை நாடுகளில் திருமணத்திற்கு முன் இவள் என் தோழி என்றும், இவன் என் தோழன் என்றும் பழகிக்கொள்கின்றார்கள். இப்படி இவர்கள் பழகியபின் பிடிந்திருந்தால் திருமணம் செய்துக்கொள்கின்றனர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இப்படி இவர்கள் பழகி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக்கொண்டு திருமணதிற்கு பின் விலகுவது ஏன் என்று புரியவில்லை. என்னுடன் வேலைச் செய்யும் சீனர் ஒருவன் அன்று ஏதோ இழந்துவிட்டதுபோல இருந்தான். அவனிடன் நான் ஏன் இன்று சோகமான முகத்தில் இருக்கின்றாய்? என்றதும், அவன் அழத்தொடங்கிவிட்டான். நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை என்றே சொல்லலாம். அவனின் பெண்த் தோழி மேல் படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்கின்றாள், அவள் செல்வதற்கு முன் இவனிடம் "நீ என்னை மறந்துவிடு நான் மேல்ப் படிப்புக்கு செல்கின்றேன் அதனால் நமக்கு பொருத்தம் வராது என்று சொல்லி நீ வேறு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொள்" என்றாளாம். அதை அவனால் தாங்க முடியாமல்தான் அழுதேவிட்டான். நான் அவனிடம் உனக்கு சிறுவயதுதான் எனவே நீயும் வேலைசெய்துகொண்டே படி உனக்கு இவளைவிட நல்ல பெண் கிடைப்பாள் என்றேன். அவனும் படித்தான் தற்பொழுது நல்ல வேலையில் இருக்கின்றான்.
எதோ ஒன்றை எதிர்பார்த்து துணை தேடுவதில் பல விடயங்கள் பார்த்தோம். (என்னைப் பற்றி இங்கு சொல்லவில்லை பின் ஒருநாளில் சொல்கின்றேன். )எப்படி இருந்தாலும் பெண்பார்த்தல் என்பது சமுதாயத்தில் எதார்தமானதா? தேவையான ஒன்றா? இவற்றை சரியாக புரிந்துக் கொள்கின்றோமா? என சிந்திக்க ஒரு சில துளி நேரங்கள் அவ்வளவுதான். இதில் யார் மனதையும் புண்படுத்த சொல்லப்படவில்லை. ஒரு ஆண் பெண்ணை பிடிக்கவில்லை என்றாலும், ஒரு பெண் ஆணை பிடிக்கவில்லை என்றாலும் மனதில் ஒருவித நெருடல் இருக்கதான் செய்யும். இதில் எந்த அளவிற்கு எதார்த்தமாக நம்மால் பார்க்கமுடிகின்றது. ஒரு பிடிக்காத மாப்பிள்ளையானாலும் அவன் அவளை பிடிக்கவில்லை என்று சொன்னால் அவளுக்கு ஒரு நெருடல் வருவதும் உண்மைதான். அது ஆணுக்கும் பொருந்தும். இதில் உள்ள ஞாயமான உணர்வை புரிந்துகொண்டால் போதும்......
எங்கிருந்தோ வானொலியில் பாடல் ஒலிக்கின்றது
"நீங்கள் கேட்க இருப்பது இனிய தென்றலின் திரைப்பட பாடல்கள்..
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்........"
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
41 comments:
இடுகைக்கு இடுகை மெருகேறி வருகிறது... தொடருங்கள்!
//பழமைபேசி said...
இடுகைக்கு இடுகை மெருகேறி வருகிறது... தொடருங்கள்!//
மிக்க நன்றி நண்பா
//மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்........//
கண்ணதாசனுக்கு இப்படி நீங்க பதிவு போடூவீங்கன்னு தெரிஞ்சே மனுசன் அழகாப் பாடி வச்சிட்டுப் போயிட்டார்.
// ராஜ நடராஜன் said...
//மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்........//
கண்ணதாசனுக்கு இப்படி நீங்க பதிவு போடூவீங்கன்னு தெரிஞ்சே மனுசன் அழகாப் பாடி வச்சிட்டுப் போயிட்டார்.//
நன்றி ராஜ நடராஜன் சார்...
மனைவி அமைவதெல்லாம்...
