_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, April 11, 2009

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம்.....

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம்.....

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். "- திருக்குறள்

நான் படித்த பள்ளியில் வாரம் ஒரு முறை ஒரு வகுப்பு தோட்டக்கலை பாடம் இருக்கும். எனது ஆசிரியர் திரு ராமச்சந்திரன் வேளாண்மையில் பட்டம் பெற்றவர். தோட்டத்தில் எது செய்தாலும் அறிவியலும் சேர்ந்தே சொல்லுவார். மேலும் அதை செயல் விளக்கமாக சொல்லுவார். அன்று அவர் சொல்லி தந்தது தாவரங்களில் இனப் பெருக்கம் மற்றும் இனப் பெருக்கத்தின் நுண்ணியல் பற்றியும் விளக்கினார். இனப் பெருக்கத்தில் விதைத்தல், போத்து நடுதல், பதியம் இடுதல், ஒட்டுதல் பற்றி தெளிவாக கூறி சில செயல்முறைகளையும் காட்டினார். இன்னும் எனக்கு நினைவில் உள்ளது........

அன்று ஒட்டுதல் பற்றி விளக்கமும் செயல்வடிவமும் நடந்தது. உயர் ஜாதி வகை மாமரத்தையும் கொட்டை மா கன்றையும் வைத்து ஒட்டுதல். இதனால் கொட்டை மா நல்ல மா வகையாக மாற்றம் வரும் என்று கூறினார்.. நான் வீட்டுக்கு சென்றதும் இதே ஞாபகம் மற்றும் குழப்பம்.....

இப்படி ஒட்டி சேர்க்கை செய்து புதிய வகை மா உருவாக்கப் படுகின்றதே, அதே போல் ஒரே மரத்தில் மா, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு பொன்ற மரகன்றுகளை ஒட்டுதல் செய்தால் ஒரே மரத்தில் எல்லா வகையான பழங்கள் கிடைக்குமே என்ற எண்ணம் தோன்றியது. மறுநாள் காலை பள்ளிக்கு சென்றதும் முதலில் என் ஆசிரியரிடம் இதைப்பற்றி சொன்னேன். அவர் சிரித்தார் மேலும் ஒரே வாகை பயிர்களைதான் ஒட்ட முடியும் ஏனனில் அதன் செல்கள்தான் ஒட்டிக்கொள்ளும் மாற்று கன்றுகள் ஒட்டாமல் காய்ந்துவிடும் என்றார். இது எனக்கு மனப்பாதிப்பை ஏற்படுத்தவில்லை.. மாறாக மேலும் நல்ல விவரங்கள் தெரிந்தது.

கீழெ உள்ள படங்களில் உள்ள செடிகளை பார்த்ததும் எனக்கு அந்த ஞாபகம் வந்தது. அதை உங்களிடம் பகிர்வதில் ஒரு ஆணந்தம்........



மேலெயுள்ள இரண்டு படங்களை பார்க்கும்பொழுது இதன் தண்டு ஒரு தூண் போல தெரியும். ஆம் இதில் எட்டு ஒரேவகையான செடியைக் கொண்டு ஒட்டுதல் மூலம் ஒவ்வொரு செடியுடன் ஒட்டி ஒரு தூண்போன்று அழகாக வடிவம் கொடுத்துள்ளார்கள். இதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியையும் வியப்பையும் கொடுத்தது.........

மற்றொன்று கீழ் உள்ள படம் செடியின் தண்டு பாகம் பின்னல் வடிவில் இருக்கும். இதில் மூன்று ஒரே வகை செடியை சடை பின்னுவதுபோல பின்னி அழகாக வைத்துள்ளார்கள். இவற்றை பார்க்கும் பொழுது நம் இந்திய நாட்டின் விவசாயத்தை நினைக்க வைக்கின்றது......



நம் நாடு இந்தியா ஒரு விவசாய நாடு. கிராமங்கள் அதிகம் கொண்டுள்ள மாபெரும் நாடு. கிராமங்களில் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் அதன் சார்புள்ள தொழில்கள்..

