_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, June 4, 2009

சங்கடங்களில் இனியவைகள்...

குழந்தைகள் கேள்வி கேட்கனும் என்பது ஞாயமான ஒன்றுதான். அப்படி குழந்தைகள் கேட்கும் கேள்விகள் பல நேரங்களில் சங்கடத்தில் ஆழ்த்திவிடும். அது சங்கடங்களாக இருந்தாலும் இனிமையாகவே இருக்கும். இப்படிப்பட்ட பல சங்கட விடயங்களை நண்பர்களுக்குள் பகிர்ந்துக்கொள்வதும் உண்டு.

இப்படிதான் நண்பர் ஒருவரின் பையன் தொலைக்காட்சியில் நாப்கின் விளம்பரம் ஒன்றை பார்த்து "ஏம்ப்பா அந்த வெள்ளை செருப்புல ஊதா கலர் தண்ணிய ஊத்துராங்கனு " கேட்டானாம். நண்பர் எப்படி சொல்வதுனு புரியாம "தண்ணீய ஊத்தீனா தெரியாதுனு ஊதா கலர் தண்ணிய ஊத்துராங்கனு " சொல்லி சமாளிச்சாராம். பையனும் எல்லாம் தெரிஞ்சுகிட்ட மாதுரி தலையை ஆட்டினான்.

அதே போல ஒருவர் தன்னுடைய திருமண ஆல்பத்தை தன் குழந்தைகளுடன் பார்த்து மகிழ்ந்துக்கொண்டிருந்தார். ஆல்பத்தில் இதோ பார் மாமா, இதோ அத்தை பார், இதோ தாத்தா, பாட்டி பாருனு சொல்லி மகிழ்ந்தாராம். ஆல்பத்தை பார்த்த அவர் பொண்ணுக்கு ஒரு சந்தேகம் "உங்க கல்யாணத்துல நான் எங்கே போயிருந்தேன்? போட்டோவில் என்னை காணவில்லைனு" கேட்டாள். அதற்கு அவர் மனைவி "நீ அம்மா வயித்துல இருந்தேனு" சொன்னாங்க. பிறகு அந்த பொண்ணு "அப்போ அண்ணன் எங்கே போணான்?" என்று கேட்டதும் அண்ணனும் அம்மா வயித்துலதான் இருந்தானு சொன்னாங்க. இன்னும் அவள் விடுவதாக இல்லை தம்பி பாப்பா எங்கே போணான்? என்று கேட்டாள். தம்பி பாப்பாவும் அம்மா வயித்துலதான் இருந்தானு அம்மா சொன்னதும், "மூனு பேரும் உங்க வயித்துல இருந்தும் உங்க வயிறு வலிக்கலயா?" என்று கேட்டது அந்த பொண்ணு. அதற்கு அவர் மனைவி " அம்மா வயிறு வலிச்சுதான் செல்லங்களை பெத்தெடுத்தேன்" என்று சொன்னதும் அவர் பொண்ணு ஆணந்தமா சிரிச்சாளாம்.

அப்பறம் ஒரு காமடியான விடயம் (உங்க குழந்தைகளிடம் சொல்லிடாதீங்க) ஒருவர் இன்ப சுற்றுலாவாக தன் மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் கொடைக்காணல் சென்றாராம். அப்பொழுது அவர் மனைவி "என்னங்க நாம கனிமூனுக்கு வந்ததைவிட கொடைக்காணல் இப்போ நிறைய மாற்றம் இருக்கு" என்றாளாம். அப்பொழுது அவர் மகன் " நீங்க கனிமூனுக்கு வந்தப்ப நான் எங்கே இருந்தேன்" என்று கேட்டான். அதற்கு அவர் கனிமூனுக்கு வரும்போது நீ என் கூட இருந்த, போகும்போது நீ அம்மா கூட இருந்த" என்று சொன்னதும் எல்லாம் புரிந்தது போல தலைய தலைய ஆட்டிணானாம் அவர் மகன்....... ஹிஹிஹி கொஞ்சம் ஓவர்.