- திருமண சடங்கை கொண்ட சமூகம்
- அதை செய்ய சொல்லும் குடும்பம்
- அதை செய்ய நினைக்கும் எண்ணம்
- காலநேர சுற்றுபுர காரணிகள்
- மதம், சாதி, இனம், மொழி
- ஜாதகம் மற்றும் இதரவகைகள்
- பெற்றோர் மற்றும் சுற்றத்தார் தொடர்புகள்
- படிப்பு, வேலை, பணம், பண்பு, அழகு
- பரிமாண வளர்ச்சி சார்ந்த கவர்ச்சி
- சமுக பழக்கம் (fashion) சார்ந்த கவர்ச்சி
- (இப்படி பல பல காரணங்கள்)
இது தான் கமலின் தசவதாரம் படத்தின் கரு: Chain Reactions and Butterfly Effects. இதையெல்லாம் சரிபார்த்து அதை நமக்கு தெளிபடுத்தும் அளவுக்கு நம் மூளை இல்லை. அதற்கு பதில் நம் மூளை கண்டறிந்த குறுக்கு வழி காரணம், இறைவன்! இதற்கு மனதை மயக்கி மதியை குழைக்கும் ஒரு அழகாக பாடல்! எனக்கு பிடித்த வரி, காதலன் படத்தில் வரும் 'பேட்டை ராப்' பாடலில் - "கடச்சதை வச்சுகோடா அவ்வளவு தான்". :-)
ஒரு காலத்தில் சிறிய வயதிலேயே திருமணம் செய்ய பட்டது. இன்று அப்படி இல்லை. அதனால், பெற்றோர்களின் பெண்பார்த்தலின் "கண்டிப்பு" தேவையற்றது. சில பெரிசுகளுக்கு, பழைய பஞ்சாங்கமெல்லாம் பெரிய Rocket Science-ன்னு நினைப்பு - இன்றைய தலைமுறைக்கு அதெல்லாம் புரிவதில்லை என்ற குறைபாடு. முதலில் வாழ்கையை இப்படி தான் வாழ வேண்டும் என்றில்லாமல், அதை எப்படியும் வாழலாம் (யாருக்கும் தீங்கின்றி தான்) என்ற பக்குவம் சமூகத்திற்கு வர வேண்டும். "ஒரே ஒரு வெற்றி மட்டும் தான் உண்டு - அது உன் வாழ்வை உன் வழியிலே வாழ்வது!". இதைவெற்றியை யாவருக்கும் அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ?
//RajK said...
சில பெரிசுகளுக்கு, பழைய பஞ்சாங்கமெல்லாம் பெரிய Rocket Science-ன்னு நினைப்பு - இன்றைய தலைமுறைக்கு அதெல்லாம் புரிவதில்லை என்ற குறைபாடு. முதலில் வாழ்கையை இப்படி தான் வாழ வேண்டும் என்றில்லாமல், அதை எப்படியும் வாழலாம் (யாருக்கும் தீங்கின்றி தான்) என்ற பக்குவம் சமூகத்திற்கு வர வேண்டும்.//
வணக்கம் ராஜ் உங்களின் தனிப்பட்ட கருத்திற்கு நன்றி.. சமுகம் என்பது ஏதொ எங்கிருந்தோ வந்ததாக கருதவேண்டாம். ஒவ்வொரு மனிதனின் அனுபவ கூட்டு. அதில் மாற்றங்கள் தேவை என்பதை ஒப்புக்கொண்டாலும். சமுகத்திலிருந்து விலகிவிட முடியாது. அப்படி விலகிவிட்டதுபோல தெரிந்தாலும் சமுகம் உன்னை விலக்காது. நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக சமுகம் குறையாகவும் இருக்காது. மனிதனை தவிற மற்ற விலங்களுக்கும் இந்த சமுக கட்டுப்பாடு இருக்கதான் செய்ய்கின்றது. என்ன பல வேறுபாடுகள் இருக்கின்றது. தனி ஒருவனால் எதையும் சாதிக்க முடியும் என்பது ஏதொ ஒரு விதந்டாவாதம். சில அர்த்தங்கள் காலம்தான் பதிலாக இருக்கும். பல விடயங்கள் நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் சமுக அமைப்பிற்காக செய்வதும் உண்டு. அதனால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை. அதேபோல் தனிமனித கோட்பாடும் சமுகம் சார்ந்த சுயநலமாகத்தான் இருக்குமே தவிற பெரிதாக சாதனை என்று சொல்வதிற்கில்லை.....
உங்களின் தனிப்பட்ட கருத்திற்கு நன்றி..
Pennonru Kanden,nalla thalaippu,nalla karuthu.Pennpaarthal innum thodarum bcz the environment for choosing their life partner is not here,totally.Love marriages occur & the parents accept it.It is a small part.Above all,it is Manaivi amaivathellaam-iraivan koduthavaram,it is for everyone throughout the world.
// Muniappan Pakkangal said...
Pennonru Kanden,nalla thalaippu,nalla karuthu.Pennpaarthal innum thodarum bcz the environment for choosing their life partner is not here,totally.Love marriages occur & the parents accept it.It is a small part.Above all,it is Manaivi amaivathellaam-iraivan koduthavaram,it is for everyone throughout the world.//
நன்றி சார்..
//Pennpaarthal innum thodarum bcz the environment for choosing their life partner is not here,totally.Love marriages occur & the parents accept it.It is a small part//
என்னுடைய கருத்தும் இதேதான்... பெண்பார்த்தல் என்பது காலதிற்கேற்றவாறு மாறலாம் ஆனால் பெண்பார்த்தல் இருக்கும், அதன் நோக்கமும் ஒன்றாகத்தான் இருக்கும்...
நன்றி சார்...
அட, பழமையோட நண்பரா நீங்க??? வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. இடுகையும் அருமை. வாழ்த்துகள். பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கும் வாழ்த்துகள்.