நான் சிறுவானாய் இருக்கும் பொழுது வயல்வெளிக்கு சென்று வருவேன். அதிலும் நெற்பயிர் வந்த பிறகு வயல் வெளியில் நடந்து சென்றால் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தம் எல்லா இடங்களிலும் இருக்கும். இந்த சத்தம் முதிர்ந்த நெல் மணிகள் காற்றில் உரசி கொள்வதால் வரும் சத்தம்.. கேட்க நன்றாக இருக்கும். அனுபவித்தவர்களுக்கு புரியும் என்றே நினைக்கின்றேன்.. எனக்கு விபரம் தெரிந்த நாட்களில் எங்கள் ஊரில் மூன்று வைகை நெற்கள்தான் பயிரிட்டனர். வெள்ளைக்கொடி, சம்பா, சிகப்பு பொன்னி போன்றவை.. பின்னர் வேளாண்மை ஆராய்ச்சிக்கு பின் நுண்ணியல் மகரந்த சேர்க்கையால் பல ரக நெல் மணிகள் வர ஆரம்பித்தது. இதனால் குறைந்த காலாத்தில் நிறைந்த மகசூல் என்ற நிலை உருவானது... இதன் பின் ஐ ஆர்-8, கோ-1, கோ-2 என பல புதினம் காணமுடிந்தது.

இன்றய காலத்தில் கிராமங்களிருந்து மக்கள் நகரங்களுக்கு வேலைத்தேடி சென்று விட்டனர்( என்னையும் சேர்த்தே). தற்போது கிராமங்களில் விவசயத்திற்கு போதிய வேலை ஆள் இல்லாமல் நலிந்துள்ளது. இது இப்படியே போனால், நாம் அண்டை நாடுகளில் கையேந்தும் நிலையும் வரலாம். அதற்குள் நம் அரசாங்கம் முன் ஏற்பாடு செய்யவேண்டியது கடமை. மேலைநாடுகளை போல விதை தெளிக்க, நாற்று நட, கதிர் அறுக்க போன்ற வேலைக்கு நம் நாட்டிற்கு ஏற்றப்படி புதிய கருவிகள் உருவாக்கவும், அதன் தொழிநுட்பம் இஸ்ரேல் போன்ற நாடுகளிருந்து பெறுவதற்கும் இந்த அரசுதான் செய்யவேண்டும். அப்படி ஒரு பசுமைப்புரட்சி வராவிட்டால் நாளைய உலகம் அழியும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.....

நான் சென்றமுறை இந்தியா வந்திருந்த பொழுது கதிரடிக்க எந்திரம் சில பார்த்தேன். மிக பெரிய வகையாக இருந்தது. நம் கிராமங்களில் வயல் வெளிகள் சிறிது சிறிதாகத்தான் இருக்கும் இதனால் இதை வைத்து சரியாக கதிர் அடிக்க முடியவில்லை. நம் நாட்டு சூழல்களுக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்க. நம் அரசாங்கம் ஊக்கம் கொடுக்க வேண்டும் எனபதும் எல்லொருடைய ஆசைகள்..

அன்புடன்,

ஆ.ஞானசேகரன்


மேலும் முக்கிய செய்தி இன்று தினமலரில் உங்களுடன் ஒரு பகிர்வு....

கரும்பு சாகுபடிக்கு அதிநவீன இயந்திரம்.....


33 comments:

Anonymous said...

மீத பர்ஸ்டு

Anonymous said...

ரொம்ப நல்லாயிருக்கு நண்பா. சரியான விளக்கத்துடன் கருத்துக்கள்.

படிக்க சுவராசியமாகவும் இருக்கிறது.

தொடருங்கள் இது போன்ற பதிவுகளை. படிக்க காத்திருக்கிறேன்.

வினோத் கெளதம் said...

பொதுவா இதே மாதிரி விஷயங்கள் செய் முறை விளங்ககளில் இன்னும் நன்றாக விளங்கும்.
அந்த வகையில் உங்கள் ஆசிரியர் Great.

பழமைபேசி said...

நல்லா இருக்கு....

தட்டச்சுப் பிழைகளை ஒரு தடவை சரி பாருங்களேன்!

நெல்மணிகள்.

ஆ.ஞானசேகரன் said...

//கடையம் ஆனந்த் said...
ரொம்ப நல்லாயிருக்கு நண்பா. சரியான விளக்கத்துடன் கருத்துக்கள்.

படிக்க சுவராசியமாகவும் இருக்கிறது.

தொடருங்கள் இது போன்ற பதிவுகளை. படிக்க காத்திருக்கிறேன்.//

நன்றி நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

//பழமைபேசி said...
நல்லா இருக்கு....

