கடவுள் நம்பிக்கையில் ஓர் அழுவுனி ஆட்டம்...
என் கைக்குள் வைரக்கள் இருக்கின்றது என்பதாக வைத்துக் கொள்வோம் என் கைக்குள் இருப்பதை நான் தான் நிருபணம் செய்ய வேண்டும். என் அருகில் இருப்பவன் என் தகுதியின் பொருட்டு இருக்கு அல்லது இல்லை என்று சொல்லதான் முடியுமே தவிற அவனால் நிருபணம் செய்வது முடியாது. அப்படியே என்கை திறக்க முயற்சிப்பது வன்முறைபோல ஆகிவிடும். இப்படிதாங்க கடவுள் இருக்கின்றார் ஒருசாரார், இல்லை என்று சொல்லும் ஒருசாரார்.. இரு பிரிவுகளும் அவரவர்கள் வாதங்களை வைத்து விவாதிப்பதும், பின் நான் சொல்வதில்தான் உண்மை இருப்பதாக சொல்லிக்கொள்வதும் வாடிக்கையாக இன்றும் இருக்கின்றது. வலைதளங்களில் இந்த வாதங்கள் அடிக்கடி வந்துக்கொண்டே இருக்கின்றது. சில நேரங்களில் ஆரோக்கிமற்ற வாதங்களாகவே வந்துவிடுகின்றது.
கடவுள் இருக்கின்றானோ? அல்லது இல்லையோ... ஆனால் மனிதன் இருக்கின்றான் அவனிடத்தில் மனமும் அறிவும் இருக்கின்றது. அந்த மனிதனின் அறிவின் தேடல்தான் அறிவியல், அந்த அறிவியலின் விளைவுதான் மனிதனின் கண்டுபிடிப்புகள். ஒரு வகையில் கடவுளையும் கண்டுபிடித்தவனும் மனிதன்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்த அறிவின் தேடல் மற்றும் அதன் கண்டுப்பிடிப்புக்கு அப்பால் என்ன? இந்த கேள்வியைதான் கடவுளின் நிருபணம் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்....
ஆதிமனிதனின் அறிவுக்கு எட்டியவரை இந்த அண்டத்தில் என்ன நடக்கின்றது என்பதில் ஒரு குழப்பமான நிலையில் இருந்தான். பசிப்பதும் புசிப்பதும்தான் இவனின் வேலை. தன் அறிவில் சொல்லாத அல்லது பார்க்காத பொருளை மற்றும் செயலை கண்டு வியந்தும் பயந்தும்தான் வாழ்ந்து வந்தான். இதைதான் பின்னர் கடவுள் என்ற பொருள் கொடுத்தான். இப்படிதான் ஆதிமனிதன் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என இவைகளை கடவுளாக்கி பார்த்தான். இதில் யாருக்கும் எந்த குழப்பங்களும் இல்லை. பின்னர் இவன் அறிவால் இவற்றை அடக்கியாளவும் மேலும் இவனின் தேடல்களினாலும் தேவைகளினாலும் புதிய பரிணாமங்கள் உருவாக்கப்பட்டது. இங்கேதான் கடவுளின் எல்லைக் கோடு மெதுவாக நகர்த்தப் பட்டுவிட்டது. ஆதிமனிதன் அறிவுக்கு அப்பால் உள்ளதாக இருந்த கடவுள் மெதுவாக எல்லை மாற்றப்பட்டது. இப்படிதாங்க ஒவ்வொரு முறையும் மனிதனின் அறிவு வளர்ச்சியின் காரணமாக இந்த உலகை வியக்கவைக்கும் முன் கடவுளின் எல்லை கோடும் நகர்த்தப்பட்டே வருகின்றது. இப்படி ஒரு அழுவுனி ஆட்டம் தான் நடந்துக்கொண்டு வருகின்றது.