மீண்டும்,
ஆ,ஞானசேகரன்.

39 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

இந்தக் காலத்து குழந்தைகளை சமாளிப்பது ரொம்பக் கஷ்டம் நண்பா.. ஜாலியா இருக்கேன்னு போனா நம்மள மண்டை காய விட்டுடுறாங்க.. அதுங்களுக்கு பதில் சொல்லி மீள முடியாது..:-)

Suresh Kumar said...

ஏன் எதற்கு என்ற கேள்விகள் குழந்தைகளுக்கும் விதி விலக்கு அல்ல

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

இந்தக் காலத்து குழந்தைகளை சமாளிப்பது ரொம்பக் கஷ்டம் நண்பா.. ஜாலியா இருக்கேன்னு போனா நம்மள மண்டை காய விட்டுடுறாங்க.. அதுங்களுக்கு பதில் சொல்லி மீள முடியாது..:-)//

நன்றி கார்த்திகைப் பாண்டியன்

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

ஏன் எதற்கு என்ற கேள்விகள் குழந்தைகளுக்கும் விதி விலக்கு அல்ல//

நன்றி நண்பா

அகநாழிகை said...

ஆ,ஞானசேகரன்,
குழந்தைகளின் உலகம் தனி. இப்போதெல்லாம் குழந்தைகளை குழந்தைகளாகவே வளரவிடுவதில்லை. நமக்கெல்லாம் கிடைத்த குழந்தைமை அனுபவத்தை அவர்களுக்கு கிடைக்காமல் போகச் செய்துவிட்டோம்.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Anonymous said...

நகைச்சுவையாகவும் சிந்திக்கவும் வைத்தது இந்த பதிவு ஏன்னா சில கேள்விகள் தர்ம சங்கடமான சூழலில் தள்ளிடும்...

ஆ.ஞானசேகரன் said...

// "அகநாழிகை" said...

ஆ,ஞானசேகரன்,
குழந்தைகளின் உலகம் தனி. இப்போதெல்லாம் குழந்தைகளை குழந்தைகளாகவே வளரவிடுவதில்லை. நமக்கெல்லாம் கிடைத்த குழந்தைமை அனுபவத்தை அவர்களுக்கு கிடைக்காமல் போகச் செய்துவிட்டோம்.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்//

வணக்கம் வாசு,
ஆமங்க வாசு நீங்கள் சொல்வதும் உண்மை. குழந்தைகள் நம் வழி வந்தவர்கள் நமக்காக வந்தவர்கள் அல்ல. நமக்கு கிடைத்த அந்த அனுபவங்கள் நம் குழந்தைகளுக்கு இல்லை என்பது ஒரு குறைதான்

நன்றி வாசு

ஆ.ஞானசேகரன் said...

//Blogger தமிழரசி said...

நகைச்சுவையாகவும் சிந்திக்கவும் வைத்தது இந்த பதிவு ஏன்னா சில கேள்விகள் தர்ம சங்கடமான சூழலில் தள்ளிடும்...//

மிக்க நன்றி தோழி

ஆ.சுதா said...

குழந்தைகளின் கேள்விகள் சில சமயம் இப்படி நேர்வதுண்டு அந்த சமயங்களில் அதற்கு தகுந்தார் போல் சமாளித்து கொண்டு விட்டு அவர்களின் மற்ற கேள்விகளை நல்ல விளக்கத்தோடு சொல்லி கொடுத்தால் நன்று.

வாசு சார் சொன்னது மிகச்சரி.

நல்லா எழுதியிருக்கீங்க ஞானசேகரன்.

தேவன் மாயம் said...

அதற்கு அவர் கனிமூனுக்கு வரும்போது நீ என் கூட இருந்த, போகும்போது நீ அம்மா கூட இருந்த" என்று சொன்னதும் எல்லாம் புரிந்தது போல தலைய தலைய ஆட்டிணானாம் அவர் மகன்....... ஹிஹிஹி கொஞ்சம் ஓவர்.///

நல்லாவே ஓவர்!!நல்லாவே இருக்கு!!