தட்டச்சுப் பிழைகளை ஒரு தடவை சரி பாருங்களேன்!

நெல்மணிகள்.//

வணக்கம் பழமைபேசி... ம்ம் சரி பார்க்கின்றேன்.. நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

//vinoth gowtham said...
பொதுவா இதே மாதிரி விஷயங்கள் செய் முறை விளங்ககளில் இன்னும் நன்றாக விளங்கும்.
அந்த வகையில் உங்கள் ஆசிரியர் Great.//

வணக்கம் வினொத். முதல் முதலாக வந்துள்ளீர்கள்.. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .....

அரசூரான் said...

சிங்கப்பூரின் விமான நிலையம் மற்றும் பொட்டானிகல் கார்டணில் பார்த்திருக்கிறேன்... அந்த செடிகளை

உஸ்ஸ்ஸ்ஸ்... இன்னும் என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது... தலை சாய்ந்த கதிர்கள் அறிவுச் செருக்கு மிகுந்த முதியவர்களாய் பணிவுடன் என்ற பாடல் வரிகள்...இன்றும் மனதில் பசுமரத்து ஆணியாய்.

ஆ.ஞானசேகரன் said...

// அரசூரான் said...
சிங்கப்பூரின் விமான நிலையம் மற்றும் பொட்டானிகல் கார்டணில் பார்த்திருக்கிறேன்... அந்த செடிகளை

உஸ்ஸ்ஸ்ஸ்... இன்னும் என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது... தலை சாய்ந்த கதிர்கள் அறிவுச் செருக்கு மிகுந்த முதியவர்களாய் பணிவுடன் என்ற பாடல் வரிகள்...இன்றும் மனதில் பசுமரத்து ஆணியாய்.//

வாங்க அரசூரான், உங்கள் கருத்துகளும் அழகாக உள்ளது... நன்றி

ஆ.சுதா said...

நல்ல பதிவு உங்கள் எழுத்துகளில் எப்போதுமே ஒரு சமூக அக்கரை இருக்கின்றது நல்ல ஆரோக்கிமான விசயம்.

கிரி said...

//நான் படித்த பள்ளியில் வாரம் ஒரு முறை ஒரு வகுப்பு தோட்டக்கலை பாடம் இருக்கும்//

எங்க பள்ளியில் கூட

//இன்னும் எனக்கு நினைவில் உள்ளது........//

நீங்க சொல்வதை பார்த்தாலே தெரியுது :-)

//தற்போது கிராமங்களில் விவசயத்திற்கு போதிய வேலை ஆள் இல்லாமல் நலிந்துள்ளது//

தற்போது இயந்திரங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்

//நம் கிராமங்களில் வயல் வெளிகள் சிறிது சிறிதாகத்தான் இருக்கும் இதனால் இதை வைத்து சரியாக கதிர் அடிக்க முடியவில்லை//

சிறிய இயந்திரங்கள் கூட உள்ளன ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

// ஆ.முத்துராமலிங்கம் said...
நல்ல பதிவு உங்கள் எழுத்துகளில் எப்போதுமே ஒரு சமூக அக்கரை இருக்கின்றது நல்ல ஆரோக்கிமான விசயம்.//

நன்றி ஆ.முத்துராமலிங்கம்... உங்களின் வருகை மகிழ்வை தருகின்றது.

ஆ.ஞானசேகரன் said...

கிரி said...
வணக்கம் கிரி...

//தற்போது இயந்திரங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர் //

உண்மைதான்... மேலும் அதை மேன்படுத்த வேண்டும் என்பது பயன்ப்படுத்திய விவசயிகளின் கோரிக்கை.. அதைவிட சிறுவிவசயிகளுக்கு ஏற்ப நடைமுறைக்கு கொண்டு வராததும் ஒரு ஏமாற்றம்.