முன்பு சொல்லியது போல் கடவுளை நிர்பணம் செய்ய வேண்டியவர்கள் நிர்பணம் செய்யாமல் மாறாக இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும். மனிதனால் ஆண்யின்றி பிள்ளை பெறமுடியுமா? அப்படியும் செய்துவிட்டால் ஆண் பெண்ணின்றி உயிர் படைக்க முடியுமா? ஒரு திசுவை வைத்து உயிர் படைத்ததும் பின்னர் இவர்கள் கேட்பது திசுவே இல்லாமல் உயிர் படைக்க முடியுமா?... என்னயா இந்த அழுவுனியாட்டம்...
மனிதனின் அறிவும் தேடல்களும் நின்றுவிடவில்லை இன்னும் மேலே இன்னும் மேலே...... சென்றுகொண்டே இருக்கின்றது. ஆனால் இந்த கடவுளின் எல்லை கோடு நகர்த்தப் படுவதுதான் புரியாத அழுவுனியாட்டமாக இருக்கின்றது.
மனிதன் ஒரு இயந்திரம் அல்ல அவனிடம் இரத்தம், சதை எல்லாம் இருக்கின்றது. இவனிடத்தில் மனம் இருக்கின்றது...... இந்த மனதிற்கு ஆறுதல், நிம்மதி, ஓய்வு எல்லாம் தேவைப்படுகின்றது. இவற்றால் இல்லாத கடவுளையும் நினைத்துப் பார்க்கின்றான். எப்படியானாலும் மானுடம் காக்கப்பட வேண்டுமே தவிற அழிக்கப்படவோ நசுக்கப்படவோ கூடாது என்பதில்தான் கவனம் தேவை.....
மனிதன் மனம் வைத்தால் கல்லும் கவிபாடும்..
கன இரும்பும் நடனமாடும்- பொன்மொழி
என்றும் அன்புடன்
ஆ.ஞானசேகரன்..
Saturday, April 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
உலகம் சுற்றும் வாலிபரே வாழ்க வளர்க
//பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான். வேலைக்காக சிங்கபூர்...
// தமிழ்நெஞ்சம் said...
உலகம் சுற்றும் வாலிபரே வாழ்க வளர்க//
வாங்க நண்பரெ... வணக்கம் உங்களின் வருகைக்கு நன்றி
//எப்படியானாலும் மானுடம் காக்கப்பட வேண்டுமே தவிற அழிக்கப்படவோ நசுக்கப்படவோ கூடாது என்பதில்தான் கவனம் தேவை.....//
அருமையான கருத்து ஞானசேகரன்...உங்கள் பதிவுகள் சமூக அக்கரை சார்ந்திருப்பது வரவேற்கத்தக்கது...
இது முடிவாக இல்லை உங்கள் எண்ணங்களை மட்டுமே சொல்லியிருக்கீங்க. அதை ஆரம்பத்திலே வைரக்கல்லை வைத்து அருமையா எழுதியிருக்கீங்க,
கடவுள் இருக்கின்றாரோ இல்லையோ ஆனால் மனிதனுக்கு நிம்மதி தேவை
அதன் வடிகாலாய் மட்டுமே கடவுள் இருந்திருக்களாம் ஆனால் மனிதன் தான் அதையும் தவறாக பயண்படுத்துகிறான் என்று நினைக்கின்றேன்
// புதியவன் said...
//எப்படியானாலும் மானுடம் காக்கப்பட வேண்டுமே தவிற அழிக்கப்படவோ நசுக்கப்படவோ கூடாது என்பதில்தான் கவனம் தேவை.....//
அருமையான கருத்து ஞானசேகரன்...உங்கள் பதிவுகள் சமூக அக்கரை சார்ந்திருப்பது வரவேற்கத்தக்கது...//
வாங்க புதியவன்... மிக்க நன்றி.. புதியவன் இன்று சிங்கபூர் பதிவர் சந்திபிற்கு வருகின்றீர்களா?
// ஆ.முத்துராமலிங்கம் said...