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...

குழந்தைகளின் கேள்விகள் சில சமயம் இப்படி நேர்வதுண்டு அந்த சமயங்களில் அதற்கு தகுந்தார் போல் சமாளித்து கொண்டு விட்டு அவர்களின் மற்ற கேள்விகளை நல்ல விளக்கத்தோடு சொல்லி கொடுத்தால் நன்று.

வாசு சார் சொன்னது மிகச்சரி.

நல்லா எழுதியிருக்கீங்க ஞானசேகரன்.//

வாங்க முத்துராமலிங்கம்,
உங்கள் கூற்றும் சரிதான். குழந்தைகளிம் கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்வதுதான் முக்கியம்.

மிக்க நன்றி நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

// thevanmayam said...

அதற்கு அவர் கனிமூனுக்கு வரும்போது நீ என் கூட இருந்த, போகும்போது நீ அம்மா கூட இருந்த" என்று சொன்னதும் எல்லாம் புரிந்தது போல தலைய தலைய ஆட்டிணானாம் அவர் மகன்....... ஹிஹிஹி கொஞ்சம் ஓவர்.///

நல்லாவே ஓவர்!!நல்லாவே இருக்கு!!//

வணக்கம் டாக்டர் சார்,
ஓவர்தான் ஆனாலும் உண்மைதான்...

பழமைபேசி said...

இஃகிஃகி!!

ஆ.ஞானசேகரன் said...

// பழமைபேசி said...

இஃகிஃகி!!//

வணக்கம் நண்பா

"உழவன்" "Uzhavan" said...

அய்.. எனக்க்கு ரெண்டு அப்பா னு சொன்ன பாக்யராஜ் பட காமடி சீன்தான் நினைவுக்கு வருகிறது :-)

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...

அய்.. எனக்க்கு ரெண்டு அப்பா னு சொன்ன பாக்யராஜ் பட காமடி சீன்தான் நினைவுக்கு வருகிறது :-)//

வாங்க நண்பா,
உங்களின் பகிர்வுக்கும் மிக்க நன்றி

வேத்தியன் said...

வழக்கமாக நமது தினசரி வாழ்க்கையில் நடக்கிறது தான்...

சங்கடங்கள்ன்னு சொல்லும்போது தான் ஞாபகம் வருது..
சிலவேளை குடும்பத்தோடு உட்கார்ந்து திரைப்படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது கற்பழிப்பு போன்ற சீன்ஸ் வரும்போது குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நாம் தவிக்கும் போது....

நல்ல பகிர்வு...

வினோத் கெளதம் said...

தல,

குழந்தைகள் அதே மாதிரி தான் திடுமுன்னு எதாச்சும் கேக்குமுங்க..அதற்கு சாமர்த்தியமா பதில் அளித்தால் தப்பிதோம்.

பனையூரான் said...

அனுபவிச்சு எழுதியுள்ளீர்கள். நல்லா இருந்தது

ஆ.ஞானசேகரன் said...

//வேத்தியன் said...
வழக்கமாக நமது தினசரி வாழ்க்கையில் நடக்கிறது தான்...

சங்கடங்கள்ன்னு சொல்லும்போது தான் ஞாபகம் வருது..
சிலவேளை குடும்பத்தோடு உட்கார்ந்து திரைப்படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது கற்பழிப்பு போன்ற சீன்ஸ் வரும்போது குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நாம் தவிக்கும் போது....

நல்ல பகிர்வு...//

வாங்க வேத்தியன்.. நீங்கள் சொல்வதை போல நடப்பதும் உண்டு நண்பா, உங்களின் பகிர்வுக்கும் நன்றி...

ஆ.ஞானசேகரன் said...