//எங்கிருந்தோ வானொலியில் பாடல் ஒலிக்கின்றது
"நீங்கள் கேட்க இருப்பது இனிய தென்றலின் திரைப்பட பாடல்கள்..
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்........"//
நல்ல பதிவு...யதார்த்தமாக முடித்திருக்கிறீர்கள் ஞானசேகரன்...
// கீதா சாம்பசிவம் said...
அட, பழமையோட நண்பரா நீங்க??? வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. இடுகையும் அருமை. வாழ்த்துகள். பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கும் வாழ்த்துகள்.//
வணக்கம் கீதா சாம்பசிவம். உங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சி. மேலும் உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி நன்றி...
///புதியவன் said...
//எங்கிருந்தோ வானொலியில் பாடல் ஒலிக்கின்றது
"நீங்கள் கேட்க இருப்பது இனிய தென்றலின் திரைப்பட பாடல்கள்..
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்........"//
நல்ல பதிவு...யதார்த்தமாக முடித்திருக்கிறீர்கள் ஞானசேகரன்...///
வாங்க புதியவன்..... மிக்க நன்றி
//வணக்கம் ராஜ் உங்களின் தனிப்பட்ட கருத்திற்கு நன்றி.. சமுகம் என்பது ஏதொ எங்கிருந்தோ வந்ததாக கருதவேண்டாம். ஒவ்வொரு மனிதனின் அனுபவ கூட்டு. அதில் மாற்றங்கள் தேவை என்பதை ஒப்புக்கொண்டாலும். சமுகத்திலிருந்து விலகிவிட முடியாது. அப்படி விலகிவிட்டதுபோல தெரிந்தாலும் சமுகம் உன்னை விலக்காது. நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக சமுகம் குறையாகவும் இருக்காது. மனிதனை தவிற மற்ற விலங்களுக்கும் இந்த சமுக கட்டுப்பாடு இருக்கதான் செய்ய்கின்றது. என்ன பல வேறுபாடுகள் இருக்கின்றது. தனி ஒருவனால் எதையும் சாதிக்க முடியும் என்பது ஏதொ ஒரு விதந்டாவாதம். சில அர்த்தங்கள் காலம்தான் பதிலாக இருக்கும். பல விடயங்கள் நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் சமுக அமைப்பிற்காக செய்வதும் உண்டு. அதனால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை. அதேபோல் தனிமனித கோட்பாடும் சமுகம் சார்ந்த சுயநலமாகத்தான் இருக்குமே தவிற பெரிதாக சாதனை என்று சொல்வதிற்கில்லை.....
//
என் தனிபட்ட கருத்துக்கு, உங்கள் பொதுவான கருத்துக்கு நன்றி; நீங்கள் ஒருவர் சொன்னால் 100 பேர் சொன்னது போல் தான். :-) நான் ஒன்றும் தனிமனித கோட்பாட்டை சொல்ல வில்லை...நீங்கள் சொல்வதெல்லாம் சமூதாயத்திற்கு முற்றிலும் உகந்ததும் இல்லை. இரண்டில் நல்லது கெட்டது இணைந்தே உள்ளது. நான் பழைய பஞ்சாங்கத்தை எதிர்க்க வரவில்லை; பிறவற்றை உங்கள் (தனி அல்ல குடும்ப) சுயநலனுக்காக வெட்டியாக தடுக்காதீர்கள் என்கின்றேன். அது குழந்தைகளை பெற்று போடும் இயந்திரமான சமுக அமைப்பிலிருந்து, இயற்கை சமன்நிலை காண ஒரு நோக்கம். அது சேரிகளையும், விபச்சாரிகளாக பிறக்கும் குழந்தைகளையும் களையும் ஒரு சமூகவியல். குயிலுக்கு யாரும் பாட சொல்லி தர தேவையில்லை. விலங்கள் எவையும் தங்களுக்குள் கட்டுபாடெல்லாம் போட்டுக் கொள்ளவதில்லை - இயற்கை செய்யும் சமன்பாடே அதன் கட்டுபாடு.
தனிமனிதர்கள் கலப்பே பொது; அது ஒரே ஒரு மாதிரியாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது தான் இயற்கைக்கு (diversity) எதிரானது. இதில் தான் கருத்து வேறுபாடு. சமூக மாற்றம் தனிமனித சிந்தனையிலிருந்தே பிறக்கிறது. அதன் பக்குவத்தையும் தனிமனிதனிலிருந்தே ஆரம்பிப்போம்.
அப்புறமா வரேன்.
RajK said... //குயிலுக்கு யாரும் பாட சொல்லி தர தேவையில்லை. விலங்கள் எவையும் தங்களுக்குள் கட்டுபாடெல்லாம் போட்டுக் கொள்ளவதில்லை - இயற்கை செய்யும் சமன்பாடே அதன் கட்டுபாடு.//
ம்ம்ம்ம்...நம்ம தலைப்பு வெறுபக்கம் போகின்றது போல இருக்கு.. பெண்பார்த்தல்தான் நம்முடைய தலைப்பு.. இது இயற்கை விதிக்கு அப்பார்பட்டதாக எனக்கு தெரியவில்லை....