இது முடிவாக இல்லை உங்கள் எண்ணங்களை மட்டுமே சொல்லியிருக்கீங்க. அதை ஆரம்பத்திலே வைரக்கல்லை வைத்து அருமையா எழுதியிருக்கீங்க,
கடவுள் இருக்கின்றாரோ இல்லையோ ஆனால் மனிதனுக்கு நிம்மதி தேவை
அதன் வடிகாலாய் மட்டுமே கடவுள் இருந்திருக்களாம் ஆனால் மனிதன் தான் அதையும் தவறாக பயண்படுத்துகிறான் என்று நினைக்கின்றேன்//
வணக்கம் ஆ.முத்துராமலிங்கம்... உங்களின் கருத்தையும் மதிக்கின்றேன்... கடவுளின் பெயரால் செய்யும் அயோக்கியதனத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது..
//வணக்கம் ஆ.முத்துராமலிங்கம்... உங்களின் கருத்தையும் மதிக்கின்றேன்... கடவுளின் பெயரால் செய்யும் அயோக்கியதனத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது..//
நச்சயம் தற்சமயம் மிகப் பெரியளவில்
இந்த அயோக்கிதனம் நடந்து கொண்டிருக்கிறது.
மோசமான நிலை!
//ஆ.ஞானசேகரன் said...
வாங்க புதியவன்... மிக்க நன்றி.. புதியவன் இன்று சிங்கபூர் பதிவர் சந்திபிற்கு வருகின்றீர்களா?//
இன்று வாய்ப்பு இல்லை ஞானசேகரன்...சமயம் கிடைத்தால் மற்றொரு நாள் சந்திப்போம் நன்றி ஞானசேகரன்...
//ஆ.முத்துராமலிங்கம் said...
தற்சமயம் மிகப் பெரியளவில்
இந்த அயோக்கிதனம் நடந்து கொண்டிருக்கிறது.
மோசமான நிலை!//
உண்மைதான் நண்பா.. கடவுளின் பெயரால் அரசியல் நடத்துவதை என்னால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை...
// புதியவன் said...
இன்று வாய்ப்பு இல்லை ஞானசேகரன்...சமயம் கிடைத்தால் மற்றொரு நாள் சந்திப்போம் நன்றி ஞானசேகரன்...//
அதுவரை காத்திருக்கும்
ஆ.ஞானசேகரன்
ஹிஹிஹி...
கடவுள்...
ஆத்திகவாதிகளின் பார்வையில் இருக்கிறான்...
நாத்திகவாதிகளின் பார்வையில் இருக்கிறான்...
சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் இருந்தும் இல்லாமல் இருக்கிறான்...
இருக்கும்னா இருக்கு.. இல்லைன்னா இல்லை.. பார்ப்பவர்களின் மனதைப் பொறுத்ததுதான் நண்பா.. நீங்கள் சொல்வதுபோல் மானுடம் வாழ்ந்தால் போதும்.. நல்ல அக்கறையுடன் கூடிய பதிவு
நான் இப்பொழுது வசிக்கும் பகுதிலுள்ள ஒரு கல்லுரியில் தத்துவ ஆசிரியராக இருக்கும் டேனியல் டென்னெட் ஒரு அருமையான புத்தகம் எழுதியுள்ளார். அதில், நீங்கள் கூறுவது போல் கடவுள்/மதம் எப்படி தன் பச்சோந்தி நிறத்தை மாற்றி கொண்டே வந்துள்ளது என்பதை காட்டுறார்.
http://en.wikipedia.org/wiki/Breaking_the_Spell:_Religion_as_a_Natural_Phenomenon
இதை பற்றி நானும் ஒரு பத்தி எழுதியுள்ளேன்.
http://muthal-parvai.blogspot.com/2008/12/blog-post_02.html
எபிகூரசஸ் சொன்னது...
கடவுள் கெட்டவற்றை அழிக்க நினைக்கிறார்,
ஆனால் அழிக்க முடியவில்லையா?
அப்படியானால்,
அவர் நிகரற்ற சக்தி வாய்ந்தவர் இல்லை!
அவரால் முடியும், ஆனால் அழிக்க விருப்பம் இல்லையா?
அப்படியானால்,
அவரும் கெட்டவைகளுக்கு சொந்தகாரர்!
அவரால் அழிக்கவும் முடியும், விருப்பமும் உண்டா?
அப்படியானால்,
ஏன் இவ்வுலகில் இவ்வளவு கெட்டவைகள்!