// vinoth gowtham said...
தல,

குழந்தைகள் அதே மாதிரி தான் திடுமுன்னு எதாச்சும் கேக்குமுங்க..அதற்கு சாமர்த்தியமா பதில் அளித்தால் தப்பிதோம்.//

உண்மைதான் நண்பா, பகிர்வுக்கு மிக்க நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

//....பனையூரான்...... said...
அனுபவிச்சு எழுதியுள்ளீர்கள். நல்லா இருந்தது//

மிக்க நன்றிபாஸ்

Sanjai Gandhi said...

இந்த காலத்து பசங்க கிட்ட கொஞ்சம் உஷாரா தான் இருக்கனும்.. :)

நசரேயன் said...

//உங்க கல்யாணத்துல நான் எங்கே போயிருந்தேன்? போட்டோவில் என்னை காணவில்லைனு" கேட்டாள்.//

உண்மை நானும் அனுபவ பட்டு இருக்கேன்

Anonymous said...

குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வதே சுவராசியம் தான். அப்புறம் ரொம்ப நல்லாயிருக்கு தல. அழகான எழுத்து நடை. விறுவிறு சுறு சுறு.

ஆ.ஞானசேகரன் said...

//$anjaiGandh! said...
இந்த காலத்து பசங்க கிட்ட கொஞ்சம் உஷாரா தான் இருக்கனும்.. :)
//

வணக்கம் நண்பரே,
உங்களின் முதல் வருகை மிக்க நன்றி...

ஆ.ஞானசேகரன் said...

///நசரேயன் said...
//உங்க கல்யாணத்துல நான் எங்கே போயிருந்தேன்? போட்டோவில் என்னை காணவில்லைனு" கேட்டாள்.//

உண்மை நானும் அனுபவ பட்டு இருக்கேன்///

வாங்க நசரேயன்,
எல்லோருக்கும் கிடைக்கும் அனுபவம்தான்.
மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//கடையம் ஆனந்த் said...
குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வதே சுவராசியம் தான். அப்புறம் ரொம்ப நல்லாயிருக்கு தல. அழகான எழுத்து நடை. விறுவிறு சுறு சுறு.//

நண்பா, மிக்க நன்றிபா

CorTexT (Old) said...

உங்கள் சங்கடங்கள் எல்லாம் ஒன்றை சுற்றியே இருப்பதை கவனிதீரா? இது உண்மையில் பெரியவர்களின் மனபக்குவமின்மையே என்று பல வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்; அதை எப்படி சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு தெரியவில்லை என்பதை உணருவீர். பல நேரங்களில், அறியாமையே குழந்தைகளுக்கு நல்லதென்று பெரியவர்கள் நினைக்கிறார்கள். எப்படியாகிலும், தவறாக சொல்லி பிஞ்சு மூளையை முலையிலையே கில்லி விடாதீர்.

நான் 11ம் வகுப்பு படிக்கும் போது, விலங்கியில் ஆசிரியை அன்று மண்புழுக்களின் இனப்பெருக்கத்தை பற்றிய விளக்கிகொண்டிருந்தார். கடைசி பென்ச் மாணவர்கள் (நான் கடைசி பென்ச்க்கு ஒன்று முன்) கூட மாறி மாறி கேள்வி மேல் கேள்வி கேட்டதை நினைத்தால், எனக்கு இன்றும் சிரிப்பு வருகின்றது!

ஆ.ஞானசேகரன் said...

இந்த இடுக்கைக்கு தமிழ்மணம் மற்றும் தமிழிஸ் தளத்தில் ஓட்டு அளித்த நண்பர்களுக்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//Blogger RajK said...

உங்கள் சங்கடங்கள் எல்லாம் ஒன்றை சுற்றியே இருப்பதை கவனிதீரா? இது உண்மையில் பெரியவர்களின் மனபக்குவமின்மையே என்று பல வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்; அதை எப்படி சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு தெரியவில்லை என்பதை உணருவீர். பல நேரங்களில், அறியாமையே குழந்தைகளுக்கு நல்லதென்று பெரியவர்கள் நினைக்கிறார்கள். எப்படியாகிலும், தவறாக சொல்லி பிஞ்சு மூளையை முலையிலையே கில்லி விடாதீர்.