//ஆ.முத்துராமலிங்கம் said...
அப்புறமா வரேன்.//
வாங்க முத்துராமலிங்கம்...
ரொம்ப நல்ல அலசல்ங்க ஆ, ஞானசேகரன்.
நமக்கு இன்னும் பெண்பார்க்கும் வைபவம் நடக்கவில்லை. தங்கைக்கு ஓரிரு வருடங்களில் நிகழும். அப்போது உங்கள் எழுத்துக்களின் தாக்கம் கைகொடுக்கும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வது போலத்தான்... மனப்பொருத்தமே முக்கியம்... ஆனால் ஒருமுறை பெண் பார்த்துவிடுவதால் இரு மனமும் ஒத்துப் போகும் என்று நம்பமுடியாதல்லவா.
பெண் பார்க்கும் பொழுது ஓகே சொல்லுவது முகம் பார்த்தா? அகம் பார்த்தா?/ முகமெனில் ஒரு நொடி போதும். அகமெனில்???
விருப்பமில்லாத கல்யாணம் விருப்பத்திற்காக செய்யப்படுகிறதோ என்னவோ???
ம்ம்ம்.... பார்ப்போம்ம் என்ன நடக்கிறது என்று
//ஆதவா said...
ரொம்ப நல்ல அலசல்ங்க ஆ, ஞானசேகரன்.
நமக்கு இன்னும் பெண்பார்க்கும் வைபவம் நடக்கவில்லை. தங்கைக்கு ஓரிரு வருடங்களில் நிகழும். அப்போது உங்கள் எழுத்துக்களின் தாக்கம் கைகொடுக்கும் என்று நினைக்கிறேன்.//
நல்லது ஆதவா.. விரைவில் நல்லது நடக்க வாழ்த்துகள்...
//நீங்கள் சொல்வது போலத்தான்... மனப்பொருத்தமே முக்கியம்... ஆனால் ஒருமுறை பெண் பார்த்துவிடுவதால் இரு மனமும் ஒத்துப் போகும் என்று நம்பமுடியாதல்லவா. //
ஒருமுறை பார்த்துவிடுவதால்.. மனம் முழுமை அடைவதில்லை அதன் பிறகு வாழும் வாழ்கையில்தான் முழுமை அடைய முடியும்.
//பெண் பார்க்கும் பொழுது ஓகே சொல்லுவது முகம் பார்த்தா? அகம் பார்த்தா?/ முகமெனில் ஒரு நொடி போதும். அகமெனில்???///
முகத்தில் அகம் பார்த்து என்றே வைத்துக்கொள்வோமே,... பெண்பார்த்தல் என்பது வாழ்வின் வாசல்தான் அதன்பிறகு வாழும் வாழ்க்கையில்தான் எல்லாமே.. எல்லாம் இன்பமாக அமைந்துவிட்டால் வெறு ஒன்றும் இல்லை வாழ்வில்!.... நல்ல வரண் அமைய வாழ்த்துகள் ஆதவா...
மீண்டும் நீண்ட அலசல்.
//இவற்றை சரியாக புரிந்துக் கொள்கின்றோமா? என சிந்திக்க ஒரு சில துளி நேரங்கள் அவ்வளவுதான்//
இதை நல்ல விளக்கத்தோடு சொல்லியிருக்கீங்க..
//பெண்ணை எனக்கு பிடிக்கவில்லை என்ற போக்கு ஆண்களுக்குத்தான் இருக்கும் என்று எண்ணம் வேண்டாம். பல நேரங்களில் பெண்களும் ஆண்களை பிடிக்க வில்லை என்று சொல்வதும் உண்டு//
சரிதான்.
// இதில் உள்ள ஞாயமான உணர்வை புரிந்துகொண்டால் போதும்......//
'புரிதல்' இது தாங்க வேண்டும் எல்லோரிடத்திலும். இது ஒன்று இருந்தால் போதும் எல்லாமே சுபம்!
மேலும் எனக்கு சின்ன கேளவி எழுகின்றது...
மேலை நாட்டின் காலாச்சாரம் சிலது பிடித்தாலும் பலது பிடிக்காது அதில் ஒன்று இந்த குடும்ப முறை!
அது நம் நாட்டில் கலாச்சாரப் பிணைப்போடு போற்றப் படுகிறது
நிறைய கட்டுகள் இருந்தாலும் அதன் தனித்துவம் நம்மை உயர்த்தவே செய்கிறது தாழ்த்தவில்லை.
அவ்வகையே இந்த பெண்பார்த்தலும்.
இதில் பெண்பாத்தல் என்பது குணநலன்களை மட்டும் பார்பதில்லை
அதி முக்கியமாக ஜாதகம் மற்றும் பொருத்தம். இத்துதான் எனக்கு உறுத்துகின்றது.. இதுதான் இங்கு முன்னிலையும் பெருகின்றது.