அவரால் அழிக்கவும் முடியாது, விருப்பமும் இல்லையா?
அப்படியானால்,
அவரை ஏன் கடவுள் என்கிறாய்?
இதை அவர் சொன்னது 2300 வருடங்களுக்கு முன். இது 21ம் நூற்றாண்டிலும் ஏன் புரியவில்லை என்பது, எனக்கு புரியாத புதிர்!
//டக்ளஸ்....... said...
கடவுள்...
ஆத்திகவாதிகளின் பார்வையில் இருக்கிறான்...
நாத்திகவாதிகளின் பார்வையில் இருக்கிறான்...
சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் இருந்தும் இல்லாமல் இருக்கிறான்...//
வணக்கம் டக்ளஸ் உங்களின் முதல் வருகையும் கருத்துரைக்கும் நன்றி....
// கார்த்திகைப் பாண்டியன் said...
இருக்கும்னா இருக்கு.. இல்லைன்னா இல்லை.. பார்ப்பவர்களின் மனதைப் பொறுத்ததுதான் நண்பா.. நீங்கள் சொல்வதுபோல் மானுடம் வாழ்ந்தால் போதும்.. நல்ல அக்கறையுடன் கூடிய பதிவு//
வாங்க கார்த்திகைப் பாண்டியன்.. உங்கள் நல்ல மனம் போல் மானுடம் வாழும் என்ற நம்பிக்கையில்..
ஆ.ஞானசேகரன்
// RajK said...
நான் இப்பொழுது வசிக்கும் பகுதிலுள்ள ஒரு கல்லுரியில் தத்துவ ஆசிரியராக இருக்கும் டேனியல் டென்னெட் ஒரு அருமையான புத்தகம் எழுதியுள்ளார். அதில், நீங்கள் கூறுவது போல் கடவுள்/மதம் எப்படி தன் பச்சோந்தி நிறத்தை மாற்றி கொண்டே வந்துள்ளது என்பதை காட்டுறார்.
http://en.wikipedia.org/wiki/Breaking_the_Spell:_Religion_as_a_Natural_Phenomenon//
நன்றி ராஜ் நீங்கள் கொடுத்த சுட்டியை பின் பார்க்கின்றேன்..
//இதை பற்றி நானும் ஒரு பத்தி எழுதியுள்ளேன்.
http://muthal-parvai.blogspot.com/2008/12/blog-post_02.html//
உங்களின் பதிவையும் பார்த்தேன்.. இதே கருவை தாங்கியுள்ளது.. நன்றிபா...
///
மனிதன் மனம் வைத்தால் கல்லும் கவிபாடும்..
கன இரும்பும் நடனமாடும்- பொன்மொழி
///
நல்ல பதிவு
கடவுளை வைத்து ஏமாற்று வேலைகள் செய்பவர்கள் இல்லையென்றால் "கடவுள் இல்லை " என்றுசொல்ல ஆள் இருந்திருக்க மாட்டார்கள்
///
கடவுள் கெட்டவற்றை அழிக்க நினைக்கிறார்,
ஆனால் அழிக்க முடியவில்லையா?
அப்படியானால்,
அவர் நிகரற்ற சக்தி வாய்ந்தவர் இல்லை!
அவரால் முடியும், ஆனால் அழிக்க விருப்பம் இல்லையா?
அப்படியானால்,
அவரும் கெட்டவைகளுக்கு சொந்தகாரர்!
அவரால் அழிக்கவும் முடியும், விருப்பமும் உண்டா?
அப்படியானால்,
ஏன் இவ்வுலகில் இவ்வளவு கெட்டவைகள்!
அவரால் அழிக்கவும் முடியாது, விருப்பமும் இல்லையா?
அப்படியானால்,
அவரை ஏன் கடவுள் என்கிறாய்?
இதை அவர் சொன்னது 2300 வருடங்களுக்கு முன். இது 21ம் நூற்றாண்டிலும் ஏன் புரியவில்லை என்பது, எனக்கு புரியாத புதிர்!
///
yes
//பசிப்பதும் புசிப்பதும்தான் இவனின் வேலை.
