_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, April 24, 2009

பட்டாம்பூச்சி பறபற...

பட்டாம்பூச்சி பறபற...

பட்டாம்பூச்சி என்றாலே எனது சிறுவயது ஞாபகம் வரும், எனக்கு மட்டும் என்று சொல்வதைவிட எல்லோருக்கும் என்பதுதான் சரி. மழைக்காலம் வந்தாலே எங்கள் வீட்டு தோட்டத்தில் தும்பைச்செடி வெள்ளை நிற பூக்களுடன் அழகூட்டும். எங்கிருந்து வருகின்றனவோ தெரியாது இந்த பட்டாம்பூச்சி, தும்பைபூவில் இருக்கும் தேனை அருந்தும். பட்டாம்பூச்சிகளில் கருப்பு சிகப்பு புள்ளிகள் உள்ள பட்டம்பூச்சி பார்க்க அழகாக இருக்கும். எனக்கு ரொம்ப காலம் தெரியாது "இந்த இரட்டை பட்டாம்பூச்சி ஏன் இரட்டையாய் பறக்கின்றன?". அதில் ஒன்று மட்டும் பறக்கும் மற்றொன்று சும்மேனு இருக்கும்.

அது இருக்கட்டும் நம்ம பாசமிகு சொல்லரசன் இந்த சாமானியனுக்கு பட்டாம்பூச்சி விருதை கொடுத்து விட்டார். அந்த பாசமிகு நண்பருக்கு நன்றியை இந்த வலையில் சொல்லிக்கொள்கின்றேன். அந்த விருதிற்கு நான் தகுதியோ இல்லையோ, என்னை தேடி வந்த பட்டாம்பூச்சிக்கு நல்ல தேனை உடனே கொடுக்க வேண்டும் என்பது என் கடமையாக ஆக்கப்பட்டுவிட்டது (இதன் மரபுப்படி நான் மூன்று பேருக்கு கொடுக்க வேண்டுமாம்) . என்னிடம் தேனை தேடி வந்த பட்டாம்பூச்சிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கலாம். எனவே ஒரு நல்ல தோட்டத்தில் விட்டுவிட தயாராகிவிட்டேன். அதை சிறையில் அடைக்க எனக்கு விருப்பமும் இல்லை. என்னுடன் இந்த விருதை பெற்ற சகோதரி உமாவிற்கும் (சில கவிதைகள்) மற்றும் உழவன் அவர்களுக்கும் (உழவனின் உளறல்கள்) மனமார்ந்த வாழ்த்துகள்.

தமிழ் வீதி சா.தமிழ்ச்செல்வன் ஐயா அவர்கள் 30 வருடகாலமாக சிறுகதைகள் எழுதிக்கொண்டுள்ளார். மேலும் சமிபத்தில் வெளிவந்த வெற்றித் திரைப்படம் " பூ" திரைப்படக் கதைக்கு சொந்தக்காரர் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இவரின் வலையில் பல எதார்த்தங்களை பார்க்கலாம்.

ஷண்முகப்ரியனின் 'படித்துறை' ஷண்முகப்ரியன் ஐயா அவர்கள் ஒரு திரைப்பட எழுத்தாளர் மற்றும் இயக்குனர். வெற்றி விழா, சின்னத்தம்பி பெரியத்தம்பி போன்ற படங்களுக்கு எழுத்தை வழங்கியவர். ஒருவர் வாழும் ஆலயம் போன்ற நான்கு படங்களை எழுதி இயக்கியவர். தனது 57 வது வயதிலும் இளமை மாறாமல் தனது வலைத்தளத்தில் எழுதி வருகின்றார்.

முனியப்பன் பக்கங்கள் கு.வேலுசாமி B.A.,B.L நேர்மை மாறா நீதிபதியின் மகனாக பிறந்த நல்ல மனிதர். இவர் ஒரு மருத்துவர், தமிழ் மேல் காதல் கொண்டு பதிவிடுகின்றார். அவரின் சுவராசியமான அனுபவங்களை பகிர்துள்ளார்.

மேற்கண்ட மூவருக்கும் இந்த பட்டம்பூச்சி விருதை வழங்க எனக்கு துளியும் தகுதியில்லை என்பது எனக்கு தெரியும். என்னை போன்றவர்களிடம் வந்து ஏமாந்த இந்த பட்டாம்பூச்சிக்கு நல்ல தேனை கொடுக்க ஆசைப்படும் ஒரு சாமானியன். இவர்கள் தோட்டத்தில் நற்தேனை அருந்தி அங்கேயே மயங்கிவிடுமோ இல்லை மகிழ்ச்சியில் பக்கத்தில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று ஆர்பரிக்குமோ!..... எப்படியும் இந்த பட்டாம்பூச்சிக்கு பெருமையே!
**********************************************************************************************
இந்த பட்டாம்பூச்சியை எப்படிதான் விடுதலை செய்வது
1.இந்த பட்டாம்பூச்சியின் நிரலியை உங்கள் பக்கத்தில் ஒட்டி விடவும்.
2.உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்.
3.மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களுக்கு இந்த பட்டாம்பூச்சியை கொடுத்து அவர்களின் இணைப்பையும் உங்கள் தளத்தில் கொடுக்க வேண்டும்.
4.நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்.