தப்பில்லை பெரியவர்கள் திருப்திக்காக பார்த்துக் கொள்ளட்டும் ஆனால் ஒரு பையனுக்கோ பெண்ணிற்கோ மனம் பிடித்திருந்தாலும் இந்த ஜாதகப் பொருத்தமில்லை என்பதால் மணம் தள்ளி போகின்றது வயது கடந்த பின் அவசரத்தில் பொருத்தம் மட்டுமே ஓரளவு நெருங்கி இருந்து விட்டாள் அதன் பின் அவர்களுக்கு மனம் பிடித்திருகின்றதா என்று எவரும் கேட்பதில்லை.
பெண்ணோ பையனோ குடும்ப சூழல் பொருத்து தனக்கும் சம்மதம் என்று சொல்வதே மிகுதி என்று நினைக்கின்றேன்.
நீங்க என்ன நினைக்கின்றீர்கள் ஞானசேகரன்.
நம்ம ஊருக் கலாச்சாரத்துல ஒரே ஒரே நல்ல விஷயம் என்னன்னா நண்பா.. யாருன்னே தெரியாம ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இனிமே இதுதான் நம்ம வாழ்க்கைன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து வாழறாங்க பாருங்க.. அதுதான்.. ஆனா அதுக்காக இந்த பொண்ணு பாக்குற விஷயம் கொஞ்சன் சரி இல்லாத விஷயம்தானு சொல்வேன்.. பிடிச்சுட்டா பரவாயில்லை.. ஆனா பிடிக்காம போய்ட்டா.. பையனுக்கும் பொன்னுக்கும் மன வருத்தம்தான் மிச்சம்..
//பிடிச்சுட்டா பரவாயில்லை.. ஆனா பிடிக்காம போய்ட்டா.. பையனுக்கும் பொன்னுக்கும் மன வருத்தம்தான் மிச்சம்..//
நிச்சையம் கார்த்திகைப் பாண்டியன் இதை நான் கண்கூடா பார்த்தவன் என் நண்பர் ஒருவருக்கு இப்படிதான் நேர்ந்து விட்டது. அவரை நினைத்தாலே வருத்தம் கொள்ளவைக்கின்றது
//பெண்ணை எனக்கு பிடிக்கவில்லை என்ற போக்கு ஆண்களுக்குத்தான் இருக்கும் என்று எண்ணம் வேண்டாம். பல நேரங்களில் பெண்களும் ஆண்களை பிடிக்க வில்லை என்று சொல்வதும் உண்டு//
பல நேரங்களில் பெண்களை யாரும் அந்த பையனை பிடித்திருக்கிறதா என்று கேட்பது இல்லையே?
ஆதவா said.
//நமக்கு இன்னும் பெண்பார்க்கும் வைபவம் நடக்கவில்லை.//
இது எல்லாம் கார்த்திகைப் பாண்டியன் போன்றவர்களுக்கு எழுதபட்ட பதிவு.அமெரிக்கா முதல் ஆவி உலகம் வரை சென்று காதலிப்பவர்களுக்கு இல்லை
//ஆ.முத்துராமலிங்கம் said...
மீண்டும் நீண்ட அலசல்.//
நன்றி நண்பா,
//இதில் பெண்பாத்தல் என்பது குணநலன்களை மட்டும் பார்பதில்லை
அதி முக்கியமாக ஜாதகம் மற்றும் பொருத்தம். இத்துதான் எனக்கு உறுத்துகின்றது.. இதுதான் இங்கு முன்னிலையும் பெருகின்றது.
தப்பில்லை பெரியவர்கள் திருப்திக்காக பார்த்துக் கொள்ளட்டும் ஆனால் ஒரு பையனுக்கோ பெண்ணிற்கோ மனம் பிடித்திருந்தாலும் இந்த ஜாதகப் பொருத்தமில்லை என்பதால் மணம் தள்ளி போகின்றது //
இதில் எனக்கும் சம்மதம் இல்லை, சாதகம் பார்த்து செய்த எத்தனையோ ஜோடிகள் பிரிந்துள்ளது. அதேபோல் ஏதோ ஒரு விபத்தில் இறந்துவிடுவதும் உண்டு... எனக்கு இதில் உடன்பாடு இல்லை... பார்க்கவில்லை என்றால் பிரச்சனையில்லை பார்த்துவிட்டு பொருத்தம் இல்லை என்று சொல்லிய பின் மனசுக்கு சங்கடங்கள் பல, என்னை பொருத்து நான் பார்க்கவில்லை....
//அவசரத்தில் பொருத்தம் மட்டுமே ஓரளவு நெருங்கி இருந்து விட்டாள் அதன் பின் அவர்களுக்கு மனம் பிடித்திருகின்றதா என்று எவரும் கேட்பதில்லை.
பெண்ணோ பையனோ குடும்ப சூழல் பொருத்து தனக்கும் சம்மதம் என்று சொல்வதே மிகுதி என்று நினைக்கின்றேன்.