நம்ப வேலை மாதிரி தெரியுது!!
//மனிதன் மனம் வைத்தால் கல்லும் கவிபாடும்
இந்த காலத்தில இல்லீங்க!!
என்னை பொறுத்தவரை நம்பினால் கடவுள். உலகில் மனிதசக்திக்கு மிஞ்சியது எதுவுமில்லை. நல்ல பதிவு.
//பிரியமுடன் பிரபு said...
நல்ல பதிவு
கடவுளை வைத்து ஏமாற்று வேலைகள் செய்பவர்கள் இல்லையென்றால் "கடவுள் இல்லை " என்றுசொல்ல ஆள் இருந்திருக்க மாட்டார்கள்//
இதுவும் நல்லா இருக்கே... நன்றி பிரியமுடன் பிரபு..
///ரா.கிரிதரன் said...
//பசிப்பதும் புசிப்பதும்தான் இவனின் வேலை.
நம்ப வேலை மாதிரி தெரியுது!!
//மனிதன் மனம் வைத்தால் கல்லும் கவிபாடும்
இந்த காலத்தில இல்லீங்க!!///
வாங்க ரா.கிரிதரன் கல்லை மட்டும் பார்க்காம கருவை பாருங்க... நன்றி
// ராம்.CM said...
என்னை பொறுத்தவரை நம்பினால் கடவுள். உலகில் மனிதசக்திக்கு மிஞ்சியது எதுவுமில்லை. நல்ல பதிவு.//
வணக்கம் ராம் சார்...
///எப்படியானாலும் மானுடம் காக்கப்பட வேண்டுமே தவிற அழிக்கப்படவோ நசுக்கப்படவோ கூடாது என்பதில்தான் கவனம் தேவை....///
நிச்சியமாக இதுவே எனது அவாவாகும் இருந்தும் என்ன செய்ய தமிழினப் படுகொலைகளை மட்டும் எந்த கடவுளுக்கும் நிறுத்த முடியவில்லை! ம்ம்ம்ம்ம்ம்ம்
// கலை - இராகலை said...
///எப்படியானாலும் மானுடம் காக்கப்பட வேண்டுமே தவிற அழிக்கப்படவோ நசுக்கப்படவோ கூடாது என்பதில்தான் கவனம் தேவை....///
நிச்சியமாக இதுவே எனது அவாவாகும் இருந்தும் என்ன செய்ய தமிழினப் படுகொலைகளை மட்டும் எந்த கடவுளுக்கும் நிறுத்த முடியவில்லை! ம்ம்ம்ம்ம்ம்ம்//
பெருவாரியான தமிழனின் அவாவும் இதுதான் நண்பர் கலைகுமார்... நம்மால் தற்பொழுது ம்ம்ம்ம்ம்ம் சொல்லதான் முடிகின்ற கையாலாகாதவர்களாகியுள்ளோம்...
//இவனிடத்தில் மனம் இருக்கின்றது...... இந்த மனதிற்கு ஆறுதல், நிம்மதி, ஓய்வு எல்லாம் தேவைப்படுகின்றது. //
மனம் இருக்கிறது என்ற நம்பிக்கைதான் கடவுள்.
அந்த கடவுளின் வழிபாடுதான் ஆறுதல்,நிம்மதி,ஓய்வு.
///சொல்லரசன் said...
//இவனிடத்தில் மனம் இருக்கின்றது...... இந்த மனதிற்கு ஆறுதல், நிம்மதி, ஓய்வு எல்லாம் தேவைப்படுகின்றது. //
மனம் இருக்கிறது என்ற நம்பிக்கைதான் கடவுள்.