"அப்பாடி" எப்படியோ என்னிடம் வந்த பட்டாம்பூச்சியை நல்ல தோட்டத்தில் விட்டுவிட்ட மகிழ்ச்சியில் நான் நன்றாக தூங்குகின்றேன்........

உங்களுள்
ஆ.ஞானசேகரன்


28 comments:

புதியவன் said...

பட்டாம்பூச்ச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஞனசேகரன்...

உங்களிடமிருந்து விருதை பெற்றுக் கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

ஆ.ஞானசேகரன் said...

/// புதியவன் said...
பட்டாம்பூச்ச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஞனசேகரன்...

உங்களிடமிருந்து விருதை பெற்றுக் கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்...//

நன்றி புதியவன்

ஆ.சுதா said...

வாழ்த்துக்கள் ஆ.ஞானசேகரன்,
உங்களிடமிருந்து விருது பெற்ற அம்மூவருக்கும் என் வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

kuma36 said...

பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கும் உங்களிடமிருந்து விருதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்கள் விருது பெற்றதற்கும், உங்களிடம் விருது பெற்ற நண்பர்களுக்கும்.. வாழ்த்துக்கள்..

//அந்த விருதிற்கு நான் தகுதியோ இல்லையோ, என்னை தேடி வந்த பட்டாம்பூச்சிக்கு நல்ல தேனை உடனே கொடுக்க வேண்டும் என்பது என் கடமையாக ஆக்கப்பட்டுவிட்டது //

சமுதாயத்தின் மீதான உங்கள் அக்கறை எங்களுக்குத் தெரியும்.. நீங்கள் இந்த விருதுக்கு தகுதியானவர்தான் நண்பரே..

ஷண்முகப்ரியன் said...

நன்றி.நன்றி.ஆ.ஞானசேகரன்.
பட்டாம் பூச்சி விருதினைப் பற்றி இந்தக் கணம் வரை எனக்கு எதுவும் தெரியாது.ஆனால் அதை என் தோட்டத்தில் பறக்கவிட்ட உங்களது அன்பும்,ரசனையும் புரிகிறது.
அந்த நிரலியை என் பதிவில் ஒட்டுவதிலிருன்து அதன் நிபந்தனைகளைச் செயல் படுத்துவது வரை நான் இனிப் பல பதிவு நண்பர்களிடம் அப்பரண்டிஸாகச் சேர வேண்டும்!உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி ஆ.ஞானசேகரன்

ஆதவா said...

பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள

விருதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

-------------
ஆதவா

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
வாழ்த்துக்கள் ஆ.ஞானசேகரன்,
உங்களிடமிருந்து விருது பெற்ற அம்மூவருக்கும் என் வாழ்த்துக்கள்//

நன்றி ஆ.முத்துராமலிங்கM

ஆ.ஞானசேகரன் said...

// பழமைபேசி said...
//

வணக்கம் பழமைபேசி. உங்கள் அமைதியான வருகைக்கு அர்த்தம் புரியவில்லை. இருப்பினும் உங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சியே..

ஆ.ஞானசேகரன் said...

// கலை - இராகலை said...
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கும் உங்களிடமிருந்து விருதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்//

வாங்க கலை-இராகலை
மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நீங்கள் விருது பெற்றதற்கும், உங்களிடம் விருது பெற்ற நண்பர்களுக்கும்.. வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்

ஆ.ஞானசேகரன் said...

//ஷண்முகப்ரியன் said...
நன்றி.நன்றி.ஆ.ஞானசேகரன்.
பட்டாம் பூச்சி விருதினைப் பற்றி இந்தக் கணம் வரை எனக்கு எதுவும் தெரியாது.ஆனால் அதை என் தோட்டத்தில் பறக்கவிட்ட உங்களது அன்பும்,ரசனையும் புரிகிறது.
அந்த நிரலியை என் பதிவில் ஒட்டுவதிலிருன்து அதன் நிபந்தனைகளைச் செயல் படுத்துவது வரை நான் இனிப் பல பதிவு நண்பர்களிடம் அப்பரண்டிஸாகச் சேர வேண்டும்!உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி ஆ.ஞானசேகரன்//

உங்களின் வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

ஆ.ஞானசேகரன் said...