//சிறிய இயந்திரங்கள் கூட உள்ளன ஞானசேகரன்//

சிறிய இயந்திரங்களை நானும் பார்த்தேன், நண்பரே..... அதில் ஒரு குறை அறுக்கப்பட்ட கதிரை ஆட்களைக் கொண்டு போடவேண்டும்.. அறுவடை சமயங்களில் அந்த அளவிற்கு கூட ஆட்கள் இல்லை என்பது வருத்தப்படக்கூடியது. இன்னும் அந்த இயந்திரத்தை மேன்படுத்த வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கை. இந்த வகை இயந்திரத்தில் ஒரு லாபகரமானது, கதிர் அடித்த பிறகு வைக்கோல் மாட்டு தீவணத்திற்கு பயன்படுத்தமுடியும்... பெரிய வகை இயந்திரத்தில் வைக்கோல் துண்டு துண்டாக்கி வயல் எருவாக பயன் ஆகும்....

உங்களின் தாழ்மையான கருத்துகளுக்கு மிக்க நன்றி கிரி...அடிகடி வந்து கருத்துகளை விட்டு செல்லுங்கள்......

Muniappan Pakkangal said...

First my greetings 2 Ur teacher who seeded in u the interest for agri.Agriculture in the state is now full of subsidy & the farmers are happy.But due to change in lifestyle, people have almost shifted to cities & there is shortage in manpower. U have correctly pointed out abt the Nelmanigal,the smell of the paddy field with the nelmanigal is very pleasant,hope u had enjoyed it.

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
First my greetings 2 Ur teacher who seeded in u the interest for agri.Agriculture in the state is now full of subsidy & the farmers are happy.But due to change in lifestyle, people have almost shifted to cities & there is shortage in manpower. U have correctly pointed out abt the Nelmanigal,the smell of the paddy field with the nelmanigal is very pleasant,hope u had enjoyed it.//

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

ராம்.CM said...

நல்ல கருத்து. இப்ப யாருங்க விவசாயத்தை நினைக்கிறாங்க.. எல்லா நாகரிக வசதி கிடைக்கும் நகரத்தைவிட விவசாயம் செய்யும் கிராமமே அழகு.

ஆ.ஞானசேகரன் said...

// ராம்.CM said...
நல்ல கருத்து. இப்ப யாருங்க விவசாயத்தை நினைக்கிறாங்க.. எல்லா நாகரிக வசதி கிடைக்கும் நகரத்தைவிட விவசாயம் செய்யும் கிராமமே அழகு.//

கிராமத்தின் முக்கியத்துவம்.. உணரகூடிய காலம் வந்துக்கொண்டு உள்ளது. வயிறு காஞ்சா தன்னால கிராமபக்கமும், விவசாயத்தின் முக்கியதுவமும் தெரியுமுங்க...

நன்றி ராம்...

ஆதவா said...

அருமையான அனுபவம்+வேளாண் பதிவு.

இந்த மாதிரி வேளாண் துறையில் நமக்கு அவ்வளவாக பரிச்சயமில்லை.. இந்த ஒட்டுதல் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனது நண்பர், மரபணு மாற்றப்பட்ட பயிர் குறித்து கட்டுரைகள் எழுதினார். அச்சமயம் பல விஷயங்கள் என் கவனத்திற்கு வந்தன.

கதிர் அடிக்கும் மெஷினை இதுவரை நான் பார்த்ததே இல்லை. கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேன்... வாய்ப்பு கிட்டவில்லை!!

அழகிய பசுமை பதிவு

ஆ.ஞானசேகரன் said...

// ஆதவா said...
அருமையான அனுபவம்+வேளாண் பதிவு.

இந்த மாதிரி வேளாண் துறையில் நமக்கு அவ்வளவாக பரிச்சயமில்லை.. இந்த ஒட்டுதல் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனது நண்பர், மரபணு மாற்றப்பட்ட பயிர் குறித்து கட்டுரைகள் எழுதினார். அச்சமயம் பல விஷயங்கள் என் கவனத்திற்கு வந்தன.

கதிர் அடிக்கும் மெஷினை இதுவரை நான் பார்த்ததே இல்லை. கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேன்... வாய்ப்பு கிட்டவில்லை!!

அழகிய பசுமை பதிவு//

வாங்க ஆதவா.. சமயம் கிடைத்தால் கிராமம் பக்கம் வயல்வெளிக்கு சென்று வாருங்கள்.. அதுவும் ஒரு மறக்க முடியாத நினைவுகளாய் இருக்கும்..

நன்றி ஆதவா

ஹேமா said...

ஒட்டு-இப்படியும் செய்யலாமா !அழகா இருக்கு.ஒட்டுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பிரயோசனமா இருக்கும்.எப்படி ஒட்டுவது என்பதையும் சொல்லியிருக்கலாமே.