அந்த கடவுளின் வழிபாடுதான் ஆறுதல்,நிம்மதி,ஓய்வு.//
வாங்க சொல்லரசன்... மனம், பயம், உணர்வு என சொல்லி கடவுளை பார்க்கின்றான்... கடவுளின் நிர்பணம் என்று பார்க்கும்பொழுது அங்கே ஒரு அழுவுனியாட்டம் நடத்தப்படுகின்றதே.. மனிதனை காயப்படுத்தாதவரை இவற்றின் நிருபணம் தேவை இல்லை,,, கடவுளை சொல்லி மானுடம் காயப்படும்பொழுது நிருபணமும் தேவையாகின்றது, அந்த நிருபணத்தில் நடந்தேறி வரும் அழுவுனியாட்டத்தைதான் கொஞ்சம் வருடியுள்ளேன்... இதில் யாரையும் குறையாக பார்க்காமல் எதார்த்தமான உண்மைகளை பார்க்கலாமே, நம்மை வழிநடத்தியவர்களின் ஆக்ரமிப்பால் இந்த கடவுள் நம்பிக்கையில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம்,, இவற்றிலிருந்து மீண்டு வருவதும் ஆவரவர் சுய எண்ணங்கள்...
நன்றி சொல்லரசன்
//பிரியமுடன் பிரபு said...
///
கடவுள் கெட்டவற்றை அழிக்க நினைக்கிறார்,
ஆனால் அழிக்க முடியவில்லையா?
அப்படியானால்,
அவர் நிகரற்ற சக்தி வாய்ந்தவர் இல்லை!
அவரால் முடியும், ஆனால் அழிக்க விருப்பம் இல்லையா?
அப்படியானால்,
அவரும் கெட்டவைகளுக்கு சொந்தகாரர்!
அவரால் அழிக்கவும் முடியும், விருப்பமும் உண்டா?
அப்படியானால்,
ஏன் இவ்வுலகில் இவ்வளவு கெட்டவைகள்!
அவரால் அழிக்கவும் முடியாது, விருப்பமும் இல்லையா?
அப்படியானால்,
அவரை ஏன் கடவுள் என்கிறாய்?
இதை அவர் சொன்னது 2300 வருடங்களுக்கு முன். இது 21ம் நூற்றாண்டிலும் ஏன் புரியவில்லை என்பது, எனக்கு புரியாத புதிர்!
///
yes
//
இதேபோல் மற்றொன்றையும் சொல்லுவார்கள்..
எல்லாம்வல்ல இறைவனிடம் கடவுளால் தூக்க முடியாத கல்லை படைக்க சொன்னால்
1. அப்படி அவன் படைத்துவிட்டால் அந்த கல்லை தூக்க முடியாத கடவுள் எப்படி எல்லாம்வல்ல கடவுளாக இருக்க முடியும்
2. அப்படி அந்த கல்லை படைக்க முடியவில்லை என்றால் எப்படி கடவுளாக இருக்க முடியும்
இது ஒரு இடக்கு முடக்கான ஒன்று என்று சொன்னாலும் கொஞ்சமாலும் சிந்திக்க கூடியதே...கடவுளை விட மனிதனும் இடக்கு முடக்கானவன் என்பது இந்த கேள்வியில் தெரியும்
// ஆ.ஞானசேகரன் said...
இதேபோல் மற்றொன்றையும் சொல்லுவார்கள்..
எல்லாம்வல்ல இறைவனிடம் கடவுளால் தூக்க முடியாத கல்லை படைக்க சொன்னால்
1. அப்படி அவன் படைத்துவிட்டால் அந்த கல்லை தூக்க முடியாத கடவுள் எப்படி எல்லாம்வல்ல கடவுளாக இருக்க முடியும்
2. அப்படி அந்த கல்லை படைக்க முடியவில்லை என்றால் எப்படி கடவுளாக இருக்க முடியும்
இது ஒரு இடக்கு முடக்கான ஒன்று என்று சொன்னாலும் கொஞ்சமாலும் சிந்திக்க கூடியதே...கடவுளை விட மனிதனும் இடக்கு முடக்கானவன் என்பது இந்த கேள்வியில் தெரியும்
//
ஒரு சமயம், என் சித்தி பையன் சிறு வயதில் இருக்கும் போது கேட்டான், "அண்ணா, நாம் தான் கார் செய்தோம், ஆனால் அது நம்மை விட வேகமாக செல்கிறதே! நாம் தான் விமானம் செய்தோம், ஆனால் அதனால் பறக்க முடிகிறதே, நம்மால் ஏன் முடியவில்லை?". இதே போல் தான், வேகமாக கணக்கு போடும் கால்குலேட்டர் மற்றும் கணினி. அடுத்து, நம்மை போல் அல்லது அதை விட அறிவுடைய இயந்திரம் செய்ய முடியுமா? எப்பொழுது முடியும் என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும், முடியும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சிலர், அது நம் கட்டுபாட்டில் இல்லாமல் போய் விடும் என்று அஞ்சுகின்றனர். அது தவறு, ஏனென்றால், அதன் சிந்திக்கும் திறனும், கற்று கொள்ளும் திறனும் எப்படி என்று நாம் தான் வடிவமைக்கின்றோம். கடவுள் எப்படி, அவரால் தூக்க முடியாத கல்லை செய்ய முடியும்? இதற்கு பதில், கடவுள் அப்படி செய்யும் அளவுக்கு (கெட்டவைகளை கட்டுபடுத்த முடியாத அளவிற்கு) மாங்கா மடையனாக இருக்க முடியாது!