நீங்க என்ன நினைக்கின்றீர்கள் //
எனக்கு சாதக பொருத்தம் பற்றி தெரியாது நண்பா. ஏதோ குடுப்ப சூழல் காரணமாக சம்மதித்து பின் ஒருவரை ஒருவர் புரிந்து காதலித்தால் நல்லதுதானே.. நான் கூறிய உயரம் குறைவான நண்பரும் கடைசியில் ஏதோ ஒரு காரணதிற்காக மணம்முடித்து இன்று மகிழ்வுடன் இல்லையா? அதைவிட பிடிந்திருந்து மணம் முடிந்த பின் மணம் முறிவுக்கு செல்வது கேவலம்தானே... இதே போல்தான் பல காதல் திருமணம் முறிவில் போய்விடுகின்றது.
நல்ல கருத்துரைக்கு நன்றி நண்பா..
// கார்த்திகைப் பாண்டியன் said...
நம்ம ஊருக் கலாச்சாரத்துல ஒரே ஒரே நல்ல விஷயம் என்னன்னா நண்பா.. யாருன்னே தெரியாம ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இனிமே இதுதான் நம்ம வாழ்க்கைன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து வாழறாங்க பாருங்க.. அதுதான்.. ஆனா அதுக்காக இந்த பொண்ணு பாக்குற விஷயம் கொஞ்சன் சரி இல்லாத விஷயம்தானு சொல்வேன்.. பிடிச்சுட்டா பரவாயில்லை.. ஆனா பிடிக்காம போய்ட்டா.. பையனுக்கும் பொன்னுக்கும் மன வருத்தம்தான் மிச்சம்..//
உங்கள் கூற்றும் சரி நண்பா.. பொண்ணு பார்க்குற விடயம்.... பொண்ணை பார்த்தால் தானே மணம் முடிக்க முடியும்.. இதில் ஏமாற்றம் ஒரு நெருடல்தான் ஆனால் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். ஒரு எதார்த்த போக்குடன் அனுகவும்.. இதன் முதல் பகுதியில் கூறியுள்ளேன் நண்பா... மிக்க நன்றி.. நல்ல வரண் அமைந்து எல்லா நலன்களையும் பெற வாழ்த்துகள்.... விரைவில் எதிர்ப்பார்க்கும் நண்பன் ஆ.ஞானசேகரன்.
/// சொல்லரசன் said...
//பெண்ணை எனக்கு பிடிக்கவில்லை என்ற போக்கு ஆண்களுக்குத்தான் இருக்கும் என்று எண்ணம் வேண்டாம். பல நேரங்களில் பெண்களும் ஆண்களை பிடிக்க வில்லை என்று சொல்வதும் உண்டு//
பல நேரங்களில் பெண்களை யாரும் அந்த பையனை பிடித்திருக்கிறதா என்று கேட்பது இல்லையே?///
பொதுவாக கேட்பார்கள் ஆனால் சபையில் கேட்பதில்லை.. பெண்கள் கூச்சப்பட்டு சொல்லமாட்டார்கள் என்பதால். பெண்ணின் அம்மா மூலம் மற்றும் தோழிகள் மூலம் கேட்பதுண்டு... >இக்காலத்தில் எல்லாம்.அப்படியில்லை நண்பா.. என் மனைவி என்னை நேரடியாகவே கேட்டாள்.. என்னை பிடித்திருக்கா? என்று.. அதன் பிறகு நான் எங்கே கேட்பது..
/// சொல்லரசன் said...
ஆதவா said.
//நமக்கு இன்னும் பெண்பார்க்கும் வைபவம் நடக்கவில்லை.//
இது எல்லாம் கார்த்திகைப் பாண்டியன் போன்றவர்களுக்கு எழுதபட்ட பதிவு.அமெரிக்கா முதல் ஆவி உலகம் வரை சென்று காதலிப்பவர்களுக்கு இல்லை///
ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்... ஒருநாள் சபைக்கு வரதானே செய்யும்.. எங்கப்பனும் பனைஏறுவான் கதை தெரியுமா நண்பா? அதை பின் ஒருநாளில் சொல்கின்றேன்..