என் அம்மாவை ஞாபகப் படுத்திவிட்டீர்கள்.சிதம்பரத்தை-றோஸ் ஒட்டுவதில் ஆர்வம்.யாரோ ஒட்டுமுறை சொல்லிக் கொடுத்துவிட்டார்கள்.எங்கு போனாலும் மதில்களுக்கு மேலால் வித்தியாசமான கலரின் சிதம்பரத்தைப் பூ பார்த்துவிட்டால் மதில் எட்டி அதன் துளிர் முறித்து வந்து ஒட்டிவிடுவார்.சிலது தப்பி முளைத்துப் பூத்தும் இருக்கிறது.
நன்றி ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
ஒட்டு-இப்படியும் செய்யலாமா !அழகா இருக்கு.ஒட்டுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பிரயோசனமா இருக்கும்.எப்படி ஒட்டுவது என்பதையும் சொல்லியிருக்கலாமே.//

முடிந்தால் பின் ஒருநாளில் ஒட்டுப்பற்றி கூறுகின்றேன்..

//என் அம்மாவை ஞாபகப் படுத்திவிட்டீர்கள்.சிதம்பரத்தை-றோஸ் ஒட்டுவதில் ஆர்வம்.யாரோ ஒட்டுமுறை சொல்லிக் கொடுத்துவிட்டார்கள்.எங்கு போனாலும் மதில்களுக்கு மேலால் வித்தியாசமான கலரின் சிதம்பரத்தைப் பூ பார்த்துவிட்டால் மதில் எட்டி அதன் துளிர் முறித்து வந்து ஒட்டிவிடுவார்.சிலது தப்பி முளைத்துப் பூத்தும் இருக்கிறது.//


சிதம்பரத்தை-றோஸ் அதாவது நீங்கள் செம்பருத்திபூ வை சொல்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.. இவற்றை பதியம் போடுதல் முறையில் செய்வார்கள்.. ஒட்டுதல் மா, பலா, கொய்யா.. போன்றவற்றில் செய்வார்கள்.. விரிவாக தெரியாவிட்டாலும் சற்றே புரியும் எனக்கு...
நன்றி ஹேமா..

கலகலப்ரியா said...

முற்றிலும் மாறுபட்ட பதிவு... கிராமம் கண் முன்ன வந்துட்டு போகுது.. நல்லா இருக்குங்க..

CorTexT (Old) said...

படங்கள் நன்றாக உள்ளன. இதற்கு முன் பார்த்ததில்லை. நன்றி!

இப்பொழுது கிடைக்கும் பெரும்பான்மையான காய்கறிகளும், பழங்களும் மரபணு தொழிற்நுட்பதிலிருந்து பெறபட்டவையே; அவ்வாறே கோழி மற்றும் இதர மாமிசமும். பலவகை உயிர்காக்கும் ம்ருந்துகள், பென்ஸிலின் உட்பட, மரபணு தொழிற்நுட்பதிலிருந்து பெறபட்ட பாக்டீரியாவிலிருந்து உற்பத்தி செய்ய படுகின்றன. இப்பொழுதெல்லாம் புதிதாக உருக்கிய பாக்டீரியாவிற்கு patent வாங்குகிறார்கள். இன்று எந்த ஒரு DNA-‍வையும் Internet-ல் சர்வசாதாரணமாக வாங்கமுடியும். மரபணு தொழிற்நுட்பம் நேனோ‍‍‍ தொழிற்நுட்பத்தின் (Nano-technology) ஒரு ப‌குதி ஆகிவிட்ட‌து. ஏனென்றால், உயிர் என்ப‌து இய‌ற்கை வ‌டிவ‌மைத்த‌ நேனோ‍‍‍ தொழிற்நுட்ப இய‌ந்திர‌ம்!

இர‌ண்டு வேறு உயிரின‌த்தை ஒன்று சேர்க்க‌ அத‌ன் ம‌ர‌ப‌ணு மூல‌க்கூறு (DNA) கிட்ட‌த்த‌ட்ட‌ ஒன்று போல் இருக்க‌ வேண்டும். அப்படி உருவாக்க பட்ட கலப்பு உயிரினம் பொதுவாக குழந்தை பெறும் திறனின்றி இருக்கும். அப்படி இல்லையென்றால் இயற்கையிலே அவை ஒன்று கூடி ஒரே உயிரினமாக பரிமான வளர்ச்சி பெற்று விடும். குதிரையையும், கழுதையையும் ஒன்று சேர்த்து Mule (தமிழில் பெயர் மறந்துவிட்டது) உருவாக்குவ‌து ப‌ழ‌ங்கால‌மாக‌ ந‌ட‌ந்து வருகிற‌து.