நம்மை போல் சிந்திக்கும் திறனுடைய இயந்திரத்தை சிலர் தவறான வழிக்கு பயன்படுத்த முடியுமா? முடியும்; அது எல்லாவற்றும் பொருந்தும். அது கடவுள் மனிதனை (மற்ற விலங்குகளும் தான்) தவறாக படைத்தனால் வந்த மூலக்காரணம் - கடவுள் இருந்தால்; இது தான் எபிகூரசஸ் சொல்ல வருவது.
// RajK said... நாம் தான் கார் செய்தோம், ஆனால் அது நம்மை விட வேகமாக செல்கிறதே! நாம் தான் விமானம் செய்தோம், ஆனால் அதனால் பறக்க முடிகிறதே, நம்மால் ஏன் முடியவில்லை?". இதே போல் தான், வேகமாக கணக்கு போடும் கால்குலேட்டர் மற்றும் கணினி. அடுத்து, நம்மை போல் அல்லது அதை விட அறிவுடைய இயந்திரம் செய்ய முடியுமா? எப்பொழுது முடியும் என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும், முடியும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சிலர், அது நம் கட்டுபாட்டில் இல்லாமல் போய் விடும் என்று அஞ்சுகின்றனர். அது தவறு, ஏனென்றால், அதன் சிந்திக்கும் திறனும், கற்று கொள்ளும் திறனும் எப்படி என்று நாம் தான் வடிவமைக்கின்றோம். கடவுள் எப்படி, அவரால் தூக்க முடியாத கல்லை செய்ய முடியும்? இதற்கு பதில், கடவுள் அப்படி செய்யும் அளவுக்கு (கெட்டவைகளை கட்டுபடுத்த முடியாத அளவிற்கு) மாங்கா மடையனாக இருக்க முடியாது!//
ரொம்ப நல்ல விளக்கங்கள் நம்மை விட அறிவில் சிறந்த இயந்திரம் கண்டுபிடித்தாலும் நம்முடைய கட்டுபாட்டுக்குள் இருக்கும் என்பதுதான் உண்மையானால் மனிதனை கடவுள் படைத்ததாக சொன்னால் ஏன் மனிதன் கடவுளின் முழு கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பது ஞாயமான கேள்விதானே...
//நம்மை போல் சிந்திக்கும் திறனுடைய இயந்திரத்தை சிலர் தவறான வழிக்கு பயன்படுத்த முடியுமா? முடியும்; அது எல்லாவற்றும் பொருந்தும். அது கடவுள் மனிதனை (மற்ற விலங்குகளும் தான்) தவறாக படைத்தனால் வந்த மூலக்காரணம் - கடவுள் இருந்தால்; இது தான் எபிகூரசஸ் சொல்ல வருவது.//
அப்படி தவறாக படைத்துவிட்டால் அதை சரிப்படுத்தவோ அல்லது முடியாத பச்சத்தில் அழிக்கவோ வேண்டுமே?...
நல்ல விடயங்களை பகிர்ந்ததில் நன்றி ..