எல்லா வீடும் போல், என் வீட்டிலும் என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புருத்தினார்கள். எனக்கு ஏற்ற பெண்ணை தேர்ந்தெடுக்க, என்னிடம் சில ஆழமான கேள்விகளையும் கேட்டார்கள் - என்ன அழகான பெண்ணா வேணுமா? படிச்ச பெண்ணா வேணுமா? நானும் அவர்களுடைய இவ்வளவு ஆராய்ந்த, தெளிந்த கேள்விகளில் அசந்தே போனேன். நான் 2 வார விடுமுறையில் இந்தியா சென்றிருந்த போது, ஒரு நாள் பெண் பார்க்க கூப்பிட்டார்கள். ஆனால் ஒரு ஃபோட்டாவை கூட யாரும் பார்க்க வில்லை. வேண்டாம் என்று முதலில் கூறிபார்த்தேன்; முடிவில் அவர்கள் திருப்திக்காக, குடும்பதுடன் சென்றோம். என் நண்பனும் கூட வந்தான். 5-6 மணி நேரம் காரில் பயணம். பெண் வீடு அடைந்தோம்; எல்லாரும் எல்லாருக்கும் புதிது. பெண்ணின் அப்பா பெரிதாக படம் போட்டுகொண்டிருந்தார். பிறகு பெண்ணின் அக்கா காபி மற்றும் சிலவற்றை சாப்பிட கொண்டு வந்தார். கடைசியாக பெண் வந்து, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு அமர்ந்தாள். ஒரு சில மணிதுளிகள் அமைதியாக இருந்தது. "ஏதாவது பெண்ணிடம் கேள்வி கேட்க வேண்டுமா?" என்று என்னை என்வீட்டார் கேட்டார்கள்; நான் வேண்டாம் என்று தலையசைத்தேன். சற்று நேரம் கழித்து, விடை பெற்றோம். யாருக்கும் பெண்ணை பிடிக்க வில்லை என்று நினைக்கின்றேன். காரில் ஏறியபிறகு, யாரும் என்னிடம் பெண்ணை பற்றி கேட்கவில்லை. வெட்டியாக ஒரு நாள் முழுவதும் பயணத்திலேயே போனாலும், எனக்கும் பெண்பார்த்த அனுபம் உண்டு என்று சொல்லி கொள்ளலாம். ஆனால் வரும்பொழுது, என் அண்ணன், தங்கை குழந்தைகளுடனும், நண்பனுடனும் அரட்டை அடித்து வந்தது மகிழ்ச்சியாக மனதில் நிற்கிறது.
பெண் பார்த்தலில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், கண்டிப்பாக பெண்பார்க்கும் முறையை நாம் மாற்ற வேண்டும்.
// RajK said...
பெண் பார்த்தலில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், கண்டிப்பாக பெண்பார்க்கும் முறையை நாம் மாற்ற வேண்டும்.//
மாற்றம் வேண்டும் என்பது எல்லோராலும் ஒத்துகொள்ளவேண்டியது, எப்படிபட்ட மாற்றம்?... எல்லோருடைய எதிர்பாப்புகளுக்கு மத்தியில் எப்படி சாமாளிப்பது என்பதில்தான் குழப்பமே. எதிர்ப்பார்ப்புகள் (open maind) பொதுக்கண்ணோட்டதில் இருந்தால் நன்றாக இருக்க வாப்பு அதிகம்.. நன்றி ராஜ்
//எதிர்ப்பார்ப்புகள் (open maind) பொதுக்கண்ணோட்டதில் இருந்தால் நன்றாக இருக்க வாப்பு அதிகம்//
இன்றைய கூவல்: எல்லாரும் எதிர்பார்ப்புகள் இன்றி பெண் பாருங்கள்! வாய்ப்பு அதிகம்!!
எதிர்பார்ப்புகள் ஒரு புறம் இருக்கட்டும். முதலில் பார்க்கும் முறையை மாற்ற வேண்டும். உதாரணமாக கோவிலில் எளிமையாக பார்த்து கொள்வது சற்று நன்றாக இருக்கிறது. மொத்ததில் பெண்ணுக்கும், ஆணுக்கும் ஏற்படும் தேவையற்ற சங்கடங்ளை குறைக்க வேண்டும். இதற்கான விவாதங்கள், awareness ஏற்படுத்த TV, Blogs and other media முன்வர வேண்டும்.
/// RajK said...
//எதிர்ப்பார்ப்புகள் (open maind) பொதுக்கண்ணோட்டதில் இருந்தால் நன்றாக இருக்க வாப்பு அதிகம்//
இன்றைய கூவல்: எல்லாரும் எதிர்பார்ப்புகள் இன்றி பெண் பாருங்கள்! வாய்ப்பு அதிகம்!!
எதிர்பார்ப்புகள் ஒரு புறம் இருக்கட்டும். முதலில் பார்க்கும் முறையை மாற்ற வேண்டும். உதாரணமாக கோவிலில் எளிமையாக பார்த்து கொள்வது சற்று நன்றாக இருக்கிறது. மொத்ததில் பெண்ணுக்கும், ஆணுக்கும் ஏற்படும் தேவையற்ற சங்கடங்ளை குறைக்க வேண்டும். இதற்கான விவாதங்கள், awareness ஏற்படுத்த TV, Blogs and other media முன்வர வேண்டும்.///
கோவிலில் பார்க்கும் பழக்கம் முன்பிருந்தே இருகின்ற பழக்கமே.. இன்றும் இருக்கதான் செய்கின்றது. இதற்காகதான் வீட்டில் இருக்கும் வயதுவந்த பெண்களை திருவிழா,தேவைகளுக்கு அழைத்து வருவார்கள்.. சில சமயம் நினைத்தால் கொஞ்சம் சங்கடமாக இருக்கும்.....
உங்கள் வலைப்பதிவுகளில் சிலவற்றை வாசித்தேன்.உங்கள் வலைப்பக்கத்தின் வடிவமைப்பு ரொம்ப அழகு.நல்ல ரசனை உள்ள இளைஞராக இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பேன்.வாழ்த்துக்கள்.