25,000 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் நவீன-ம‌னித‌ன், நெருங்கிய‌ தொட‌ர்புடைய‌ நியான்ட‌ர்தால்‍-ம‌னித‌ இன‌த்துட‌ன் வாழ்ந்துள்ளான். இத‌னிர‌ண்டு ம‌ர‌ப‌ணு மூல‌க்கூறுக‌ள் ஒன்று சேர‌ முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்க‌ள். எப்படியாகிலும், அவ‌ர்க‌ளுடைய‌ க‌தைகள் சுவார‌சிய‌மாக‌த் தான் இருந்திருக்க‌ வேண்டும். ந‌ல்ல‌ ப‌ட‌ம் எடுக்க‌லாம். Ice Age ப‌ட‌த்தில் வ‌ருவ‌து நியான்ட‌ர்தால்‍-ம‌னித‌ இன‌மே!

அமுதா said...

நல்ல பகிர்வு.

ஆ.ஞானசேகரன் said...

// கலகலப்ரியா said...
முற்றிலும் மாறுபட்ட பதிவு... கிராமம் கண் முன்ன வந்துட்டு போகுது.. நல்லா இருக்குங்க//

உங்கள் வருகைக்கும் கருதுரைக்கும் நன்றிங்க கலகலப்ரியா...

ஆ.ஞானசேகரன் said...

//RajK said...
படங்கள் நன்றாக உள்ளன. இதற்கு முன் பார்த்ததில்லை. நன்றி!//

வணக்கம்...ராஜ்.. உங்களின் நீண்ட கருத்துரைக்கும்... வருகைக்கும் நன்றி.... mule க்கு தமிழில் கோவேரி கழுதை என்று நினைக்கின்றேன்....மீண்டும் நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//அமுதா said...
நல்ல பகிர்வு.///

உங்கள் முதல் வருகை நன்றிங்க அமுதா

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கு நண்பா.. அளவான விளக்கத்தோடு சொல்ல வந்ததை தெளிவா சொல்லி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

ஆ.ஞானசேகரன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நல்லா இருக்கு நண்பா.. அளவான விளக்கத்தோடு சொல்ல வந்ததை தெளிவா சொல்லி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..//

வணக்கம் கார்த்திகை பாண்டியன்... உங்களின் ஊக்கத்திற்கு நன்றி

தேவன் மாயம் said...

இப்படி ஒட்டி சேர்க்கை செய்து புதிய வகை மா உருவாக்கப் படுகின்றதே, அதே போல் ஒரே மரத்தில் மா, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு பொன்ற மரகன்றுகளை ஒட்டுதல் செய்தால் ஒரே மரத்தில் எல்லா வகையான பழங்கள் கிடைக்குமே என்ற எண்ணம் தோன்றியது. மறுநாள் காலை பள்ளிக்கு சென்றதும் முதலில் என் ஆசிரியரிடம் இதைப்பற்றி சொன்னேன். அவர் சிரித்தார் மேலும் ஒரே வாகை பயிர்களைதான் ஒட்ட முடியும் ஏனனில் அதன் செல்கள்தான் ஒட்டிக்கொள்ளும் மாற்று கன்றுகள் ஒட்டாமல் காய்ந்துவிடும் என்றார். இது எனக்கு மனப்பாதிப்பை ஏற்படுத்தவில்லை.. மாறாக மேலும் நல்ல விவரங்கள் தெரிந்தது.///

சிறு வயதில் நல்ல சிந்தனை!!

ஆ.ஞானசேகரன் said...

//thevanmayam said...
சிறு வயதில் நல்ல சிந்தனை!!//

வணக்கம் உங்களின் வருகை என்னை மகிழச் செய்கின்றது.. நன்றி...

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

நல்ல பதிவு

ஆ.ஞானசேகரன் said...

// முனைவர் சே.கல்பனா said...
நல்ல பதிவு//



நன்றி