ஞானசேகரன் பதிவு தொக்கி நிற்கிறது.முடிவு ?மனதை ஒருநிலைப்படுத்த அல்லது நல்வழிப்படுத்தவே கடவுள் என்கிற ஒரு வடிகால்.மனச்சாட்சிப்படி வாழ்ந்தாலே மனிதன் மனிதனாய் வாழ்வான்.கடவுளை வைத்து வியாபாரமும் லஞ்சம் கொடுத்து கடவுளை வேண்டிக்கொள்வதும் வருந்தத்தக்க விஷயம்தான்.
//ஹேமா said...
ஞானசேகரன் பதிவு தொக்கி நிற்கிறது.முடிவு ?மனதை ஒருநிலைப்படுத்த அல்லது நல்வழிப்படுத்தவே கடவுள் என்கிற ஒரு வடிகால்.மனச்சாட்சிப்படி வாழ்ந்தாலே மனிதன் மனிதனாய் வாழ்வான்.கடவுளை வைத்து வியாபாரமும் லஞ்சம் கொடுத்து கடவுளை வேண்டிக்கொள்வதும் வருந்தத்தக்க விஷயம்தான்.//
ஹேமா உங்களின் கருத்துகளும் உண்மையும் சிந்தனைக்குறியதும்..
//ஞானசேகரன் பதிவு தொக்கி நிற்கிறது.முடிவு ?//
முடிவு பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள்... என் எண்ணங்களாக கொஞ்சம் மூளையை வருடிவிட்டு செல்கின்றேன்..
When u do ur duty with consciousness,there is no need for worshipping God.There is a power above us,& that is respected a s God.We don't know where we came from.Your words 'Maanudam kakkappadavendum'is correct,as the enemies against maanudam are our own people.
// Muniappan Pakkangal said...
When u do ur duty with consciousness,there is no need for worshipping God.There is a power above us,& that is respected a s God.We don't know where we came from.Your words 'Maanudam kakkappadavendum'is correct,as the enemies against maanudam are our own people.//
வணக்கம் சார்... உங்களின் கூற்றும் சரியே, அவரவர் வேலையை அவரவர் பார்த்தாலே. பாதி கொடுமைகள் குறையும். உங்களை போல் எல்லோரும் விரும்புவது மானிடம் காக்கப்பட வேண்டும்... நன்றி சார்.
சிலசமயம் கடவுள் இருக்கிறாரோ என்று தோன்றூம்.. வெகு பல சமயங்கள் கடவுள் இல்லை என்றே தோன்றும்.. நமக்கு நாம் கடவுள்கள் என்பது உணரும் வரை இவை மாறி மாறி தோன்றிக் கொண்டே இருக்கும்.
கடவுள் என்பது இயற்கை. கடவுளை நாம் அனுபவிக்கிறோம்.
கடவுள் என்பது மனிதன்.. அவனோடு நாம் வாழ்கிறோம்!!
இல்லை என்பது உண்டானால், இருந்தது என்று பொருள்!!! கடவுள் இருந்ததாகவே இருக்கட்டும்!!!
//ஆதவா said...
சிலசமயம் கடவுள் இருக்கிறாரோ என்று தோன்றூம்.. வெகு பல சமயங்கள் கடவுள் இல்லை என்றே தோன்றும்.. நமக்கு நாம் கடவுள்கள் என்பது உணரும் வரை இவை மாறி மாறி தோன்றிக் கொண்டே இருக்கும்.
கடவுள் என்பது இயற்கை. கடவுளை நாம் அனுபவிக்கிறோம்.
கடவுள் என்பது மனிதன்.. அவனோடு நாம் வாழ்கிறோம்!!
இல்லை என்பது உண்டானால், இருந்தது என்று பொருள்!!! கடவுள் இருந்ததாகவே இருக்கட்டும்!!!
//
வங்க ஆதவா, என்ன் சில நாட்களா இந்தப் பக்கம் வரவில்லை..
//இல்லை என்பது உண்டானால், இருந்தது என்று பொருள்!!! கடவுள் இருந்ததாகவே இருக்கட்டும்!!!//
கடவுள் இருப்பதகவே போகட்டும், மனிதன் மனிதனாக இருக்கனுமே!!
Post a Comment