// ஆதவா said...
பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள

விருதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்//

நன்றி ஆதவா

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...
Nandri Gnanaseharan//

உங்களின் வருகைக்கு நன்றி ஐயா

சொல்லரசன் said...

வாழ்த்துகள்,அதற்குள் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டாச்சா!
இந்தியாவிற்கு வர ரெடியாகிவிட்டீர்கள்.

ராம்.CM said...

அனைவருக்கும் வாழ்த்துகள்...

Anonymous said...

Good banner.Good look.Attracted at first sight.The phoros are also worth seeing.You continue your efforts.At the same time kindly concentrate with the "fonts" also.Avoid multi color letters in a page..Some layout works has to be done.you can very well do it with the help of other blogs friend.continue --R.SELVAPRIYAN-CHALAKKUDY

ஆ.ஞானசேகரன் said...

//சொல்லரசன் said...
வாழ்த்துகள்,அதற்குள் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டாச்சா!
இந்தியாவிற்கு வர ரெடியாகிவிட்டீர்கள்.//

வணக்கம் சொல்லரசன், உங்களிடம் பெற்ற நல்ல பட்டாம்பூச்சியை சிறையிலடைக்க விருப்பம் இல்லை அதுதான்....

ம்ம்ம்ம் மே ஒன்றாம் தேதி... திருச்சியில் இருப்பேன்.. அந்த பக்கம் வந்தால் சொல்லுங்கள் சொல்லரசன்

ஆ.ஞானசேகரன் said...

//ராம்.CM said...
அனைவருக்கும் வாழ்த்துகள்...//

வாங்க ராம்.... நன்றி நன்றி நன்றி...

ஆ.ஞானசேகரன் said...

///Anonymous said...
Good banner.Good look.Attracted at first sight.The phoros are also worth seeing.You continue your efforts.At the same time kindly concentrate with the "fonts" also.Avoid multi color letters in a page..Some layout works has to be done.you can very well do it with the help of other blogs friend.continue --R.SELVAPRIYAN-CHALAKKUDY//

வணக்கம் R.SELVAPRIYAN-CHALAKKUDY
உங்களின் வருகை மிக்க மகிழ்ச்சி.. மேலும் உங்களின் பாராட்டுக்கும்...மற்றும் ஆலோசனைக்கும் மனமார்ந்த நன்றி! நன்றி!.... அடிக்கடி வந்துசெல்லுங்கள்...

Tech Shankar said...

பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துகள் ஞனசேகரன்.

வாழ்த்து(க்)கள் - இந்த க் வரக்கூடாதாம்.

பட்டாம்பூச்ச்சி (இந்த இச் வரக்கூடாதாம்). அட நீங்க வேற இதையெல்லாம் தெரிஞ்சுகிட்டா எழுதப்பழகினோம். எங்க வாத்தியாருக்கே இதெல்லாம் தெரியாது. வாங்க தமிழை வளர்ப்போம்.


//நண்பரே தாங்கள் எத்தனை இஞ்ச் மானிட்டர் மற்றும் எந்த ப்ரவுசர் பயன்படுத்துகிறீர்கள்?

இந்த டெம்ப்ளேட்டுகள் செய்யும் வேலைதான். ஒவ்வொரு மானிட்டர், ஒவ்வொரு ப்ரவுசர்களில் ஒவ்வொரு மாதிரி தெரியப்படுத்துகின்றன.

உடனே முயற்சித்துப் பார்த்துவிட்டீர்கள் நன்றி.

//நண்பா உங்கள் தளத்தில் ஆரம்பத்தில் சிறிது இடைவெளி வருகின்றதே ஏன்?

Tech Shankar said...

உங்களிடம் இருந்து பட்டாம்பூச்சி விருது பெற்ற வலையுலக அன்பர்களுக்கு வாழ்த்துகள் - என்றென்றும் அன்புடன் நானே

ஆ.ஞானசேகரன் said...

//தமிழ்நெஞ்சம் said...
பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துகள் ஞனசேகரன்.//
நன்றி தமிழ்நெஞ்சம்..

//நண்பரே தாங்கள் எத்தனை இஞ்ச் மானிட்டர் மற்றும் எந்த ப்ரவுசர் பயன்படுத்துகிறீர்கள்?//

15.4" மடிகணனி பயன்ப்படுத்துகின்றேன்.. Internet explorer

உமா said...
This comment has been removed by the author.
உமா said...

வாழ்த்துக்கள் திரு ஞானசேகரன். உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//உமா said...
வாழ்த்துக்கள் திரு ஞானசேகரன். உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...// மிக்க நன்றி சகோதரி உமா..