என்கள் இயக்கத்தில் ஒரு பழக்கம் உள்ளது. பையனையும் பெண்ணையும் மட்டும் யாராவது ஒரு நண்பர் வீட்டில் சந்தித்துப்பேச ஏற்பாடு செய்வோம்.அரைமணிநேரம் மனம் விட்டுப் பேசுவார்கள்.பிடித்தால் அப்புறம் வீடுகளில் சொல்லி மணம் பேசுவோம்.பிடிக்காவிட்டால் அந்த சந்திப்போடு முடித்துக்கொள்வோம்.
//ச.தமிழ்ச்செல்வன் said...
உங்கள் வலைப்பதிவுகளில் சிலவற்றை வாசித்தேன்.உங்கள் வலைப்பக்கத்தின் வடிவமைப்பு ரொம்ப அழகு.நல்ல ரசனை உள்ள இளைஞராக இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பேன்.வாழ்த்துக்கள்.
என்கள் இயக்கத்தில் ஒரு பழக்கம் உள்ளது. பையனையும் பெண்ணையும் மட்டும் யாராவது ஒரு நண்பர் வீட்டில் சந்தித்துப்பேச ஏற்பாடு செய்வோம்.அரைமணிநேரம் மனம் விட்டுப் பேசுவார்கள்.பிடித்தால் அப்புறம் வீடுகளில் சொல்லி மணம் பேசுவோம்.பிடிக்காவிட்டால் அந்த சந்திப்போடு முடித்துக்கொள்வோம்.//
வணக்கம் ஐயா, உங்களின் வருகை மிக்க மகிழ்ச்சியடைய செய்கின்றது. மேலும் பெண்பார்த்தலில் உங்கள் இயக்கத்தில் ஒரு பழக்கத்தையும் கூறிய கருத்துகளுக்கும் நன்றி! நன்றி கோடிகள்... உங்களின் பணிகளுகிடையே என்னையும் ஊக்கப்படுத்தியதற்கு பாசமிகு நன்றிகள்.. உங்கள் பக்கம் நல்ல எதார்தங்களை கொடுப்பதால் அடிக்கடி வருகின்றேன்...
இன்றைய இளைஞர்களின் பொதுவான மையப் பிரச்சினையைத் தொட்டு இருக்கிறீர்கள் ஆ.ஞானசேகரன்.இன்னும்விரிவாக விவாதிக்கப் பட வேண்டிய பொருள்.ஒரு பதிவாகவே வர வேண்டியது.நான் எழுதும் போது படித்து விட்டுச் சொல்லுங்கள்.Good selection of thought.
//ஷண்முகப்ரியன் said...
இன்றைய இளைஞர்களின் பொதுவான மையப் பிரச்சினையைத் தொட்டு இருக்கிறீர்கள் ஆ.ஞானசேகரன்.இன்னும்விரிவாக விவாதிக்கப் பட வேண்டிய பொருள்.ஒரு பதிவாகவே வர வேண்டியது.நான் எழுதும் போது படித்து விட்டுச் சொல்லுங்கள்.Good selection of thought.//
வணக்கம் சார்
உங்கள் பார்வையில் அன்புடன் விரைவில் எதிர்ப்பார்கின்றோம்...
இது பகுதி 2 மேலும் பகுதி 3 எழுதலாம் என்ற எண்ணம் உள்ளது. அதற்கு முன் இந்தியா வர இருப்பதால் இரண்டுவாரம் விடுமுறையில் செல்வாதாக உள்ளேன்... உங்களின் அன்பு ஊக்கதிற்கு நன்றி ஐயா.....
நல்ல தொடர்.
இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்
// வலசு - வேலணை said...
நல்ல தொடர்.
இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்//
தொடர வேண்டும் என்ற எண்ணம் இருக்கு நண்பா..
ரொம்ப நல்லா இருக்குங்க..இதில் பெரும்பாலனவை என் கருத்தும் கூட..
// vinoth gowtham said...
ரொம்ப நல்லா இருக்குங்க..இதில் பெரும்பாலனவை என் கருத்தும் கூட..//
மிக்க நன்றி கெளதம்
மேலை நாடுகளில் திருமணத்திற்கு முன் இவள் என் தோழி என்றும், இவன் என் தோழன் என்றும் பழகிக்கொள்கின்றார்கள். இப்படி இவர்கள் பழகியபின் பிடிந்திருந்தால் திருமணம் செய்துக்கொள்கின்றனர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இப்படி இவர்கள் பழகி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக்கொண்டு திருமணதிற்கு பின் விலகுவது ஏன் என்று புரியவில்லை. ///
மனைவி அமைவதெல்லாம் .....................................
//thevanmayam said...
மேலை நாடுகளில் திருமணத்திற்கு முன் இவள் என் தோழி என்றும், இவன் என் தோழன் என்றும் பழகிக்கொள்கின்றார்கள். இப்படி இவர்கள் பழகியபின் பிடிந்திருந்தால் திருமணம் செய்துக்கொள்கின்றனர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இப்படி இவர்கள் பழகி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக்கொண்டு திருமணதிற்கு பின் விலகுவது ஏன் என்று புரியவில்லை. ///
மனைவி அமைவதெல்லாம் .....................................//
நன்றி டாக்டர் சார்
Post a Comment