நான் 11ம் வகுப்பு படிக்கும் போது, விலங்கியில் ஆசிரியை அன்று மண்புழுக்களின் இனப்பெருக்கத்தை பற்றிய விளக்கிகொண்டிருந்தார். கடைசி பென்ச் மாணவர்கள் (நான் கடைசி பென்ச்க்கு ஒன்று முன்) கூட மாறி மாறி கேள்வி மேல் கேள்வி கேட்டதை நினைத்தால், எனக்கு இன்றும் சிரிப்பு வருகின்றது!//

உங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜ்.
நீங்கள் கூறுவது போல குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதும் உண்மைதான். பதில் சொல்லாமல் மழுப்பல் மற்றும் சொல்ல மறுத்தல்தான் கூடாது. நீங்கள் கூறுவதுபோல இங்கு பதில் கூறாமல் இல்லை. அந்த குழந்தையின் புரிதலுக்கு ஏற்ற பதில்தான் கொஞ்சம் காமடி கலந்து இருக்கின்றது.

ஒரு சம்பவம் இரண்டு வயது பெண் குழந்தை தன் தாயிடம் ஏன் எனக்கு உங்களை போல் மார்பு பெரிதாக இல்லை என கேட்டதாம். அதற்கு அவள் தந்தை பொறுமையாக பாப்பா உன் கையை கொடு "அம்மாவின் கை எப்படியிருக்கின்றது? "என்று கேட்டார். அந்த குழந்தை " அம்மாவின் கை பெரிதாக இருக்கு" என்றாள். " நீ பெரியவளான உன் கை அம்மா கையை போல பெரிதாகும். அது போலதான் இதுவும் " என்று தந்தை விளக்கினாறாம்.

மிக்க நன்றி ராஜ்

sakthi said...

மூனு பேரும் உங்க வயித்துல இருந்தும் உங்க வயிறு வலிக்கலயா?" என்று கேட்டது அந்த பொண்ணு. அதற்கு அவர் மனைவி " அம்மா வயிறு வலிச்சுதான் செல்லங்களை பெத்தெடுத்தேன்"

என்னமா கேட்கறாங்க
எல்லாம் அவ்வளவு அறிவாளிங்க பா

ஆ.ஞானசேகரன் said...

// sakthi said...

மூனு பேரும் உங்க வயித்துல இருந்தும் உங்க வயிறு வலிக்கலயா?" என்று கேட்டது அந்த பொண்ணு. அதற்கு அவர் மனைவி " அம்மா வயிறு வலிச்சுதான் செல்லங்களை பெத்தெடுத்தேன்"

என்னமா கேட்கறாங்க
எல்லாம் அவ்வளவு அறிவாளிங்க பா//

வாங்க சக்தி,
மிக்க நன்றிபா

ஆதவா said...

ஹாஹா....

இப்ப இருக்கிற குழந்தைகள் ரொம்ப புத்திசாலித்தனமாக இருக்கிறார்கள்.

என் மாமா மகள் இப்படித்தான்...

அம்மா, டிவிய எப்படி தயாரிக்கிறாங்க என்று ஆரம்பித்தாள். ஏதோ ஆர்வமா கேட்கிறாளே என்று சொல்ல ஆரம்பித்த என் அக்கா, அவள் இறுதியாக கேட்ட கேள்விக்கு அதிர்ந்தே போயிட்டாங்க... " அம்மா, என்னை எப்படி தயாரிச்சீங்க?" என்ற கேள்விதான் அது...

ஆதவா said...

அகநாழிகை./..

நீங்கள் சொல்வதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது... குழந்தைகளுக்கான அனுபவம் ஒவ்வொரு தலைமுறையும் மாறிக் கொண்டே இருக்கிறது. இப்போது அவர்கள் அனுபவிப்பதை நம்மால் நம் பருவத்தில் அனுபவித்திருகக் முடியாது.

ஞானசேகரன் சார், இதுகுறித்து ஒரு பதிவு கொடுங்களேன்..

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...

ஹாஹா....

இப்ப இருக்கிற குழந்தைகள் ரொம்ப புத்திசாலித்தனமாக இருக்கிறார்கள்.

என் மாமா மகள் இப்படித்தான்...

அம்மா, டிவிய எப்படி தயாரிக்கிறாங்க என்று ஆரம்பித்தாள். ஏதோ ஆர்வமா கேட்கிறாளே என்று சொல்ல ஆரம்பித்த என் அக்கா, அவள் இறுதியாக கேட்ட கேள்விக்கு அதிர்ந்தே போயிட்டாங்க... " அம்மா, என்னை எப்படி தயாரிச்சீங்க?" என்ற கேள்விதான் அது...//

வாவ்வ்வ் நல்ல கேள்வி இதற்கு கண்டிப்பாக அந்த குழந்தைக்கு விளக்கமான பதிலை சொல்ல வேண்டும் ஆதவா...

ஆ.ஞானசேகரன் said...

// ஆதவா said...

அகநாழிகை./..

நீங்கள் சொல்வதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது... குழந்தைகளுக்கான அனுபவம் ஒவ்வொரு தலைமுறையும் மாறிக் கொண்டே இருக்கிறது. இப்போது அவர்கள் அனுபவிப்பதை நம்மால் நம் பருவத்தில் அனுபவித்திருகக் முடியாது.

ஞானசேகரன் சார், இதுகுறித்து ஒரு பதிவு கொடுங்களேன்..//

ஆதவா நீங்கள் கூறும் கருத்து ஒத்துக்கொண்டாலும். வாசு சொல்வதையும் கவனிக்கவேண்டும் இயற்கையான வளர்ப்பு முறை இல்லை என்பதையும் ஒத்துக்கொள்ளதான் வேண்டும்..

நிகழ்காலத்தில்... said...

\\ஒரு சம்பவம் இரண்டு வயது பெண் குழந்தை தன் தாயிடம் ஏன் எனக்கு உங்களை போல் மார்பு பெரிதாக இல்லை என கேட்டதாம். அதற்கு அவள் தந்தை பொறுமையாக பாப்பா உன் கையை கொடு "அம்மாவின் கை எப்படியிருக்கின்றது? "என்று கேட்டார். அந்த குழந்தை " அம்மாவின் கை பெரிதாக இருக்கு" என்றாள். " நீ பெரியவளான உன் கை அம்மா கையை போல பெரிதாகும். அது போலதான் இதுவும் " என்று தந்தை விளக்கினாறாம்.\\

பக்குவமான பெற்றோர், இப்படித்தான் இருக்கவேண்டும். குழந்தையை புரிந்து கொண்டு.

வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

//Blogger நிகழ்காலத்தில்... said...

\\ஒரு சம்பவம் இரண்டு வயது பெண் குழந்தை தன் தாயிடம் ஏன் எனக்கு உங்களை போல் மார்பு பெரிதாக இல்லை என கேட்டதாம். அதற்கு அவள் தந்தை பொறுமையாக பாப்பா உன் கையை கொடு "அம்மாவின் கை எப்படியிருக்கின்றது? "என்று கேட்டார். அந்த குழந்தை " அம்மாவின் கை பெரிதாக இருக்கு" என்றாள். " நீ பெரியவளான உன் கை அம்மா கையை போல பெரிதாகும். அது போலதான் இதுவும் " என்று தந்தை விளக்கினாறாம்.\\

பக்குவமான பெற்றோர், இப்படித்தான் இருக்கவேண்டும். குழந்தையை புரிந்து கொண்டு.

வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி நண்பரே